Friday, May 8, 2009

ஔவை...டபால்

இரண்டு நாட்களுக்கு முன்பு, என் மகன் தீபுவிற்கு, புதிதாக ஒரு தமிழ் உயிர் எழுத்துக்கள் பயிலும் Chart வாங்கினேன். என் மனைவி அவனுக்கு, அம்மா, ஆப்பிள்,இலை,ஈ,உரல்,ஊசி.......ஔவை,எஃகு..என ஒவ்வொன்றாக சொல்லி கொடுத்தாள். ஓரிரு மணி நேரத்தில் அந்த படங்கள் அவனுக்கு கொஞ்சம் familiar ஆயிடுச்சு.


நான் போய், ஒவ்வொன்றாக, கை வைத்து, தீபு இது என்ன? அது என்ன? என கேட்டு, அவன் பதில் சொல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு, நான் ஔவையின் படத்தின் மீது கை வைத்து "தீபு இது யார்?" என்று கேட்டேன். அதற்கு அவன் "ஔவை, டபால்" என்றான். "ஔவை சரி, அது என்னடா டபால்?" என மறுபடியும் கேட்டேன் "ஔவை, டபால்" என கூறி, கையை ஓங்கி அசைத்தான். பிறகு தான் புரிந்து எதற்கு அந்த "டபால்" என்று.


உங்களுக்காக, அந்த ஔவை படம் இதோ.




ஆத்திச்சூடி பாடிய ஔவையாக நமக்கு தெரிபவர்,
கோல் எடுத்து அடிக்கும் ஔவையாக என் பையனுக்கு தெரிந்து இருக்கிறார்!

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

குஅந்தையின் சிந்தனை ரசிக்கவைத்தது..

LinkWithin

Blog Widget by LinkWithin