Saturday, July 18, 2009

எதையும் ப்ளான் பண்ணாம பண்ணா இப்படி தான்!

ஆபீஸ்ல இருந்து நம்மல Samoa என்கிற நாட்டில் ஒரு ப்ராஜெக்ட் Implementationகாக அனுப்பி இருக்காங்க. ஆஸ்திரேலியவுக்கும், நியூசிலாந்துக்கும் நடுவில் உள்ள ஒரு சிறு தீவு தான் Samoa.

நேரடி விமானம் இல்லாததால், ஆஸ்திரேலியாவிலிருந்து செல்ல வேண்டும். விசா, டிக்கெட், டாடுமென்ட் அது இதுன்னு எல்லா எடுத்துட்டு கிளம்பினோம், நானும் என் அலுவலக நண்பர் சரவணனும்.

இது தான் பயண விவரம். ஆஸ்திரேலியாவிற்கு Single Entry Visa, சமோவிற்கு On Arrivalஇல் Visa.
சென்னை -> ஹாங்காங்க் -> சிட்னி->சமோவா
சமோவா -> சிட்னி ->ஹாங்காங்க்->சென்னை

செக் இன் செஞ்சிட்டு, அடுத்து நம்ம ஊர் Immigration.
ஆபீசர் : நீங்கள் ஆஸ்திரேலியா செல்வது முதல் முறையா?
நம்ம : ஆமாங்க, ஆனா, எங்க வேலை சமோவால..
ஆபீசர் : Western Samoa ? என்ன கேபிடல் அந்த நாட்டுக்கு?
(நல்லா கேக்குறாங்கய்யா...டீடெய்லு...)
நம்ம : ஆமாங்க..கேபிடல் ஆபியா..
(ஆப்பு + ஐயா = ஆப்பையா=> ஆப்பியா மரூஉ மொழி..ஹி ஹி..)


சரின்னு முடிச்சுட்டு அதி காலை 2:45 AM மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டோம். ஹாங்காங்க் வந்து சேர்ந்தோம். பத்து மணி நேரம் கழிச்சு தான் சிட்னிக்கு விமானம். டாலர்ல விலை போட்டு இருந்ததால, அதை நம்ம ஊரு காசுக்கு மாத்தி கணக்கு போட்டு, ஐயோ இவ்வளவா ?அப்படின்னு சொல்லிட்டு, வழக்கம் போல, ட்யூட்டி ஃப்ரீ கடைகள் உள்ள போயிட்டு, எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டு, எதுவும் வாங்காம சுத்திக்கிட்டு இருந்தோம். நம்ம ஊர், Old Monkல லைட்டா தண்ணி ஊத்தி வச்சா எப்படி ஒரு கோல்டன் பிரவுன் கலர்ல இருக்குமோ, அதே மாதிரி கலர்ல, அதையே நல்ல பாட்டில்களில் கலர்புல்லா, பேக் செய்து வைத்து மாதிரியான நிறைய பாட்டில்கள்.பெருசு,சிறுசுன்னு பலரும்,அந்தக் கடைகளில் தான் வாங்கிட்டு இருந்தாங்க.


லெப்ட்ல சரவணன், ரைட்ல நான் ஹாங்காங்க் டிரான்சிட்டின் போது....

சரி,நேரம் ஆயிடுச்சு. சிட்னி விமானத்துல ஏறத் தயாராகிக் கொண்டிருந்தோம். கேட் உள்ள வந்துட்டோம். ஒருத்தர் ஓடி வந்து நண்பரிடம் பாஸ்போர்ட் கேட்டார். என்னிடமும் கேட்டு வாங்கிப் பார்த்தார். You have to change your passport, as your foto doesnt resemble you" அப்படின்னாரு அந்த ஜெண்டில்மேன். டேய் ராசா, இது நான் சின்ன வயசுல கோல்ட் ஸ்பாட் குடிச்சிட்டு இருந்த போது எடுத்தது, இப்போ.... முகம் மாறி இருக்காதான்னு சொல்ற மாதிரி சொன்னேன்.(இந்த கோழி சிறுசா இருக்க சொல்ல உறிச்சது இது, இதே கோழி பெருசா இருக்க சொல்லு உறிச்சது அது...ந்னு மகராசன் படத்துல கமலஹாசன் சொல்ற மாதிரி). சரி டா ராசா...கிளம்புங்கோன்னு சொல்லி அனுப்பிட்டாரு...


9 மணி நேரப் பயணத்திற்கு பிறகு ஹாங்காங்கிலிருந்து சிட்னி வந்து சேர்ந்தோம். ஆகா, இப்போ ஆஸ்திரேலியவுல வேற அது இதுன்னு பிரச்சினைன்னு சொல்றாங்களே...நம்ம வேற முதல் முறையா வர்றோம் ஆஸ்திரேலியாக்கு, Immigrationல பிண்ணிப் பெடல் எடுக்கப் போறாங்கன்னு நினைச்சிட்டே போனோம்...நம்ம Triplicane ரத்னா கேப் கேஷியர் மாதிரி, காலை ஆட்டிக் கொண்டு ஒரு ஆபீசர் உட்கார்ந்துட்டு இருந்தார். அவர் கிட்ட போனேன்.ஆனா ஒண்ணுமே சொல்லல, எங்க போறீங்கன்னு கேட்டுட்டு, பட்டுன்னு ஒரு சீல் போட்டுக் கொடுத்துட்டாரு. எல்லாம் முடிஞ்சுதன்னு நினைச்சு பெரு மூச்சு விடுறதுக்குள்ள, அவர் ஒரு அம்மணியை கைக்காட்டி, உங்க பாஸ்போர்ட்டை இவங்க கிட்ட கொடுங்க, சரி பார்த்துட்டு தருவாங்கன்னு சொன்னார். அந்த அம்மணி,நீங்க எங்க போறீங்க, லெட்டர் கொடுங்க, பிசினஸ் கார்டு கொடுங்க அப்படின்னு கேட்டுட்டு, கொஞ்சம் நேரம் காத்து இருக்கச் சொல்லுச்சு. அதானே பார்த்தேன், நம்ம மூஞ்சி தான் லோக்கல் தமிழன் நு எழுதி ஒட்டின மாதிரி இருக்குமே...ஒண்ணுமே கேக்காம விடுறாங்களேன்னு நினைச்சேன்.


கொஞ்சம் நேரம் கழிச்சு அம்மணி வந்துச்சு. எல்லாம் ஓகே. ஆனா, நீங்க எடுத்து இருக்குறது Single Entry Visa. இப்போ ஒரு Entry முடிஞ்சிடுச்சு. அதனால, இதே விசாவை வச்சிட்டு, நீங்க திரும்பி சிட்னிக்கு வர முடியாது. சமோவால போய் டிரான்சிட் விசா எடுத்தால் தான் வர முடியும்னு சொன்னாங்க. நம்ம client கிட்ட இந்த மேட்டரை உடனே சொன்னேன். விசாவை பத்தி எல்லாம் கவலை படாதீங்க...நாங்க பாத்துக்குறோம்னு சொன்னாங்க. சரின்னு கஸ்டம்ஸ் அது இதுன்னு முடிச்சுட்டு வெளியில வந்தோம். வரவேற்க அலுவலகத்துல இருந்து வந்து இருந்தாங்க. இங்கேயே இருக்கீங்களா? இல்லை சாப்பிட போலாமா? இன்னும் 5 மணி நேரம் இருக்கு உங்க விமானத்துக்குன்னு சொன்னார். ஐயா, முதல்ல நாங்க குளிச்சு ரிப்ரேஷ் ஆகணும், அதுக்கு ஏதாச்சும் ஒரு வழி பண்ணுங்கன்னு சொன்னேன். ஆமாங்க, இரண்டு நாள் பயணத்துல, ஒரு சில விஷயங்கள நிம்மதியா கூட பண்ண முடியல : ). அதான். எங்கள் நிலைமையை புரிந்து கொண்ட அந்த நல்ல மனிதர், அவருடைய வீட்டிற்கே அழைத்துச் சென்றார்.

கும்முன்னு ஒரு குளியல் போட்டோம். மீதி இருக்குற நேரத்துல ஷார்ட் டிரைவ் கூட்டிட்டு போறேன்னு ஹார்பர் பிரிட்ஜ்,அது இதுன்னு வேகமாக சுற்றிக் காட்டினார். பல ஊர் போய் இருந்தாலும்,வழக்கம் போல பட்டிக் காட்டான் முட்டாய் கடையை வேடிக்கை பாத்த மாதிரி பாத்துட்டே வந்தேன். அவ்வளவு அருமையான ஊர். கட்டிடங்கள் எல்லாம் எழிலோடும்,பழமையின் சின்னமாகவும் அழகாக இருந்தது. "சிட்னி நகரம் என்பது வந்து நம்ம கை விரல்கள் மாதிரியான தோற்றம். விரல்கள் தான் இடங்கள், அதனுடைய இடைவெளிகள் முழுவதும் கடல்" என நறுக்கென்று விவரித்தார் அந்த ஆஸ்திரேலிய நண்பர்.

இது, நான் தான், ஒரு சுய விளம்பரத்துக்காக எடுத்தது!

எல்லாம் முடிந்து, சமோவா, விமானத்துக்கு செக் இன் செய்ய ஏர்போர்ட் வந்தோம். ராசா, நீங்க சமோவ போறதுக்கு முன்னாடி, டிரான்சிட் விசாவை காண்பித்தால் தான் போர்டிங்க் பாஸ் தருவோம் அப்படின்னு சொல்லுச்சு அந்த விமான அலுவலக பெண்மனி.

சென்னை -> ஹாங்காங்க் -> சிட்னி->சமோவா (இதுலயே ஒரு Entry/Exit முடிஞ்சிடுச்சு..விசா காலி)
சமோவா -> சிட்னி ->ஹாங்காங்க்->சென்னை (விசா முடிஞ்சுப்போச்சே...எப்படிய்யா நீ சமோவவில் இருந்து சிட்னிக்கு திரும்பி வருவே? இது தான் அவங்க கேட்ட கேள்வி)

அங்கே போய் விசா எடுத்துக்குறோம், அது இது...நாங்க எல்லாம் லார்ட் லபக்தாஸ், அப்படி இப்படின்னு கதை விட்டும் ஒன்னும் வொர்க் அவுட் ஆகல. ஓகே வேற வழியே இல்லைன்னு, சிட்னியிலேய ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு கொடுத்துட்டாங்க.

ஐயோ வடை போச்சேன்னு ஒரு புறம் கவலையா இருந்தாலும். கம்பெனி செலவுல சிட்னில நல்லா சுத்திப் பாக்க வாய்ப்பு கிடைச்சுதேன்னு ஒரு சந்தோஷம் தான் ! Multiple Entry Visa நாளைக்கு வந்துடுமாம். ஞாயிறன்று சமோவா கிளம்புற மாதிரி ப்ளான்.

இதுக்கு தான் வடிவேல் சொல்ற மாதிரி, "எந்த ஒரு விஷயத்தையும், ப்ளான் பண்ணாம செய்யக் கூடாது, ப்ளான் பண்ணாம பண்ணா இப்படி தான்.... அஜுக்,பஜக்,புஜுக்....அஜுக்,பஜக்,புஜுக்..."

நெக்ஸ்டு மீட் பண்றேன், சமோவாவில்!

நம்முடைய முதல் பயணக் கட்டுரை, ரொம்ப மொக்கையா இருந்தா சொல்லிடுங்க, இதை தொடராம, இனிமே நமக்கு வொர்க் அவுட் ஆகுற மாதிரியே பதிவையே போடுறேன்..!



16 comments:

Anonymous said...

supper !
VS Balajee

மதி.இண்டியா said...

//நம்முடைய முதல் பயணக் கட்டுரை, ரொம்ப மொக்கையா இருந்தா சொல்லிடுங்க, இதை தொடராம, இனிமே நமக்கு வொர்க் அவுட் ஆகுற மாதிரியே பதிவையே போடுறேன்..!//

சமோவா (சாவா) பேரையே இப்பதான் கேள்விபடுறோம் , உபயோகமாகதான் இருக்கும் , தொடர்ந்து எழுதுங்க

கபிலன் said...

"Anonymous said...
supper !
VS Balajee"

நன்றி பாலாஜி!

கபிலன் said...

"மதி.இண்டியா said...
//நம்முடைய முதல் பயணக் கட்டுரை, ரொம்ப மொக்கையா இருந்தா சொல்லிடுங்க, இதை தொடராம, இனிமே நமக்கு வொர்க் அவுட் ஆகுற மாதிரியே பதிவையே போடுறேன்..!//

சமோவா (சாவா) பேரையே இப்பதான் கேள்விபடுறோம் , உபயோகமாகதான் இருக்கும் , தொடர்ந்து எழுதுங்க"

ஹ்ம்...ஊருக்கு போயிட்டு ஒரு பதிவு போடுறேங்க...நன்றிங்க மதி!

Anonymous said...

hi kabilan,

payanathoda thrillinku start aayuduchaa...

senthil

கபிலன் said...

"hi kabilan,

payanathoda thrillinku start aayuduchaa...

senthil"

லைட்டா ஸ்டார்ட் ஆயிடுச்சு.... : )
நன்றி செந்தில்!

sakthi said...

thodarnthu eluthungal kapilan

கபிலன் said...

"sakthi said...
thodarnthu eluthungal kapilan"

உஉக்கப்படுத்தி டானிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க சக்தி..!

சோழன் said...

Vow!!! Fantastic!!! (நான் ஊர பத்தி மட்டும் தான் சொன்னேன்!).... உங்கள் பதிவை கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்! சிட்னியை நன்றாக சுற்றி திரிந்தீர்களா? உங்கள் விளம்பரப்படம் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் சேர்த்து எடுத்து இருக்கலாம்.

இவ்வோளோ கடுப்புலயும் உங்க நகைச்சுவை உணர்வு நல்ல இருக்கு!

Satish said...

.(இந்த கோழி சிறுசா இருக்க சொல்ல உறிச்சது இது, இதே கோழி பெருசா இருக்க சொல்லு உறிச்சது அது...ந்னு மகராசன் படத்துல கமலஹாசன் சொல்ற மாதிரி).

good one, so the trip is so exciting, enjoy pannu.

Anonymous said...

இத்தாலி போறப்ப ஆரம்பித்த இந்த பிரச்னை இன்னும் முடியலையா ??

-Siva

Anonymous said...

If I would have been in the immigration i would have detained you.

They obviously do not know that nowadays you do not drink goldspot or any other drink of that category. Probably the facial and bodily changes can be attributed to the new type of drinks you are consuming over the period.

Even after all this you have searched for brown colored bottles in duty free shops.

Ram

வழிப்போக்கன் said...

உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன்...
வாழ்த்துகள்...

சுதாகர் said...

ஜூப்பரு!!!

கபிலன் said...

"வழிப்போக்கன் said...
உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன்...
வாழ்த்துகள்..."

விருது கொடுத்து ஊக்கப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றிங்க வழிப்போக்கன்!

கபிலன் said...

"சுதாகர் said...
ஜூப்பரு!!!"

நன்றிங்க சுதாகர்!

LinkWithin

Blog Widget by LinkWithin