நிறைய சமயங்களில், அயல் நாடுகள் செல்லும் போது, நம்ம ஊரு சம்பிரதாயங்கள், Culture,அதன் விளக்கங்கள் என அயல் நாட்டினர் ஆவலாக கேட்பார்கள். அதை நாமும் பெரிய லாடு லபக்தாஸ் மாதிரி, விளக்கி சீன் போடுறது வழக்கம். இதில் சில சமயம் அவர்கள் ஆச்சர்யப்பட்டதும் உண்டு, சில சமயங்களில் நான் வாங்கிக் கொண்டதும் உண்டு.
ஒரு முறை ப்ரொஜெக்ட் டெண்டர் விஷயமாக அலுவலக நண்பர்களோடு, கொரியா போய் இருந்தோம். கொரிய மொழியில் தான் டெண்டரை சமர்பிக்க வேண்டும். அதனால எங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்தார்கள். அவர் பெயர் ஜேசன். எதைப் பற்றியும் கவலைப் படாத ரொம்ப ஜாலியான மனிதர் அவர்.
ஒரு நாள் நாங்கள், அவருடன் சேர்ந்து ஒரு ஹோட்டல் சென்று சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். அந்த மொழிபெயர்ப்பாளர் மட்டும் இடது கையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தது என் கண்களுக்கு உருத்தியது. முதல்ல கேக்க வேணாம்னு நினைச்சேன்...அப்புறம் சரி பரவால்ல கேப்போம்னு கேட்டேன். என்ன ஜேசன், இடது கையில் சாப்பிடுறீங்கன்னு கேட்டேன். எந்த கையில சாப்பிட்டால் என்ன? இதுல என்ன இருக்குன்னு கேட்டார். சரி,சாப்பிடும் போது இதை explain பண்ண கூடாதுனு நினைச்சேன். ஆனால், அவர் மறுபடியும் கேட்டதால, சொன்னேன். ஜேசன், பொதுவா எங்க ஊர்ல, இடது கையை அதுக்கு தான் use பண்ணுவாங்க.....அதனால வலது கையை தான் சாப்பிட use பண்ணுவாங்கன்னு சொன்னேன், ஏதோ நம்ம ஊரு சம்பிரதாயத்தை பெருசா விளக்கி கிழிச்ச நினைப்போட. கொஞ்சமும் இடைவெளி விடாமல் சட்டேன்று, "அப்படின்னா நான் இடது கையில சாப்பிடறது கரெக்ட் தான், அதுக்கு நான் வலது கையை தான் use பண்ணுவேன்" என்று கூலாக வெளிப்படையாக சொன்னார் ஜேசன். ஒரு நிமிஷம் எல்லோரும் சிரிச்சிட்டோம்.
தட்டப் பார்த்தோமா, சோறு திண்ணோமான்னு இருக்கறத விட்டுட்டு, யாரு எந்த கையில சாப்பிட்டா என்ன? எந்த கையில ..............என்ன? சாப்பிடற நேரத்துல, நாம சீன் போடறதுக்கு இப்படி ஒரு discussion தேவையா? இப்படி வாயைக் கொடுத்து வாங்கிக்கிறதே நமக்கு hobbya போச்சு... போங்க!
2 comments:
இப்படி வாயைக் கொடுத்து வாங்கிக்கிறதே நமக்கு hobbya போச்சு... போங்க!
சேம் ப்ளட்
ஹா ஹா....நன்றிங்க!
Post a Comment