Saturday, November 23, 2013

இந்த சாதிக்காரன் இப்படித் தான் இருப்பான்...!

சாப்ட்வேர் ப்ராஜெக்ட் சம்பந்தமாக ஒரு தொழிலதிபரிடம் பேச நிகழ்ந்தது. அவர் ஒரு இஸ்லாமியர். பல்வேறு தொழில்களில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கொடிகட்டி பறக்கும் அரசியல் செல்வாக்கு மிகுந்த ஒரு விவிஐபி. மிகவும் எளிமையான மனிதர்.

ப்ராஜெக்ட் நிமித்தமாக பேசி முடித்த பிறகு, அவர் ஆரம்பிக்கும் நிறுவனம் பற்றி சொன்னார். பிறகு அதற்கு ஒரு தலைமை செயல் அதிகாரி (CEO) வேண்டும் என்றார்.

"கபிலன், எனக்கு ஒரு நல்ல திறமையான சேல்ஸ் அல்லது மார்கெட்டிங்க் போன்றவற்றில் 15 வருடம் அனுபவமுள்ள, கம்பெனி நிர்வாகம் அறிந்த ஒருவர் இருந்தால் சொல்லுங்கள். மாதம் 10 லட்சம் சம்பளம் தருகிறேன். மற்றும் கார், தங்குவதற்கு பங்களா போன்ற வசதிகளையும் செய்து தருகிறேன். இருந்தால் சொல்லு ப்பா "

அடடா.... 10 லட்சம் சம்பளமா...நம்மலே ஒரு பிட்டை போட்டு பாத்துறலாமான்னு யோசிச்சிட்டே...சார்...அந்த மாதிரி ஒரு 3 அல்லது 4 பேர் எனக்குத் தெரியும் நான் உங்களுக்கு இமெயில் அனுப்பச் சொல்கிறேன் சார். என்றேன்.

உடனே அவர்,
" சரி பா...ஆனா ஒரே ஒரு கண்டிஷன், அவர் ஐயர் வகுப்பைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மற்ற வகுப்புகள் வேண்டாம்" என்றார்.

ஓகே...நமக்கு பேசிக் தகுதி அவுட்...அது சரி....ஆனால் ஒரு இஸ்லாமிய தொழிலதிபர், தான் தேர்ந்தெடுக்கும் ஒருவர் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இப்படி சொல்கிறாரே என விழித்தேன். ஆச்சர்யத்தில் விழித்த என்னைப் பார்த்த அவர்,

"கபிலா...உலகத்துலயே ரொம்ப உஷாரான திறமையான அறிவாளியான இனம் எது தெரியுமா?" என்றார்.

"தெரியலிங்க" என்றேன்.

"யூதர்கள். நம் ஊரில் அது போலத் தான் ஐயர் வகுப்பினர். நாம் போடும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதே சமயம் துணிச்சலுடன் சில முடிவுகள் எடுத்து அதன் மூலம் பொருள் ஈட்ட வேண்டும். அந்த விஷயத்தில் ஐயர் தான் டாப்" என்றார்.

சரிங்க...சொல்றேன்...என்று கிளம்பினேன்.

ஐயர் வகுப்பினர் திறமையானவர்கள் என்பதை மறுக்கவில்லை.

ஆனால், சாதியை வைத்து அவன் இப்படித் தான் இருப்பான், இவன் இப்படித் தான் இருப்பான் என்ற நம்பிக்கை உயர் மட்டத்திலும் ஆழமாக இருப்பதை உணர்ந்து கொண்டேன்.

என்ன ஒரு ஆறுதல் என்றால், அந்த இஸ்லாமிய தொழிலதிபருக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும். அந்த தலைமுறையில் இருப்பவர்கள் அப்படித் தான் நினைப்பார்கள் என்று நினைத்து மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

இப்போதைய தலைமுறை சாதியை வைத்து குணத்தையும், திறமையையும் எடை போடாது என்று நம்பிக்கை கொள்வோம்.

14 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

//அந்த இஸ்லாமிய தொழில் அதிபருக்கு 70 வயதுதான் இருக்கும்.//

உண்மையாகவே அது ஆறுதலான விஷயம்தான். இவரை போன்ற பழம் பஞ்சாங்கம் மனிதர்களால்தான் சாதி இன்னும் உயிருடன் இருக்கிறது. சாதியை வைத்து ஒருவனை எடைபோடுவதை போன்ற மூடத் தனம் எதுவுமில்லை.

இந்த மடமை இந்த முதிய தலைமுறையோடு போகட்டும்.

கபிலன் said...

பழைய தலைமுறையோடு செல்லும் சாதியப் பார்வையை, இப்போது அரசியல் கட்சிகள் எடுத்து விளையாட ஆரம்பித்திருக்கின்றன என்பது ஒரு கவலை தரும் செய்தி.

தருமி said...

//இந்த மடமை இந்த முதிய தலைமுறையோடு போகட்டும்.//

இந்த மடமை இளம் வயதினரிடம் அதிகம் என்றல்லவா முதியவன் நான் நினைக்கிறேன்!

ராஜி said...

படிச்சு பட்டம் வாங்கி மேல் பதிவியில் இருக்கும் இளம் தலைமுறையினரிடம் கூட இந்த மடமை இருக்குங்க சகோ!

writer pudhin said...

இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும். உங்கள் தொழிலதிப நண்பர் ஒன்றிலோ முட்டாளாக இருக்க வேண்டும்.
அல்லது சிலருக்கு வயது ஆக ஆக பைத்தியம் பிடிக்கும். தவறான முடிவு எடுப்பார்கள். பொதுவாக சராசரியாக இருக்கும் மனிதர்கள் பலருக்கு 60 வயது தாண்டி விட்டாலே, மதவெறியும், ஜாதிவெறியும், பணவெறியும் வீறுகொண்டு எழும்பும்.
அத்தகைய மனிதனாக இந்த ஆசாமி இருக்க வேண்டும்.
இப்படிப்பட்டவர்களிடம் நட்பு கொள்வதே ஆபத்து. உங்களையும் அபத்தக் களஞ்சியமாக மாற்றி விடுவார்கள்.

கபிலன் said...

//தருமி said...


நீங்க எந்த ஆளுங்க என்று இளம் வயதினர் கேட்பதாக எனக்குத் தெரியவில்லை சார்.

அதுமட்டுமல்ல, நீங்கள் இளம் வயது இல்லாவிட்டாலும், முதியவர் இல்லை சார்.

:) இதற்காக எனக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கணும் நீங்க :)

கபிலன் said...

"ராஜி said...
படிச்சு பட்டம் வாங்கி மேல் பதிவியில் இருக்கும் இளம் தலைமுறையினரிடம் கூட இந்த மடமை இருக்குங்க சகோ! "

காலச் சக்கரத்தின் சுழற்சியால் அவை இப்போது அதிகம் காணப்படுவதில்லை. நம் தாத்தா பாட்டி எப்படி சாதி வேற்றுமை பார்த்தார்கள், இப்போது நாம் அதனை எப்படி பார்க்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால், நாம் அவைகளை தாண்டி வந்துகொண்டிருக்கிறோம் என்பது தெளிவு.

அதுக்காக இளம் தலைமுறையினரிடம் சாதி சுத்தமாக இல்லவே இல்லை என்றும் சொல்லி விட முடியாது ! விதி விலக்குகள் விதியாகாது !

கபிலன் said...

"writer pudhin said...
இப்படிப்பட்டவர்களிடம் நட்பு கொள்வதே ஆபத்து. உங்களையும் அபத்தக் களஞ்சியமாக மாற்றி விடுவார்கள்."

50 நல்ல விஷயம் ஒருவரிடம் இருக்கிறது என்பதற்காக பழகுவதா....1 கெட்ட விஷயம் இருக்கிறது என்று நினைத்து விலகுவதா ? கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார்...

மேலும், முதியவர்களிடம் பேச்சு கொடுத்து விஷயத்தை வாங்குவது என்பது வரலாறு குறித்து 50 நூல்கள் படித்ததற்கு சமம் சார் :)

ஜோதிஜி said...

பெரும்பாலான இடங்களில் நெருங்கிப் பார்த்தால் உள்ளே உள்ள ஜாதி அபிமானம் மெல்ல வெளியே வரத்துவங்கும். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை.

Anonymous said...

உண்மையில் அவர் கூறியது சரி .. பார்பான் மட்டுமே நியாய தர்மங்களை பார்க்காது
எவ்வளவு அநீதியாக இருந்தாலும் அதையே செய்து முடிப்பன்.
இஸ்லாமிய நண்பர் அனுபவம் உள்ளவர். அவர்களை வைத்து காரியம் சாதிக்க முயல்கிறார்.
ஆனால் பிறகு அவருக்கே வரும் ஆப்பு என்பதை உணர வேண்டும்.
(ராகுல் சங்கிருத்தியாயன் படித்தால் தெரியும்)

Anonymous said...

The opinion is widely held, not only in jobs but even in renting houses. A lot of Muslims hold the same view as that of the man who sought your help.

The Muslim may employ fellow Muslims only in lower rungs but never entrust them with money or higher responsibility. This makes business sense to employ some one who you trust, even if the person is from a source you may not like - here orthodox Hinduism.

My auditor Muslim friends told me that they find themselves alone in a sea of brahmin auditors. Even Muslim business don't seek them.

Not only Muslims. Others too. For e.g Nadaar business men. They definitely employ Nadars only at lower level but take care huge money is entrusted with Brahmins.

Business is business. If you understand this, you can understand the Muslim whom you met.

In my office, there are only two Brahmins. Others are non-brahmin Tamils. The only two persons in the office with integrity are the two brahmins. The integrity of others are clearly suspect.

In my bachelor days, I worked in an office where I found only the brahmin workers were righteous and others rascals.

-- Thiruvaazh Maarban

Anonymous said...

//In my bachelor days, I worked in an office where I found only the brahmin workers were righteous and others rascals.
//

He might not have seen back-biting , incompetent, அடுத்துக் கெடுக்கும், சுயநலமிக்க, புறம் கூறும் Brahmans.

//In my office, there are only two Brahmins. Others are non-brahmin Tamils. The only two persons in the office with integrity are the two brahmins. The integrity of others are clearly suspect.//

Well, make their count swell to 10 and see the effect.

கபிலன் said...

"Anonymous said...
உண்மையில் அவர் கூறியது சரி .. பார்பான் மட்டுமே நியாய தர்மங்களை பார்க்காது
எவ்வளவு அநீதியாக இருந்தாலும் அதையே செய்து முடிப்பன்."

இது தவறான கண்ணோட்டம். மஞ்சள் கண்ணாடியை மாட்டிக்கொண்டு தெரிவதெல்லாம் மஞ்சள் என்று புலம்ப கூடாது.

கபிலன் said...

Anonymous said...
My auditor Muslim friends told me that they find themselves alone in a sea of brahmin auditors. Even Muslim business don't seek them.

தலித் வழக்கறிஞர்களுக்கும் இதே நிலை தான் !

Business is business. If you understand this, you can understand the Muslim whom you met.
உடன்படுகிறேன் !

LinkWithin

Blog Widget by LinkWithin