Monday, May 11, 2009

காதல் Vs கல்யாணம்


ஆசிரியரிடம், "காதல் என்றால் என்ன?" என்றான் மாணவன்.

"இதற்கு நான் பதில் கூறவேண்டும் என்றால், வயல் வெளிக்கு சென்று, அங்குள்ள சோளத்தில், பெரிய சோளம் ஒன்றைக் கொண்டு வா...அப்பொழுது சொல்கிறேன்!" என்றார் ஆசிரியர்.


"ஆனால் ஒரு நிபந்தனை! ஒரு சோளத்தை ஒரு முறை தான் கடக்க வேண்டும். திரும்பி வந்து எடுக்கக் கூடாது." என நிபந்தனை போட்டார் ஆசிரியர்.


மாணவன், ஆசிரியர் சொன்னபடியே, பெரிய சோளத்தை தேட ஆரம்பித்தான். முதலில் ஒரு சோளத்தைப் பார்த்தான். அடுத்தது அதை விட பெரியதாக இருந்தது. இப்படி, அடுத்த சோளத்தைப் பார்த்ததும், அடுத்தது இதை விட பெரியதாக இருக்கும் என நினைத்து, ஒவ்வொன்றாக கடந்து சென்றான். வயல் வெளியை பாதி கடந்த சமயத்தில், தான் பெரிய சோளத்தை கடந்து வந்துவிட்டதாக உணர்ந்தான். நிபந்தனையின்படி, திரும்பி வரக் கூடாதே...அதனால், வெறும் கையுடன் வந்தான் மாணவன்.


"இது தான் காதல்! சிறந்த காதலை தேடிக் கொண்டே இருப்பார்கள். பிறகு மனம் தெளிந்து பார்க்கும்போது , அந்தக் காதலை தவற விட்டிருப்பார்கள்" என்றார் ஆசிரியர்.


(அதாவது, நம்ம பாஷையில், சுமாரான Figureஅ எல்லாம் விட்டுட்டு, Super Figure தான் வேணும்னு தேடி, தேடி போய் அலைந்து, கடைசில, உள்ளதும் போன கதை ஆகிவிடாமல் பாத்துக்கணும்னு சொல்றார் வாத்தியார்)

"சரி,அப்படியென்றால், கல்யாணம் என்றால் என்ன?" என்றான் மாணவன்.
"இப்பொழுதும் நீ அதே தோட்டத்துக்கு சென்று பெரிய சோளத்தை கொண்டு வா! அதே நிபந்தனைகள் பொருந்தும்", என்றார் ஆசிரியர்.

கடந்த முறை செய்த தவறை மறுபடியும் செய்யக் கூடாது என்று நினைத்த மாணவன், வயல் வெளியை கொஞ்சம் கடந்த பிறகு, ஒரளவுக்கு உள்ள ஒரு சோளத்தை மிகவும் சந்தோஷமாக எடுத்துக் கொண்டு ஆசிரியரிடம் திரும்பினான் மாணவன்.


"பார். இந்த முறை நீ ஒரு சோளத்தோடு வந்திருக்கிறாய். அதுவும் உனக்கு பிடித்த, இது தான் அங்கு இருக்கும் சோளத்திலேயே பெரிய சோளம் என்ற நம்பிக்கையோடும்,திருப்தியோடும் வந்திருக்கிறாய். இது தான் கல்யாணம்", என்று முடித்தார் ஆசிரியர்.


சமீபத்தில் நான் படித்த, எனக்கு பிடித்த ஆங்கில சிறு கதையில், இதுவும் ஒன்று. கொஞ்சம் கற்பனை கலந்து, தமிழில் உங்கள் பார்வைக்காக!

10 comments:

தமிழ் said...

:)))))))))))))

sakthi said...

கதை அருமை

ப்ரியமுடன் வசந்த் said...

டாப் டக்கர்,,,,,,,,,

Kalai said...

arumai arumaiya!

கும்மாச்சி said...

அண்ணே கதை அருமை, எங்கேயோ போய்ட்டிங்க.

கபிலன் said...

"sakthi said...
கதை அருமை"

நன்றிங்க சக்தி!

கபிலன் said...

"alai said...
arumai arumaiya!"

நன்றிங்க கலை!

கபிலன் said...

"கும்மாச்சி said...
அண்ணே கதை அருமை, எங்கேயோ போய்ட்டிங்க."

நன்றிங்க கும்மாச்சி!

Unknown said...

super story

கபிலன் said...

"seetha said...
super story"

Thanks seetha!

LinkWithin

Blog Widget by LinkWithin