ஆழ்ந்த உறக்கம். இரவு சுமார் 1:30 மணி இருக்கும், கைப்பேசி ஒலித்தது. நெருங்கிய நண்பர் ஒருவர், Office Partyஇல் , கீழே விழுந்து அடி பட்டுவிட்டது, மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம் என்ற தகவல். அவசர அவசரமாக கிளம்பினேன். நகரின், மையப் பகுதியான GN Chetty Roadஇல் , ஒரு கிராமத்து இயக்குனர் பெயரில் அமைந்துள்ளது அந்த மருத்துவமனை. எனக்கு அந்த மருத்துவமனைக்கு செல்வது அதுவே முதன் முறை. மருத்துவமனையின் தோற்றம் போல் அல்லாமல் ஒரு மூன்று நட்சத்திர ஓட்டல் போல இருந்தது அந்த இடம்.
நண்பரின் கை விரலில் வெட்டுப் பட்டு இருந்தது, கால்களில் கொஞ்சம் காயம். ரத்தம் வழிவதை தடுக்க dressing மட்டும் செய்திருந்தார்கள். Party என்பதால், நண்பர் கொஞ்சம் நிலை குலைந்து காணப்பட்டார். மற்றபடி Normal தான். அந்த நேரத்திலும், நண்பர், என்னிடத்தில், "கபிலா, Watch and Purse அங்க கொடுத்து இருக்கேன்...பார்த்துக்கோ"ந்னு சொன்னார். வாங்கிக் கொண்டேன்.
சரி, டாக்டர், என்ன சொன்னார்னு, வெளியில் இருந்த நண்பர்களிடம் விசாரித்தேன். அவர்கள் சொன்ன பதில், "He is Out of Danger". என்னடா இந்த ஒரு சின்ன காயத்துக்கு, ரமணா படத்துல வர்ர டாக்டர் மாதிரி இவ்வளவு Build Upஆனு நினைச்சேன். மருந்து, syringe,Gloves, tissues,அது இதுன்னு எல்லாம் இரண்டு இரண்டா வாங்க சொன்னாங்க. மருத்தவமனையில் இருந்த மருந்து கடையில் வாங்கிட்டு வந்து கொடுத்தோம்.வாங்கிட்டு வந்ததில், 1/4 தான் use பண்ணாங்க, மற்றவையை அப்படியே வச்சிட்டாங்க. Just First Aid மட்டும் செஞ்சாங்க. சரியான நிலைமையில், இல்லாததால், காலையில் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்று சொன்னார்கள்.
பொழுது விடிந்தது. டாக்டர் வந்து பார்த்துவிட்டுச் சென்றார். என்ன சிகிச்சை என்று கேட்டோம். போட்டார் பாருங்க ஒரு குண்டு, "விரல் நிரம்பு வெட்டு பட்டு இருக்கு, உடனே Surgery பண்ணனும், இல்லைனா futurela இந்த விரலின் செயல்பாடுகள் பாதிக்கப் படலாம். Surgery cost Rs. 55,000! " அப்டின்னாரு டாக்டர். அடேங்க்கப்பா...55,000 ரூபாய். இந்த சின்ன காயத்துக்காகவா? ஆஹா, வடிவேலு சொல்ற மாதிரி, "உங்களை எல்லாம் பார்த்தா, எனக்கு டாக்டர் மாதிரி தெரியல !, ஏதோ யமன் Mufti ல வந்த மாதிரியே இருக்கே !" எங்களால் நம்ப முடியவில்லை. உடனே நாங்க வேறு மருத்துவமனைக்கு போகிறோம் என்று சொன்னோம். வந்தது Bill Rs. 8,500. First Aid + One Night Stay =Rs.8500 . விட்டா போதும்னு கட்டிட்டு வந்துட்டோம். வேறு மருத்துவமனையில் கேட்ட கேள்வி, "Surgery செஞ்சி என்ன பண்ண போறாங்களாம்? " என்று சொல்லி, தையல் போட்டு அனுப்பி வைத்தனர் Rs. 250 சார்ஜ் பண்ணார். சுகம் ஆயிடுச்சி....இப்படி இருக்கு இந்த மருத்துவமனை. அதன் பிறகும் கூட, ஒரு சில நண்பர்கள் பட்ட அவதிக் கதைகள், கொள்ளைச் சம்பவங்கள் நிறைய உண்டு. உஷார்!
இது மட்டும் அல்ல, எங்கள் அலுவலகத்தை சேர்ந்த ஒருவர், ரயில் பிளாட்பாரம் ஒன்றில் விழுந்து, தலையில் அடிபட்டு, கோமா, நிலையில், பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்து இறந்து போனார். 3-5 லட்சம் செலவானது. ஒரு லட்சம் ரூபாய் மிச்சம் கட்ட வேண்டி இருந்தது. இறந்தவரின் உடலை கூட கொடுக்காமல் கொடுமைப் படுத்தியது அந்த மருத்துவமனை. இதற்கு கூட ஒரு சிபாரிசு பிடித்து, கெஞ்சி உடலை வாங்கினார்கள் பெற்றோர்கள் ! தாம்பரத்தில் உள்ளது அந்த மனிதாபிமானமுள்ள நல்ல மருத்துவமனை!
மருத்துவத்தை, சேவையாக செய்து வரும், ஆயிரம் ஆயிரம் புனிதமான மருத்துவமனைகளுக்கு நடுவில் இப்படியும் சில பிணம் தின்னிகள் இருக்கத் தான் செய்கின்றன!
Indian Medical Association (IMA) போன்ற அமைப்புகள், வெறும் பொருட்கள் அங்கீகாரம் அளிக்கும் அமைப்பாக இல்லாமல், இவை போன்ற மருத்துவமனைகளின், அக்கிரமங்களையும், அராஜகங்களையும் தட்டிக் கேட்கும் அமைப்பாக இருந்தால், மக்கள் ஏமாற்றப் படாமல் தவிர்க்க முடியும்.!
4 comments:
என்ன கொடுமை கபிலன் இது ?
உன்னுடைய லேட்டஸ்ட் படைப்பான நைட்டி குறித்த பதிவிற்கு தமிலீசில் முப்பத்தி மூணு வோட்டு !
இந்த விழிப்புணர்ச்சி பதிவிற்கு வெறும் மூணு வோட்டு தானா?
பதிவுலகம் நைட்டிக்கும் நைண்டிக்கும் மட்டுமே வோட்டு போடுறாங்க போலருக்கு ....
"யூர்கன் க்ருகியர்..... said...
என்ன கொடுமை கபிலன் இது ?
உன்னுடைய லேட்டஸ்ட் படைப்பான நைட்டி குறித்த பதிவிற்கு தமிலீசில் முப்பத்தி மூணு வோட்டு !
இந்த விழிப்புணர்ச்சி பதிவிற்கு வெறும் மூணு வோட்டு தானா?
பதிவுலகம் நைட்டிக்கும் நைண்டிக்கும் மட்டுமே வோட்டு போடுறாங்க போலருக்கு ...."
ஹா ஹா...ஒரு வேளை இதை இன்னும் கொஞ்சம் ஜனரஞ்சகமா சொல்லி இருக்கலாம்னு நினைக்கிறேன். ரொம்ப Dryஆ எழுதிட்டேனோன்னு தோனுதுங்க...
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க..
you have to list name of the hospitals.. its very use full to others...
"Anonymous said...
you have to list name of the hospitals.. its very use full to others..."
OK. Will do it from next time.
Thanks for your suggestion.
Post a Comment