Friday, May 29, 2009

சிவப்பான பெண் தேடுபவரா நீங்கள்? வாங்க..வாங்க...




நல்லா செக்கச் செவேல்னு செவப்பா இருக்க பொண்ணு தான்யா நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தக் காலில் நிற்கிற ஆளுங்களுக்காக எழுதிற பதிவு தான் இது.


"சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் மணமகனுக்கு நன்கு படித்த,வேலை பார்க்கும், சிவப்பான,குடும்பப்பாங்கான மணமகள் தேவை."
இப்படி தான் மணமகள் தேவையில் பெரும்பாலான விளம்பரங்கள். இதை கொஞ்சம் Detailஆ Analyse பண்ணுவோம்.


மனசாட்சி: நல்லா கேக்குறாங்கய்யா...டீடேய்லு....


முதல்ல, குடும்பப்பாங்கான பொண்ணு வேணும்னு கேட்டு இருக்காங்க. சரி. நம்ம அம்மா, அப்பா, கூட பொறந்தவங்கள அடிச்சு விரட்டாம, நல்லா பாத்துப்பா...வீட்டுக்கு வர்றவங்கள சோறு, காபி தண்ணி கொடுத்து நல்லா கவனிப்பா,குடும்ப பொறுப்பை ஏற்று, வீட்டை கல கலப்பா வச்சிப்பா, அப்படிங்கர எண்ணத்துல. சரி. இது ரொம்ப நியாயமான, அத்தியாவசியமான requirement.இந்த requirement OK.


அடுத்த requirement க்கு வாங்க, படிச்ச பொண்ணு வேணும்னு கேக்குது அந்த விளம்பரம். சரி, படிச்ச பொண்ணு, இப்ப இருக்கிற நாகரிக காலத்துக்கு ஏத்த மாதிரி இருப்பா, டஸ் புஸ்னு இங்கிலிஷ் பேசுவா, நம்ம பந்தாவா, வெளியில போற இடத்துல மதிப்பா நடந்துப்பா, குழந்தைகளை நல்லா புத்திசாலிகளா வளர்ப்பா, அப்படிங்கர எண்ணத்துல இருக்கலாம். So, இந்த படிச்ச பொண்ணு Requirement OK தான்.


அடுத்து, வேலைக்குப் போற பொண்ணு வேணும்னு ஒரு Requirement. ஏன்னா, ஒருத்தர் சம்பலத்துல வண்டிய ஓட்ட முடியாது, குக்கர் வாங்கிறதுக்கும், டிவி வாங்கிறதுக்கும் EMI கட்டி கஷ்டப்படாம இருக்கணும். பொண்ணும் வேலைக்கு போனால் கொஞ்சம் வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்ளலாம். so, இந்த Requirement கூட ஓகே தாங்க.

அடுத்து தான் மேட்டரே! அது என்னங்க சிவப்பான பொண்ணு. அதுவும் இல்லாம இந்த Requirement சொல்றது அவங்க பெற்றோர்கள் இல்ல, மணமகன் தான். மற்ற Requirement எல்லாமே ஒகே தாங்க.


சரி அதுக்கும் reason தேட try பண்ணுவோம்.


1. சிவப்பான பொண்ணு கூட இருந்தா பந்தாவா, ஊரே ஆ என்று பாக்கும், மற்றவர்கள் எதிரில் மதிப்பா இருக்கும். "சூப்பரான பொண்ண கட்டிக்கிட்டு வந்துட்டாண்டா, ரொம்ப லக்கி டா அவன்", அப்படின்னு சொல்லுவாங்க.
ஐயா, யார் பார்க்குறதுக்கு நம்ம கல்யாணம் பண்றோம், யார் சந்தோஷத்துக்கு நம்ம கல்யாணம் பண்றோம்னு கொஞ்சம் நினைச்சு பாக்கணும். எப்படி ஒரு சாதியை பார்த்து மதித்த காலம், கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறதோ, அதே போல சிவப்பின் மீது உள்ள போலி மரியாதை, மறையத் தொடங்கியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். So, இந்த Reason பொருத்தமா இல்லையே! இதுல பந்தாவோ, மதிப்போ எதுவும் இருக்குற மாதிரி எனக்கு தெரியல.


2. வேற பல விஷயங்கள்ல சிவப்பு சந்தோஷத்தை அளிக்குமோ?
எந்த விஷயத்துல சிவப்பு சந்தோஷம் அளிக்கும்......சரி, சுத்தி வலைச்சு பேசாம, பளிச்சுன்னு சொல்லிடுறேன். விளக்கை அணைத்த பிறகு, எல்லாமே ஒண்ணு தாங்க. கருப்பு, சிவப்பு, மாநிறம் இது எதுவுமே தெரியாது. உடலும், உள்ளமும் இணையும் தாம்பத்யத்தில், நிறத்திற்கு வேலையே இல்லை.
சிலர் நக்கலாக கேக்குறது புரியுது, "சரி, விளக்கு அணைக்கல, அப்ப எப்படி பா "னு தானே? உங்க கேள்விக்கு, என்னுடைய நண்பர் ஒருவர் விளையாட்டா சொல்றத இங்கே சொல்றேன். "கோழி குண்டா இருந்தா என்ன? ஒல்லியா இருந்தா என்ன? நம்ம சாப்பிட போறது சூப் தானே!". ( பெண்ணுரிமை அமைப்புகள் மன்னிச்சுக்கோங்க...மயிலே,குயிலே,நிலா,பூ அப்டின்னு சொன்னா ஒத்துப்பாங்க, கோழின்னு சொன்னா ஒத்துப்பங்களா?)

மனசாட்சி: ஐயோ சாமி, இப்ப என்ன தான் டா சொல்ல வர்ற, சொல்லித் தொலை


சாதியில் பாகுபாடு பார்க்குறது எவ்வளவு தவறான விஷயமோ, அதே போல தான் நிறத்தில் பாகுபாடு பார்ப்பதும் கேவலமான விஷயம். இப்படி நிறத்தைப் பார்த்து, மணப்பெண்களை தேடுறத விட, பொண்ணு எப்படி, பொண்ணோட வீட்டில் எல்லோரும் எப்படி, சொந்தம் பந்தம் எப்படி, நம்ம பாஷைல குலம் கோத்திரம்னு சொல்லுவாங்க. கோத்திரத்த கூட விடுங்க...குலம்.. தாய் தந்தையரின் குணநலங்களே ,பெரும்பாலான பிள்ளைகளுக்கு இருக்கும்னு சொல்லுது நம்ம சயின்ஸ். இப்படி இருக்க,அவங்க எல்லோரும் எப்படின்னு தெரிஞ்சுக்குறது முக்கியமாச்சே!
இப்படி நிறத்துக்கு அதிக Weightage கொடுத்து, மற்ற முக்கியமான விஷயங்களை கோட்டை விட்ராதீங்க!

மனசாட்சி: ஆமா...வந்துட்டார் சொல்றதுக்கு, பெரிய லார்ட் லபக்தாஸ் மாதிரி....

கருப்போ,சிவப்போ எல்லாமே ஒண்ணுதாங்க !
வெள்ளை மனசோட வர்ற, எந்த கலர் ரோசாவை சந்தோஷமா ஏத்துக்க நம்மல பக்குவப் படுத்திக்குவோமுங்க!

மனசாட்சி: ஹ்ம்ம்ம்ம்...இப்பவே கண்ண கட்டுதே......முடியல

இந்த மாதிரி Select பண்றதுல பொண்ணுங்க தாங்க ரொம்ப உஷார். அவங்க விடுக்கிற விளம்பரத்தைப் பார்ப்போம்.
"பி.காம் படித்த பெண்ணுக்கு, நல்ல, Professional Degree படித்த,இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ, நிரந்தர வேலையில் உள்ள, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மணமகன் தேவை"


ரொம்ப Clear அ Love,Security and stability தான் எங்க Priority சொல்லுது பெண்குலம்.

மனசாட்சி: அதெல்லாம் சரி, உபதேசம் ஊருக்கு தானா....நீங்க எப்படி?

"ESCAPE ஆயிடுறா கைப்புள்ள....."

இதெல்லாம், நம்ம பார்த்ததுல, நமக்கு கிடைத்த அனுபவத்துல எழுதினது. யாரையும் புன்படுத்தி இருந்தாலோ, கொஞ்சம் ஒவரா பேசி இருந்தாலும்லைட்டா தலையில கொட்டிட்டு மன்னிச்சு விட்றுங்கோ !


6 comments:

Anandhan said...

anna good article keep writing

கபிலன் said...

நன்றி தம்பி ஆனந்தன்!

sakthi said...

கருப்போ,சிவப்போ எல்லாமே ஒண்ணுதாங்க !
வெள்ளை மனசோட வர்ற, எந்த கலர் ரோசாவை சந்தோஷமா ஏத்துக்க நம்மல பக்குவப் படுத்திக்குவோமுங்க!

நல்ல மனசுங்க உங்களுக்கு

கபிலன் said...

வாங்க சக்தி.
ஏதோ நம்ம மனசுல பட்டத சொன்னேங்க!
தங்கள் கருத்துக்கு நன்றி!

பூமகள் said...

முதல்ல பெண்களுக்காக பேச வந்ததுக்கு நன்றி..

சிவப்பான பெண் தேடும் பல இளைஞர்களுக்கு சரியான பதிவு.. ஆனால்,

சில இடங்களில் சறுக்கி இருக்கிறீர்கள்.. வார்த்தைப் பிரயோகம் நெருடுகிறது.

//கோழி குண்டா இருந்தா என்ன? ஒல்லியா இருந்தா என்ன?? நாம சாப்பிட போறது சூப் தானே?? //

இந்த மாதிரி வசனங்கள் ஆணாத்திக்கச் சிந்தனையிலிருந்து மட்டுமே வெளிவரும்.. இப்படி எல்லாம் சொல்லி ஒருவரைத் திருத்த முற்படுவது பிற்போக்குத்தனமானதே.

இனியேனும் கொஞ்சம் கவனமாக எழுதுங்கள். பெண்களுக்காக பேச வந்து, அவர்களையே மட்டம் தட்டுமளவு எழுதினால் முன்னுக்குப் பின் முரணாகவல்லவா தெரிகிறது.. அல்லது ரொம்ப சென்சிடிவான விசயத்தை கேலிக்குரியதாக மாற்றிவிட்டது போல் தோன்றுகிறது.

கபிலன் said...

"பூமகள் said...
முதல்ல பெண்களுக்காக பேச வந்ததுக்கு நன்றி..

சிவப்பான பெண் தேடும் பல இளைஞர்களுக்கு சரியான பதிவு.. ஆனால்,

சில இடங்களில் சறுக்கி இருக்கிறீர்கள்.. வார்த்தைப் பிரயோகம் நெருடுகிறது.

//கோழி குண்டா இருந்தா என்ன? ஒல்லியா இருந்தா என்ன?? நாம சாப்பிட போறது சூப் தானே?? //

இந்த மாதிரி வசனங்கள் ஆணாத்திக்கச் சிந்தனையிலிருந்து மட்டுமே வெளிவரும்.. இப்படி எல்லாம் சொல்லி ஒருவரைத் திருத்த முற்படுவது பிற்போக்குத்தனமானதே.

இனியேனும் கொஞ்சம் கவனமாக எழுதுங்கள். பெண்களுக்காக பேச வந்து, அவர்களையே மட்டம் தட்டுமளவு எழுதினால் முன்னுக்குப் பின் முரணாகவல்லவா தெரிகிறது.. அல்லது ரொம்ப சென்சிடிவான விசயத்தை கேலிக்குரியதாக மாற்றிவிட்டது போல் தோன்றுகிறது."


சுட்டிக் காட்டியமைக்கு நன்றி பூமகள் !
திருத்திக் கொள்கிறேன்!

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி பூமகள்!

LinkWithin

Blog Widget by LinkWithin