Tuesday, June 30, 2009

மனைவியின் தாக்குதல்களுக்கு கணவரின் பதில் பாடல்கள்!

மனைவி கேக்குற கேள்விகளுக்கு எல்லாம், கணவர் பாடலிலேயே பதில் சொன்னா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.
சும்மா நகைச்சுவைக்காக மட்டும் : )


மனைவி : கடைக்கு போய்ட்டு ஒரு நல்ல தக்காளி வாங்கிட்டு வர தெரியல, தண்ணி கேன் எடுத்து ஊத்த தெரில, கடைத்தெருவுக்கு போய் விலை பேச தெரில, குழந்தை கூட உட்கார்ந்து ஹோம் வொர்க் செய்ய வைக்க தெரில, ஆத்திரம் அவசரம்னா ஒரு தோசை சுட தெரில...ஏன் ஒரு மேக்கி கூட செய்ய தெரில....


கணவன் :


பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது..
அப்படி பொறந்துவிட்டா பொம்பளைய நினைக்கக் கூடாது...



மனைவி : எவ்ளோ பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் என்னை கல்யாணம் பண்ணிக்க வந்தாங்க...அவங்கள எல்லாம் விட்டுட்டு உங்கள போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாருங்க.....எல்லாம் என் தலையெழுத்து...


கணவன்:

கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று....




மனைவி : என்ன திட்டினாலும் கேக்க மாட்றீங்க...இப்படியே வாரத்துல 2 நாளு குடிச்சிட்டு வர்றீங்களே...சரி அப்படியே குடிச்சிட்டு வந்தாலும், அமைதியா இருந்தா பரவால்ல....உங்க மொக்கையை யாரு தாங்குறது....இன்னிக்கு ஒரு நாள் வெளியவே படுங்க..(தடக் என கதவை அடைத்து, மனைவி வெளியே தள்ளிட்டாங்க)

கணவன் :
"வாடி பொட்ட புள்ள வெளியே...
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..."

"இரவினில் ஆட்டம்.....
பகலினில் ஓட்டம்..
இது தான் எங்கள் உலகம், எங்கள் உலகம்..."

"தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இதில் நீயேன்ன...
அடியே நானேன்ன ஞானப் பெண்ணே..
வாழ்வின் பொருளென்ன...
நீ வந்த கதை என்ன?"


மனைவி : இப்படியே ஆபீஸ் வேலைன்னு, குடும்பத்தை, பசங்கள கவனிக்காம சுத்திட்டே இருந்தீங்கன்னா...வயசான காலத்துல நம்ம புள்ளைங்க நம்மல கவனிக்காம போய்டுவாங்க.... நான் சொல்றது உங்க புத்தில, ஏறுதா இல்லையா...?

கணவன்:
"வீடு வரை உறவுவீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ......
கடைசி வரை யாரோ......"


மனைவி: பொண்ணு பாக்க வரும் போதே, என்னை விட என் பக்கதுல இருந்த பொண்ண பல்ல இளிச்சுட்டு பார்த்த போதே நினைச்சேன்...இந்த மாதிரியான ஆளு நமக்கு தேவையான்னு நினைச்சேன்....இருந்தாலும் ஏதோ லைட்டா தடுமாறிட்டேன்...இப்ப உங்க கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன்..*&%##########$%^%$$##$%%^$#$$

கணவன் :
சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக்குள்ள யாருமில்ல, எந்த நெஞ்சும் ஈரம் இல்ல
சம்சாரம்....
நேரம் வந்து நெருங்கி தொட்டா ஷாக் அடிக்கிற மின்சாரம்...



மனைவி : ஏங்க..ரெண்டு நாளு நான் அம்மா வீட்டுக்கு போய்ட்டு வரேன்...அடக்கமா இருங்க....ரெண்டே நாள்ல திரும்பி வந்துடுவேன்..ஆளில்லன்னு ஆட்டம் போடாதீங்க...

கணவன்:
"அட்றாட்றா நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா..
ஏய் மாடு செத்தா, மனுஷன் தின்னா, தோள வச்சி மேளம் கட்டி,
அட்றாட்றா நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா.."

"ஹேப்பி...இன்று முதல் ஹேப்பி...
ஹேப்பி...இன்று முதல் ஹேப்பி..."



மனைவி : இந்த மாதிரி ஏடாகுடமாவே பேசிட்டு இருக்கீங்களே...என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க என்னை பத்தி?

கணவன்:
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம், கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன......
காதல் வாழ்க....
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் !


கடைசியா கொஞ்சம் சமாதானமா முடிச்சுக்குறது தான் கணவர்களுக்கு பாதுகாப்பு !


சும்மா சிரிப்புக்காகவும், பொழுது போக்குக்காகவும் மட்டும் இந்த பதிவு !

Monday, June 22, 2009

சலிப்பை ஏற்படுத்தும் "நைட்டி" கலாச்சாரம் !

இதுக்கெல்லாம் ஒரு பதிவு போடணுமா, அப்படின்னு தான் தோனுச்சு முதல்ல....சரி, பரவால்ல... பதிவு போட்டு தான் பார்ப்போம்...ஆதரவு இருக்கான்னு பாப்போம்னு தோனுச்சு...அதான்..இந்த பதிவுக்கு முதலில் "கணவனைக் கடுப்பேத்தும் நைட்டி " நு தான் பேர் வச்சேன். ரொம்ப ஓவரா இருக்குமோன்னு லைட்டா மாத்திட்டேன் !

யார் கண்டுபிடிச்சு, எப்படி வந்ததோ தெரியல இந்த ஆடை நைட்டி. "நைட்டி" என்ற பெயரே, இரவிலே அணியும் ஆடை என்று பொருள் தந்தாலும், இன்றைய பெண்கள், இரவு பகல் என பாராமல் எப்போதுமே இதே ட்ரெஸ்சை அணிந்து கடுப்பு ஏத்துறது எல்லா வீட்லயும் இருக்குற ஒரு மேட்டர்.


அப்படி என்ன தான் பெண்களுக்கு இந்த நைட்டி புடிச்சு இருக்குன்னு, பெண்கள் கிட்ட கேட்டோம்னா, இதோ இந்த மாதிரி பதில் தான் வரும்.

1. ரொம்ப comfortable ஆன டிரஸ்.
2. விரசம் இல்லாத உடை, உடலை முழுவதும் கவர் செய்யுற மாதிரியான உடை (நம்ம ஊர்ல இருக்குற நைட்டிகள்).



இந்த ரெண்டு விளக்கங்களை தான் கொடுப்பாங்க.

சரி..அது இருக்கட்டும், நைட்டி மேல இவனுக்கு ஏண்டா இவ்வளவு கடுப்புன்னு நினைக்கலாம்.இதோ வரேன்...

1. என்ன மாதிரி டிசைன் நைட்டியா இருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்த நைட்டியா இருந்தாலும், கண்ணுக்கு ஒரே மாதிரி தான் தெரியும்.

கேஸ் சிலிண்டர்க்கு பூப்போட்ட துணி சுத்தி வைச்சு, கொஞ்சம் நகர்ந்து நின்னு வேடிக்கை பாருங்க...நிச்சயமா பொண்ணு ஒண்ணு நைட்டில இருக்க மாதிரியே இருக்கும். ஏன்னா அந்த ஆடையினுடைய அமைப்பு அப்படி! தொள தொள ந்னு ஒரு கை, அங்க அங்க பூ பூ வா துணி, இப்படி கிட்ட தட்ட ஒரு ஜோக்கர் டிரஸ் மாதிரி தான் இருக்கு. இதையே மாசக் கணக்குல போட்டுக்கிட்டு இருந்தா மனுஷனுக்கு வெறுப்பு வருமா வராதாங்க?
(ஜின் ஜினுக்கா சின்னக் கிளி, சிரிக்கும் பச்சைக் கிளி, ஓடி வந்தா மேடையிலே ஆட்டம் ஆட.....)


2. பொதுவா பார்த்தோம்னா, ஒவ்வொரு பெண்களுக்கு ஒவ்வொரு உடை பொருத்தமாக அமையும். ஒரு சில பெண்களுக்கு சுரிதார் போட்டா அழகா இருக்கும், இன்னும் ஒரு சிலருக்கு மாடர்னா, ஜீன்ஸ் - டீ ஷர்ட் போட்டா அழகா இருக்கும். எந்த பர்ஸ்னாலிட்டி உள்ள பெண்ணா இருந்தாலும், சேலையில ரொம்ப அழகா தெரிவாங்க. ஆனா பாருங்க, எவ்வளவு அழகா இருக்குற பொண்ணும், இந்த நைட்டிய போட்டா, கொடுமையா இருக்க மாதிரி தான் தெரியும்.


3. நைட்டியை உபயோகப் படுத்துறத தப்புன்னு சொல்ல வரலீங்க. இரவுல உபயோகப்படுத்தலாம், இல்ல பகல் நேரங்களில் கூட எப்பவாச்சும் உபயோகப்படுத்திக்கலாம். அதுக்காக் காலையில இருந்து இரவு வரைக்கும் நைட்டியே போட்டுட்டு இருந்தா சலிப்பு வருவது இயல்பு தானங்க ?

பல கடுப்புகள்ல வேலையில இருந்து வீட்டுக்கு வருகிற கணவன் கண்களில் ஓரளவுக்கு சுமாரா இருக்கனும்னு, இப்ப இருக்கிற படித்த நகரத்து பெண்கள் பலருக்கு தெரிவதில்லை. இவங்க தானே வர்றாங்க.இதுக்கு நைட்டியே போதும். இப்படி தான் பலரோட எண்ணம். இந்த விஷயத்துல கிராமத்து பெண்கள் சூப்பர், தங்களுக்கு உள்ள சாதாரண வாய்ல் புடவைய கட்டிக்கிட்டு, முகம் கழுவி, தலையில மல்லி பூ வச்சிட்டு, சிரிச்ச முகத்தோட, இந்தாங்க காபி ந்னு கணவர் கிட்ட கொடுக்குறது....அடேங்கப்பா......அதெல்லாம் இந்த நைட்டி தேவதைகள் கிட்ட கிடைக்குமா?

(ராஜ்கிரண் ஸ்டையில்ல பெண் மனசு ஆழமுன்னு...
"கல்லானாலும் கணவன், சிறு புல்லானாலும் புருஷன்....கல் இல்லையே இந்த மகன் கல் இல்லையே.....")

4. கடைத்தெருவிற்கு போனால், மணிகணக்குல, கடை கடையா ஏறி சுரிதார், புடவைன்னு எடுத்து கொடுக்குறோம். அதுக்காச்சும், கொஞ்சம் மனசாட்சியோட,இதையெல்லாம் உபயோகப்படுத்தக் கூடாதா ? வீட்ல எவ்வளவோ சுரிதார் இருந்தும், எவ்வளவோ புடவைகள் இருந்தும், பெண்களுக்கு வீட்டில் நைட்டி தான் எல்லாமே !

இதுல ஏன்னு கேட்டா, அவங்க சொல்ற reason வீட்ல தானே இருக்கேன், எங்கயாச்சும் வெளில போகும் போது பாத்துக்கலாம். மனைவியின் அழகை கணவன் ரசிப்பதற்கு, எதாச்சும் விசேஷம் வருமா, சேலை கட்டுவாங்களா ந்னு காத்து இருக்க வேண்டிய அவல நிலையில கணவர்கள் இருக்காங்க !

(லிவிங்க்ஸ்டன் ஸ்டையில்ல..
"ஜனாதிபதி முருகேசன் வாழ்க...வருங்கால ஜனாதிபதி முருகேசன் வாழ்க..." என்னம்மா பீல் பண்ணி கூவுறான் பாருடா..)

5. இதே மாதிரியான நிலைமை தொடர்ந்தால், "கடைசியா மனைவியை சேலையில் பார்த்தது மணவறையில் தான்னு" சொல்ற அளவுக்கு போயிடும் போல இருக்கு நிலைமை !

கனவிலேயும் மனைவியே.. வருவது கஷ்டமான விஷயம் தான். ஆனா, அந்த கனவிலும், மனைவி நைட்டி போட்டுட்டு வர்றது..அப்பப்பா...என்ன கொடுமை சார் இது.

என்ன தான் நாகரிகம், அது இதுன்னு பேசினாலும், நம்ம ஆளுங்க எந்த ஊரில, எந்த நாட்டுல இருந்தாலும், பொண்ணு பாக்கணும், கல்யாணம்னு தோனுச்சுன்னா உடனே புறப்புட்டு நம்ம ஊர்ல வந்து தான் தேடுவாங்க. அந்த ஊர்களில்,நாடுகளில் இல்லாத பெண்களா... அதை எல்லாம் மீறி இங்க வந்து பொண்ணு எடுக்குறாங்கன்னா...அதுக்கு முக்கிய காரணம், நம் நாட்டினுடைய கலாச்சாரமும் பழக்க வழக்கமும் தான்.
தயவு செய்து இதுக்கெல்லாம் பழமைவாதம்,பெண்ணடிமை,ஆணாதிக்கம், பிற்போக்குத்தனம்னு சொல்லி வாழ்க்கையில இருக்க சின்ன சின்ன சந்தோஷத்த கூட அனுபவிக்க முடியாம பண்ணிடாதீங்கோ !

(ஏங்க... பேச்சு பேச்சோட இருக்கணும், பூமில இருக்குறத எல்லாம் கெளறப்டாது ! )

ஆபீசுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு விடுற மாதிரி, நைட்டிக்கும் ஒரு ரெண்டு நாள் லீவு விட்டா நல்லா இருக்கும்னு நினைக்குது கணவர்கள் சங்கம்.
ஆதரிக்குமா மனைவியர் சங்கம் ?
இந்த மாதிரி கொட்டி தீர்த்து பேசி இருப்பது, நைட்டி உடை மேல இருக்க சலிப்பும் வெறுப்பும் தானே தவிர, பெண்களை புண்படுத்த அல்ல ! அதனால கோச்சிக்காதீங்கோ !

Thursday, June 18, 2009

நம்ம நிலைமையில, நம்ம நடிகர்கள்- ஒரு கற்பனை!

நடிகர்கள் எல்லாம் நம்மல மாதிரி கம்பெனி வேலை செஞ்சி, அவங்களுக்கும் Recession, Cost Cuttingனு நிலைமை வந்தா...அவங்க எல்லாம் எப்படி react பண்ணுவாங்கன்னு ஒரு கற்பனை : )



ரஜினிகாந்த்(பாபா): கண்ணா...இங்கப் பாரு.....ஒரு காரணமும் சொல்லாம, நம்ம factoryல வேலை செஞ்ச, 25 பேர வேலையை விட்டு தூக்கி இருக்கீங்க...அவங்க எல்லாரையும் உடனடியா..இப்போ..இப்போவே.. வேலைக்கு சேத்துக்கனும். (உஸ்க்.............பாபா கத்தியை எடுத்து வீசுறார்..)10 வரைக்கும் எண்ணுவேன். அதுக்குள்ள கத்திய எடுத்தா சண்டை, எடுக்கலணணா...சமாதானமா எல்லோருக்கும் வேலை...பாபா counting starts...1..2..3......10. ஹா ஹா ஹா....

பாக்யராஜ்(அந்த 7 நாட்கள்): சாரே, என்ன தான் cost cuttingனு சொன்னாலும், பாத்ரூம்ல, டிஷ்யூ பேப்பர்க்கு பதிலா, நியூஸ் பேப்பர் வைக்குறது சரி இல்ல சாரே. டிஷ்யூ பேப்பர்ல எழுதி நியூஸ் போடலாம் சாரே, பட்சே நியூஸ் பேப்பர் டிஷ்யூ பேப்பரா ஆகாது சாரே ! இதுக்கு ஈப்பாலாக்காட்டு மாதவன் சம்மதிக்கில்யா சாரே!

சிவாஜி கணேசன்: ஏன் பா...என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க...செலவ குறைக்கிறேன்னு சொல்லி மானிடரையும், கீபோர்டையும் மட்டும் வச்சிட்டு, CPU வ எடுத்துட்டு போய்ட்டீங்களே பா! CPU இல்லாம, நான் என்னப்பா பண்ணுவேன்.....


விஜய்காந்த் : ஆங்கிலத்துல எனக்கு பிடிக்காத வார்த்தை Lay Off !நம்ம கம்பெனியோட மொத்த சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய், முதலாளியோட தனிப்பட்ட சொத்தோட மதிப்பு மட்டும் 32 கோடியே 23 லட்சத்து 87 ஆயிரத்து 238 ரூபாய். நம்ம கம்பெனில வேலை பாக்குறது மொத்தம் 200 பேர், அவங்களோட சம்பள செலவு வருஷத்துக்கு 3 கோடியே 60 லட்சத்து 76 ஆயிரத்து 33 ரூபாய். மொத்த இருக்கிற 200 பேருக்கும் அடுத்த 25 வருஷத்துக்கும் சம்பளம் கொடுக்குற அளவுக்கு பணம் இருக்கும் போது, எதுக்குய்யா Layoff?
.
கமலஹாசன்: மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் கம்பெனி அல்ல...அதையும் தாண்டி மோசமானது. செலவ...செலவ கம்மி பண்றேன்னு சொல்லி, எங்க டிபார்ட்மெண்டுக்கு தினமும் வர டீ கூட கட் பண்ணிட்டாங்களே......ஆ..ஆ....அபிராமி அபிராமி(இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க விட்றுங்க...அப்டின்னு சொல்றாங்க நண்பர்கள்)
வேலையே இல்லாம சும்மா இருக்கவனுக்கு எல்லாம் டீ கொடுக்குறாங்களே...அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்...

இனிமே அக்கவுண்ட்ல டீ கிடையாதுன்னு சொன்னானே டீ கடைக்காரர் ...அவன நிறுத்த சொல்லு..நான் நிறுத்துறேன்...
எம் ஜி ஆர்: ஐயோ....என்னால முடியலியே அம்மா.. என்ன கொடுமை இது.....ஆபீஸ்ல ஓரளவுக்கு சுமார இருந்த ரிசப்சனிஸ்டயும், cost cuttingனு அனுப்பிட்டாங்களே ! முடியாது...முடியாது...இதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது...!

விஜய் : அண்ணா, வணக்கங்க்ணா....அதென்னங்க்ணா காஸ்ட் கட்டிங்க்...ஸ்டெப் கட்டிங்க், மிலிடரி கட்டிங்க், போலீஸ் கட்டிங்க் ஏங்கண்ணா..ஒயின் ஷாப்ல ரம் கட்டிங்க் கூட கேள்வி பட்டு இருக்கெங்க்ணா...இதென்னங்க்ணா புதுசா காஸ்ட் கட்டிங்க்..ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்குறேங்க்ணா... ஒரு தடவை நான் ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டா..அதுக்கப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேங்கண்ணா...

வினு சக்ரவர்த்தி : என்ன எழவு டா இது, கருமாந்திரம்....பைசாவை சேமிக்குறேன்னு சொல்லி, எந்த பரதேசி டா ஏசி ய ஆப் பண்றது....

தேவயானி(கோலங்கள்): இல்லைங்க தொல்ஸ்...என்னால முடிஞ்சத நான் செஞ்சிட்டு தான் இருக்கேன் தொல்ஸ் ...ஆனா இந்த ஆதி தான் workers கிட்ட குழப்பத்தை உண்டாக்க try பண்றான்*!@#

Thursday, June 11, 2009

சும்மா...நச்சுனு முடிவு(Decision) எடுக்கணுமா?




சின்ன மேட்டரா இருந்தாலும் சரி, பெரிய மேட்டரா இருந்தாலும் சரி, நாம எடுக்கிற முடிவுகள் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது.



  • இந்த பொண்ண லவ் பண்ணலாமா வேணாமா?

  • முதலாளி கிட்ட போய் சம்பள உயர்வு கேக்கலாமா வேணாமா?

  • மேற்படிப்பு படிக்கலாமா, வேலைக்கு போகலாமா?

  • இந்த வேலையை விட்டுட்டு வேற வேலைக்கு போகலாமா வேணாமா?

  • இந்த சினிமாக்கு போகலாமா வேணாமா?

  • சொந்தமா தொழில் தொடங்கலாமா வேணாமா?

இப்படி எந்த மாதிரி விஷயமாக இருந்தாலும், சரியான முடிவு எடுத்து செயல்பட்டால், நம்முடைய குறிக்கோளை, இலக்கை எளிதாக அடைந்து விட முடியும்.

(சரி...போதும் விஷயத்துக்கு வா...)


முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது நம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியவைகள் என்னான்னு பாப்போம். எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயங்கள் தான், அதையே கொஞ்சம் உதாரணத்தோட சொல்லி இருக்கேங்க...அவ்ளோ தான்.


1. கோபத்துல முடிவு எடுக்குறது எப்பவுமே utter Flopல தான் முடியும்ங்க.


இந்த விஷயத்துல கோபக்காரனும், குடிகாரனும் ஒண்ணு தாங்க, இரண்டு பேருக்கும் சுய நினைவு கம்மியா தான் இருக்கும். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு, கோபக்காரன் பேச்சு கோபம் தெளிஞ்சா போச்சுன்னு தான் சொல்லனும். மது அருந்துபவர்களுக்கு, நிறைய சமயம் காலையில எழுந்த உடனே தோணும், நேத்து சரக்குல கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ, அப்படி பேசாம இருந்து இருக்கலாமோனு? தோணும். இதே மாதிரி தான் கோபத்துல யாரையாச்சும் திட்டிட்டு, அதுக்கு அப்புறம் போய் "சாரி" சொல்லி மஸ்கா பண்ணுவோம். கோபம் தானுங்க, நாம எடுக்குற முடிவுகளுக்கு முதல் எதிரி, அதனால, கோபத்தோட எதையும் decide பண்ணாதீங்கோ....



2.எடுத்தோமா கவுத்தோமான்னு முடிவு எடுக்குறவங்க தான் நம்மல்ல பெரும்பாலானவர்கள் இருக்காங்க. இப்படி எடுக்கிற முடிவுகள் சரியாக அமைவது கஷ்டம் தான்.

"ஏலே நம்ம சாதிக்காரனப் பத்தி தப்பா பேசிப்புட்டான்லே...எடுங்கடா அறுவாளை, கிளம்புங்கடா...இன்னிக்கு வெட்டி சாய்ச்சிப்புடுவோம்னு" ஒரு நாலு பேர் ஆரம்பிக்க...இதுவே ஒரு பெரிய சாதிக் கலவரமா மாறுவதை நம்ம பாத்துட்டு தான் இருக்கோம்.
இதுக்கெல்லாம் நம்ம சின்னக் கவுண்டர் விஜய்காந்த் மாதிரி பொறுமையா, ரெண்டு தரப்பு வாதத்தையும் கேட்டு, விசாரிச்சு ஒரு தெளிவான முடிவு எடுக்கணும். "சங்கர பாண்டி வாத்தியார், சங்கரபாண்டி வாத்தியார்னு சொல்றதால, பல பேர் அவர பள்ளி கூட வாத்தியார்னு தப்பா நினைச்சிட்டு இருக்காங்க......ஆனா அவர் கம்பு சொல்லி கொடுக்குற சிலம்பம் வாத்தியார்னு நிறைய பேருக்கு தெரியாது........"


3. அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்கன்னு, விஷயத்தை முழுசா தெரிஞ்சுக்காமலேயே, நாம எடுக்குற முடிவு, ஒரு தலைப்பட்சமாக மட்டும் இல்லாமல், தவறாகத் தான் முடியும். எல்லார் சொல்றதையும் கேட்டுக்கணும் ப்ளஸ் நம்மலும் கொஞ்சம் மேட்டரா அலசி பார்த்து, எது உண்மை, எது நல்லது, இது work out ஆகுமா ஆகாதா, அப்படின்னு பாத்து, நமக்கு சரினு படுற முடிவை தான் எடுக்கணும்.


"மச்சான் அந்த figure உன்னையே பாத்துட்டு இருக்கா டா..அங்க பாரேன்...", இப்படி சொல்லியே நம்மல நாலு பேர் ஏத்தி விடுவாங்க. உண்மையை தான் சொல்றான்னு நினைச்சு, அந்த figureஅ பிக் அப் பண்ணலாம்னு முடிவு பண்ணி கிட்ட போறதுக்குள்ள, வேற ஒருத்தரோட பைக்ல கிளம்பிடும் அந்த பொண்ணு. மூக்கு உடைபட்டு நிக்க போறது நம்ம தான். So, வெளுத்தது எல்லாமே பால்னு நினைக்குறவங்க தான் நம்ம்...இருந்தாலும், மத்தவங்க சொல்றத அப்படியே நம்பாம, கொஞ்சம் நம்ம பங்குக்கு ஆராய்ச்சி பண்ணி முடிவு எடுக்குறது நல்லது.

4.ஒரு சில விஷயங்களைப் பத்தி முடிவு பண்றது ரொம்ப கஷடமா இருக்கும்..அப்படியும் போக முடியாது, இப்படியும் வர முடியாது. இந்த மாதிரி சமயத்துல, நாம எடுக்கப் போற decisionல Best case என்ன நடக்கும்? Worst case என்ன நடக்கும்? அப்படின்னு தெரிஞ்சிக்கனும். இரண்டுக்கும் நம்மல தயார் படுத்திக்கனும்.


Recessionல ரெண்டு வருஷமா salary hike இல்ல. நம்ம முதலாளி கிட்ட போய் கேக்கலாம வேணாமா. Best Caseஅ..சரி வா பா, இவ்ளோ நல்லா வொர்க் பண்ணி இருக்கீங்க....அடுத்த மாசத்துல இருந்து உங்களுக்கு மட்டும் Hike போடுறேன்னு சொல்லலாம். இதை மட்டும் யோசிக்கக் கூடாது. Worst case ஐயும் பாக்கணும். "ராசா, கம்பெனி இருக்கற நிலைமையில அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல, நீ, ஆணியே புடுங்க தேவை இல்லை....பேசாம வீட்டுக்கு போ" இப்படின்னும் சொல்லலாம்...இப்படி ரெண்டுத்துக்கும் prepare ஆகிக்கணும்.


5. அன்பு, பாசம், காதல்னு உணர்ச்சி வசப் பட்டு அவசர அவசரமா முடிவுகளை எடுக்குறது ரொம்ப ரிஸ்க். மனசு அமைதியா இருந்தா தான் நல்ல முடிவை எடுக்க முடியும்னு பெரிய பெரிய ஞானிகள் எல்லம் சொல்றாங்க.


இதையே தான் காதலன் படத்துல சந்தோஷமோ துக்கமோ ஓரு பத்து நிமிஷம் தள்ளி போடுங்க...ஓண்ணுல இருந்து பத்து வரைக்கும் எண்ணுவோம்...அப்படின்னு பொறுமையா Wait பண்ணுவாங்க.பதறிய காரியம் சிதறும்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க.


6. இன்னும் ஒரு சில சமயங்கள்ல, ஒரு சில பிரச்சனைகள்ல எந்த முடிவு எடுத்தாலும் நமக்கு கெட்டது ன்னு தோணும். அந்த மாதிரி மேட்டர்ல, ஓரளவுக்கு கம்மியா கெட்டது வர முடிவை எடுக்கலாம்.


உதாரணத்துக்கு, தேர்தல்ல, நம்ம தொகுதில யாருக்கு ஓட்டு போடுறது? எல்லாருமே மோசமானவங்க தான்...இதுல யாருக்கு ஓட்டு போடுறதுன்னு தோணும். இதுக்கு தான் துக்ளக் ஆசிரியர் சோ , "கொலைகாரனா, கொள்ளைக்காரனா, கடத்தல்காரனா, பிக்பாக்கெட்டான்னு choice கொடுத்தா, இதுல யாரு ஓரளவுக்கு கம்மியான கெட்டவன்னு பாத்தா பிக்பாக்கெட் தான். அப்படி தான் நம்ம வேட்பாளர்களுக்கும் ஓட்டு போடணும்னு " சொல்வார்.

இதையும் மீறி, நாம எடுக்குற decisions ஊத்திக்குச்சுன்னா..கப்பல் கவுந்த மாதிரி, கன்னத்துல கை வச்சுட்டு உட்காராம...கவியரசு கண்ணதாசன் வரிகளைப் பாடி மனச தேத்திக்க வேண்டியது தான்...

சட்டி சுட்டதடா...கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா...

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா.....


Monday, June 8, 2009

கிராமத்தானும், நகரத்தானும்(குப்பனும், பீட்டரும்)


கிராமத்தில் வாழ்கிற குப்பனும், சிட்டியில் வாழ்கிற பீட்டரும் சந்திச்சு அவரவர் வாழ்க்கை முறை பற்றி பேசுற மாதிரி ஒரு small கற்பனை.

பீட்டர்: Hey Kupps! Wassup dude ?!
குப்பன்: புரியலிங்க சாமி! தமிழ்ல சொல்லுங்க...!


பீட்டர்: வாழ்க்கை எப்படி போகுது...வருமானமெல்லாம் எப்படி?னு கேட்டேன்.
குப்பன்: நல்ல போகுதுங்க...மாசம் 3000 ரூபாய் கிடைக்குதுங்க..

பீட்டர்: என்னய்யா...3000 ரூபாய் வருமானத்துல நல்லா இருக்கேன்னு சொல்றியே...என்னை பாரு 40,000 ரூபாய் வாங்குறேன்..இதுவும் பத்தல....
குப்பன்: அடேங்கப்பா மாசத்துக்கு 40000 ரூபாயா...அதுவும் பத்தலையா?.என்னய்யா பண்ணுவீங்க அம்புட்டு பணத்தை...?

பீட்டர்: என்ன குப்பா...இப்படி கேட்டுட்ட......வாழ்க்கையை enjoy பண்ணனும் எங்கள மாதிரி..
குப்பன்: அது என்னமோங்க....சரி...அப்படி என்னங்க அனுபவிக்குறீங்க..?


பீட்டர்: வாரத்துல ரெண்டு நாள் நல்லா ஊர் சுத்துவோம், சினிமா போவோம், clubs, நீச்சல் இப்படி.....
குப்பன்: நாங்களும் வாரத்துல ஒரு நாள், ஊர் கோடில இருக்க அம்மன் கோவிலுக்கு போவோம்....தினமும் வயல்ல இருக்க கிணத்துல தான் நீச்சல் அடிக்கிறோம்...இதுக்கெல்லாம் எதுக்குங்க காசு...


பீட்டர்:நாங்க எல்லாம் குளு குளுன்னு A/C ல தான் இருப்போம்...அதெல்லாம் எப்படி வரும் காசு இல்லாம...
குப்பன்: ஹ்ம் கொடுத்து வச்சவங்க நீங்க....நம்ம வீட்ல ஒரே ஒரு fan தாங்க இருக்கு......ஆனா, என் குடிசை பக்கத்துலேயே ரெண்டு வேப்பமரம், ஜன்னல திறந்து விட்டா மின்விசிறி கூட தேவை இல்லை...சும்மா ஜம்முன்னு காற்று வரும்....


பீட்டர்: மாசத்துல ஒரு நாள் மனைவியை கூட்டிட்டு ரிசார்ட் போவேன்...நீங்கள் எல்லாம் எங்க போக போறீங்க...
குப்பன்:என் மனைவியை கூப்பிட்டுட்டு தனியா போகனும்னா....ஆற்றங்கரைக்கும்,சவுக்குத் தோப்பிற்கும், சோளக் காட்டுக்கும் போவேன்....நல்லா தாங்க ஐயா இருக்கும் .....இதுக்கெல்லாம் காசே வேணாம்யா...


பீட்டர் : யோவ் நாங்க எல்லாம் அப்ப அப்ப டின்னர்க்கு பெரிய Star ஹோட்டல் Buffetக்கு போவோம்...நீங்க...
குப்பன்: அவ்ளோ பெரிய ஓட்டல எல்லாம் நான் பார்த்ததே இல்லைங்க.....கோச்சிக்காதீங்க ஐயா... தட்டை தூக்கிட்டு சாப்பாட்டுப் பானையை தேடி தேடிப் போய் சாப்பிடுவாங்களே...அதுதானே Buffet? எங்களுக்கெல்லாம் என் அம்மா,என் மனைவி தட்டை தூக்கிட்டு வந்து ஊட்டுவாங்க ஐயா....அதுல இருக்க சந்தோஷம் Buffetல இருக்குங்களா?



பீட்டர்: வெளிநாடு போய் இருக்கீங்களா....உலகத்துல இருக்க பெரிய முதலாளிங்களோட எல்லாம் விருந்து சாப்பிட்டு இருக்கேன்...
குப்பன்: இங்க இருக்க மெட்ராஸ்க்கே போனது கிடையாதுங்கய்யா...மாசத்துல ஒரு நாள் குடும்பத்தோட, பக்கத்து ஊர்ல இருக்க என் தங்கச்சி வீட்டுக்கு போவோம்...நாட்டுக் கோழி, மீன் வறுவல்,தடபுடலா இருக்கும்...என் தங்கச்சி பொண்ணு 6 வயசு தான்...அப்படி கவனிக்கும் ஐயா எங்கள...!



பீட்டர் : ஊர்ல இருக்கிற அப்பா அம்மாக்கு வீடு, கார் வாங்கி தருவோம்...அவங்கள சந்தோஷப்படுத்துவோம்..நீங்க...
குப்பன்: வீடு வாங்கிக் கொடுக்க எல்லாம் வசதி இல்லீங்க....அப்படியே புது வீடு வாங்கினாலும், எங்க ஆத்தா அப்பன என் கூட தான் வச்சிப்பேன்ங்க...என் கூட இருக்குறதுல தாங்க அவங்களுக்கு சந்தோஷ்ம்...வேற ஒரு வீட்ல விட மாட்டேங்க ஐயா... ஒரு நாளைக்கு ஒரு 20 நிமிஷம் ஆச்சும் ஆத்தா அப்பன் கிட்ட மனசாரப் பேசி சிரிச்சா தான்யா எங்களுக்கு எல்லாம் தூக்கம் வரும்...


பீட்டர் : அப்புறம்...எங்களுக்கு ஊர்ல பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் தெரியும்...எங்க போனாலும் மதிப்பு மரியாதை..
குப்பன்: பெரிய ஆளுங்க எல்லாம் தெரியாதுங்க ஐயா....எங்க ஊர் ஜனங்க தான் எங்களுக்கு பெரிய ஆளுங்க...நீங்க ரோட்ல அடிப்பட்டு விழுந்தா, உங்க ஊர்ல எத்தனை பேரு உதவிக்கு வருவாங்க.....இங்கே எங்க கிராமத்துல, யாருக்காவது ஒரு சின்ன காயம் பட்டா கூட ஊரே வரும் உதவி செய்ய.....



இப்படி போகுது இவங்களோட வாக்கு வாதம்....
ஆக மொத்தம் கூட்டி கழிச்சு பார்த்தா....இதோங்க...ரெண்டு பேரோட மாதாந்திர செலவு கணக்கு...



.................................பீட்டர்(40,000) குப்பன்(3000)
வாடகை ...............8000.......................இல்ல
கரண்ட் ...............1500 .......................150
க்ரெடிட் கார்ட்...........10500.......................இல்ல
a/c,fridgeEMI ................5500....................... இல்ல
Inusrance/saving............6000.......................இல்ல
கேளிக்கை ...................1500.......................100
வீட்டு செலவு.............8000.......................2350
................மொத்தம் .....41000.................... 2600
.........................(துண்டு 1000 ரூ) ( மிச்சம் 400 ரூ)

  • இதுல யார் Better?

  • யார் நல்லா வாழ்க்கையை அனுபவிக்கிறாங்க குப்பனா பீட்டரா?

  • யாருடைய வாழ்க்கை முறை நமக்கு பிடிக்குது?

  • நிஜமான சந்தோஷம் எது?

  • கண்ணுக்குத் தெரியாத அல்லது இல்லாத சந்தோஷத்தைத் தேடி, இருக்கிற சந்தோஷத்தை தொலைச்சிடுறோமா?

  • ஒரு வேளை அக்கறைக்கு இக்கறை பச்சைன்னு சொல்றது இது தானா?

    இப்படி கேள்வி மேல கேள்வி கேட்க மட்டுமே நமக்கு தெரியும்...பதில் நம்ம கைல இல்லீங்கோ.....!


சாமியாரு போதும்டா.......வாயை மூடுன்னு நீங்க சொல்றது கேக்குது : ) !



Thursday, June 4, 2009

மன்னாரு கம்புயூட்டர் கம்பெனி !

நம்மோட கற்பனை கம்பெனி தான் மன்னார் கம்ப்யூட்டர் கம்பெனி. இதுல ஒவ்வொருத்தரும் (HR,CEO,SWEngr,etc.,.) என்ன சொல்றாங்க.... என்ன பாட்டு முனுமுனுக்குறாங்கன்னு ஒரு சின்ன கற்பனை.



Developer : நாள் முழுக்க வேலை செய்யுற மாதிரி தான் இருக்கு, டைம் ஷீட்ல தான் என்ன போடுறதுன்னு தெரியல....

(குயில புடிச்சு..கூண்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்...மயிலப் புடிச்சு கால ஒடிச்சு ஆடச் சொல்லுகிற உலகம்...அது எப்படி பாடும் ஐயா...அது எப்படி ஆடும் ஐயா...ஓ ஓ...)


Tester : தப்பு பண்றது எவ்ளோ சுலபம், ங்கொய்யால, அந்த தப்ப கண்டுபிடிக்க நாம படுறபாடு...அப்பப்பா...!குரு சிஷ்யன் ஸ்டைல்ல...(கண்டுபுடிச்சேன்...கண்டுபுடிச்சேன்...Bug ஒண்ணு கண்டுபுடிச்சேன்.....)


Team Lead: இந்த Developer(கைப்புள்ள), எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான் டா...இவன் ரொம்ப நல்லவன்ன்ன்..
(நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவத்தி....)


DESIGNER : ஒரே தீம்க்கு பத்து Logo வித விதமா டிசைன் பண்ணி கொடுத்தாலும், கூகுள்ல போய் தேடி அவருக்கு புடிச்ச வேற ஒரு கம்பெனி Logo வை சுட்டு, "இது சூப்பரா இருக்கு பா இதையே லைட்டா மாத்தி கொடுத்துடு பா" ...அப்படின்னு நம்ம மன்னாரு சொல்லும் போது வர்ற கோவம்.......உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
(ஊரத் தெரிஞ்சிகிட்டேன்..உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மனி...என் கண்மனி...
காபி அடிச்சா தான் ஊரு மதிக்குது...கண்மனி....என் கண்மனி...)

குவாலிட்டி எக்சிகியூட்டிவ் : Code அடிக்கலன்னாலும், அதையே டாகுமேண்ட் அடிக்கச் சொல்லுப்பா....
(நல்ல நல்ல ப்ராசசை நம்பி...இந்த கம்பெனியே இருக்குது தம்பி....)


மார்க்கெட்டிங்க் மானேஜர் : எப்படிடா... "புலி வருது, புலி(ஆர்டர்) வருதுனு.." சொல்லியே, இத்தனை நாள் சமாளிக்கிற...என்னமோ போடா....

(போற்றிப் பாடடி பொண்ணே.......மன்னாரு காலடி மண்ணே!)



அக்கவுண்ட்ஸ் ஆபீசர் : ஏண்டா அம்பி, நாயர் கடை அக்கவுண்ட் செட்டில் பண்ணதுக்கெல்லாம் expense claim பண்ணுறியே..எப்பட்றா ! அப்புறம், அந்த அமெரிக்க அண்ணாச்சி காசு கொடுத்துட்டாளா.....மன்னாரு கேட்டதா செத்த ஒரு remainder mail தட்டி விடுறா !
(பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்...புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்)

Network Engineer : Ping ஆச்சா இல்லியா, trace route போட சொல்லுய்யா....Firewall ப்லாக் பண்ணுதோ? Port ஓபன் பண்ணி இருக்கா?
(Junior: சர், முதல்ல சர்வர் ON பண்ணுங்க...)
(நிலா அது வானத்து மேலே...பலானது(வைரஸ்) நெட்வொர்க் மேலே...ஒய்யா...ஓய்....)


System Admin: மேட்டர் சைட், ஜாப் சைட்ட ப்லாக் பண்ண சொன்னா...ஏன் யா கூகிள ப்லாக் பண்ண...இப்ப பாரு code அடிக்க முடியலன்னு சாப்ட்வேர் டீம் managementkku புகார் கொடுத்து இருக்காங்களாம்.....கூப்பிட்டு கிழி கிழின்னு கிழிக்குறாங்க...
காதல் தேசம்..முஸ்தபா...முஸ்தபா ஸ்டைல்ல
(முஸ்தபா...முஸ்தபா....dont worry முஸ்தபா....system நம் தோழன் முஸ்தபா...)


Admin Manager: ஏன்பா, பசங்களா...ஏதோ மீட்டிங்காம், காபி, பிஸ்கட் வச்சுறுங்க...அந்த கான்ப்ரன்ஸ் ஹாலை க்ளீன் பண்ணி வையுங்க...ஒரு முடிவுக்கும் வராம ரொம்ப நேரம் பேசுவாங்க....தண்ணி தாகம் அடிக்கும், அதனால, அந்த தண்ணி டம்லர்ல ஈ விழுந்து இருக்கு பாரு, அதை மட்டும் எடுத்துட்டு..மூடி வச்சுறுங்க....பால் எல்லாம் வேணாம், உள்ள வர்றவங்க ப்லாக் டீ தான் குடிப்பாங்க...

என் ராசாவின் மனசிலே...பெண் மனசு...பாடல் ஸ்டைல்ல
(மன்னார் மனசு ஆழமுன்னு...மானேஜர்க்குத் தெரியும்...அது HRக்கும் தெரியும்...அந்த ஆழத்திலே என்ன உண்டு...யாருக்குத் தான் தெரியும்)


HR : ஏன்யா Executivesகளா.....Productivity கம்மியா இருக்குற ரிசோர்ச தூக்க சொல்றாங்க மேலிடம்...முதல்ல நம்ம டிபார்ட்மென்ட தான் கை வைக்கனும்னு நினைக்கிறேன்.
(என் சோகக் கதையைக் கேளு...தாய்க்குலமே....ஆமாம் தாய்க்குலமே..)


Project Manager : என்ன தான், பார்த்து பார்த்து ப்ராஜெக்ட் ப்ளான் போட்டாலும், deadline meet பண்ண மாட்றோமே...அடுத்த முறை இங்கி, பிங்கி பாங்கி போட்டு தான் Delivery Schedule போடணும்...! ஏங்க அட்மின், என்னோட Laptopல, updated windows media playerum, Flash playerum போட்றுங்கப்பா.....படம் பாக்கணும், Games விளையாடனும்...
(ராஜா என்பார் மந்திரி என்பார்..ராஜ்ஜியம் இல்லை ஆள....)


முதலாளி மன்னார் -CEO : எப்படி டைவர்ட் பண்ணாலும், appraisalனு நிக்குறாங்களே...என்ன பண்றது ..?
(ஆண்டவன் படைச்சான்...என் கிட்ட கொடுத்தான்...அனுபவி மன்னார்னு அனுப்பி வச்சான்....)
(கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான்....உள்ளே மிருகம்...வெளியே கடவுள் விளங்க முடியாக் கவிதை நான்...)


சொன்ன விஷயங்கள் எல்லாம் சும்மா ஒரு கற்பனை.....seriousa எடுத்துக்காதீங்க... சிரிப்புக்காக மட்டுமே...!

LinkWithin

Blog Widget by LinkWithin