Thursday, June 11, 2009

சும்மா...நச்சுனு முடிவு(Decision) எடுக்கணுமா?




சின்ன மேட்டரா இருந்தாலும் சரி, பெரிய மேட்டரா இருந்தாலும் சரி, நாம எடுக்கிற முடிவுகள் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது.



  • இந்த பொண்ண லவ் பண்ணலாமா வேணாமா?

  • முதலாளி கிட்ட போய் சம்பள உயர்வு கேக்கலாமா வேணாமா?

  • மேற்படிப்பு படிக்கலாமா, வேலைக்கு போகலாமா?

  • இந்த வேலையை விட்டுட்டு வேற வேலைக்கு போகலாமா வேணாமா?

  • இந்த சினிமாக்கு போகலாமா வேணாமா?

  • சொந்தமா தொழில் தொடங்கலாமா வேணாமா?

இப்படி எந்த மாதிரி விஷயமாக இருந்தாலும், சரியான முடிவு எடுத்து செயல்பட்டால், நம்முடைய குறிக்கோளை, இலக்கை எளிதாக அடைந்து விட முடியும்.

(சரி...போதும் விஷயத்துக்கு வா...)


முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது நம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியவைகள் என்னான்னு பாப்போம். எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயங்கள் தான், அதையே கொஞ்சம் உதாரணத்தோட சொல்லி இருக்கேங்க...அவ்ளோ தான்.


1. கோபத்துல முடிவு எடுக்குறது எப்பவுமே utter Flopல தான் முடியும்ங்க.


இந்த விஷயத்துல கோபக்காரனும், குடிகாரனும் ஒண்ணு தாங்க, இரண்டு பேருக்கும் சுய நினைவு கம்மியா தான் இருக்கும். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு, கோபக்காரன் பேச்சு கோபம் தெளிஞ்சா போச்சுன்னு தான் சொல்லனும். மது அருந்துபவர்களுக்கு, நிறைய சமயம் காலையில எழுந்த உடனே தோணும், நேத்து சரக்குல கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ, அப்படி பேசாம இருந்து இருக்கலாமோனு? தோணும். இதே மாதிரி தான் கோபத்துல யாரையாச்சும் திட்டிட்டு, அதுக்கு அப்புறம் போய் "சாரி" சொல்லி மஸ்கா பண்ணுவோம். கோபம் தானுங்க, நாம எடுக்குற முடிவுகளுக்கு முதல் எதிரி, அதனால, கோபத்தோட எதையும் decide பண்ணாதீங்கோ....



2.எடுத்தோமா கவுத்தோமான்னு முடிவு எடுக்குறவங்க தான் நம்மல்ல பெரும்பாலானவர்கள் இருக்காங்க. இப்படி எடுக்கிற முடிவுகள் சரியாக அமைவது கஷ்டம் தான்.

"ஏலே நம்ம சாதிக்காரனப் பத்தி தப்பா பேசிப்புட்டான்லே...எடுங்கடா அறுவாளை, கிளம்புங்கடா...இன்னிக்கு வெட்டி சாய்ச்சிப்புடுவோம்னு" ஒரு நாலு பேர் ஆரம்பிக்க...இதுவே ஒரு பெரிய சாதிக் கலவரமா மாறுவதை நம்ம பாத்துட்டு தான் இருக்கோம்.
இதுக்கெல்லாம் நம்ம சின்னக் கவுண்டர் விஜய்காந்த் மாதிரி பொறுமையா, ரெண்டு தரப்பு வாதத்தையும் கேட்டு, விசாரிச்சு ஒரு தெளிவான முடிவு எடுக்கணும். "சங்கர பாண்டி வாத்தியார், சங்கரபாண்டி வாத்தியார்னு சொல்றதால, பல பேர் அவர பள்ளி கூட வாத்தியார்னு தப்பா நினைச்சிட்டு இருக்காங்க......ஆனா அவர் கம்பு சொல்லி கொடுக்குற சிலம்பம் வாத்தியார்னு நிறைய பேருக்கு தெரியாது........"


3. அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்கன்னு, விஷயத்தை முழுசா தெரிஞ்சுக்காமலேயே, நாம எடுக்குற முடிவு, ஒரு தலைப்பட்சமாக மட்டும் இல்லாமல், தவறாகத் தான் முடியும். எல்லார் சொல்றதையும் கேட்டுக்கணும் ப்ளஸ் நம்மலும் கொஞ்சம் மேட்டரா அலசி பார்த்து, எது உண்மை, எது நல்லது, இது work out ஆகுமா ஆகாதா, அப்படின்னு பாத்து, நமக்கு சரினு படுற முடிவை தான் எடுக்கணும்.


"மச்சான் அந்த figure உன்னையே பாத்துட்டு இருக்கா டா..அங்க பாரேன்...", இப்படி சொல்லியே நம்மல நாலு பேர் ஏத்தி விடுவாங்க. உண்மையை தான் சொல்றான்னு நினைச்சு, அந்த figureஅ பிக் அப் பண்ணலாம்னு முடிவு பண்ணி கிட்ட போறதுக்குள்ள, வேற ஒருத்தரோட பைக்ல கிளம்பிடும் அந்த பொண்ணு. மூக்கு உடைபட்டு நிக்க போறது நம்ம தான். So, வெளுத்தது எல்லாமே பால்னு நினைக்குறவங்க தான் நம்ம்...இருந்தாலும், மத்தவங்க சொல்றத அப்படியே நம்பாம, கொஞ்சம் நம்ம பங்குக்கு ஆராய்ச்சி பண்ணி முடிவு எடுக்குறது நல்லது.

4.ஒரு சில விஷயங்களைப் பத்தி முடிவு பண்றது ரொம்ப கஷடமா இருக்கும்..அப்படியும் போக முடியாது, இப்படியும் வர முடியாது. இந்த மாதிரி சமயத்துல, நாம எடுக்கப் போற decisionல Best case என்ன நடக்கும்? Worst case என்ன நடக்கும்? அப்படின்னு தெரிஞ்சிக்கனும். இரண்டுக்கும் நம்மல தயார் படுத்திக்கனும்.


Recessionல ரெண்டு வருஷமா salary hike இல்ல. நம்ம முதலாளி கிட்ட போய் கேக்கலாம வேணாமா. Best Caseஅ..சரி வா பா, இவ்ளோ நல்லா வொர்க் பண்ணி இருக்கீங்க....அடுத்த மாசத்துல இருந்து உங்களுக்கு மட்டும் Hike போடுறேன்னு சொல்லலாம். இதை மட்டும் யோசிக்கக் கூடாது. Worst case ஐயும் பாக்கணும். "ராசா, கம்பெனி இருக்கற நிலைமையில அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல, நீ, ஆணியே புடுங்க தேவை இல்லை....பேசாம வீட்டுக்கு போ" இப்படின்னும் சொல்லலாம்...இப்படி ரெண்டுத்துக்கும் prepare ஆகிக்கணும்.


5. அன்பு, பாசம், காதல்னு உணர்ச்சி வசப் பட்டு அவசர அவசரமா முடிவுகளை எடுக்குறது ரொம்ப ரிஸ்க். மனசு அமைதியா இருந்தா தான் நல்ல முடிவை எடுக்க முடியும்னு பெரிய பெரிய ஞானிகள் எல்லம் சொல்றாங்க.


இதையே தான் காதலன் படத்துல சந்தோஷமோ துக்கமோ ஓரு பத்து நிமிஷம் தள்ளி போடுங்க...ஓண்ணுல இருந்து பத்து வரைக்கும் எண்ணுவோம்...அப்படின்னு பொறுமையா Wait பண்ணுவாங்க.பதறிய காரியம் சிதறும்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க.


6. இன்னும் ஒரு சில சமயங்கள்ல, ஒரு சில பிரச்சனைகள்ல எந்த முடிவு எடுத்தாலும் நமக்கு கெட்டது ன்னு தோணும். அந்த மாதிரி மேட்டர்ல, ஓரளவுக்கு கம்மியா கெட்டது வர முடிவை எடுக்கலாம்.


உதாரணத்துக்கு, தேர்தல்ல, நம்ம தொகுதில யாருக்கு ஓட்டு போடுறது? எல்லாருமே மோசமானவங்க தான்...இதுல யாருக்கு ஓட்டு போடுறதுன்னு தோணும். இதுக்கு தான் துக்ளக் ஆசிரியர் சோ , "கொலைகாரனா, கொள்ளைக்காரனா, கடத்தல்காரனா, பிக்பாக்கெட்டான்னு choice கொடுத்தா, இதுல யாரு ஓரளவுக்கு கம்மியான கெட்டவன்னு பாத்தா பிக்பாக்கெட் தான். அப்படி தான் நம்ம வேட்பாளர்களுக்கும் ஓட்டு போடணும்னு " சொல்வார்.

இதையும் மீறி, நாம எடுக்குற decisions ஊத்திக்குச்சுன்னா..கப்பல் கவுந்த மாதிரி, கன்னத்துல கை வச்சுட்டு உட்காராம...கவியரசு கண்ணதாசன் வரிகளைப் பாடி மனச தேத்திக்க வேண்டியது தான்...

சட்டி சுட்டதடா...கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா...

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா.....


11 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

நாங்களும் வோட் போடனும்னு உடனே முடிவெடுத்து வோட் போட்டுட்டோம்ல.....

கபிலன் said...

"பிரியமுடன்.........வசந்த் said...
நாங்களும் வோட் போடனும்னு உடனே முடிவெடுத்து வோட் போட்டுட்டோம்ல....."

அடடா...வாங்க வசந்த்...தமிழர்ஸ் இவ்வார நட்சத்திரத்துல பார்த்தேங்க உங்கல...வாழ்த்துக்கள்..!
வோட்டு போட்டதுக்கு நன்றிங்கோ!

சோழன் said...

மிகவும் நன்று கபிலன். பலருக்கும் தெரிந்த பல விஷயங்கள் இருந்தாலும் ஒரு கோர்வையாக பலருக்கு உபயோகப்படும் விதத்தில் எளிமையாக எழுதி இருப்பது சிறப்பு. தங்கள் இலக்கியப்பணி தொடர வாழ்த்துக்கள்.

கபிலன் said...

"சோழன் said...
மிகவும் நன்று கபிலன். பலருக்கும் தெரிந்த பல விஷயங்கள் இருந்தாலும் ஒரு கோர்வையாக பலருக்கு உபயோகப்படும் விதத்தில் எளிமையாக எழுதி இருப்பது சிறப்பு. தங்கள் இலக்கியப்பணி தொடர வாழ்த்துக்கள்."


டானிக் கொடுத்தது உற்சாகப் படுத்துறதுக்கு ரொம்ப நன்றி சோழன்!

கபிலன் said...

"கலையரசன் said...
உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் முதல்பக்கத்தில்
வெளிவந்துள்ளது... வாழ்த்துகள்!
http://youthful.vikatan.com/youth/index.asp"

உங்கள் தகவலுக்கு ரொம்ப நன்றிங்க கலையரசன்!

SUFFIX said...

நல்ல பதிவு கபில்ஸ்!! சில சமயம் ஏதாவது முடிவு எடுக்க முடியாமல் தூக்கம் கெட்டு முழிமுழின்னு முழிச்சுட்டு இருக்கிரதை விட, போய் தொலைதுடான்னு ஒரு முடிவு எடுத்துடனும்னு தோனும்.

கபிலன் said...

"Shafi Blogs Here said...
நல்ல பதிவு கபில்ஸ்!! சில சமயம் ஏதாவது முடிவு எடுக்க முடியாமல் தூக்கம் கெட்டு முழிமுழின்னு முழிச்சுட்டு இருக்கிரதை விட, போய் தொலைதுடான்னு ஒரு முடிவு எடுத்துடனும்னு தோனும்."


ஆமா.உண்மை தாங்க ஷஃபி!
தங்கள் வருகைக்கு நன்றி!

Satish said...

eppadi rasa unnala mattum ippadi ezutha mudyiuthu

Anonymous said...

how u r getting these idea's.really its very gud

சின்னக் கவுண்டர் விஜய்காந்த் கதை remba super...gud editing உண்மையை எளிமையாக எழுதி தங்கள் இலக்கியப்பணி தொடர வாழ்த்துக்கள்.

Niruban

கபிலன் said...

"Satish said...
eppadi rasa unnala mattum ippadi ezutha mudyiuthu"

அப்படியே வருது :)
வந்து ஒரு வார்த்தை சொல்லிட்டு போனதுக்கு நன்றி சதீஷ்!

கபிலன் said...

"how u r getting these idea's.really its very gud

சின்னக் கவுண்டர் விஜய்காந்த் கதை remba super...gud editing உண்மையை எளிமையாக எழுதி தங்கள் இலக்கியப்பணி தொடர வாழ்த்துக்கள்.

Niruban"

மல்லாக்க படுத்து யோசிச்சது : )
தங்கள் கருத்திற்கு நன்றிங்க!

LinkWithin

Blog Widget by LinkWithin