Tuesday, May 26, 2009

குழந்தைகளை நமக்கு ஏன் பிடிக்கிறது?



  • அடிச்சா திரும்பி அடிக்காது


  • ஒரு ஊர்ல...அப்படின்னு ஆரம்பிச்சு, எவ்ளோ மொக்கை கதை சொன்னாலும் ஆர்வத்தோட கவனிக்கும்

  • நம்மல எதிர்த்து பேசாது


  • கன்னா பின்னான்னு திட்டினாலும், அழுதுட்டு, உடனே சிரித்தபடியே நம்ம கிட்டயே ஓடி வரும்

  • நம்ம அடிக்கிற கூத்தை எல்லாம் வெளியில சொல்லாது


  • என்ன நிறம்,என்ன உடை,என்ன தகுதின்னு பாக்காம, யாராக இருந்தாலும் ஒரே மாதிரி பழகும்


  • பொய் பேச தெரியாது


  • மனசுல பட்டத அப்படியே சொல்லும், உள்ளே ஒண்ணு வச்சிகிட்டு, வெளியில ஒண்ணு பேச தெரியாது


  • நடந்தா விழுந்துடுவோம்னு தெரிஞ்சும், விடாம முயற்சி செஞ்சிட்டே இருக்கும்


  • நெருப்பு சுடும்னு சொன்னாலும், சொல்றத அப்படியே நம்பாம, ஆராய்ந்து கைய வச்சு பார்த்து தான் நம்பும்


  • தமக்கு இஷ்டப்பட்டதை செய்யும், மத்தவங்க சொல்றத பத்தி கவலைப் படாது


  • அம்மா தான் உலகம்னு நினைச்சு வாழும்


இதையே தான் எல்லா சம்யங்களும், எல்லா பெரியவங்களும் நல்லா வாழ்வதற்கு வழின்னு சொல்லி இருக்காங்க.


ஆக மொத்தம் இறைவன், எல்லோரையும் நல்ல குணநலங்களோடும், பண்புகளோடும் தான் படைத்து இருக்கிறான்.சமூகம், சமுதாயம் அப்படி இப்படின்னு சொல்லி, மூளைச்சலவை செய்து,already நல்லா இருக்கிற குழந்தையை super குழந்தையாய் மாத்துறேன்னு collapse பண்றது நாம தான்.



இதை எல்லாம் யோசிக்கும் போது இந்த பாட்டு தான் ஞாபகத்துக்கு வருதுங்க.



"எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,
பின் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை(சமுதாயம்) வளர்ப்பினிலே!"



ஏன்டா...நேத்து வரைக்கும் நல்லா தானடா இருந்தே....என்ன ஆச்சுனு.. நீங்க கேக்கறது புரியுது....

Freea விடுங்க...Freea விடுங்க..

9 comments:

Anonymous said...

very nice said.

தினேஷ் said...

//ஒரு ஊர்ல...அப்படின்னு ஆரம்பிச்சு, எவ்ளோ மொக்கை கதை சொன்னாலும் ஆர்வத்தோட கவனிக்கும்
//

ஆமா நான் கவனிக்கிறேன் உங்கள ...

/நம்ம அடிக்கிற கூத்தை எல்லாம் வெளியில சொல்லாது
//
நான் சொல்லலபா

கபிலன் said...

"சூரியன் said...
//ஒரு ஊர்ல...அப்படின்னு ஆரம்பிச்சு, எவ்ளோ மொக்கை கதை சொன்னாலும் ஆர்வத்தோட கவனிக்கும்
//

ஆமா நான் கவனிக்கிறேன் உங்கள ...

/நம்ம அடிக்கிற கூத்தை எல்லாம் வெளியில சொல்லாது
//
நான் சொல்லலபா "


வடிவேலு ஸ்டைல்ல, "என்னங்க சூரியன் பெயர பார்த்தா வெறப்பா இருக்கு, கமெண்ட் தட தடனு குழந்தையா மாறுது" : )

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தினேஷ்!

sakthi said...

ஆக மொத்தம் இறைவன், எல்லோரையும் நல்ல குணநலங்களோடும், பண்புகளோடும் தான் படைத்து இருக்கிறான்.சமூகம், சமுதாயம் அப்படி இப்படின்னு சொல்லி, மூளைச்சலவை செய்து,already நல்லா இருக்கிற குழந்தையை super குழந்தையாய் மாத்துறேன்னு collapse பண்றது நாம தான்

உண்மையான வார்த்தை

கபிலன் said...

"sakthi said...
ஆக மொத்தம் இறைவன், எல்லோரையும் நல்ல குணநலங்களோடும், பண்புகளோடும் தான் படைத்து இருக்கிறான்.சமூகம், சமுதாயம் அப்படி இப்படின்னு சொல்லி, மூளைச்சலவை செய்து,already நல்லா இருக்கிற குழந்தையை super குழந்தையாய் மாத்துறேன்னு collapse பண்றது நாம தான்

உண்மையான வார்த்தை

May 31, 2009 1:53 AM "


தங்கள் கருத்துக்கு நன்றி!

chennailocal said...

This is absolutly wrong.
How come some of child born as intelligents.
How come some of the childs born as musicians
How come some of the childs born as philoshper
how come some of the childs born as trend setter in the specified fields.

Anonymous said...

romba nalla illainalum sumara irundhuchu.......chumma sonnen nalla irundhuchu...

Learn Speaking English said...

நல்ல பதிவு

GK said...

இதுதான் கபிலன் பதிவு.... interesting facts...nice

LinkWithin

Blog Widget by LinkWithin