Monday, June 22, 2009

சலிப்பை ஏற்படுத்தும் "நைட்டி" கலாச்சாரம் !

இதுக்கெல்லாம் ஒரு பதிவு போடணுமா, அப்படின்னு தான் தோனுச்சு முதல்ல....சரி, பரவால்ல... பதிவு போட்டு தான் பார்ப்போம்...ஆதரவு இருக்கான்னு பாப்போம்னு தோனுச்சு...அதான்..இந்த பதிவுக்கு முதலில் "கணவனைக் கடுப்பேத்தும் நைட்டி " நு தான் பேர் வச்சேன். ரொம்ப ஓவரா இருக்குமோன்னு லைட்டா மாத்திட்டேன் !

யார் கண்டுபிடிச்சு, எப்படி வந்ததோ தெரியல இந்த ஆடை நைட்டி. "நைட்டி" என்ற பெயரே, இரவிலே அணியும் ஆடை என்று பொருள் தந்தாலும், இன்றைய பெண்கள், இரவு பகல் என பாராமல் எப்போதுமே இதே ட்ரெஸ்சை அணிந்து கடுப்பு ஏத்துறது எல்லா வீட்லயும் இருக்குற ஒரு மேட்டர்.

அப்படி என்ன தான் பெண்களுக்கு இந்த நைட்டி புடிச்சு இருக்குன்னு, பெண்கள் கிட்ட கேட்டோம்னா, இதோ இந்த மாதிரி பதில் தான் வரும்.

1. ரொம்ப comfortable ஆன டிரஸ்.
2. விரசம் இல்லாத உடை, உடலை முழுவதும் கவர் செய்யுற மாதிரியான உடை (நம்ம ஊர்ல இருக்குற நைட்டிகள்).இந்த ரெண்டு விளக்கங்களை தான் கொடுப்பாங்க.

சரி..அது இருக்கட்டும், நைட்டி மேல இவனுக்கு ஏண்டா இவ்வளவு கடுப்புன்னு நினைக்கலாம்.இதோ வரேன்...

1. என்ன மாதிரி டிசைன் நைட்டியா இருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்த நைட்டியா இருந்தாலும், கண்ணுக்கு ஒரே மாதிரி தான் தெரியும்.

கேஸ் சிலிண்டர்க்கு பூப்போட்ட துணி சுத்தி வைச்சு, கொஞ்சம் நகர்ந்து நின்னு வேடிக்கை பாருங்க...நிச்சயமா பொண்ணு ஒண்ணு நைட்டில இருக்க மாதிரியே இருக்கும். ஏன்னா அந்த ஆடையினுடைய அமைப்பு அப்படி! தொள தொள ந்னு ஒரு கை, அங்க அங்க பூ பூ வா துணி, இப்படி கிட்ட தட்ட ஒரு ஜோக்கர் டிரஸ் மாதிரி தான் இருக்கு. இதையே மாசக் கணக்குல போட்டுக்கிட்டு இருந்தா மனுஷனுக்கு வெறுப்பு வருமா வராதாங்க?
(ஜின் ஜினுக்கா சின்னக் கிளி, சிரிக்கும் பச்சைக் கிளி, ஓடி வந்தா மேடையிலே ஆட்டம் ஆட.....)

2. பொதுவா பார்த்தோம்னா, ஒவ்வொரு பெண்களுக்கு ஒவ்வொரு உடை பொருத்தமாக அமையும். ஒரு சில பெண்களுக்கு சுரிதார் போட்டா அழகா இருக்கும், இன்னும் ஒரு சிலருக்கு மாடர்னா, ஜீன்ஸ் - டீ ஷர்ட் போட்டா அழகா இருக்கும். எந்த பர்ஸ்னாலிட்டி உள்ள பெண்ணா இருந்தாலும், சேலையில ரொம்ப அழகா தெரிவாங்க. ஆனா பாருங்க, எவ்வளவு அழகா இருக்குற பொண்ணும், இந்த நைட்டிய போட்டா, கொடுமையா இருக்க மாதிரி தான் தெரியும்.

3. நைட்டியை உபயோகப் படுத்துறத தப்புன்னு சொல்ல வரலீங்க. இரவுல உபயோகப்படுத்தலாம், இல்ல பகல் நேரங்களில் கூட எப்பவாச்சும் உபயோகப்படுத்திக்கலாம். அதுக்காக் காலையில இருந்து இரவு வரைக்கும் நைட்டியே போட்டுட்டு இருந்தா சலிப்பு வருவது இயல்பு தானங்க ?

பல கடுப்புகள்ல வேலையில இருந்து வீட்டுக்கு வருகிற கணவன் கண்களில் ஓரளவுக்கு சுமாரா இருக்கனும்னு, இப்ப இருக்கிற படித்த நகரத்து பெண்கள் பலருக்கு தெரிவதில்லை. இவங்க தானே வர்றாங்க.இதுக்கு நைட்டியே போதும். இப்படி தான் பலரோட எண்ணம். இந்த விஷயத்துல கிராமத்து பெண்கள் சூப்பர், தங்களுக்கு உள்ள சாதாரண வாய்ல் புடவைய கட்டிக்கிட்டு, முகம் கழுவி, தலையில மல்லி பூ வச்சிட்டு, சிரிச்ச முகத்தோட, இந்தாங்க காபி ந்னு கணவர் கிட்ட கொடுக்குறது....அடேங்கப்பா......அதெல்லாம் இந்த நைட்டி தேவதைகள் கிட்ட கிடைக்குமா?

(ராஜ்கிரண் ஸ்டையில்ல பெண் மனசு ஆழமுன்னு...
"கல்லானாலும் கணவன், சிறு புல்லானாலும் புருஷன்....கல் இல்லையே இந்த மகன் கல் இல்லையே.....")

4. கடைத்தெருவிற்கு போனால், மணிகணக்குல, கடை கடையா ஏறி சுரிதார், புடவைன்னு எடுத்து கொடுக்குறோம். அதுக்காச்சும், கொஞ்சம் மனசாட்சியோட,இதையெல்லாம் உபயோகப்படுத்தக் கூடாதா ? வீட்ல எவ்வளவோ சுரிதார் இருந்தும், எவ்வளவோ புடவைகள் இருந்தும், பெண்களுக்கு வீட்டில் நைட்டி தான் எல்லாமே !

இதுல ஏன்னு கேட்டா, அவங்க சொல்ற reason வீட்ல தானே இருக்கேன், எங்கயாச்சும் வெளில போகும் போது பாத்துக்கலாம். மனைவியின் அழகை கணவன் ரசிப்பதற்கு, எதாச்சும் விசேஷம் வருமா, சேலை கட்டுவாங்களா ந்னு காத்து இருக்க வேண்டிய அவல நிலையில கணவர்கள் இருக்காங்க !

(லிவிங்க்ஸ்டன் ஸ்டையில்ல..
"ஜனாதிபதி முருகேசன் வாழ்க...வருங்கால ஜனாதிபதி முருகேசன் வாழ்க..." என்னம்மா பீல் பண்ணி கூவுறான் பாருடா..)

5. இதே மாதிரியான நிலைமை தொடர்ந்தால், "கடைசியா மனைவியை சேலையில் பார்த்தது மணவறையில் தான்னு" சொல்ற அளவுக்கு போயிடும் போல இருக்கு நிலைமை !

கனவிலேயும் மனைவியே.. வருவது கஷ்டமான விஷயம் தான். ஆனா, அந்த கனவிலும், மனைவி நைட்டி போட்டுட்டு வர்றது..அப்பப்பா...என்ன கொடுமை சார் இது.

என்ன தான் நாகரிகம், அது இதுன்னு பேசினாலும், நம்ம ஆளுங்க எந்த ஊரில, எந்த நாட்டுல இருந்தாலும், பொண்ணு பாக்கணும், கல்யாணம்னு தோனுச்சுன்னா உடனே புறப்புட்டு நம்ம ஊர்ல வந்து தான் தேடுவாங்க. அந்த ஊர்களில்,நாடுகளில் இல்லாத பெண்களா... அதை எல்லாம் மீறி இங்க வந்து பொண்ணு எடுக்குறாங்கன்னா...அதுக்கு முக்கிய காரணம், நம் நாட்டினுடைய கலாச்சாரமும் பழக்க வழக்கமும் தான்.
தயவு செய்து இதுக்கெல்லாம் பழமைவாதம்,பெண்ணடிமை,ஆணாதிக்கம், பிற்போக்குத்தனம்னு சொல்லி வாழ்க்கையில இருக்க சின்ன சின்ன சந்தோஷத்த கூட அனுபவிக்க முடியாம பண்ணிடாதீங்கோ !

(ஏங்க... பேச்சு பேச்சோட இருக்கணும், பூமில இருக்குறத எல்லாம் கெளறப்டாது ! )

ஆபீசுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு விடுற மாதிரி, நைட்டிக்கும் ஒரு ரெண்டு நாள் லீவு விட்டா நல்லா இருக்கும்னு நினைக்குது கணவர்கள் சங்கம்.
ஆதரிக்குமா மனைவியர் சங்கம் ?
இந்த மாதிரி கொட்டி தீர்த்து பேசி இருப்பது, நைட்டி உடை மேல இருக்க சலிப்பும் வெறுப்பும் தானே தவிர, பெண்களை புண்படுத்த அல்ல ! அதனால கோச்சிக்காதீங்கோ !

108 comments:

துளசி கோபால் said...

சலிப்பை ஏற்படுத்தும் லுங்கிக் கலாச்சாரம்னு எதிர்வினைப் பதிவு யாராவது எழுதுங்கப்பா.

பகலில் போடும் ட்ரெஸுக்கு டெய்ட்டின்னு பெயர் வச்சுருக்கேன்:-)))

ஆனாலும் சென்னையில் விற்கும் இந்த நைட்டிகளில் என்னமோ கலாச்சாரம் கழுத்துலேதான் இருக்குன்றதுபோல கழுத்தைக் கவ்வும்விதமாத் தைச்சு விக்கறாங்க(--:

தூக்குப்போட்டுக்கன்னு தனியா வேறொன்னும் வேணாம்.

Suresh said...

:-)

கபிலன் said...

"துளசி கோபால் said...
சலிப்பை ஏற்படுத்தும் லுங்கிக் கலாச்சாரம்னு எதிர்வினைப் பதிவு யாராவது எழுதுங்கப்பா.

பகலில் போடும் ட்ரெஸுக்கு டெய்ட்டின்னு பெயர் வச்சுருக்கேன்:-)))

ஆனாலும் சென்னையில் விற்கும் இந்த நைட்டிகளில் என்னமோ கலாச்சாரம் கழுத்துலேதான் இருக்குன்றதுபோல கழுத்தைக் கவ்வும்விதமாத் தைச்சு விக்கறாங்க(--:

தூக்குப்போட்டுக்கன்னு தனியா வேறொன்னும் வேணாம்."

ஹா ஹா...நமக்கு எல்லாம் எந்த உடை போட்டாலும் பெரிய வேறுபாடு இருக்காதுங்க..அதுவும் இல்லாம உடை விஷயத்துல பெரிய options இல்ல நமக்கு.

தங்கள் கருத்திற்கு நன்றிங்க துளசி கோபால்!

கபிலன் said...

Suresh said...
:-)

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சுரேஷ்!

Anonymous said...

Is it not funny that that ladies take a lot of trouble in their dressing when they go out, for other to admire.
but do not have the same consideration for the man in their life.
familiarity does breed contempt
navin

கபிலன் said...

"Anonymous said...

navin"

ஆமாங்க...உங்க கருத்தை நானும் வழிமொழிகிறேன்!

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

vanathy said...

nightie என்ற உடை இரவில் போடுவதற்காகத்தான் வடிவமைக்கப் பட்டது.
இப்போதும் மேற்கு நாடுகளில் பெண்கள் அதை இரவில் மட்டும்தான் அணிவார்கள்.
ஏனோ தெரியவில்லை,நமது இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் இது பெண்களின் யூனிபோர்ம் ஆகவே மாறிவிட்டது.,
இந்த விஷயத்தில் பெண்கள் இதனை மறுபரிசீலனை செய்து இரவு உடையை இரவில் மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்..
--வானதி

கபிலன் said...

"vanathy said...

--வானதி"

ரொம்ப நன்றிங்க வானதி......
மகளிர் ஆதரவு இருக்குமான்னு சந்தேகத்துல எழுதுன பதிவு..
உங்க கருத்தை பார்த்ததும் தான் எனக்கு தெம்பே வருது..

கடைக்குட்டி said...

நைட்டியோடு வெளியில் வருவதோ.. அன்னிய ஆண்களோடு பேசுவது தவறு..

//தொள தொள ந்னு ஒரு கை, அங்க அங்க பூ பூ வா துணி, இப்படி கிட்ட தட்ட ஒரு ஜோக்கர் டிரஸ் மாதிரி தான் இருக்கு//

என்னமா நோட் பண்ணி இருக்கீங்க :-)

கபிலன் said...

"கடைக்குட்டி said...
நைட்டியோடு வெளியில் வருவதோ.. அன்னிய ஆண்களோடு பேசுவது தவறு..

//தொள தொள ந்னு ஒரு கை, அங்க அங்க பூ பூ வா துணி, இப்படி கிட்ட தட்ட ஒரு ஜோக்கர் டிரஸ் மாதிரி தான் இருக்கு//

என்னமா நோட் பண்ணி இருக்கீங்க :-)"

ஹிஹி : )
கருத்து சொன்னதுக்கு நன்றி கடைக்குட்டி!

கே.ரவிஷங்கர் said...

காஞ்சிப் பட்டு உடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து தேவதைப் போல் நீ நடந்து வரவேண்டும்.அந்த திருமாலும் உன் அருளைப் பெற வேண்டும்.

செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்த தயங்கறயே!

கபிலன் said...

"கே.ரவிஷங்கர் said...
காஞ்சிப் பட்டு உடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து தேவதைப் போல் நீ நடந்து வரவேண்டும்.அந்த திருமாலும் உன் அருளைப் பெற வேண்டும்.

செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்த தயங்கறயே!"

அடடா...இந்த பாட்டெல்லாம் நமக்கு தோணாம போச்சே பதிவு போடும் போது...
வந்து கருத்து சொன்னதுக்கு நன்றிங்க ரவிஷங்கர்!

துபாய் ராஜா said...

ரொம்ப பாதிக்கப்பட்டால இருக்கு.ந்ல்லா பீல் பண்ணி கூவிருக்கீறீங்க. :-))

chennailocal said...

நல்ல கருத்துக்கு நன்றி

ஆண்கள் எல்லொருடைய feelings யும் / குமுரலையும் நல்ல பிரதி பலித்துஇருக்கிருது இந்த blogs

Nightie ஒரு அழுக்கு முட்டை

பார்க்கவே சகிக்க முடியாத பெண்கள் அனியும் ஒரு அங்கி என்றால் அது நைட்டி ஒன்றுதான்.

சேலை மற்றும் சுடிதார் அனிந்தாள் பெண்கள் எவ்வளவு அழகாக இருப்பார்கள்

பெண்களே புரிந்து கொள்ளுங்கள்

நைட்டிலும் company branded iruukku ராசாத்தி நைட்டி மற்றும் பல

Satish said...

கேஸ் சிலிண்டர்க்கு பூப்போட்ட துணி சுத்தி வைச்சு, கொஞ்சம் நகர்ந்து நின்னு வேடிக்கை பாருங்க...நிச்சயமா பொண்ணு ஒண்ணு நைட்டில இருக்க மாதிரியே இருக்கும்.

ennama feel panni iruka, nan mattum dhan intha nightiya paathu veruthu poi irukaenu nenichaen, nee evalvau nondhu poi iruntha ippadi feel panni ezuhthi irupa, seekirama nithy ozhipu poratamnu onnu nadathuvom.

நாமக்கல் சிபி said...

திருமணமான பெண்களுக்கு அழகே சேலைதான்!

தைரியமா உங்க மனசோட குமுறல்களைக் கொட்டி இருக்கீங்க!

கபிலன் said...

"துபாய் ராஜா said...
ரொம்ப பாதிக்கப்பட்டால இருக்கு.ந்ல்லா பீல் பண்ணி கூவிருக்கீறீங்க. :-))"

ஹாஹா...பாதிக்கப்பட்ட பல லட்சம் தமிழர்களில் நானும் ஒருத்தன்!
கருத்து சொன்னதுக்கு நன்றி!

கபிலன் said...

"chennailocal said...
நல்ல கருத்துக்கு நன்றி

ஆண்கள் எல்லொருடைய feelings யும் / குமுரலையும் நல்ல பிரதி பலித்துஇருக்கிருது இந்த blogs

Nightie ஒரு அழுக்கு முட்டை

பார்க்கவே சகிக்க முடியாத பெண்கள் அனியும் ஒரு அங்கி என்றால் அது நைட்டி ஒன்றுதான்.

சேலை மற்றும் சுடிதார் அனிந்தாள் பெண்கள் எவ்வளவு அழகாக இருப்பார்கள்

பெண்களே புரிந்து கொள்ளுங்கள்

நைட்டிலும் company branded iruukku ராசாத்தி நைட்டி மற்றும் பல"

கருத்துக்கு நன்றிங்க சென்னை லோக்கல்!

கபிலன் said...

"Satish said...
கேஸ் சிலிண்டர்க்கு பூப்போட்ட துணி சுத்தி வைச்சு, கொஞ்சம் நகர்ந்து நின்னு வேடிக்கை பாருங்க...நிச்சயமா பொண்ணு ஒண்ணு நைட்டில இருக்க மாதிரியே இருக்கும்.

ennama feel panni iruka, nan mattum dhan intha nightiya paathu veruthu poi irukaenu nenichaen, nee evalvau nondhu poi iruntha ippadi feel panni ezuhthi irupa, seekirama nithy ozhipu poratamnu onnu nadathuvom."

இந்த மாதிரி வெறுத்து போன கும்பல் நிறைய பேரு இருக்காங்க...
தங்கள் கருத்திற்கு நன்றி!

கபிலன் said...

"நாமக்கல் சிபி said...
திருமணமான பெண்களுக்கு அழகே சேலைதான்!

தைரியமா உங்க மனசோட குமுறல்களைக் கொட்டி இருக்கீங்க!"

உங்கள மாதிரி நல்லவங்க இருக்குறதுனால தான், நம்ம மனக் குமுறல தைரியமா சொல்ல முடியுது..
தங்கள் கருத்திற்கு நன்றி!

செந்தழல் ரவி said...

யாரும் இந்த பதிவை கடுமையாக கண்டிக்காதது வேதனையாக இருக்கிறது.

அவர்கள் எப்படி ஆடை அணியவேண்டும் என்று சொல்ல நீங்கள் யார் ?

அப்படி நீங்கள் சொல்லவேண்டும் என்றால் என் பொண்டாட்டி நைட்டி போடுவது தவறு என்று அல்லவா சொல்லியிருக்கவேண்டும் ?

உங்களுக்கு உரிமை இல்லாத விஷயங்களை இப்படி பொது தளத்தில் சாடுவது எந்த விதத்தில் நியாயம் ?

J said...

ரொம்ப பாதிப்போ

கபிலன் said...

"செந்தழல் ரவி said...
யாரும் இந்த பதிவை கடுமையாக கண்டிக்காதது வேதனையாக இருக்கிறது.

அவர்கள் எப்படி ஆடை அணியவேண்டும் என்று சொல்ல நீங்கள் யார் ?

அப்படி நீங்கள் சொல்லவேண்டும் என்றால் என் பொண்டாட்டி நைட்டி போடுவது தவறு என்று அல்லவா சொல்லியிருக்கவேண்டும் ?

உங்களுக்கு உரிமை இல்லாத விஷயங்களை இப்படி பொது தளத்தில் சாடுவது எந்த விதத்தில் நியாயம் ?"

தங்கள் வருகைக்கு நன்றி!

கபிலன் said...

"J said...
ரொம்ப பாதிப்போ"

ஹாஹா...
தங்கள் வருகைக்கு நன்றி!

Anonymous said...

" ஏன்னு கேட்டா, அவங்க சொல்ற reason வீட்ல தானே இருக்கேன், எங்கயாச்சும் வெளில போகும் போது பாத்துக்கலாம். "

ஒரு வேளை, வீட்டுல மூதேவியாவும், வெளியில சீதேவியாவும் இருக்கனும்னு நினைக்கிறாங்களோ என்னவோ....

_பாபு

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

_நான் தமிழன்

அன்புடன் அருணா said...

ஆண்கள் கூட வீட்டிலும் பேன்ட் ஷர்ட் போட்டுக் கொள்ளலாம்தானே???
செந்தழல் ரவி said...
//யாரும் இந்த பதிவை கடுமையாக கண்டிக்காதது வேதனையாக இருக்கிறது.//
எனக்கும் அதே வருத்தமே!

கபிலன் said...

"அன்புடன் அருணா said...
ஆண்கள் கூட வீட்டிலும் பேன்ட் ஷர்ட் போட்டுக் கொள்ளலாம்தானே???
செந்தழல் ரவி said...
//யாரும் இந்த பதிவை கடுமையாக கண்டிக்காதது வேதனையாக இருக்கிறது.//
எனக்கும் அதே வருத்தமே! "

வந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தமைக்கு நன்றிங்க!

Anonymous said...

சில நைட்டிகள் மிகவும் செக்சியாக உடலின் முழு அழகையும் காட்டக்கூடியதாக இருக்கும், கூகுள் செய்துபாருங்கள் நிறையப்படங்கள் கிடைக்கும்.

கபிலன் said...

"Anonymous said...
சில நைட்டிகள் மிகவும் செக்சியாக உடலின் முழு அழகையும் காட்டக்கூடியதாக இருக்கும், கூகுள் செய்துபாருங்கள் நிறையப்படங்கள் கிடைக்கும்."

மன்னிக்கவும். பதிவின் நோக்கம் அது அல்ல!
தங்கள் வருகைக்கு நன்றி!

Anonymous said...

the real reason is no need to wash and is a sinle material. Other dresses you have to wash 3 or 4 pieces

Anonymous said...

ஆமான்னா எனக்கும் அதே பத்திக்கிட்டூ எரியுது மூடே வரமாட்டீங்குது

மாதேவி said...

ரிப்பீட் இரவுஉடையை இரவில் அணிவதுதான் சிறந்தது.

நோயாளிகள், வயதானவர்களுக்கு விதிவிலக்குதரலாம்.

கபிலன் said...

"மாதேவி said...
ரிப்பீட் இரவுஉடையை இரவில் அணிவதுதான் சிறந்தது.

நோயாளிகள், வயதானவர்களுக்கு விதிவிலக்குதரலாம்."

ஆஹா..இன்னொரு மகளிர் ஆதரவு...
நன்றிங்க மாதேவி!

வழிப்போக்கன் said...

மனைவியின் அழகை கணவன் ரசிப்பதற்கு, எதாச்சும் விசேஷம் வருமா, சேலை கட்டுவாங்களா ந்னு காத்து இருக்க வேண்டிய அவல நிலையில கணவர்கள் இருக்காங்க !//

அப்டீங்களாய்யா???
:)))

கபிலன் said...

"வழிப்போக்கன் said...
மனைவியின் அழகை கணவன் ரசிப்பதற்கு, எதாச்சும் விசேஷம் வருமா, சேலை கட்டுவாங்களா ந்னு காத்து இருக்க வேண்டிய அவல நிலையில கணவர்கள் இருக்காங்க !//

அப்டீங்களாய்யா???
:)))"

ஹா ஹா..ஆமாங்கய்யா..
கருத்து சொன்னதுக்கு நன்றி வழிப்போக்கன்!

வால்பையன் said...

நைட்டிக்காக இவ்ளோ பெரிய பதிவா?

நைட்டி எதிர்ப்பாளர்கள் சங்கம்னு ஒன்னு ஆரம்பிச்சு உங்களை தலைவராக்கிருவோம்!

கபிலன் said...

"வால்பையன் said...
நைட்டிக்காக இவ்ளோ பெரிய பதிவா?

நைட்டி எதிர்ப்பாளர்கள் சங்கம்னு ஒன்னு ஆரம்பிச்சு உங்களை தலைவராக்கிருவோம்!
"

அடடே...வாங்க வால்பையன்,
நீங்க எல்லாம் பதிவுகளில் சீனியர்...அந்த தலைவர் பதவிக்கு நீங்கதாங்க பொருத்தமான ஆளு..
நான் வேணும்னா..கொ.ப.செ வா இருக்கேன்..
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

வால்பையன் said...

//நீங்க எல்லாம் பதிவுகளில் சீனியர்...அந்த தலைவர் பதவிக்கு நீங்கதாங்க பொருத்தமான ஆளு..//

வீட்ல சோத்துக்கு இல்லாம பண்ணிருவிங்க போலயே!
நம்ம வீட்ல மதுரை ஆட்சிங்கோவ்!

துளசி கோபால் said...

சரியாச் சொல்லணுமுன்னா இது லாங் ட்ரெஸ். நைட்டி என்பதே வேறு. இது இங்கே சென்னையில் பெண்கள் அணிவது இல்லை.

பஸிஃபிக் தீவுகளில் சாதாரண உடையா இருப்பது இந்த லாங் ட்ரெஸ்தான். லூஸ் ஃபிட்டிங்கா இருக்கும்.

நல்ல நைட்டியை நைட்டில் மட்டுமே அணிவார்கள். அதுவும் ப்ரைவசி கூடுதலா இருக்கும் சமயங்களில்

Anonymous said...

நான் தொழில் முறையில் ஒரு ஆடை வடிவமைப்பாளர், என்னிடம் வரும் எல்லா பெண்களுமே நைட்டி புது மாதிரி தாங்கன்னு கேப்பாங்க, கிரகம் நைட்டில என்ன புதுசுன்னு எரிச்சல் தான் வரும். நிறைய மாடல் இருக்கு, honey மூன், 3 பீஸ், ஓவர்கோட், பாலுட்டும் அம்மாகளுக்கு, நோயாளிகளுக்கு, அப்பிடின்னு இருந்தாலும் ரெண்டு பிரில் வச்ச நைட்டி, முன் புறம் எலாஸ்டிக் வச்ச நைட்டி தான் ரொம்ப விக்கும். எப்படித்தான் அதை போட்டு வெளியில் வராங்களோ, அதுல எல்லாம் பெரிய கொடுமை அது மேல ஒரு துண்ட போட்டுட்டு வருவாங்க பாருங்க..... ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கபிலன் said...

"வால்பையன் said...
//நீங்க எல்லாம் பதிவுகளில் சீனியர்...அந்த தலைவர் பதவிக்கு நீங்கதாங்க பொருத்தமான ஆளு..//

வீட்ல சோத்துக்கு இல்லாம பண்ணிருவிங்க போலயே!
நம்ம வீட்ல மதுரை ஆட்சிங்கோவ்!"

ஆஹா...நம்பிட்டேங்க....வால்பையன்...
வருகைக்கு நன்றி!

கபிலன் said...

"துளசி கோபால் said...
சரியாச் சொல்லணுமுன்னா இது லாங் ட்ரெஸ். நைட்டி என்பதே வேறு. இது இங்கே சென்னையில் பெண்கள் அணிவது இல்லை.

பஸிஃபிக் தீவுகளில் சாதாரண உடையா இருப்பது இந்த லாங் ட்ரெஸ்தான். லூஸ் ஃபிட்டிங்கா இருக்கும்.

நல்ல நைட்டியை நைட்டில் மட்டுமே அணிவார்கள். அதுவும் ப்ரைவசி கூடுதலா இருக்கும் சமயங்களில்"

அடேங்கப்பா...எங்க இருந்துங்க இப்படி எல்லாம் விவரம் சேகரிக்குறீங்க...
கருத்திற்கு நன்றிங்க!

கபிலன் said...

"மயில் said...
நான் தொழில் முறையில் ஒரு ஆடை வடிவமைப்பாளர், என்னிடம் வரும் எல்லா பெண்களுமே நைட்டி புது மாதிரி தாங்கன்னு கேப்பாங்க, கிரகம் நைட்டில என்ன புதுசுன்னு எரிச்சல் தான் வரும். நிறைய மாடல் இருக்கு, honey மூன், 3 பீஸ், ஓவர்கோட், பாலுட்டும் அம்மாகளுக்கு, நோயாளிகளுக்கு, அப்பிடின்னு இருந்தாலும் ரெண்டு பிரில் வச்ச நைட்டி, முன் புறம் எலாஸ்டிக் வச்ச நைட்டி தான் ரொம்ப விக்கும். எப்படித்தான் அதை போட்டு வெளியில் வராங்களோ, அதுல எல்லாம் பெரிய கொடுமை அது மேல ஒரு துண்ட போட்டுட்டு வருவாங்க பாருங்க..... ஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"

இத்தனை வகைகளா ?

கருத்துக்கு நன்றிங்க மயில்!

Gifarz said...

//இதுல ஏன்னு கேட்டா, அவங்க சொல்ற reason வீட்ல தானே இருக்கேன், எங்கயாச்சும் வெளில போகும் போது பாத்துக்கலாம். மனைவியின் அழகை கணவன் ரசிப்பதற்கு, எதாச்சும் விசேஷம் வருமா,///

நல்லா சொன்னிர்கள்

பெண்கள்ட ஆசையே அது தானே... தன் கணவனுக்கு தண்ட அழகக் காட்டுராத விட ரோட்ல போர கண்ட கண்டவனுக்கள்ளாம் காட்டதானே அவள் விருப்பப்பட்றாள்கள்.. பிறகு பல பிரச்சினைகள்...

அடுத்து நீங்கள் நைட்டி என்று பாவிப்பதை விட ஹவுஸ்கோட் என்று பாவித்திருந்தால் அது நல்லா இருந்திருக்கும்... என்னென்றால் செக்ஸியாக நைட்டிகள் இரவில் மாத்திரம் பயன்படுத்துவதும் உள்ளதால்....

ROJA said...

ரிப்பீட் இரவுஉடையை இரவில் அணிவதுதான் சிறந்தது.

நோயாளிகள், வயதானவர்களுக்கு விதிவிலக்குதரலாம்.
நானும் மாதேவி கருத்தை வழிமொழிகிறேன்...

கபிலன் said...

"Gifarz said...
//இதுல ஏன்னு கேட்டா, அவங்க சொல்ற reason வீட்ல தானே இருக்கேன், எங்கயாச்சும் வெளில போகும் போது பாத்துக்கலாம். மனைவியின் அழகை கணவன் ரசிப்பதற்கு, எதாச்சும் விசேஷம் வருமா,///

நல்லா சொன்னிர்கள்

பெண்கள்ட ஆசையே அது தானே... தன் கணவனுக்கு தண்ட அழகக் காட்டுராத விட ரோட்ல போர கண்ட கண்டவனுக்கள்ளாம் காட்டதானே அவள் விருப்பப்பட்றாள்கள்.. பிறகு பல பிரச்சினைகள்...

அடுத்து நீங்கள் நைட்டி என்று பாவிப்பதை விட ஹவுஸ்கோட் என்று பாவித்திருந்தால் அது நல்லா இருந்திருக்கும்... என்னென்றால் செக்ஸியாக நைட்டிகள் இரவில் மாத்திரம் பயன்படுத்துவதும் உள்ளதால்...."

தங்கள் வருகைக்கு நன்றி!

கபிலன் said...

"ROJA said...
ரிப்பீட் இரவுஉடையை இரவில் அணிவதுதான் சிறந்தது.

நோயாளிகள், வயதானவர்களுக்கு விதிவிலக்குதரலாம்.
நானும் மாதேவி கருத்தை வழிமொழிகிறேன்..."

மகளிரிடம் ஆதரவு இருக்குமான்னு சந்தேகமாவே இருந்துச்சு..
இப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்குங்க...
ரொம்ப நன்றிங்க ரோஜா...

குறை ஒன்றும் இல்லை !!! said...

பாவம்!! வீட்ல என்ன பிரச்சினையோ!! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை!!!

sam said...

for me saree is the beautiful one.all other ok.but i hate this damn nightie.

கபிலன் said...

"குறை ஒன்றும் இல்லை !!! said...
பாவம்!! வீட்ல என்ன பிரச்சினையோ!! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை!!!"

ஹா ஹா நண்பரே, பின்னூட்டங்களைப் பாருங்கள்,எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

Manchari said...

Saree is beautiful. Everyone is accepting that. But just think about 41 degree summer days, skinny tight blouses. Such a cruel dress. In olden days, ladies wore saree without blouse or brassier. That days it was comfortable. But nowadays it's not like that. For our weather, we need airy dresses. In that case nighty is very comfortable. Chudithar, Night Pants, Shorts also ok. But saree with blouse is really a punishment.

Hi Guys who all have problem with nighties,

Could u please let me know about ur casual dress at home. We are not complaining about ur dirty lungies because we love u as the way u r unlike u.

Dear Ladies,

While wearing nighties, choose something stylish and beautful or go for cotton chudies for day time. Pls. don't go outside in nighties or appear in front of strangers in nighties.

வால்பையன் said...

நைட்டி அணிந்து கொண்டு கடைவீதிக்கு செல்வதையோ, பள்ளிக்கு செல்வதையோ சர்ச்சைகுறிய விவாதமாக எடுத்து நடத்தலாம்.

நைட்டி அணிவதே தப்பு என்பது கொஞ்சம் ஓவராத்தான் படுது!

பெண்களை பொறுத்தவரை
நைட்டி=சேஃப்டி

Manchari said...

24 hours AC roomil irupavarkal, pls don't discuss about this

கபிலன் said...

"sam said...
for me saree is the beautiful one.all other ok.but i hate this damn nightie."

வந்து கருத்து சொன்னதுக்கு நன்றிங்க சேம்!

கபிலன் said...

"Manchari said...
Saree is beautiful. Everyone is accepting that. But just think about 41 degree summer days, skinny tight blouses. Such a cruel dress. In olden days, ladies wore saree without blouse or brassier. That days it was comfortable. But nowadays it's not like that. For our weather, we need airy dresses. In that case nighty is very comfortable. Chudithar, Night Pants, Shorts also ok. But saree with blouse is really a punishment.

Hi Guys who all have problem with nighties,

Could u please let me know about ur casual dress at home. We are not complaining about ur dirty lungies because we love u as the way u r unlike u.

Dear Ladies,

While wearing nighties, choose something stylish and beautful or go for cotton chudies for day time. Pls. don't go outside in nighties or appear in front of strangers in nighties."

உங்களுடைய வாதத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்!
இந்த உடை அனைவருக்கும் சலிப்பை தட்டும் உடையாக மாறி வருகிறது என்பதையே இந்த பதிவில் சொல்லி இருக்கேங்க.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

வால்பையன் said...

//மாசம் முழுவதும் ஒரே மாதிரியான தோற்றம் சலிப்பளிக்கிறதுன்னு தான் சொன்னேங்க.//

எப்போ பார்த்தாலும் நைட்டு லுங்கி கட்டிகிட்டே இருக்கிங்க, சலிப்பா இருக்குதுன்னு எந்த மனைவிமாரும் சொன்னதாக தகவல் இல்லை!

எம்பா உங்களுக்கு யாருக்காவது தெரியுமா?

கபிலன் said...

கபிலன் said...
"வால்பையன் said...
நைட்டி அணிந்து கொண்டு கடைவீதிக்கு செல்வதையோ, பள்ளிக்கு செல்வதையோ சர்ச்சைகுறிய விவாதமாக எடுத்து நடத்தலாம்.

நைட்டி அணிவதே தப்பு என்பது கொஞ்சம் ஓவராத்தான் படுது!

பெண்களை பொறுத்தவரை
நைட்டி=சேஃப்டி"

இல்லைங்க வால்பையன், நைட்டி அணிவது தப்புன்னு சொல்லலிங்க....மாசம் முழுவதும் ஒரே மாதிரியான தோற்றம் சலிப்பளிக்கிறதுன்னு தான் சொன்னேங்க.
கருத்து சொன்னதுக்கு நன்றிங்க!

கபிலன் said...

"வால்பையன் said...
//மாசம் முழுவதும் ஒரே மாதிரியான தோற்றம் சலிப்பளிக்கிறதுன்னு தான் சொன்னேங்க.//

எப்போ பார்த்தாலும் நைட்டு லுங்கி கட்டிகிட்டே இருக்கிங்க, சலிப்பா இருக்குதுன்னு எந்த மனைவிமாரும் சொன்னதாக தகவல் இல்லை!

எம்பா உங்களுக்கு யாருக்காவது தெரியுமா?"

பலரும் இந்த லுங்கிப் பிரச்சினையை இங்க சொல்லி இருக்காங்க. பொதுவா பாத்தீங்கன்னா...ஆண்களுக்கு ஆடை வகைகள் மிகக் மிகக் குறைவு. பேண்ட் ஷர்ட், லுங்கி,ட்ரவுசர்...இத விட்டா என்ன இருக்கு ? பெண்களுக்கு அப்படி இல்ல...அது மட்டும் இல்லாம...இதுல எந்த உடை போட்டு இருந்தாலும் நம்ம ஒரே மாதிரி தான் இருப்போம் : ). ஆனால்,பெண்களுக்கு அப்படி இல்ல, ஒவ்வொரு உடையும் ஒவ்வொரு மாதிரியா காட்சி அளிக்கும், அது அவங்களுக்கு இருக்குற ஸ்ப்ஷாலிட்டி. இப்படி இருக்க, ஏன் ஒரே ஆடை...அப்படின்னு தோனுச்சுங்க...வால்பையன்..

தங்கள் கருத்துக்கு நன்றி!

கபிலன் said...

"Manchari said...
24 hours AC roomil irupavarkal, pls don't discuss about this"

நீங்க சொல்றதும் ஞாயமா தான் படுது...

வால்பையன் said...

ஒரு பெண் தனது கணவன் ரசிக்கும் அளவுக்கு தினமும் அழகாக தோன்றவேண்டும் என்பது கொஞ்சம் ஆணாதிக்க சிந்தனை தான், உங்களுக்கு வெரைட்டி இல்லை என்று யார் சொன்னது நீங்களும் சுடிதார் போடுங்க வீட்ல ரசிப்பாங்க, கொஞ்சம் காமெடியாவும் இருக்கும்.

பெண்கள் பெரும்பாலும் வீட்டில் இரவில் பயன்படுத்துவது புடவை தான், ஆனால் அது சமாளிக்க கடினமானது, இறுக்கமான ஜாக்கெட் மூச்சுவிட சிரமம் கொடுக்கலாம், இரவில் சுடிதார் அணிந்தோ, ஜீன்ஸ் டீ,ஷர்ட் அணிந்தோ படுக்க சொல்வது கொஞ்சம் கேவலமா இருக்கு!

பெண்களுக்கு நைட்டி புழங்குவதற்கு சுலபமாக இருக்கவே அதை பயன்படுத்துகிறார்கள், நமக்கு தேவையென்றால் முன்னரே யாரோ சொன்னது பொல் கொஞ்சம் செக்ஸியாக இருக்கும் நைட்டியை பயன்படுத்திக்க சொல்லலாம்!

தற்கால பெண்களுக்கு நைட்டியை விட ஒரு எளிமையான உடை இருப்பதை போல் தெரிவதில்லை!

கலையரசன் said...

"கணவனைக் கடுப்பேத்தும் நைட்டி" அப்டினே வச்சிருக்கலாம் பாஸூ

ஒரே ஒரு காரியத்துக்கு மட்டுதான் நைய்டி வசதி...

ஹலோ.. எஸ்சூஸ்மி, தப்பா நினைக்கபடாது..
தூங்கறதுக்கு வசதின்னு சொல்ல வந்தேன்!

கபிலன் said...

"வால்பையன் said...
ஒரு பெண் தனது கணவன் ரசிக்கும் அளவுக்கு தினமும் அழகாக தோன்றவேண்டும் என்பது கொஞ்சம் ஆணாதிக்க சிந்தனை தான், உங்களுக்கு வெரைட்டி இல்லை என்று யார் சொன்னது நீங்களும் சுடிதார் போடுங்க வீட்ல ரசிப்பாங்க, கொஞ்சம் காமெடியாவும் இருக்கும்.

பெண்கள் பெரும்பாலும் வீட்டில் இரவில் பயன்படுத்துவது புடவை தான், ஆனால் அது சமாளிக்க கடினமானது, இறுக்கமான ஜாக்கெட் மூச்சுவிட சிரமம் கொடுக்கலாம், இரவில் சுடிதார் அணிந்தோ, ஜீன்ஸ் டீ,ஷர்ட் அணிந்தோ படுக்க சொல்வது கொஞ்சம் கேவலமா இருக்கு!

பெண்களுக்கு நைட்டி புழங்குவதற்கு சுலபமாக இருக்கவே அதை பயன்படுத்துகிறார்கள், நமக்கு தேவையென்றால் முன்னரே யாரோ சொன்னது பொல் கொஞ்சம் செக்ஸியாக இருக்கும் நைட்டியை பயன்படுத்திக்க சொல்லலாம்!

தற்கால பெண்களுக்கு நைட்டியை விட ஒரு எளிமையான உடை இருப்பதை போல் தெரிவதில்லை! "

ஆஹா....நமக்கு சுடிதாரா...என்னா இது சின்னப் புள்ளத் தனமா பேசுறீங்க...: )
உங்கள் கருத்துக்கள் அருமை, Practical அ சொல்லி இருக்கீங்க. நன்றி.
ஆனா அந்த ஆணாதிக்க சிந்தனை மேட்டர்ல மட்டும் நமக்கு உடன்பாடு இல்லைங்க வால்பையன்! அதுக்கு ரொம்ப பெரிய discussion தேவை : ) !

வால்பையன் said...

//ஆஹா....நமக்கு சுடிதாரா...என்னா இது சின்னப் புள்ளத் தனமா பேசுறீங்க...: )//

நமக்கு மட்டும் வெரைட்டியா தேவைப்படும் போது, அவுங்களுக்கும் தேவைப்படாதா?

கபிலன் said...

"வால்பையன் said...
//ஆஹா....நமக்கு சுடிதாரா...என்னா இது சின்னப் புள்ளத் தனமா பேசுறீங்க...: )//

நமக்கு மட்டும் வெரைட்டியா தேவைப்படும் போது, அவுங்களுக்கும் தேவைப்படாதா?"

இது சரியான பாய்ண்ட் தான்.
இதை பத்தி நம்ம பொதுக்குழுவை கூட்டி விவாதித்த பிறகு தான் முடிவை சொல்லிடலாம் வால்பையன்!

கபிலன் said...

"கலையரசன் said...
"கணவனைக் கடுப்பேத்தும் நைட்டி" அப்டினே வச்சிருக்கலாம் பாஸூ

ஒரே ஒரு காரியத்துக்கு மட்டுதான் நைய்டி வசதி...

ஹலோ.. எஸ்சூஸ்மி, தப்பா நினைக்கபடாது..
தூங்கறதுக்கு வசதின்னு சொல்ல வந்தேன்!"

ஹா ஹா...நன்றிங்க கலக்கல் கலையரசன்!

Anonymous said...

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கடைத்தெருவுக்கும் போகும் போதும் பல தமிழ் பெண்மணிகள் இது போல நைட்டி அணிந்துச் செல்கிறார்கள். மிகவும் அறுவெறுப்பாக உள்ளது. இரவு நேரத்தில் வீட்டில் அணிய வேண்டிய ஆடையை வெளி இடங்களில் அணிவது அநாகரீகமாக உள்ளது.

மந்திரன் said...

நைட்டி எதிர்ப்பு சங்கத்தின் கொ.ப.செ அவர்களே ,
இது ஒரு நல்ல பதிவு என்பதை விட சிறந்த மன குமறலாகவே நான் காண்கிறேன் ..
வால் பையன் சொல்வதை போல இங்க ஆணாதிக்கம் எங்கே வந்தது ?
இதை நான் கடுமையாக சாடுகிறேன் .. ஒரு பெண் , அழகு என்பதை ஒரு ஆணை தவிர எந்த ஒரு பெண்ணாலும் மனதார கூற முடியாது ..அப்படி இருக்க , ஒரு பெண் எந்த உடை அணிந்தால் அவளின் அழகு எப்படி உயரும் என்று ஒரு ஆண் கருத்து கூட சொல்ல கூடாதா ?
ஆண் எப்படி உடை அணிய வேண்டும் என்று தனி பதிவில் யார் வேண்டுமாலும் கூறலாம் .. ஆனால் இந்த பதிவின் உண்மையை கெடுக்க எந்த ஒரு விசத்தையும் சேர்க்க வேண்டாம் ..
நெற்றி கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே , அது பெண்ணாக இருந்தால் என்ன ? ஆணாக இருந்தால் என்ன ?
நான் கூட பார்த்திருக்கிறேன் , சில இழவு வீடுகளில் கூட பகலில் நைட்டி அணிந்து கொள்கிறார்கள் ..இடம் ,பொருள் பார்த்து தானே உடை அணிய வேண்டும் ?
நைட்டி அணிய வேண்டாம் என்பது அல்ல இந்த பதிவின் நோக்கம் ..(சரிதானே கபிலன் )..
சேலையில் நீங்கள் இன்னும் அழகு என்பதை நான் இங்கே உரக்க்க கூவி கொள்கிறேன் ..

கபிலன் said...

மந்திரன் said...
...
நைட்டி அணிய வேண்டாம் என்பது அல்ல இந்த பதிவின் நோக்கம் ..(சரிதானே கபிலன் )..
சேலையில் நீங்கள் இன்னும் அழகு என்பதை நான் இங்கே உரக்க்க கூவி கொள்கிறேன் ..

ஆமாங்க....
அடேங்கப்பா...ரொம்ப தெளிவான விளக்கம் சொல்லி இருக்கீங்க மந்திரன்!
ரொம்ப் நன்றி!

வால்பையன் said...

//சேலையில் நீங்கள் இன்னும் அழகு என்பதை நான் இங்கே உரக்க்க கூவி கொள்கிறேன் ..//

என்னைக்காவது வீட்ல நான் எந்த ட்ரெஸ்ல அழகா!? இருக்கேன்னு கேட்டிருக்கிங்களா

கும்மாச்சி said...

நல்லாப் பதிவு தானுங்கோ, மொக்கை இல்லிங்களே, அதற்கு எதற்கு இதனை முன்னுரை.

மந்திரன் said...

//
வால்பையன் said...
என்னைக்காவது வீட்ல நான் எந்த ட்ரெஸ்ல அழகா!? இருக்கேன்னு கேட்டிருக்கிங்களா//

சொல்ல ஆசைதான் ..கேட்கத்தான் யாரும் இல்ல ?

கபிலன் said...

"கும்மாச்சி said...
நல்லாப் பதிவு தானுங்கோ, மொக்கை இல்லிங்களே, அதற்கு எதற்கு இதனை முன்னுரை."

இந்த முன்னுரைக்கே, பல பின்னோட்டங்கள் புயல் மாதிரி வருதுங்க...!
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

வால்பையன் said...

//வால்பையன் said...
என்னைக்காவது வீட்ல நான் எந்த ட்ரெஸ்ல அழகா!? இருக்கேன்னு கேட்டிருக்கிங்களா//
சொல்ல ஆசைதான் ..கேட்கத்தான் யாரும் இல்ல ?//

எதுக்கும் ஒருக்கா கண்ணாடிய பார்த்து நீங்களே கேட்டு பாருங்க மந்திரன்!

மந்திரன் said...

என்ன வால் , என்ன உங்களுக்கு ஆச்சு .. தனி நபர் விமர்சனகளை /தாக்குதல்களை நீங்கள் விரும்பாதவர் , செய்யாதவர் என்றல்லவா உங்களை நம்பி கொண்டு இருந்தேன் ...
நீங்களுமா மாறி விட்டீர்கள் ?

வால்பையன் said...

//மந்திரன் said...
என்ன வால் , என்ன உங்களுக்கு ஆச்சு .. தனி நபர் விமர்சனகளை /தாக்குதல்களை நீங்கள் விரும்பாதவர் , செய்யாதவர் என்றல்லவா உங்களை நம்பி கொண்டு இருந்தேன் ...
நீங்களுமா மாறி விட்டீர்கள் ?//

என்ன கொடுமை சார் இது!
நான் தமாசுக்கு தான் சொன்னேன்!
இதுக்கு போய் சீரியஸாகலாமா!

மந்திரன் said...

சீரியஸ் -தமிழில் எனக்கு புடிக்காத வார்த்தை ... இருந்தாலும் கொஞ்சம் சந்தேகம் ... அதான் கொஞ்சம் பத்த வச்சேன் ... பதில் வந்தது ..கண்கள் பனித்தன ..இதயம் இனித்தது ..

கபிலன் said...

கருத்து வேறுபாடுகள் சகஜம் தானே. ஐந்து விரலும் ஒரே மாதிரியாவா இருக்கு(டேய் போதும் நிறுத்து..ஓகே). ஆகையால், அதற்கான விமர்சனங்களும் இயல்பு தானே!

ஆரோக்யமான விவாதத்துல சும்மா மனசுல பட்டத பளார்னு பின்னூட்டம் போட்ட எல்லோருக்கும் நன்றிகள்.

செந்தழல் ரவி, மற்றும் அன்புடன் அருணா அவங்க தான் கோச்சிட்டு போய்ட்டாங்க...

குறிப்பாக, வால்பையன் அவர்களுக்கும், மந்திரன் அவர்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்!

Gifarz said...

///வால்பையன் said...

ஒரு பெண் தனது கணவன் ரசிக்கும் அளவுக்கு தினமும் அழகாக தோன்றவேண்டும் என்பது கொஞ்சம் ஆணாதிக்க சிந்தனை தான், உங்களுக்கு வெரைட்டி இல்லை என்று யார் சொன்னது நீங்களும் சுடிதார் போடுங்க வீட்ல ரசிப்பாங்க, கொஞ்சம் காமெடியாவும் இருக்கும். ///

ஆணாதிக்கம் என்பது எது என்று சரியாகப் புரிந்து கொண்டு பேசினால் நன்றாக இருக்கும்...

கணவனுக்கு மனைவி அழகாக இருக்க வேண்டும் அதேபோல் மனைவிக்கு கணவன் அழகாக (Smart) இருக்க வேண்டும்... அப்படி இருந்தால் தான் அவர்களின் தாம்பத்யத்தில் திருப்தி இருக்கும்...

அடுத்து ஆண் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக சுடிதார் போட தேவையில்ல ... ஆண் ஆணாக இருந்தால் தான் பெண்களுக்கு அழகாக இருப்பார்கள்...

வால்பையன் said...

//ஆண் ஆணாக இருந்தால் தான் பெண்களுக்கு அழகாக இருப்பார்கள்...//

நீங்கள் ஒரு பெண்ணா?
இல்லை பெண்கள் மனதை படிக்கும் வித்தைகாரரா?

விட்டால் ஆண்களை குஷிபடுத்த இரவு நடனமாட சொல்வீர்கள் போலயே!
எனக்கு நீ தினமும் அழகாக தெரியவேண்டும் அதற்காக விதவிதமான உடைகளை உடுத்து என்பது என்ன சிந்தனை!

இளைய கவி said...

தல என்னோட மனக்குமுறல நீங்க கொட்டிடீங்க தல.. வாழ்க. இதை பதிவுக்கு நான் என்னோட பதிவுல சுட்டி குடுத்துகிறேன் உங்க அனுமதியோடு....

வால்பையன் said...

//தல என்னோட மனக்குமுறல நீங்க கொட்டிடீங்க தல.. //

எப்படிடா, வாங்குற அடியெல்லாம் மறந்துட்டு இப்படி கூல் பின்னூட்டம் போடமுடியுது!

தங்கச்சிகிட்ட சொல்லி இருபுல பூரிகட்டை வாங்க சொல்லனும்!

கபிலன் said...

"இளைய கவி said...
தல என்னோட மனக்குமுறல நீங்க கொட்டிடீங்க தல.. வாழ்க. இதை பதிவுக்கு நான் என்னோட பதிவுல சுட்டி குடுத்துகிறேன் உங்க அனுமதியோடு...."

தாராளமாக சுட்டி கொடுத்துக் கொள்ளுங்கள்!
தங்கள் கருத்துக்கும் குமுறலுக்கும் நன்றி!

கபிலன் said...

"வால்பையன் said...
//தல என்னோட மனக்குமுறல நீங்க கொட்டிடீங்க தல.. //

எப்படிடா, வாங்குற அடியெல்லாம் மறந்துட்டு இப்படி கூல் பின்னூட்டம் போடமுடியுது!

தங்கச்சிகிட்ட சொல்லி இருபுல பூரிகட்டை வாங்க சொல்லனும்!"

ஹா ஹா...
வால் பையன் நீங்க இந்த பின்னூட்ட விவாதங்களை எடுத்து தனிப் பதிவாகவே போட்லாம்ங்க. ஏன்னா...நீங்க நிறைய பாய்ண்ட் சொல்லி இருக்கீங்க...

தலைப்பு "நைட்டி பிரச்சினையில் பின்னூட்டப் போர்"
தங்கள் கருத்திற்கு நன்றி!

இளைய கவி said...

தல உங்களுக்காக நான் ஒரு பதிவே போட்டுடேன் போய் பாருங்க

http://dailycoffe.blogspot.com/2009/06/blog-post_1151.

கபிலன் said...

"இளைய கவி said...
தல உங்களுக்காக நான் ஒரு பதிவே போட்டுடேன் போய் பாருங்க

http://dailycoffe.blogspot.com/2009/06/blog-post_1151."

ஹா ஹா..படித்து விட்டேன்..
நல்ல நகைச்சுவையான பதிவு நண்பரே !
திரட்டிகளில் இணைத்து விடுங்கள்!

இளைய கவி said...

//எப்படிடா, வாங்குற அடியெல்லாம் மறந்துட்டு இப்படி கூல் பின்னூட்டம் போடமுடியுது!

தங்கச்சிகிட்ட சொல்லி இருபுல பூரிகட்டை வாங்க சொல்லனும்!"
//

டேய் வாலு ஏதோ நீ அடிவாங்காத மாதிரில்லா பேசிகிட்டு இருக்க.. ங்கொய்யால வீட்டுக்கு வீடு வாசப்படி தாண்டி... ஒரு முக்கியாமான மேட்டர் நைட்டி போடாதன்னு உன் தங்கச்சி கிட்ட அகிம்சாவழிலதான் போராடிகிட்டு இருக்கேன் போராட முடியும்.. புள்ளயாவ வளத்துவச்சிருகீங்க அவள ? பாவிகளா நெஞ்சுல ஏறி மிதிக்கிறா மச்சான்.

வால்பையன் said...

//புள்ளயாவ வளத்துவச்சிருகீங்க அவள ? பாவிகளா நெஞ்சுல ஏறி மிதிக்கிறா மச்சான்.//

ஆடுறமாட்டை ஆடி கரக்குற மாதிரி, உன்னையெல்லாம் மிதிச்சி தானே அடக்க வேண்டியிருக்கு!
கராத்தே, குங்குமபூவெலாம் கத்து கொடுக்குனும்டா தங்கச்சிக்கு!

இளைய கவி said...

கல்யாணத்து முன்னாடி உங்க நெஞ்சுல வச்சு பாத்துப்பான்னு சொண்ணீங்களே அது இது தானாடா ??

வால்பையன் said...

//கல்யாணத்து முன்னாடி உங்க நெஞ்சுல வச்சு பாத்துப்பான்னு சொண்ணீங்களே அது இது தானாடா ?? //

பேச்ச கேட்டா அப்புடி,
எதிர்த்து பேசினா இப்புடி!
நீ எப்பூடி?

புதுகைத் தென்றல் said...

நைட்டி பகல்நேர உடையல்ல என்பது என் ஆழமான கருத்து. அதைப்பற்றி நானும் பதிவிட்டிருக்கிறேன்.

அதுக்காக வீட்டுல புடவைதான் கட்டணும்னு சொல்லாதீங்க. சுடிதார், பேண்ட், சர்ட், ஓகே. இவை பார்க்கறவங்க, போட்டுக்கறவங்க இருவருக்குமே கம்ஃபர்ட் ரகங்கள். துளசி டீச்சரின் பின்னூட்டத்தை ரசிச்சேன்

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க புதுவைத் தென்றல்!

புதுகைத் தென்றல் said...

புதுவைத் தென்றல்//

புதுகை, புதுகைத் தென்றல். புதுகை புதுக்கோட்டையின் சுருக்கம். நம்ம அப்துல்லா எங்க ஊர் காரர்.

:)))))

கபிலன் said...

"புதுவைத் தென்றல்//

புதுகை, புதுகைத் தென்றல். புதுகை புதுக்கோட்டையின் சுருக்கம். நம்ம அப்துல்லா எங்க ஊர் காரர்.

:)))))"

அடடா..மன்னிச்சிக்கோங்க...புதுகைத் தென்றல்!
வந்து கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி!
:))

Gifarz said...
This comment has been removed by the author.
Gifarz said...

///நீங்கள் ஒரு பெண்ணா?
இல்லை பெண்கள் மனதை படிக்கும் வித்தைகாரரா?///

ஆண்கள் மனதைப்ப படிப்பதற்கு பெண்ணாக இருக்க வேண்டும் என்று முக்கியம் இல்லை....
ஆட்களை ஏமாற்றும் தமிழ் சினிமாக்கள் சொல்வதை நம்பி விட்டீர்கள் போல...

///விட்டால் ஆண்களை குஷிபடுத்த இரவு நடனமாட சொல்வீர்கள் போலயே!///

மனைவி என்பவள் விலைமாது இல்லை...

///எனக்கு நீ தினமும் அழகாக தெரியவேண்டும் அதற்காக விதவிதமான உடைகளை உடுத்து என்பது என்ன சிந்தனை!///

கூடுதலான ஆண்களின் எண்ணம் மனைவி வெறும் உடல் தேவைகளைப் புர்த்தி செய்யும் பொருளாக நினைத்தால் இப்படித்தான் தோன்றும்....

Anonymous said...

Penkalukku alakaana udai nighty ya sareeyaa endrellam pesuvathai vanmaiyaaka kandikkiren. Udaiye penkalin azhakai maraikkathaan payanpadukirathu perumbaalum. Enave penkalin alakai rasikka udai kku thadaa allathu thadai podunga... life a private aa enjoy pannunga! pakalenna iravenna! Cheers!

anbudan
Osai chella

Pinkurippu: aankalin avalatchanaithai maraikkave mukkiyamaaka thoppaiyai! udai payanpadukirathu! enave aankalukku mela sonnathu porunthaathu! ;-)

ராஜ நடராஜன் said...

பத்தவச்ச பரட்டை வாலுகிட்ட இருந்து லேட்டா வாரேன்.இடுகையப்படிச்சிட்டு நேரா இங்க ஒடியாந்துட்டேன்.பின்னூட்டக்காரர்கள் எனன சொல்றாங்கன்னு தெரியல.

நீங்க மேக்ஸிய நைட்டியா சொல்றீங்களா?படத்துல இருக்கறது மேக்ஸி.வசதிக்காக பெண்களின் ஜீவ உடையாகி விட்டது போலும்.

நைட்டி உடை வேற:)

கபிலன் said...

"Anonymous said...
Penkalukku alakaana udai nighty ya sareeyaa endrellam pesuvathai vanmaiyaaka kandikkiren. Udaiye penkalin azhakai maraikkathaan payanpadukirathu perumbaalum. Enave penkalin alakai rasikka udai kku thadaa allathu thadai podunga... life a private aa enjoy pannunga! pakalenna iravenna! Cheers!

anbudan
Osai chella

Pinkurippu: aankalin avalatchanaithai maraikkave mukkiyamaaka thoppaiyai! udai payanpadukirathu! enave aankalukku mela sonnathu porunthaathu! ;-)"

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஓசை செல்லா!

கபிலன் said...

ராஜ நடராஜன் said...
பத்தவச்ச பரட்டை வாலுகிட்ட இருந்து லேட்டா வாரேன்.இடுகையப்படிச்சிட்டு நேரா இங்க ஒடியாந்துட்டேன்.பின்னூட்டக்காரர்கள் எனன சொல்றாங்கன்னு தெரியல.

நீங்க மேக்ஸிய நைட்டியா சொல்றீங்களா?படத்துல இருக்கறது மேக்ஸி.வசதிக்காக பெண்களின் ஜீவ உடையாகி விட்டது போலும்.

நைட்டி உடை வேற:)

மேக்சியின் தோற்றம் வேறு மாதிரி இருக்கும் என நினைக்கிறேன். படத்தில் காட்டி இருப்பதை தான் நம் ஊரில் நைட்டி என விற்கிறார்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க ராஜ நடராஜன்!

supersubra said...

பாலச்சந்தர் இன் வெள்ளி விழா படத்தில் காதோடு தான் நான் பாடுவேன் என்ற பாட்டில் நைட்டி ஒரு செக்ஸ்யான ஆடையாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போழுது பார்த்து பார்த்து சலித்துவிட்டதால் இப்படி ஒரு பதிவு தேவையாகி விட்டது போலும்

கபிலன் said...

"supersubra said...
பாலச்சந்தர் இன் வெள்ளி விழா படத்தில் காதோடு தான் நான் பாடுவேன் என்ற பாட்டில் நைட்டி ஒரு செக்ஸ்யான ஆடையாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போழுது பார்த்து பார்த்து சலித்துவிட்டதால் இப்படி ஒரு பதிவு தேவையாகி விட்டது போலும்"

நீங்கள் சொல்வது ரொம்ப சரி...
சரியான பாடலை உதாரணமா எடுத்து சொல்லி இருக்கீங்க..
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சூப்பர்...!

வால்பையன் said...

//பாலச்சந்தர் இன் வெள்ளி விழா படத்தில் காதோடு தான் நான் பாடுவேன் என்ற பாட்டில் நைட்டி ஒரு செக்ஸ்யான ஆடையாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போழுது பார்த்து பார்த்து சலித்துவிட்டதால் இப்படி ஒரு பதிவு தேவையாகி விட்டது போலும்"//

எல்லாமே ஒரு நாளைக்கு சலிக்குமே அப்ப என்ன பண்ணலாம்?

கபிலன் said...

"வால்பையன் said...
//பாலச்சந்தர் இன் வெள்ளி விழா படத்தில் காதோடு தான் நான் பாடுவேன் என்ற பாட்டில் நைட்டி ஒரு செக்ஸ்யான ஆடையாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போழுது பார்த்து பார்த்து சலித்துவிட்டதால் இப்படி ஒரு பதிவு தேவையாகி விட்டது போலும்"//

எல்லாமே ஒரு நாளைக்கு சலிக்குமே அப்ப என்ன பண்ணலாம்? "

ஆஹா....வால்ஸ் வாங்க..

மாற்றம் என்பதே நிரந்தரம் நு சொல்லி மாறிக்க வேண்டியது தான் : )

Learn Speaking English said...

சூப்பர் சிந்தனை

Anonymous said...

Kabi Anna,

Your post regarding boring nighties are real awakening...for me. Sure I will wear saree atleast 2 sundays per month....this is to give respect to my hubby's feeling.

thanks
padma Manivannan

glamour said...

gopal sir, naan intha padivai ennudaiya blogil podugiren. romba nalla irukku

LinkWithin

Blog Widget by LinkWithin