Thursday, May 7, 2009

சன்/கலைஞர் டிவி Vs ஜெயா டிவி

நம்ம தமிழ் நாட்டில் இருக்கும் செய்தி சேனல் மாதிரி ஒரு FRAUD (in INFORMATION) கும்பல் வேறு எந்த ஊரிலும் பார்க்க முடியாது. மக்களுக்கு சரியான, உண்மையான செய்தியை பாரபட்சமின்றி கொடுக்கும் சேனல் தமிழகத்தில் இல்லாதது, நமக்கெல்லாம் பெருத்த ஏமாற்றம் தரும் உண்மை தான்.


எந்த சேனல்ல நியூஸ் கேட்டாலும், இது உண்மையா?...நிஜமாகவே இப்படி தான் நடந்துச்சா?....ஆங்கில சேனல்ல வேற மாதிரி சொன்னாங்களே....நம்ம எல்லோரும் Match Fixing தான் கேள்விப்பட்டிருப்போம், ஆனா நம்ம தமிழ் நாட்டுல News Fixing தான்.


ஒவ்வொரு குப்பை கட்சிக்கும், ஒவ்வொரு சேனல். நியூஸ் ஒன்று தான், ஆனால் அதனை சொல்லும் முறை தான் ஒவ்வொரு சேனலுக்கும் உள்ள வித்தியாசம். ஓரளவுக்கு படித்த நமக்கே இவ்வளவு குழப்பம்னா, சாதாரண பாமர மக்கள் இந்த செய்திகளை,பொய் மூட்டைகளை, அப்படியே நம்பி விடுவதில் ஆச்சர்யமில்லை.


ஒரே செய்தியை வெவ்வேறு சேனல்கள், எவ்வாறு சொல்கின்றன அல்லது திசை திருப்புகின்றன என்பதைப் பார்ப்போம். இது கற்பனை கலந்த உண்மை.செய்தி
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரமாக,கன மழை பெய்து வருகிறது.

சன்/கலைஞர்: பலத்த மழை. சென்னை மக்கள் மகிழ்ச்சி!
ஜெயா: பலத்த மழையால், தென்மாவட்ட விவசாயிகள் அவதி.

செய்தி
இலங்கையில் 105 தமிழர்கள் பலி.

சன்/கலைஞர்: (இந்த செய்தி வராது. அதற்கு பதிலாக..) இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்கள் அனுப்ப கலைஞர் கடிதம்.
ஜெயா: அப்பாவி இலங்கைத் தமிழர்கள் 150 பேர் பலி. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக அரசு, இந்த படுகொலைகளுக்கு உடந்தை என வைகோ பேட்டி.

செய்தி
ஜெயலலிதாவுக்கு ராகுல் காந்தி அழைப்பு. ஒத்த கருத்துடைய தலைவர்களான நிதிஷ் குமார், ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு போன்றவர்களுடன் கூட்டணி வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார்.

சன்/கலைஞர்: (இந்த செய்தி வராது. அதற்கு பதிலாக..) நாற்பது இடங்களிலும், திமுக கூட்டணி வெற்றி பெறும் என தமிழக காங்கிரஸ் குழுத் தலைவர் குலாம் நபி ஆசாத் தகவல்.
ஜெயா : மைனாரிட்டி திமுக அரசு, இந்தத் தேர்தலில் பெரும் தோல்வி அடையும் என்பதை உணர்ந்த ராகுல் காந்தி,அதிமுகவை தனது கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

செய்தி

ஒரு ரூபாய் அரிசித் திட்டத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு.

சன்/கலைஞர்: கலைஞரின் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்திற்கு அகில இந்திய அளவில் பெரும் வரவேற்பு.
ஜெயா: ஒரு ரூபாய் அரிசி என்று சொல்லி மைனாரிட்டி திமுக அரசு, அரிசிகளை கடத்துவதாக பொது மக்கள் அவதி.

செய்தி
சேது சமுத்திர திட்டம் நிறை வேற கோரி தமிழக அரசு விடுத்த பந்த் குறித்து உச்ச நீதி மன்றம், "நீங்கள் எல்லாம் சட்டத்திற்கு மேலானவர்களா?" என தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது.

சன்/கலைஞர்: பொது மக்களின நலனைக் கருத்தில் கொண்டும், சாதாரண மக்கள் அவதி படக் கூடாது என்ற நல்ல நோக்கில், பந்த் போராட்டத்தை
விலக்கிக்
கொண்டு, அதற்கு பதிலாக உண்ணாவிரதமாக மாற்றிக் கொண்டார்.
ஜெயா : இதைப் பற்றி ஒரு அரை மணி நேர அறிக்கை.அதாவது leftla supreme court படம், rightla Scroll text. இதனை வாதாடிய வக்கீலுக்கு கூட அவ்வளவு detail தெரிந்து இருக்காது.

செய்தி
சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில், பெரும் வன்முறை. காவல் துறையினருக்கும், வக்கீல்களுக்கும் மோதல். பலர் காயம்.

சன்/கலைஞர்: "வன்முறைச் சம்பவம் நிகழாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க் வேண்டும்", அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் கலைஞர் ஆணை. "மருத்துவமனையில் இருந்து Ambulance மூலம் உயர் நீதிமன்ற நீதிபதியிடம் நேரில் சென்று விளக்கம் தர தயார்" என்று கலைஞர் அறிவிப்பு.
ஜெயா: (அறை மணி நேர அறிக்கை,அழு குரல்கள், என ஒரு பெரிய ஒப்பாரியே வைப்பார் செய்தி வாசிக்கும் அப்பாவி வாத்து)

இப்படி இருக்கு நம்ம நிலைமை.

மத்தியில், செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை என்ற அமைச்சகமும், அதற்கென ஒரு அமைச்சரும் இருக்க்றார். MidNight Masala, FTV, சனிக் கிழமை இரவு படங்களை தணிக்கை செய்வதில் காட்டும் ஆர்வத்தில்,ஒரு 5 சதவிகிதமாவது இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்!

என்னமோ போங்க!

ஆடாதடா...ஆடாதடா.. மனிதா...
ரொம்ப ஆட்டம் போட்டா....அடங்கிடுவே..மனிதா!

17 comments:

Sivasankaran said...

There are several channels and informative tooo.

ZEEE Tamil news poi parudaaaaaaaaaaaaaaaaaa.

Pracchara channels makkal EN parkaanum.Katchi TV le Katchi news poduvanga , un news a poduvanga

Nee entha Katchi karandaaaaaaaaaa? chumma blogs eluthanumnu eluthatada vennaii ..........

Blogs thollai thanga mudiyalai da saaamy.

Shiva said...

Good Article... keep it up ..

கபிலன் said...

"Sivasankaran said...
There are several channels and informative tooo.

ZEEE Tamil news poi parudaaaaaaaaaaaaaaaaaa.

Pracchara channels makkal EN parkaanum.Katchi TV le Katchi news poduvanga , un news a poduvanga

Nee entha Katchi karandaaaaaaaaaa? chumma blogs eluthanumnu eluthatada vennaii ..........

Blogs thollai thanga mudiyalai da saaamy."

தங்கள் கருத்திற்கு நன்றி!

கபிலன் said...

"Shiva said...
Good Article... keep it up .."


மிக்க நன்றி!

ஜுர்கேன் க்ருகேர்..... said...

அருமைங்க .....
அருமைங்க .....

வர வர நாட்டு நடப்பெல்லாம் காமெடி ஆகிட்டே வருவது கவலை அளிக்கிறது!

கபிலன் said...

ஆமாங்க...இதுக்கெல்லாம் எப்படி முடிவு கட்டறதுன்னு தெரியாம வேடிக்கைப் பாத்துட்டு இருக்கோம்!
தங்கள் கருத்துக்கு நன்றிங்க க்ருகேர்!

TAMIZHAN said...

IN THE LATE 70S. THERE WAS A HUGE DEMONSTRATION BY THE AGRICULTURISTS OF COIMBATORE DISTRICT. ALL THE MAIN ARTIERIS OF THE ROADS WERE BLOCKED. EVERY BULLOCK CARTS IN THE DISTRICT WERE INSIDE THE CITY LIMIT. BUSSES AND lORRIES COULD NOT MOVE. THE WHOLE DISTRICT WAS PARALYSED. THERE WAS NO tv CHANNELS IN THOSE DAYS. ALL THE NEWS PAPERS REPORTED THE INCIDENT. BUT DINA HANTHI DID NOT MENTION ANYTHING BUT THE CAPTION ON THE DAY WAS," SWWEET NEWS!!! INDIRA GHANDI BECAME A GRAND MOTHER!!!!

கபிலன் said...

TAMIZHAN said...
IN THE LATE 70S. THERE WAS A HUGE DEMONSTRATION BY THE AGRICULTURISTS OF COIMBATORE DISTRICT. ALL THE MAIN ARTIERIS OF THE ROADS WERE BLOCKED. EVERY BULLOCK CARTS IN THE DISTRICT WERE INSIDE THE CITY LIMIT. BUSSES AND lORRIES COULD NOT MOVE. THE WHOLE DISTRICT WAS PARALYSED. THERE WAS NO tv CHANNELS IN THOSE DAYS. ALL THE NEWS PAPERS REPORTED THE INCIDENT. BUT DINA HANTHI DID NOT MENTION ANYTHING BUT THE CAPTION ON THE DAY WAS," SWWEET NEWS!!! INDIRA GHANDI BECAME A GRAND MOTHER!!!!


This is how some media prioritize the news in their convenience. Hope, this will end soon.
தங்கள் கருத்திற்கு நன்றி தமிழா!

biskothupayal said...

டிவில மட்டுமா இவங்க அராஜகம் பேப்பர்ளையும் தான்

biskothupayal said...

word verfication edhudunga

கபிலன் said...

"biskothupayal said...
டிவில மட்டுமா இவங்க அராஜகம் பேப்பர்ளையும் தான்
word verfication edhudunga"


எல்லாத்துக்கும் ஒரு காலம் வரும் என நம்புவோம்.

word verification எடுத்துட்டேன்.
தங்கள் வருகைக்கு நன்றிங்க!

Sathish said...

இந்த நாதரிங்க மற்ற சேனல்களை தமிழகத்தினுள் வர அனுமதிப்பதில்லை. பல மலையாள (Asianet News. Indiavision) சேனல்களைப் பாருங்கள் அவர்களின் செய்தியை மக்களுக்குத் தரும் தரம் விளங்கும்.

V.Sathish Kumar said...

nice ya.........

கபிலன் said...

"Sathish said...
இந்த நாதரிங்க மற்ற சேனல்களை தமிழகத்தினுள் வர அனுமதிப்பதில்லை. பல மலையாள (Asianet News. Indiavision) சேனல்களைப் பாருங்கள் அவர்களின் செய்தியை மக்களுக்குத் தரும் தரம் விளங்கும்."

உண்மை தான் நண்பரே!

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!

கபிலன் said...

"V.Sathish Kumar said...
nice ya........."

நன்றிங்க சதீஷ்!

sakthi said...

மிக அருமையான பதிவு

கபிலன் said...

"sakthi said...
மிக அருமையான பதிவு"

ரொம்ப நன்றிங்க!

LinkWithin

Blog Widget by LinkWithin