வகுப்பு பதிவில்
என் பெயரையும் மறந்து
அவள் பெயருக்காக காத்திருப்பேன்,
"எஸ் சர் "
என்ற குரலுக்காக.
அவ்வளவு கூச்சலிலும்,
கடைசி வரிசையில் அமர்ந்திருந்தும்,
மெல்லியதாய் என் காதுகளுக்கு மட்டும்
கீர்த்தனையாய் இசைக்கும்
அவள் கொலுசின் ஓசை
சில நொடிகள் பேச
கண்ணாடி முன்
பல மணி நேர ஒத்திகை
சொந்தமே இல்லாத ஊரிலும்,
திருமணம்,விசேஷம் என்று சொல்லி
பேருந்தில் ஏறினேன்
அவள் போகும் ஊருக்கு
சேர்ந்து பயணம் செய்ய..
நாத்திகத்தை நசுக்கி,
அர்ச்சனை செய்ய வைத்தது,
அவள் பிறந்த நாள்
உனைக் காண்பதைத் தடுக்கும்
விடுமுறை நாட்கள்,
எனக்கு வெறுத்தே போயின.
காதலை ஒப்பிக்க காலம் தாழ்த்த,
வேறு ஊருக்கு இடம் பெயன்றாள் என்னவள்.
அவளில்லாத நான்,
ப்ரோசஸர் இல்லாத கணினியாய்
சாரமில்லாமல் இருக்க,
காலச் சக்கரம் மெல்ல சுழல ஆரம்பித்தது.
திடீரன ஒரு நாள்,
மறுபடியும் கொலுசொலி,
இம்முறை கீர்த்தனை அல்ல,
இது சிம்பொனி!
வகுப்பில் புதுவரவாக ஒரு முள்ளை!
அடடா...இவள் தான் நமக்காக பிறந்தவள்
என மனம் சொல்ல
தொடங்கியது இரண்டாம் இன்னிங்க்ஸ்!
இப்படி விடலை பருவத்தில்,
பள்ளிக் காதல்
கல்லூரிக் காதல்
அக்கம் பக்கத்துக் காதல்
கைப்பேசிக் காதல்
இணையக் காதல்
என
அனைத்தையும் காதலித்ததில்
அன்பு,
ஆரவாரம்,
சந்தோஷம்,
ஆர்ப்பாட்டம்,
கனவு,
கொண்டாட்டம்,
ஏக்கம்,
வியப்பு,
எதிர்பார்ப்பு,
என சகல உணர்ச்சியும் இருந்தது
காதலைத் தவிர!
இறுதியில்
திருமணம் தான்
உணரவைத்தது
காதலை!
உண்மைக் காதல்
திருமணத்திற்குப் பின்னே
உணரப்படுகிறது!
3 comments:
interesting.. superb..
உண்மைக் காதல்
திருமணத்திற்குப் பின்னே
உணரப்படுகிறது!
நிஜம்
"sakthi said...
உண்மைக் காதல்
திருமணத்திற்குப் பின்னே
உணரப்படுகிறது!
நிஜம்
May 31, 2009 1:54 AM "
உண்மைக் காதல் அல்லது காதலின் உண்மை
திருமணத்திற்குப் பின்னே
உணரப்படுகிறது!
இப்படி கூட சொல்லாம்ங்க சக்தி!
Post a Comment