Tuesday, June 30, 2009

மனைவியின் தாக்குதல்களுக்கு கணவரின் பதில் பாடல்கள்!

மனைவி கேக்குற கேள்விகளுக்கு எல்லாம், கணவர் பாடலிலேயே பதில் சொன்னா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.
சும்மா நகைச்சுவைக்காக மட்டும் : )


மனைவி : கடைக்கு போய்ட்டு ஒரு நல்ல தக்காளி வாங்கிட்டு வர தெரியல, தண்ணி கேன் எடுத்து ஊத்த தெரில, கடைத்தெருவுக்கு போய் விலை பேச தெரில, குழந்தை கூட உட்கார்ந்து ஹோம் வொர்க் செய்ய வைக்க தெரில, ஆத்திரம் அவசரம்னா ஒரு தோசை சுட தெரில...ஏன் ஒரு மேக்கி கூட செய்ய தெரில....


கணவன் :


பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது..
அப்படி பொறந்துவிட்டா பொம்பளைய நினைக்கக் கூடாது...மனைவி : எவ்ளோ பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் என்னை கல்யாணம் பண்ணிக்க வந்தாங்க...அவங்கள எல்லாம் விட்டுட்டு உங்கள போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாருங்க.....எல்லாம் என் தலையெழுத்து...


கணவன்:

கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று....
மனைவி : என்ன திட்டினாலும் கேக்க மாட்றீங்க...இப்படியே வாரத்துல 2 நாளு குடிச்சிட்டு வர்றீங்களே...சரி அப்படியே குடிச்சிட்டு வந்தாலும், அமைதியா இருந்தா பரவால்ல....உங்க மொக்கையை யாரு தாங்குறது....இன்னிக்கு ஒரு நாள் வெளியவே படுங்க..(தடக் என கதவை அடைத்து, மனைவி வெளியே தள்ளிட்டாங்க)

கணவன் :
"வாடி பொட்ட புள்ள வெளியே...
என் வாலிபத்த நோகடிச்ச கிளியே..."

"இரவினில் ஆட்டம்.....
பகலினில் ஓட்டம்..
இது தான் எங்கள் உலகம், எங்கள் உலகம்..."

"தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இதில் நீயேன்ன...
அடியே நானேன்ன ஞானப் பெண்ணே..
வாழ்வின் பொருளென்ன...
நீ வந்த கதை என்ன?"


மனைவி : இப்படியே ஆபீஸ் வேலைன்னு, குடும்பத்தை, பசங்கள கவனிக்காம சுத்திட்டே இருந்தீங்கன்னா...வயசான காலத்துல நம்ம புள்ளைங்க நம்மல கவனிக்காம போய்டுவாங்க.... நான் சொல்றது உங்க புத்தில, ஏறுதா இல்லையா...?

கணவன்:
"வீடு வரை உறவுவீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ......
கடைசி வரை யாரோ......"


மனைவி: பொண்ணு பாக்க வரும் போதே, என்னை விட என் பக்கதுல இருந்த பொண்ண பல்ல இளிச்சுட்டு பார்த்த போதே நினைச்சேன்...இந்த மாதிரியான ஆளு நமக்கு தேவையான்னு நினைச்சேன்....இருந்தாலும் ஏதோ லைட்டா தடுமாறிட்டேன்...இப்ப உங்க கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன்..*&%##########$%^%$$##$%%^$#$$

கணவன் :
சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக்குள்ள யாருமில்ல, எந்த நெஞ்சும் ஈரம் இல்ல
சம்சாரம்....
நேரம் வந்து நெருங்கி தொட்டா ஷாக் அடிக்கிற மின்சாரம்...மனைவி : ஏங்க..ரெண்டு நாளு நான் அம்மா வீட்டுக்கு போய்ட்டு வரேன்...அடக்கமா இருங்க....ரெண்டே நாள்ல திரும்பி வந்துடுவேன்..ஆளில்லன்னு ஆட்டம் போடாதீங்க...

கணவன்:
"அட்றாட்றா நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா..
ஏய் மாடு செத்தா, மனுஷன் தின்னா, தோள வச்சி மேளம் கட்டி,
அட்றாட்றா நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா..நாக்க மூக்கா.."

"ஹேப்பி...இன்று முதல் ஹேப்பி...
ஹேப்பி...இன்று முதல் ஹேப்பி..."மனைவி : இந்த மாதிரி ஏடாகுடமாவே பேசிட்டு இருக்கீங்களே...என்ன தான் நினைச்சிட்டு இருக்கீங்க என்னை பத்தி?

கணவன்:
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம், கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன......
காதல் வாழ்க....
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் !


கடைசியா கொஞ்சம் சமாதானமா முடிச்சுக்குறது தான் கணவர்களுக்கு பாதுகாப்பு !


சும்மா சிரிப்புக்காகவும், பொழுது போக்குக்காகவும் மட்டும் இந்த பதிவு !

7 comments:

யூர்கன் க்ருகியர்..... said...

ஆமா இதெல்லாம் மனசுக்குள்ளேயே பாடணுமா ?

பொதுவா மனைவி கிட்டதான் "பாட்டு" வாங்குவாங்க ...நீங்க பாடனும்றீன்களே ...சரி சரி ஆல் தி பெஸ்ட்

கலையரசன் said...

அருமையான எழுத்து + பாடல் நடை!
தெடர்ந்து படிக்கிறேன்...
நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!

கபிலன் said...

"யூர்கன் க்ருகியர்..... said...
ஆமா இதெல்லாம் மனசுக்குள்ளேயே பாடணுமா ?

பொதுவா மனைவி கிட்டதான் "பாட்டு" வாங்குவாங்க ...நீங்க பாடனும்றீன்களே ...சரி சரி ஆல் தி பெஸ்ட்"

ஹா ஹா...யூர்கன் க்ருகியர் ரொம்ப தெளிவான கேள்விகளை கேக்குறீங்க : )
நேரம் பொருத்து, மனசுக்குள்ள பாடுறதும், சத்தமா பாடுறதும்..
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க..

கபிலன் said...

"கலையரசன் said...
அருமையான எழுத்து + பாடல் நடை!
தெடர்ந்து படிக்கிறேன்...
நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!"

வாங்க கலையரசன்..
உங்களுடைய விமர்சனங்கள் தாங்க டானிக்..
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க..

பிரியமுடன்.........வசந்த் said...

அசத்திட்டீங்க

கபிலன் said...

"பிரியமுடன்.........வசந்த் said...
அசத்திட்டீங்க"

நன்றிங்க வசந்த் !

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

LinkWithin

Blog Widget by LinkWithin