Friday, July 3, 2009

நிதி அமைச்சரே, பட்ஜெட்ல இதையும் கவனிச்சுக்கோங்க..!

எந்த சேனல் எடுத்தாலும், பெரிய பெரிய ஆளுங்கள கூப்பிட்டுட்டு வந்து, இந்த பட்ஜெட் எப்படி இருக்கணும், அது இதுன்னு கேள்வி கேக்குறாங்க. நம்ம மனசுல இருக்குறதையும் எங்கேயாச்சும் சொல்லனுமே...அதாங்க இங்க சொல்றேன்...கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் சீரியஸ்...

மதிப்பிற்குரிய நிதி அமைச்சர் அவர்களுக்கு,


1. மூன்று வருஷம் ஒழுங்கா வரி செலுத்துறவங்களுக்கு, ஒரு வருஷ வரி விடுமுறை கொடுங்க : ). (பண முதலைகளான, முதலாளிகளுக்கு மட்டும் வரி விடுமுறை விடுறீங்களே, சாதாரண தொழிலாளிங்களுக்கு கொடுங்க)


2.10% மேல Lay-Off பண்ண நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை ரத்து செய்து, புதிய வரியை அமல்படுத்துங்கள் (கொள்ளை லாபம் பார்த்தால் நீங்க அனுபவிப்பீங்க, நஷ்டம்னா நாங்க அனுபவிக்கனுமா? இப்படி பண்ணா தான் எங்க கோவம் தீரும்).


3.ரிசஷன் காரணமாக, வேலை இழந்தவர்களுக்கு, அவர்கள் வாங்கின கடனை எல்லாம், மறு வேலை கிடைக்கிற வரைக்கும், நிறுத்தி வைக்கனும். (இல்லை அரசே அந்த கடனை கட்டினாலும் ஓகே தான் : )).


4.எப்படியெல்லாம் சாதாரம பொது மக்களிடம் இருந்து வரி என்ற பெயரில் பணம் பிடுங்களாம் என்று எண்ணாமல், கருப்பு பணம் வைத்திருக்கும் கோட் சூட்டு போட்ட கொள்ளைக்காரன், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்ட ரவுடி+கொள்ளைக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்யும் வழிகளை தடை செய்யுங்கள்.


5. வழக்கம் போல சிகரட்டுக்கும்,சரக்குக்கும் வரி போட்டு, இந்த ரிசஷன் நேரத்துல எங்களுடைய செலவுகளை அதிகப்படுத்ததீங்க.செக்ஷன் 80 C, 80 D ல 1 லட்சம் சேமிக்கணும்னு சொல்லி இருக்கு. இதை எல்லாம் சேமிப்பின்னு சேத்துகிட்டா நல்லா இருக்கும்.


1. பொட்டி கடையில நாங்க வச்சி இருக்குற அக்கவுண்டையும் இந்த செக்ஷனுக்கு கீழ எடுத்துட்டு வரணும்.


2. ஹெல்மட் போடாம, இன்சூரன்ஸ் ரினீவ் பண்ணாம, குடிபோதையில் வண்டி ஓட்டி,சிக்னல் மதிக்காம, நாங்க டிராபிக் போலீஸ்க்கு கட்டின Fine எல்லாம் இந்த செக்ஷன் கீழ எடுத்துட்டு வரணும்.


3.எந்த கடையில எது வாங்கினாலும், கூடவே வரின்னு ஒரு சதவிகிதத்தை பில்லில் சேர்த்து, அதை எங்கள் தலையிலேயே கட்டி விடுகிறீர்கள். ஆகவே, நாங்கள் அப்பொருட்களுக்கு, அந்த பணத்திற்கு வரி செலுத்திவிட்டோம். ஆகையால், இவ்வாறாக செலவு செய்த பணத்திற்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும்.


4.எங்க போனாலும் லஞ்சம் கொடுத்தா தான் வேலை ஆகுற நம்ம இந்தியாவுல, இப்படி நாங்க கொடுக்குற லஞ்சத்தையும் இந்த செக்ஷன் கீழ எடுத்துட்டு வந்து, வரி விலக்கு கொடுக்கணும்.வரி ரீபண்ட்1.அடிப்படி இயற்கை வளமான தண்ணீரை கூட, நாள் ஒன்றுக்கு 30 ரூபாய், கொடுத்து தண்ணி கேன் வாங்கி குடிக்கிறோம். மாதத்திற்கு 1000 ரூ, வருடத்திற்கு 12000 ரூபாய். இந்த தொகையை ரீபண்ட் செய்ய வேண்டும்.


2. ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் ஆகுற அத்தியாவசிய செலவுகளான, மருத்துவ செலவு, சுபச்செலவு இவைகளுக்கு எல்லாம் எளிய முறை வகுத்து ரீபண்ட் செய்ய வேண்டும்.


கடைசியா ஒரே ஒரு கோரிக்கை, எந்த ஊர்ல எந்த வங்கில இருக்க கடனை ரத்து செய்ய போறீங்கன்னு எங்களுக்கும் சொன்னீங்கன்னா, நாங்களும் இப்பவே கடன் வாங்கிக்குவோம். உங்க குடும்ப ஆளுங்களுக்கும், கட்சிக்காரங்களும் மட்டும் சொல்லாம எங்களுக்கும் சொல்லிடுங்க, எந்த கடனை ரத்து செய்யப் போறீங்க அமைச்சரே!

நன்றி,

இப்படிக்கு,
ஏமாந்த,ஏமாறப் போகும் பொதுஜனம்.

22 comments:

ஆனந்தன் said...

நாம எவ்வளவு கத்துனாலும் சரீங்க அவுங்க கேக்கமாடாங்க -செவடன் காதுல சங்கு ஊதின கத தான்

கபிலன் said...

"ஆனந்தன் said...
நாம எவ்வளவு கத்துனாலும் சரீங்க அவுங்க கேக்கமாடாங்க -செவடன் காதுல சங்கு ஊதின கத தான்"

ஏதாவது மாற்றம் நடக்காதான்னு ஒரு ஏக்கம் தாங்க் ஆனந்தன்!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

Anonymous said...

"COMEDYAAA ORU SERIAYASANA VISAYAM.....

VELLAI VETTI POTTA AALUNGA(ROWDINGA), SUIT COAT POTTA KOLLAI KAARANUGA(PANA MUTAHLAINGA)...KURIPPITTA ALUVUKKU MELA SOTHTHU IRUKKURA PERIYA PANA MUTHLAIKALUUKUM, NIRUVANAKALUKKUM CONDIPPA VARI VILAKKU IRUKKA KUDATHU

VARI YEIPPU SEIYURA PERIYA PANA MUTHALAINGA, ARASIYAL VAATHINGA ELLARUKKIITA IRUNTHUM PATHI KANAKKULA VARRA/VARAAATHA SOTHTHA PARIMUTHAL PANNANUM

EMANTHA EMAARAPORA POTHU JANANGA ROMBA PAAVAM"

- Muruganandan

chennailocal said...

"வழக்கம் போல சிகரட்டுக்கும்,சரக்குக்கும் வரி போட்டு, இந்த ரிசஷன் நேரத்துல எங்களுடைய செலவுகளை அதிகப்படுத்ததீங்க."

மிக முக்கியமான கோரிக்கை இது.

என்னா வில்ல தனம்."கடைசியா ஒரே ஒரு கோரிக்கை, எந்த ஊர்ல எந்த வங்கில இருக்க கடனை ரத்து செய்ய போறீங்கன்னு எங்களுக்கும் சொன்னீங்கன்னா, நாங்களும் இப்பவே கடன் வாங்கிக்குவோம். உங்க குடும்ப ஆளுங்களுக்கும், கட்சிக்காரங்களும் மட்டும் சொல்லாம எங்களுக்கும் சொல்லிடுங்க, எந்த கடனை ரத்து செய்யப் போறீங்க அமைச்சரே!"


எப்படியா இருந்தாலும் நம்ம வரி பணம்தான் அந்த மான்யம்Hotel le room போட்டு யோசிப்பங்களா.......................................................................

கபிலன் said...

"COMEDYAAA ORU SERIAYASANA VISAYAM.....
- Muruganandan"

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

கபிலன் said...

"chennailocal said...
"வழக்கம் போல சிகரட்டுக்கும்,சரக்குக்கும் வரி போட்டு, இந்த ரிசஷன் நேரத்துல எங்களுடைய செலவுகளை அதிகப்படுத்ததீங்க."

மிக முக்கியமான கோரிக்கை இது.
Hotel le room போட்டு யோசிப்பங்களா...."

என்ன தான் சொல்றார்னு பார்ப்போம் நம்ம முகர்ஜி!
நேத்து டிவில பட்ஜெட் பத்தி பேசிட்டு இருந்தாங்க..அப்ப தான் தோனுச்சு...!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

Satish said...

Spectacles vela lam romba eri pochi, frame vangina glass freenu aruvikanum, enna glass dhan romba costly, cc: mukerji@indiabudget.com, pm@indiaparliment.com, obama@whitehouse.com, rajabakse@srilanka.net. padichitu romba yosikathinga, ithellam aaraya kudathu, anubavikanum.

கபிலன் said...

"Satish said...
Spectacles vela lam romba eri pochi, frame vangina glass freenu aruvikanum, enna glass dhan romba costly, cc: mukerji@indiabudget.com, pm@indiaparliment.com, obama@whitehouse.com, rajabakse@srilanka.net. padichitu romba yosikathinga, ithellam aaraya kudathu, anubavikanum."

வந்து கருத்து சொன்னதுக்கு நன்றிங்க சதீஷ்!

Shiva said...

Excellent da.. keep it up!!!

கபிலன் said...

Shiva said...
Excellent da.. keep it up!!!

தங்கள் வருகைக்கும் கருததிற்கும் நன்றி Shiva!

SUBBU said...

//வழக்கம் போல சிகரட்டுக்கும்,சரக்குக்கும் வரி போட்டு, இந்த ரிசஷன் நேரத்துல எங்களுடைய செலவுகளை அதிகப்படுத்ததீங்க.
//

சரியா கேட்டீங்க :))))))))))))))))
:))))))))))))))))))
:))))))))))))))))))

கபிலன் said...

"SUBBU said...
//வழக்கம் போல சிகரட்டுக்கும்,சரக்குக்கும் வரி போட்டு, இந்த ரிசஷன் நேரத்துல எங்களுடைய செலவுகளை அதிகப்படுத்ததீங்க.
//

சரியா கேட்டீங்க :))))))))))))))))
:))))))))))))))))))
:))))))))))))))))))"

ஹாஹா...வாங்க சுப்பு..
இந்தச் செலவு தாங்க பெரிய செலவு...!

Anonymous said...

வரி கட்டும் மக்கள்ளோட கருத்துகளை அறியாமல் வரி கட்டாமல் ஏமாத்தும் பண முதலைகள் எல்லாம் ஒன்று சேர்த்து நடத்தும் கூடம் தான் பட்ஜெட் கூடம்..அதில் நம்மை பற்றி யோசிக்க அவர்களுக்கு தெரியாது.வரி கடும் நமோட கருத்துகளை கேட்டு அதன் பின் பட்ஜெட் தயார் பண்ணனும்...அதற்காக உங்கள் கட்டுரை மிகவும் அவசியம்...


மிக்க நன்று...
இப்படிக்கு...
நிருபன்...

கபிலன் said...

"வரி கட்டும் மக்கள்ளோட கருத்துகளை அறியாமல் வரி கட்டாமல் ஏமாத்தும் பண முதலைகள் எல்லாம் ஒன்று சேர்த்து நடத்தும் கூடம் தான் பட்ஜெட் கூடம்..அதில் நம்மை பற்றி யோசிக்க அவர்களுக்கு தெரியாது.வரி கடும் நமோட கருத்துகளை கேட்டு அதன் பின் பட்ஜெட் தயார் பண்ணனும்...அதற்காக உங்கள் கட்டுரை மிகவும் அவசியம்...


மிக்க நன்று...
இப்படிக்கு...
நிருபன்..."

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நிரூபன்!

chittoor.S.Murugeshan said...

மனிதனை கொல்வது வாடகை,வட்டி,பிரயாண செலவுதான். இந்தியாவுல வாழ இந்தியன் ஏன் வாடகை தரனும் ? இந்தியாவுக்குள்ள பயணிக்க ஏன் இந்தியன் செலவு பண்ணனும் , இந்திய வங்கி நிறுவனத்துக்கு இந்தியன் ஏன் வட்டி கட்டணும்னு யோசிச்சு வாடகை,வட்டி ,பிரயாண செலவை ஒழித்து கட்டும் பட்ஜெட் வரும்காலம் எந்த காலமோ ?

tsr said...

FM should seriously consider some of your suggestions like expenses on drinking water, tax on various purchases because they must come under the head "double taxation" which logically is illegal. One more suggestion in the interest of job losers: Govt must refund the income tax paid by them as sustenance allowance and disburse in monthly installments which again should not be taxed.

கபிலன் said...

"chittoor.S.Murugeshan said...
மனிதனை கொல்வது வாடகை,வட்டி,பிரயாண செலவுதான். இந்தியாவுல வாழ இந்தியன் ஏன் வாடகை தரனும் ? இந்தியாவுக்குள்ள பயணிக்க ஏன் இந்தியன் செலவு பண்ணனும் , இந்திய வங்கி நிறுவனத்துக்கு இந்தியன் ஏன் வட்டி கட்டணும்னு யோசிச்சு வாடகை,வட்டி ,பிரயாண செலவை ஒழித்து கட்டும் பட்ஜெட் வரும்காலம் எந்த காலமோ ?"

வந்து உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க முருகேசன்!

கபிலன் said...

"tsr said...
FM should seriously consider some of your suggestions like expenses on drinking water, tax on various purchases because they must come under the head "double taxation" which logically is illegal. One more suggestion in the interest of job losers: Govt must refund the income tax paid by them as sustenance allowance and disburse in monthly installments which again should not be taxed."

ஆம், நானும் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க!

சோழன் said...

எல்லோரையும் வெறும் வாயால் வாங்க வாங்க என்று வரவேற்றால் எப்படி திரு. லோ? காபி அல்லது டீ கொடுத்து வரவேற்க வேண்டாமா? விடுங்கள் அதை பற்றி பிறகு கலந்தாய்வோம்!
நிதி அமைச்சரும் அரசாங்க இயந்திரமும் உங்களையும்(நம்மையும்) உங்களை போன்று எளியோர்களை பற்றியும் மிகவும் கவலைப்படுகிறது அல்லது அவர்களுக்காகத்தான் இந்த அரசாங்கம் பாடுபடுகிறது என்று தங்களை போலவே பலர் நம்பிக்கொண்டு உள்ளனர் போலும்! பாவம்!

சோழன் said...

chittoor.S.Murugeshan அவர்களே! என் கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்! வாழ்வது இந்தியாவானாலும் இருப்பது இன்னொருவனுக்கு சொந்தமான இடம் என்றால் வாடகை கொடுத்து தானே ஆகணும்? பயணம் செய்வது வாடகை வண்டி என்றால் அதற்கான கட்டணம் கொடுத்து தானே ஆகணும்? இன்னொருவன் பணத்தை கடன் வாங்கினால் வட்டி கொடுத்து தானே ஆகணும்? அல்லது உங்கள் கருத்தில் வேறு ஏதாவது உள்குத்து இருக்கிறதா? புரியவில்லை! தயவு செய்து விளக்கவும்...

கபிலன் said...

"சோழன் said...
எல்லோரையும் வெறும் வாயால் வாங்க வாங்க என்று வரவேற்றால் எப்படி திரு. லோ? காபி அல்லது டீ கொடுத்து வரவேற்க வேண்டாமா? விடுங்கள் அதை பற்றி பிறகு கலந்தாய்வோம்!"

என்னங்க சோழன், வெறும் காபியா அல்லது கிங்க்பிஷர் காபி 5000 காபி வேணுமா...

"நிதி அமைச்சரும் அரசாங்க இயந்திரமும் உங்களையும்(நம்மையும்) உங்களை போன்று எளியோர்களை பற்றியும் மிகவும் கவலைப்படுகிறது அல்லது அவர்களுக்காகத்தான் இந்த அரசாங்கம் பாடுபடுகிறது என்று தங்களை போலவே பலர் நம்பிக்கொண்டு உள்ளனர் போலும்! பாவம்! "

நம்பிக்கை தாங்க வாழ்க்கை...கொஞ்சம் நம்பித் தான் பாப்போமே!

சோழன் said...

எத்தனை 1000 காபி யா இருந்தாலும் நாங்க பயப்பட மாட்டோம்! 5000, 6000 நு சொல்லி பயமுறுத்த பாக்குறீங்களா? நடக்காது!

LinkWithin

Blog Widget by LinkWithin