Monday, July 13, 2009

சன் மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக வேண்டுமா?


சாதாரணமாவே நம்ம திருமணம், மற்றும் ஷாப்பிங்க் போறதுக்கே, இந்த டிரஸ் மேட்சிங்கா இருக்கா, இதுக்கு ஷூ போடலாமா, செருப்பு போட்டுக்கலாமா ? இப்படி எல்லாம் யோசிப்போம். அதுமட்டுமல்ல, நம்ம நண்பர்கள் கிட்ட பேசும் போது கூட, ஓரளவுக்கு யோசிச்சு, நம்ம சரியா தான் பேசுறோமா? சரியா தான் நடந்துக்குறோமான்னு ரொம்ப கவனமா நடந்துப்போம்.

இதுக்கே இப்படின்னா, பல லட்சம் பேர் நம்மல கவனிச்சு பாக்குறாங்கன்னா, அதற்கு எவ்வளவு முன்னேற்பாடு செய்யனும். இதெல்லாம் கொஞ்சம் கூட இல்லாம, நானும் VJ தான்னு வந்து நம்மல பண்ற கொடுமை இருக்கே...சாமி. ஆசையா எதாச்சும் ஒரு பாட்டு கேக்கலாம்னு, மியூசிக் சேனலை வச்சா போதும், லப லபன்னு, என்ன பேசுறோம்னே தெரியாம கத்திட்டு இருப்பாங்க. பொண்ணா இருந்தாலும் சரி, பையனா இருந்தாலும் சரி. இதுல வேற பல நிகழ்ச்சிகளில் இரண்டு VJ. உங்களையும் மதிச்சு ஒருத்தர் போன் பண்றார்னா, அவரிடம் ஒழுங்காக பேசாமல், இவர்களுக்குள்ளேயே கடலை வறுத்துக் கொண்டிருப்பது, இவங்க ஏதோ லார்ட் லபக்தாஸ் மாதிரியும், போன் பண்றவங்க ஏதோ முட்டாள்கள் மாதிரியும் நினைச்சு பேசுற மாதிரியே இருக்கும் இவர்களுடைய தோரணை.


அதுமட்டுமல்ல, போன் செய்ற பெரியவங்க, ரொம்ப ஆசையா, தன் பையன் கிட்ட, பொண்ணு கிட்ட பேசுற மாதிரி அன்பா பேசுவாங்க. அப்படி பேசுறவங்கள இவங்களுக்குள்ளேயே நக்கல் பண்றது,கிண்டல் பண்றது. தன்னுடைய குரல் டிவில கேக்காதாங்கற ஆசையில போன் செய்றவங்களை என்னமா கொடுமை பண்றாங்க இவங்க.


சரி நம்ம மேட்டர்க்கு வருவோம். எத்தனையோ மிகச் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு மத்தியில், இப்படியும் நாலு பேர் இருக்கத் தான் செய்றாங்க. இந்த மாதிரியான ஒரு ஒப்புக்குச் சப்பானி நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆக வேண்டுமா ? நீங்களே உங்களை சோதித்துக் கொள்ள எளிய வழிகள் இங்கே!


1.நிகழ்ச்சியின் போது என்ன டிரஸ் போடுவீங்கன்னு தோணுதோ, அந்த டிரஸ்சை போட்டுட்டு, ரோட்டில் போய் நில்லுங்கள். உங்களை குறைந்த பட்சம் 5 நாய்களாவது துரத்தினால், டெஸ்ட் 1 ல நீங்க பாஸ்.


2.நிகழ்ச்சியில் பேசுவதாக நினைத்துக் கொண்டு, உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம், preferably பாட்டியிடம் போய் பேசுங்கள். "ஐயோ, புள்ளைக்கு காத்து கருப்பு ஏதாச்சும் புடிச்சுருச்சா" அப்படின்னு பாட்டி ரியேக்ஷன் கொடுத்தாங்கன்னா நீங்க டெஸ்ட் 2 லயும் பாஸ்.


3.காலையில் இட்லி சாப்பிட்டேன் என்கிற விஷயத்தை மட்டும் வைத்துக் கொண்டு, உங்கள் பெண் நண்பியிடம் 1 மணி நேரம் பேசுபவரா நீங்கள் ? ஆமான்னு தலையை ஆட்டுனீங்கன்னா, ஐயா, மூன்றாவது டெஸ்டிலும் நீங்க பாஸ் ஆயிட்டீங்க.


4. கிரடிட் கார்டு, லோன் வேணுமான்னு போன் பண்ற பொண்ணு கிட்ட 1 மணி நேரம் மொக்கை போடுபவரா நீங்கள்? அல்லது Wrong Number க்கு கால் செய்து அரை மணி நேரம் பேசக் கூடிய திறமை கொண்டவரா நீங்கள்? இதுக்கும் ஓகே சொன்னீங்கன்னா....கிட்ட தட்ட முக்கா கிணறு தாண்டிட்டீங்க நீங்க..


5.நீங்கள் படித்த கல்லூரியிலோ, பள்ளியிலோ, ஆசிரியரிட்ம், உங்களைப் பற்றி கேட்கச் சொல்லுங்கள். "எத்தனையோ பசங்கல பாத்து இருக்கேன். சில பேர் ரொம்ப பழம் மாதிரி இருப்பான், சில பேர் ரொம்ப அரட்டையா இருப்பான். ஆனால் இவன் ஒரு மாதிரி, எப்பவும் மர கழண்ட மாதிரியே சுத்திட்டு இருப்பான்".

இப்படி ஒரு பதில் வந்துச்சுன்னா.....அடேங்கப்பா....நெருங்கிட்டீங்க....ஐந்தாவது டெஸ்டிலும் நீங்க பாஸ்.


6. கடைசியா ஒரு கஷ்டமான கேள்வி. பால் குடிக்கிற குழந்தை என்ன குடிக்குது? இந்த கேள்விக்கு எவ்வளவு யோசிச்சும் உங்களால பதில் சொல்ல முடியலையா? சூப்பர். இந்த டெஸ்டிலும் நீங்க பாஸ் ஆயிட்டீங்க!


அட, எல்லா டெஸ்டிலும் நீங்க பாஸ் ஆயிட்டீங்களா?


Congratulations! நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது. நிச்சயமாக சன் மியூசிக் அல்லது இசையருவியில் உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது ! அதே வேகத்தோடு, இதோ இதையும் கொஞ்சம் சொல்லி பழகிக்கோங்க.


"இதுவரைக்கும் நாடோடிகள் படத்துல இருந்து ..பாட்டு பாத்து எஞ்சாய் பண்ணோம். இப்போ அடுத்து நம்ம கிட்ட பேச போற நெக்ஸ்ட் காலர் யார்னு பாக்குறதுக்கு முன்னாடி ஒரு short commercial break.!


டிஸ்க்: இந்தப் பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே, பிறரைப் புண்படுத்த அல்ல


27 comments:

யூர்கன் க்ருகியர்..... said...

நல்ல சில பாடல்களை கேட்கனும்னா சில கொசுதொல்லைகளை எல்லாம் சமாளிச்சுத்தான் ஆகனும்.:)

போன் பண்றவங்க மட்டும் லேசுப்பட்ட ஆளுங்க இல்ல ..விட்டா பிகர்களுக்கு கோவில கூட கட்டுவானுங்க ..

அவனவன் பிரச்சினையே தலைக்கு மேல இருக்கும்போது ... போனிலேயே குடும்பத்தோடு சேர்ந்து கும்மி அடிப்பவர்களை பார்த்தா காமெடியா இருக்கு ...

கபிலன் said...

"யூர்கன் க்ருகியர்..... said...
நல்ல சில பாடல்களை கேட்கனும்னா சில கொசுதொல்லைகளை எல்லாம் சமாளிச்சுத்தான் ஆகனும்.:)

போன் பண்றவங்க மட்டும் லேசுப்பட்ட ஆளுங்க இல்ல ..விட்டா பிகர்களுக்கு கோவில கூட கட்டுவானுங்க ..

அவனவன் பிரச்சினையே தலைக்கு மேல இருக்கும்போது ... போனிலேயே குடும்பத்தோடு சேர்ந்து கும்மி அடிப்பவர்களை பார்த்தா காமெடியா இருக்கு ..."

ஹா ஹா...நீங்க சொல்றதும் ரொம்ப சரிதாங்க!

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

கடைக்குட்டி said...

மனசுல உள்ளத போட்டு தாக்கி இருக்கீங்க...

கலக்கல்:-)

கபிலன் said...

"கடைக்குட்டி said...
மனசுல உள்ளத போட்டு தாக்கி இருக்கீங்க...

கலக்கல்:-)"

ஆமாங்க கொஞ்ச நாளாகவே இருந்துச்சு..இன்னைக்கு காலையில பாத்த உடனே...சரி வேற வழியில்லை, ஒரு பதிவை போட்டே ஆகணும்னு தோனுச்சு! அதாங்க.!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க..கடைக்குட்டி!

வந்தியத்தேவன் said...

தெரிந்திருக்கவேண்டிய வார்த்தைகள்
1. பாடல் முடிந்ததும் சான்ஸ்சே இல்லை அமேசிங் சாங்ஸ் ஒன்று பார்த்தோம்.
2. யாருக்கு இந்தப் பாடலை டெலிக்கேட் செய்யவிரும்புகிறீர்கள்.
3. உங்கள் டிவி வால்யூமை குறையுங்கள்

இடையிடயே வாவ், கலக்கிட்டிங்க போன்றவையும் சேர்க்கவேண்டும்.
அன்பே அன்பே என்ற நிகழ்ச்சியில் காதலன் காதலி பெயர் போன்ற தனிப்பட்ட விடயங்களுடன் சில அநாகரிக கேள்விகளும் கேட்கிறார்கள் அதற்க்கு டெலிபோன் குஞ்சுகளும் பதில் சொல்கின்றன.

சார் நான் உங்க பேன்(பெண் ரசிகை)உங்க ட்ரெஸ் சூப்பர்
மேடம் நீங்க அழகாக இருக்கீங்க குரல் நைஸ்(ஆண் ரசிகர்)

சிறுவர் நிகழ்ச்சியில் டாடி மம்மி வீட்டில் இல்லையும் மாசிமாசம் ஆளனபொன்னும் பாடல் ஒளிபரப்புகிறார்கள். என்ன கொடுமை கலாநிதி மாறன்.

கபிலன் said...

"வந்தியத்தேவன் said...
தெரிந்திருக்கவேண்டிய வார்த்தைகள்
1. பாடல் முடிந்ததும் சான்ஸ்சே இல்லை அமேசிங் சாங்ஸ் ஒன்று பார்த்தோம்.
2. யாருக்கு இந்தப் பாடலை டெலிக்கேட் செய்யவிரும்புகிறீர்கள்.
3. உங்கள் டிவி வால்யூமை குறையுங்கள் "

ஆமாங்க...இதையே தான் சொல்றாங்க...நல்லா கவனிச்சு இருக்கீங்க வந்தியத்தேவன்!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

முரளிகண்ணன் said...

கலக்கல் கிண்டல்

வந்தியத்தேவன் said...

//கபிலன் said...
ஆமாங்க...இதையே தான் சொல்றாங்க...நல்லா கவனிச்சு இருக்கீங்க வந்தியத்தேவன்!//

சில வருடங்களுக்கு முன்னர் ஹேமா சிங்கா, சந்தியா, என சில நல்ல அழகான தொகுப்பாளினிகள் இருந்தார்கள் இன்றைக்கே இருப்பவர்கள் எல்லாம் சப்பையும் மொக்கையும். இசையருவியில் ரியாவும், நிஷாவும் இருப்பதால் காலையில் பொழுதுபோகின்றது. :)

சோழன் said...

"Last sweet caller காக .......... படத்திலிருந்து பாடல் கேட்டோம். Next Sweet caller கூட பேசுறதுக்கு முன்னாடி ஒரு குட்டி கமர்ஷியல் பிரேக்...."

இந்த கவிதை கொஞ்சும் வார்த்தைகளை மறந்துவிட்டீர்களா திரு.லோ.த?

மிகவும் அருமையாக நையாண்டி பண்ணி இருக்குறீர்கள்! பலரது மன உணர்வுகளை கொட்டி இருக்குறீர்கள்! நகைச்சுவையாக கூறி இருப்பது அழகு!

சோழன் said...

வந்தியத்தேவன் said...
//சில வருடங்களுக்கு முன்னர் ஹேமா சிங்கா, சந்தியா, என சில நல்ல அழகான தொகுப்பாளினிகள் இருந்தார்கள் இன்றைக்கே இருப்பவர்கள் எல்லாம் சப்பையும் மொக்கையும். இசையருவியில் ரியாவும், நிஷாவும் இருப்பதால் காலையில் பொழுதுபோகின்றது. :)//

ஆமாங்க... உங்கள மாதிரியே தாங்க எல்லோரும் கடுப்புல இருக்காங்க! இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டனும்!

கபிலன் said...

"முரளிகண்ணன் said...
கலக்கல் கிண்டல்"

நன்றிங்க முரளி கண்ணன்.

கபிலன் said...

"வந்தியத்தேவன் said...

சில வருடங்களுக்கு முன்னர் ஹேமா சிங்கா, சந்தியா, என சில நல்ல அழகான தொகுப்பாளினிகள் இருந்தார்கள் இன்றைக்கே இருப்பவர்கள் எல்லாம் சப்பையும் மொக்கையும். இசையருவியில் ரியாவும், நிஷாவும் இருப்பதால் காலையில் பொழுதுபோகின்றது. :) "

ஆமாங்க...இப்ப ஆள் கிடைக்கலையோ என்னவோ ! எல்லோரும் ஜோடி நம்பர் 1,2,3 இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போய்ட்டாங்கன்னு நினைக்கிறேன்.


"சோழன் said...
"Last sweet caller காக .......... படத்திலிருந்து பாடல் கேட்டோம். Next Sweet caller கூட பேசுறதுக்கு முன்னாடி ஒரு குட்டி கமர்ஷியல் பிரேக்...."

இந்த கவிதை கொஞ்சும் வார்த்தைகளை மறந்துவிட்டீர்களா திரு.லோ.த? "

அடடே..ஆமாம் சோழன். மறந்துட்டேன். எனக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் பிரச்சினை இருக்குன்னு நினைக்கிறேன் : )

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

Anonymous said...

nalla sonneenga ponga...idhungaluku ethana time kaarithuppinalum bhuddhi varadhu sir... adhum kaalangaathala vandhu tamil pesarom-ndra perla oru kandravi language la pesi kazhutharupanga paarunga...paakumbodhe paathikitu varum.. idhula adhunga potutu vara dress innum kandraviya irukum...
nalla saatayala adicha mathiri ezhudhirukreenga...

idha padichitavadhu thirundhina sari...
ipdi pesaradhungalayum madhichi vela kuduthu sambalam kudukarangale avangala sollanum..
tamil nalla valarndhidum... vaazhndhudum...

கபிலன் said...

"janani said...
nalla sonneenga ponga...idhungaluku ethana time kaarithuppinalum bhuddhi varadhu sir... adhum kaalangaathala vandhu tamil pesarom-ndra perla oru kandravi language la pesi kazhutharupanga paarunga...paakumbodhe paathikitu varum.. idhula adhunga potutu vara dress innum kandraviya irukum...
nalla saatayala adicha mathiri ezhudhirukreenga...

idha padichitavadhu thirundhina sari...
ipdi pesaradhungalayum madhichi vela kuduthu sambalam kudukarangale avangala sollanum..
tamil nalla valarndhidum... vaazhndhudum..."

என்னை மாதிரியே, உங்க கோவத்தை கொட்டி தீர்த்து இருக்கீங்க..!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க!

Satish said...

டிஸ்க்: இந்தப் பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே, பிறரைப் புண்படுத்த அல்ல

ellam sollitu appuram kizha oru star pottu itha potrathu, VJ lam partha evlo feel pannuvanga.

4. கிரடிட் கார்டு, லோன் வேணுமான்னு போன் பண்ற பொண்ணு கிட்ட 1 மணி நேரம் மொக்கை போடுபவரா நீங்கள்?

4th point nan passungo.


sari matteruku varaen, intha VJ lam kuda paravala, Raj TV la oruthan sundays 1:00 - 3:00 oruthan poduvan paru oru mokkai, avana pathi thaniya oru pathivu podalam, if you have time plse spend time watching that.

குப்பன்_யாஹூ said...

the salary in sun Tv is very low , only Rs.4000 and you have to sign a bond that u wont leave the job in 2years. if not u have to pay 20000 etc.

sun tv group is not a good employer

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
கபிலன் said...

"Satish said...
டிஸ்க்: இந்தப் பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே, பிறரைப் புண்படுத்த அல்ல

ellam sollitu appuram kizha oru star pottu itha potrathu, VJ lam partha evlo feel pannuvanga. "

எல்லா துறைகளைப் பற்றியும் கிண்டல் செய்யும் அந்த துறையையும் யாராவது கிண்டல் பண்ணா தானே ஞாயம்?


"4. கிரடிட் கார்டு, லோன் வேணுமான்னு போன் பண்ற பொண்ணு கிட்ட 1 மணி நேரம் மொக்கை போடுபவரா நீங்கள்?

4th point nan passungo."

ஒரு டெஸ்ட்ல பாஸ் ஆனதுக்கு வாழ்த்துக்கள். ஆனா, எல்லா டெஸ்ட்லியும் பாஸ் ஆனா தான் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக முடியும்.sari matteruku varaen, intha VJ lam kuda paravala, Raj TV la oruthan sundays 1:00 - 3:00 oruthan poduvan paru oru mokkai, avana pathi thaniya oru pathivu podalam, if you have time plse spend time watching that"

ஆஹா...தூங்கி எழுந்த முகத்தோட ஒருத்தர் வந்து மிமிக்ரி, நக்கால் நு மொக்கை போடுவாரே அந்த ஆசாமியா...ஆளை விடுங்க...!

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

கபிலன் said...

"குப்பன்_யாஹூ said...
the salary in sun Tv is very low , only Rs.4000 and you have to sign a bond that u wont leave the job in 2years. if not u have to pay 20000 etc.

sun tv group is not a good employer"

அப்படியா ? 4000 ரூ தான் சம்பளமா ? 2 வருட பாண்டு இருக்கும் அது ஓகே! ஆனா,அவ்ளோ குறைவான சம்பளம் அந்தத் துறையிலா? சரியா தெரியலிங்க குப்பன்_யாகூ.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

கபிலன் said...

முதல் முறையாக ஒரு பின்னூட்டத்தை நீக்குறது இப்போ தான். இதோ இதுக்காக தான்..

"Anonymous said...
my nude pictures http://"

கவிதை காதலன் said...

//கிரடிட் கார்டு, லோன் வேணுமான்னு போன் பண்ற பொண்ணு கிட்ட 1 மணி நேரம் மொக்கை போடுபவரா நீங்கள்//

சரியான பாயின்ட்.. கலக்கிட்டிங்க... வாழ்த்துகள்.

" உழவன் " " Uzhavan " said...

காலையில எழுந்த உடனே, இவங்களுக்கு போன் பண்ணி குட்மார்னிங் சொல்லலேன, என்னமோ பொறந்ததே வேஸ்ட்னு நினைச்சி கால் பண்ணுற பண்ணாடைங்களுக்கு மத்தியில இவங்க எவ்வளவோ பரவாயில்ல..

கபிலன் said...

"கவிதை காதலன் said...
//கிரடிட் கார்டு, லோன் வேணுமான்னு போன் பண்ற பொண்ணு கிட்ட 1 மணி நேரம் மொக்கை போடுபவரா நீங்கள்//

சரியான பாயின்ட்.. கலக்கிட்டிங்க... வாழ்த்துகள்"

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க கவிதைக் காதலன்!

கபிலன் said...

"" உழவன் " " Uzhavan " said...
காலையில எழுந்த உடனே, இவங்களுக்கு போன் பண்ணி குட்மார்னிங் சொல்லலேன, என்னமோ பொறந்ததே வேஸ்ட்னு நினைச்சி கால் பண்ணுற பண்ணாடைங்களுக்கு மத்தியில இவங்க எவ்வளவோ பரவாயில்ல.."

ஐயோ...நீங்க வேற இவங்க பரவாயில்லை...இன்னும் ஒரு கும்பல் இருக்கு, "Song is dedicated to all Vijay fans" அப்படின்னு ஒரு SMS (Re 6 / msg). என்ன கொடுமை சார் இது?

reena said...

உண்மைதாங்க... அப்படி ஒரு அலம்பல் நால் முழுக்க... இந்த சேனல்களில்

கபிலன் said...

"reena said...
உண்மைதாங்க... அப்படி ஒரு அலம்பல் நால் முழுக்க... இந்த சேனல்களில்"

ஆமாங்க ஓவர் சவுண்டு கொடுக்குறாங்க...
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க ரீனா!

prabakar said...

lol super comment sir

LinkWithin

Blog Widget by LinkWithin