Thursday, June 4, 2009

மன்னாரு கம்புயூட்டர் கம்பெனி !

நம்மோட கற்பனை கம்பெனி தான் மன்னார் கம்ப்யூட்டர் கம்பெனி. இதுல ஒவ்வொருத்தரும் (HR,CEO,SWEngr,etc.,.) என்ன சொல்றாங்க.... என்ன பாட்டு முனுமுனுக்குறாங்கன்னு ஒரு சின்ன கற்பனை.Developer : நாள் முழுக்க வேலை செய்யுற மாதிரி தான் இருக்கு, டைம் ஷீட்ல தான் என்ன போடுறதுன்னு தெரியல....

(குயில புடிச்சு..கூண்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்...மயிலப் புடிச்சு கால ஒடிச்சு ஆடச் சொல்லுகிற உலகம்...அது எப்படி பாடும் ஐயா...அது எப்படி ஆடும் ஐயா...ஓ ஓ...)


Tester : தப்பு பண்றது எவ்ளோ சுலபம், ங்கொய்யால, அந்த தப்ப கண்டுபிடிக்க நாம படுறபாடு...அப்பப்பா...!குரு சிஷ்யன் ஸ்டைல்ல...(கண்டுபுடிச்சேன்...கண்டுபுடிச்சேன்...Bug ஒண்ணு கண்டுபுடிச்சேன்.....)


Team Lead: இந்த Developer(கைப்புள்ள), எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான் டா...இவன் ரொம்ப நல்லவன்ன்ன்..
(நான் உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவத்தி....)


DESIGNER : ஒரே தீம்க்கு பத்து Logo வித விதமா டிசைன் பண்ணி கொடுத்தாலும், கூகுள்ல போய் தேடி அவருக்கு புடிச்ச வேற ஒரு கம்பெனி Logo வை சுட்டு, "இது சூப்பரா இருக்கு பா இதையே லைட்டா மாத்தி கொடுத்துடு பா" ...அப்படின்னு நம்ம மன்னாரு சொல்லும் போது வர்ற கோவம்.......உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
(ஊரத் தெரிஞ்சிகிட்டேன்..உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மனி...என் கண்மனி...
காபி அடிச்சா தான் ஊரு மதிக்குது...கண்மனி....என் கண்மனி...)

குவாலிட்டி எக்சிகியூட்டிவ் : Code அடிக்கலன்னாலும், அதையே டாகுமேண்ட் அடிக்கச் சொல்லுப்பா....
(நல்ல நல்ல ப்ராசசை நம்பி...இந்த கம்பெனியே இருக்குது தம்பி....)


மார்க்கெட்டிங்க் மானேஜர் : எப்படிடா... "புலி வருது, புலி(ஆர்டர்) வருதுனு.." சொல்லியே, இத்தனை நாள் சமாளிக்கிற...என்னமோ போடா....

(போற்றிப் பாடடி பொண்ணே.......மன்னாரு காலடி மண்ணே!)அக்கவுண்ட்ஸ் ஆபீசர் : ஏண்டா அம்பி, நாயர் கடை அக்கவுண்ட் செட்டில் பண்ணதுக்கெல்லாம் expense claim பண்ணுறியே..எப்பட்றா ! அப்புறம், அந்த அமெரிக்க அண்ணாச்சி காசு கொடுத்துட்டாளா.....மன்னாரு கேட்டதா செத்த ஒரு remainder mail தட்டி விடுறா !
(பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்...புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்)

Network Engineer : Ping ஆச்சா இல்லியா, trace route போட சொல்லுய்யா....Firewall ப்லாக் பண்ணுதோ? Port ஓபன் பண்ணி இருக்கா?
(Junior: சர், முதல்ல சர்வர் ON பண்ணுங்க...)
(நிலா அது வானத்து மேலே...பலானது(வைரஸ்) நெட்வொர்க் மேலே...ஒய்யா...ஓய்....)


System Admin: மேட்டர் சைட், ஜாப் சைட்ட ப்லாக் பண்ண சொன்னா...ஏன் யா கூகிள ப்லாக் பண்ண...இப்ப பாரு code அடிக்க முடியலன்னு சாப்ட்வேர் டீம் managementkku புகார் கொடுத்து இருக்காங்களாம்.....கூப்பிட்டு கிழி கிழின்னு கிழிக்குறாங்க...
காதல் தேசம்..முஸ்தபா...முஸ்தபா ஸ்டைல்ல
(முஸ்தபா...முஸ்தபா....dont worry முஸ்தபா....system நம் தோழன் முஸ்தபா...)


Admin Manager: ஏன்பா, பசங்களா...ஏதோ மீட்டிங்காம், காபி, பிஸ்கட் வச்சுறுங்க...அந்த கான்ப்ரன்ஸ் ஹாலை க்ளீன் பண்ணி வையுங்க...ஒரு முடிவுக்கும் வராம ரொம்ப நேரம் பேசுவாங்க....தண்ணி தாகம் அடிக்கும், அதனால, அந்த தண்ணி டம்லர்ல ஈ விழுந்து இருக்கு பாரு, அதை மட்டும் எடுத்துட்டு..மூடி வச்சுறுங்க....பால் எல்லாம் வேணாம், உள்ள வர்றவங்க ப்லாக் டீ தான் குடிப்பாங்க...

என் ராசாவின் மனசிலே...பெண் மனசு...பாடல் ஸ்டைல்ல
(மன்னார் மனசு ஆழமுன்னு...மானேஜர்க்குத் தெரியும்...அது HRக்கும் தெரியும்...அந்த ஆழத்திலே என்ன உண்டு...யாருக்குத் தான் தெரியும்)


HR : ஏன்யா Executivesகளா.....Productivity கம்மியா இருக்குற ரிசோர்ச தூக்க சொல்றாங்க மேலிடம்...முதல்ல நம்ம டிபார்ட்மென்ட தான் கை வைக்கனும்னு நினைக்கிறேன்.
(என் சோகக் கதையைக் கேளு...தாய்க்குலமே....ஆமாம் தாய்க்குலமே..)


Project Manager : என்ன தான், பார்த்து பார்த்து ப்ராஜெக்ட் ப்ளான் போட்டாலும், deadline meet பண்ண மாட்றோமே...அடுத்த முறை இங்கி, பிங்கி பாங்கி போட்டு தான் Delivery Schedule போடணும்...! ஏங்க அட்மின், என்னோட Laptopல, updated windows media playerum, Flash playerum போட்றுங்கப்பா.....படம் பாக்கணும், Games விளையாடனும்...
(ராஜா என்பார் மந்திரி என்பார்..ராஜ்ஜியம் இல்லை ஆள....)


முதலாளி மன்னார் -CEO : எப்படி டைவர்ட் பண்ணாலும், appraisalனு நிக்குறாங்களே...என்ன பண்றது ..?
(ஆண்டவன் படைச்சான்...என் கிட்ட கொடுத்தான்...அனுபவி மன்னார்னு அனுப்பி வச்சான்....)
(கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான்....உள்ளே மிருகம்...வெளியே கடவுள் விளங்க முடியாக் கவிதை நான்...)


சொன்ன விஷயங்கள் எல்லாம் சும்மா ஒரு கற்பனை.....seriousa எடுத்துக்காதீங்க... சிரிப்புக்காக மட்டுமே...!

12 comments:

prabuss said...

DESIGNER ????????????????????Please add

கபிலன் said...

Add பண்ணிட்டேங்க பிரபு..!

prem anand said...

really nice I enjoyed

prabuss said...

hi Thanks Very Nice !!!!!!!!!!

Great!!!!!!

Lakshmi said...

Wow...tooooooooooooo good...:)))
Pl continue this kinda posting...

Regards,
Lakshmi

கபிலன் said...

Thanks Lakshmi!

முனைவர்.இரா.குணசீலன் said...

அட அட அட
அருமை ரசித்து மகிழ்ந்தேன்.....

கபிலன் said...

"முனைவர்.இரா.குணசீலன் said...
அட அட அட
அருமை ரசித்து மகிழ்ந்தேன்....."

ரொம்ப நன்றிங்க முனைவர்!

சூரியன் said...

// நாள் முழுக்க வேலை செய்யுற மாதிரி தான் இருக்கு, டைம் ஷீட்ல தான் என்ன போடுறதுன்னு தெரியல....
//

ஹூம் , என்ன சொல்றதுன்னே தெரிலப்பா ...

கபிலன் said...

"சூரியன் said...
// நாள் முழுக்க வேலை செய்யுற மாதிரி தான் இருக்கு, டைம் ஷீட்ல தான் என்ன போடுறதுன்னு தெரியல....
//

ஹூம் , என்ன சொல்றதுன்னே தெரிலப்பா ..."


Same Blood!

Anonymous said...

உங்க கற்பனை அருவி மாதிரி கொட்டுதுங்கோ.
உங்கள் கற்பனை மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.


சரவணன்

கபிலன் said...

"உங்க கற்பனை அருவி மாதிரி கொட்டுதுங்கோ.
உங்கள் கற்பனை மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

சரவணன்"

நன்றி சரவணன் !

LinkWithin

Blog Widget by LinkWithin