அமைதியான சூரிய உதயத்தில்
காகம் கரைய, குயில்கள் கூவ
தென்றல் முகத்தை முத்தமிட
என் வீட்டு மொட்டை மாடியில்
காபியுடன், புகைக்குழலையும் உள்ளிழுத்து
இயற்கையைப் பருகுகையில்.....
அடுத்த வீட்டு மாடியில்
பாவாடை தாவணியுடன்
தலையை துவட்டும்
சுமார் 18 நிரம்பிய
அழகிய பதுமை.
இயற்கை ரசிப்பைத் தள்ளிப்போட்டு,
கண்கள் அவளைப் படமெடுக்க,
மனம் அதைத் தெளிவாகப் பதிவு செய்தது.
நானே கைப்பேசியை அலறச் செய்து
அவள் கவனத்தைக் கைப்பற்ற,
கம்பன் சொன்னது போல்,
அண்ணனும் நோக்கினான், அவளும் நோக்கினாள்,
சிறிய புன்முறுவலோடு,குறும்பாய் பார்த்ததும்
அடுத்த கட்ட நடவடிக்கையை
உள்ளுக்குள் திட்ட மிட.....
எங்கிருந்தோ ஒரு சத்தமான ஒரு அழு குரல்..
உறக்கம் தெளிந்தது,
கனவு கலைந்தது,
கண் விழித்தேன்,
அருகாமையில்
என் மகன்...
"மம்மி வேணும்...மம்மி வேணும்....
டேடி...மம்மி வேணும்" என சிணுங்க.....
கனவாய்ப் போனது அந்த பாவாடைச் சிட்டு!
2 comments:
மம்மி வேணும்...மம்மி வேணும்....
டேடி...மம்மி வேணும்" என சிணுங்க.....
கனவாய்ப் போனது அந்த பாவாடைச் சிட்டு!
ரசித்தேன்
I need mummy.......I need mummy.........
Post a Comment