Saturday, May 16, 2009

திமுகவின் வாய்க்கரிசியை தடுத்த ஒரு ரூபாய் அரிசி !!


பாராளமன்றத் தேர்தல் 2009

இப்படி ஒரு அசாதாரண வெற்றி திமுகவிற்கு கிடைக்கும் என நம்மில் பலரும் எதிர்ப்பார்க்காத ஒரு முடிவு. ஏன் திமுகவினருக்கு கூட இது ஒரு ஆச்சர்யம் தான்.

அதிமுகவிற்கு பலமான கூட்டணி...திமுகவிற்கு அவ்வளவாக இல்லை...எல்லாம் சில்லறை கட்சிகள் தான் காங்கிரஸ் உட்பட. பிறகு எப்படி இந்த மகத்தான வெற்றி. காசு விளையாடியது என்று கூறினாலும், இவ்வளவு தொகுதிகளில் விளையாடுமா என்பதும் சந்தேகம் தான். அதுமட்டுமல்ல....

தினகரன் சம்பவம்,
விலைவாசி ஏற்றம்,
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் திமுகவின் நாடகம்,
மின்வெட்டு,
கலைஞர் குடும்பத்தின் குடுமிப்பிடி சண்டை மற்றும் நாடகம்,
கலைஞரின் குடும்ப அரசியல்

என பெரிய பட்டியலே இருந்தும் கூட...திமுகவை ஜெயிக்க வைத்தது எது என்று பார்த்தோமேயானால்

1.ஒரு ரூபாய் அரிசி.
2. ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில், அரசு ஊழியர்களின் எதிரான போக்கு.
3. கலைஞர் சொன்னபடி கலர் டிவி.
4. நல்ல ரோடுகள்,மற்றும் பாலங்கள்.
4. விஜய்காந்த் பிரித்த அதிமுகவின் ஓட்டு.

என்ன தான் நம்ம, இணையங்களிலும், தொலைக்காட்சிகளிலும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் எதிராக பேசினாலும், நம்ம எல்லோரும் ஓட்டு போடுகிறோமா என்று கேட்டால்...நிச்சயம் மிக மிக மிக குறைவு தான்! எப்பொழுது படித்தவர்கள் பெரும்பாலானோர் ஓட்டு போடுகிறார்ளோ, அப்பொழுது தான், இங்கு பேசுகிற வாதங்கள் ஓட்டுக்களாக மாறும் என நம்பலாம்.

ஆக மொத்தம், இந்த தேர்தலில், திமுகவிற்கு விழ இருந்த வாய்க்கரிசியை தடுத்து, வெற்றிக் கனியாக மாற்றிய பெருமை நிச்ச்யம் ஒரு ரூபாய் அரிசிக்கே சேரும் !

எது எப்படியோ...மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு !

2 comments:

Ganesh said...

Apart from that the following reasons also supports to get the votes from the peoples.

1.Gas distribution
2.land distribution
3.former loan released from co-operative bank.

Any way all the best to DMK Peoples.

கபிலன் said...

"Ganesh said...
Apart from that the following reasons also supports to get the votes from the peoples.

1.Gas distribution
2.land distribution
3.former loan released from co-operative bank.

Any way all the best to DMK Peoples."

தங்கள் கருத்துக்கு நன்றி!

LinkWithin

Blog Widget by LinkWithin