Tuesday, May 5, 2009

அயன் -திரை விமர்சனம்

நடிப்பு :
சூர்யா,
தமன்னா,
பிரபு,
கன்,
கருணாஸ்,
ஆகாஷ்தீப் சேகல்,
ரேணுகா,
மற்றும் பலர்

இயக்கம்: K.V.ஆனந்த்
தயாரிப்பு: AVM
படத்தொகுப்பு: ஆண்டனி
ஒளிப்பதிவாளர்: M.S.பிரபு


இரண்டு கடத்தல் கும்பலுக்கு ஏற்படும் தொழில் போட்டி தான் படம். இதில் ஒரு கும்பல் நல்ல கடத்தல் கும்பல் அதாவது தங்கம், மின்னணு பொருட்கள், வைரம் கடத்துகிற கும்பல், இன்னொரு கும்பல் கெட்ட கடத்தல் கும்பல் அதாவது போதை பொருள் கடத்துறாங்க...அடிச்சு புடிச்சு யாரு ஜெயிக்கிறாங்க..அப்படிங்கறது தான் கதை சுருக்கம்.

இவ்வளவு, சாதாரணமான கதையை வைத்துக்கொண்டு, இவ்வள்வு stylishஆ,அழகாக, ரசிக்கும்படியாக, விறு விறுப்பாக படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர் K.V.ஆனந்த். ஆம், இவர் அதே Cinematographer தான்.
சூர்யா(தேவா) , படத்தில் பிண்ணி, பெடல் எடுத்து இருக்கிறார். மிடுக்கான தோற்றம், சுறுசுறுப்பான நடிப்பு,சிறந்த சண்டைக் காட்சிகள் என கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

பிரபு (தாஸ் அண்ணன்) இவர் தான் படத்துல நல்ல கடத்தல் கும்பலோட தலைவர். பொருத்தமான வேஷம். கம்பீரமான தோற்றம்.கணீர் என்று குரல். இப்படி, பிரபு வருகிற காட்சி எல்லாம், மற்ற அனைத்து நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார்.

ஜகன்(சிட்டி) ,கருணாஸ்(டில்லி) சூர்யாவின் நண்பர். ஜகனின் தங்கையாக தமன்னா. அழகு பதுமையாக வந்து போகிறார். பாடல் காட்சிகளில் குஷிப்படுத்துகிறார். வேகமான திரைக்கதையால் என்னவோ, தமன்னாவிற்கு, பெரிய வேடம் இல்லை.

ஜகனுக்கு இந்த படத்தில் நல்ல ரோல். நகைச்சுவையையும், குணசித்திரத்தையும் கலந்த மாதிரியான வேடம். திறம்பட செய்து இருக்கிறார்.
வில்லன் ஆகாஷ்தீப் சேகல் (அகிலேஷ்) தான் கொஞ்சம் Weak. பிரபுவோட கம்பீரமான நடிப்புக்கு முன்னாடி, அவர் பேசும் காட்சிகள் சரியா எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் அருமை.

குறிப்பாக,
பல பலக்குற பகலா...நீ...
விழி மூடி யோசித்தால், அங்கேயும் வந்தாய், முன்னே முன்னே..
நெஞ்சே..நெஞ்சே..நீ எங்கே..நானும் அங்கே...


தம் அடிக்க போக விடாம்ல் தடுக்கும் அளவிற்கு ஹாரிஸ் ஜெயராஜின் மெட்டுக்கள், நம்மை கட்டிப் போடுவது உண்மை.

படம் ரொம்ப stylishஆ வந்து இருப்பதற்கு முக்கிய காரணம் படத்தின் ஒளிப்பதிவாளர் M.S.பிரபு. (May be ஆனந்த் அவர்களின் மேற்பார்வையில் இருக்கலாம்)

காங்கோ, டான்சானியா,போட்ஸ்வானா என பல புது புது இடங்களில் படம் பிடித்திருப்பது அருமை.

குறிப்பாக காங்கோவில் நடக்கும் சண்டைக் காட்சி, படத்திற்கு பெரிய பலம், சூப்பர் அப்பு!

படத்தில் பெரிய குறை என்று ஒன்றுமில்லை. முதல் அரை மணி நேரம் இருந்த விறுவிறுப்பு போக போக குறைவது போல ஒரு Feeling. கடத்தலை ஊக்குவிப்பது போல காட்சி அமைப்புகள் இருக்கு.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். சமீபத்தில் வந்த திரைப்படங்களில், அயன் நிச்சயமாக ஒரு நல்ல பொழுது போக்கு படமாக மக்கள் மனதில் நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

3 comments:

சோழன் said...

Appadiye comercial a move pannureenga pola! Any how "AYAN" padam nalla irukku nu solla SUN TV kitta evvolo vaangineenga Mr.?

chennailocal said...

Enna Kodumai Saamy.

Kathai enge nu therialai. Sun TV first le vanthathukku karanam, His production.

Harris Jayraj music is worst in the background. He should learn from others.

And also One or two songs Saranam music (starting music) is fine , abut Pallavi music (after two mins) is not good. Harris Jayaraj has to stop this and start doing good music.

Ganesh said...

As usual masala story with SUN TV.

Two Songs music is ok with Harris Jeyaraj.

LinkWithin

Blog Widget by LinkWithin