சமீபத்தில் படித்த ஒரு சின்ன கதையோடு தொடங்குகிறேன்.
கடவுள் சொர்கத்திலிருந்து அழகு, அசிங்கம் இரண்டையும் ஒரு சேர பூமிக்கு அனுப்பினார். அழகும், அசிங்கமும் தொலைதூரப் பயணத்தால் அழுக்குண்டு, கலைப்புற்று பூமியை வந்தடைந்தன.
அழகு தன் ஆடைகளைக் கழற்றி கரையில் வைத்துவிட்டு, குளிப்பதற்காக குளத்தில் இறங்கியது. அழகு குளித்துக்கொண்டிருந்தபோது, கரையில் இருந்த அசிங்கம், அழகின் உடைகளைப் உடுத்திக் கொண்டு போய்விட்டது. குளித்துவிட்டு கரைக்கு வந்த அழகு, தன் ஆடைகள் காணாமல் போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது. அதற்கு மாறாக அசிங்கத்தின் உடைகள் அங்கு இருந்தன. நிர்வாணமாக இருந்த அழகு, வேறு வழியின்றி அசிங்கத்தின் ஆடைகளை உடுத்திக்கொண்டது. தன்னுடைய உடையை அசிங்கம் அணிந்து சென்றதை தெரிந்து கொண்ட அழகு, அசிங்கத்தைத் தேடி ஓடியது.
அழகு அசிங்கத்தை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது !
உலகம் இப்படித் தான் இருக்கு என்பது போல முடியுது கதை !
அழகாகத் தெரியும் அனைத்தும் அழகும் அல்ல
அசிங்கமாகத் தெரியும் அனைத்தும் அசிங்கமும் அல்ல.பெரும்பாலும் வெளித்தோற்றத்தின் சிறப்பைச் சொல்லும் ஒன்றாகவே அழகு பயன்படுத்தப்படுகிறது. நம்முடைய இயல்பான உணர்ச்சிகளான சிரிப்பு, அழுகை போன்றவற்றை வெளிப்படுத்துவதில் கூட மற்றவர் கண்களுக்கு அழகாகத் தெரிகிறோமா என்று பார்க்கும் அளவிற்கு அழகு என்ற ஒன்று வெளித்தோற்றத்தின் கைகூலியாகவே சமுதாயம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
எத்தனையோ மீட்டிங்க்ஸ்ல சுத்தமா சிரிப்பே வராத ஒரு மொக்கை ஜோக்கை Client சொல்லுவார், இருந்தாலும் நாம விழுந்து விழுந்து சிரிப்பது போல பாவணை செய்வோம். ரொம்ப மட்டமான ஒரு ஐடியாவை நம் மேலாளர் சொல்லும் போது, சார் அருமையான ஐடியா சார்..நிச்சயம் இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகும்னு சொல்லுவோம். இந்த மாதிரி ஒவ்வொரு விஷயத்திலும், நம்முடைய போலியான உணர்வுகளை வெளிப்படுத்தி நம்மை அழகாக காட்டிக்கொள்கிறோம்.
அழகு மாதிரியே தான் நாகரிகமும். இரண்டும் பின்னிப் பிணைந்தவை. ஒரு இடத்தில் அல்லது ஒரு குழுவில் அழகு என்று சொல்லப்படும் ஒன்று மற்றொரு குழுவில் அழகில்லாமல் தெரியும். ஒவ்வொரு குழுவிற்கும் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக போலியாக நடிப்பதின் பெயர் தான் நாகரிகமோ என்ற சொல்லும் அளவிற்கு இருக்கிறது நாகரிகம். நம்ம ஊர்ல வெறும் கைகளால் சாப்பிடுகிறோம், சீனாவில்/கொரியாவில் எதற்கெடுத்தாலும் குச்சி கொடுத்து சாப்பிடச் சொல்வார்கள். என்னை மாதிரி புதுசா பயன்படுத்துற பலருக்கு குச்சியில் எடுத்து சாப்பிட முடியாமல் போகும். அப்பொழுது கூட, ஒண்ணுமே சாப்பிடாம வந்தாலும் வருவோமே தவிர...கையில் மட்டும் சாப்பிட மாட்டோம்...நாகரிகம் : ) இது தான் அழகு, இது தான் நாகரிகம் என்று சொல்ல வரலைங்க..ஆனால் நமக்கு இப்படித் தான் விளங்கவைக்கிறாங்கன்னு தோணுது.
சமீபத்தில், என் தாய் தந்தைக்கு அறுபதாம் கல்யாணம் செய்து வைத்தோம். அதற்காக அழைப்பிதழ்கள் கொடுப்பதற்காக உற்றார் உறவினர் வீடுகளுக்கு சென்றிருந்தோம். நிறைய கிராமங்களுக்கு சென்றோம். பெரும்பாலும் நான் இதற்கு முன்பு நான் செல்லாத இடங்கள். ஒருத்தவங்க வீட்டுக்கு போனோம். கூரை வீடு 8க்கு 8 அடி இருக்கும். சானம் மொழுகி, சுத்தமாக இருந்த மண் தரை. வறுமையின் அடையாளங்கள் அனைத்தும் நிறைந்த வீடு. இரண்டு சிறுவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். குரல் கொடுத்தோம். ஒரு அம்மா ஓடி வந்தாங்க. "அடடே...வாங்க....வாங்க....." என்று சந்தோஷச் சிரிப்புடன் வரவேற்றார். அவர் முகத்தில் அடுப்புக் கறி அடையாளங்கள். பற்கள் சற்று வித்தியாசமாக(மேல் தூக்கி) இருந்தது. முதற்கணத்தில் இவை அனைத்தையும் மூளை படம் பிடித்தது. உடனே அவர், அந்த சிறுவனை எழுப்பி, பக்கத்து வீட்ல போய் ஸ்டூல் கொண்டு வா..மாமா க்கு...என்று சொல்லியபடி...என்ன சாப்பிடுறீங்க...என்று கேட்டார். அவர் முகமெல்லாம் அப்படி ஒரு சிரிப்பு, சந்தோஷம். நான் பல இடங்களில் பார்த்த சிரிப்பிற்கும் சந்தோஷத்திற்கும், முற்றிலும் மாறாக இருந்தது. போலித்தனமே இல்லை. நம்ம மனசுக்கு அது அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது. அட இது தான் அழகோ... நானெல்லாம் அசிங்கம் என்ற எண்ண வைத்தது.
எந்த ஒரு விஷயத்தையும் முதலில் உணர்ந்து கொள்வது நம் தலை தான். அதாவது, நம்முடைய கண்கள், காது, மூக்கு போன்ற உறுப்புக்கள் தான் வெளியில் என்ன நடக்கிறது என்பதை சொல்பவை. இவைகள் வெறும் மெசெஞ்சர்கள் தான். நடப்பவைகளை இந்த உறுப்புக்கள் முதலில் மூளைக்கு கொண்டு செல்கின்றன. ஏன்னா மூளைக்கும், கண்-மூக்கு-காது போன்ற உறுப்புக்களும் டிஸ்டன்ஸ் கம்மி. ஆனால்,மனசு(அ) இதயம்னு நாம சொல்லிக்கொள்கிற மேட்டர் தலையிலிருந்து கொஞ்சம் டிஸ்டன்ஸ். இதனால தான் என்னவோ....ஒருவரைப் பார்க்கும் பொழுது, ஒரு செயலை உணரும் பொழுது தலையின் உள்ளயே இருக்கும் மூளைக்கு முதலில் செல்வதால், முடிவை மூளையே எடுத்துக் கொள்கிறது. பெரும்பாலும், மனதிற்கு செல்ல விடாமல் செய்கிறது.
மூளை,போலியை பொலிவுபடுத்துகிறது நிஜத்தை நிராகரிக்கிறது.
அகம் (அ) மனசு உண்மையான அழகை வெளிப்படுத்துகிறது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் : )
கடைசியா என்ன தான் சொல்ல வர்ற என்று நீங்கள் கேட்பது புரியுது....தெரியல...அழகைப் பற்றி கொஞ்சம் யோசிச்ச போது எனக்கு தோன்றியவை இவை. சரியா தவறான்னு நீங்க தான் சொல்லணும் !
40 comments:
ரொம்பச்சரி.
நாகரிக உலகில் நடிப்பதே தொழிலாய் போச்சே:(
நாம் நாமாய் இருப்பது எப்போ?????
அருமையான இடுகை.
இனிய பாராட்டுகள்.
சரிதான்,
நமது ஐம்புலன்களின் மூலமும், பகுத்தறிவின் மூலமும் நமது மனதிற்கினியதாக உணரும் விசயங்களை பிரதிபலிப்பவை எல்லாம் நமக்கு அழகாகவே தோன்றும்,
நமக்கு மோசமான அனுபவங்களை உணர்த்தியுள்ளவற்றை ஏதோ ஒரு வகையில் மீண்டும் உணர்த்தும் எல்லாம் அசிங்கமாக தோன்றும்.
இவை கலந்து கட்டித்தான் நமக்கு வரும்.
உதாரணத்திற்கு அறுபதாம் கல்யாணத்திற்கு அழைப்பு விடுக்க நீங்கள் சென்ற வறுமையான ஒருவரின் வீடு, அங்கு நீங்கள் சந்தித்த அவலட்சனமான(பொது வரையறையில்) ஒரு பெண்மணி, ஆனால் அவரது போலித்தனமில்லா முக மலர்ச்சி உங்களுக்கு அழகை உணர்த்துகிறது.
கபிலா... நீ எழுதுனதிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்
உன் நண்பன்
" துளசி கோபால் said...
நாகரிக உலகில் நடிப்பதே தொழிலாய் போச்சே:("
நிதர்சனமான நிஜம்!
நன்றிங்க துளசி கோபால் : )
"Anonymous said...
போலித்தனமில்லா முக மலர்ச்சி உங்களுக்கு அழகை உணர்த்துகிறது."
அருமையான புரிதல் அனானி ! பெயரிட்டு சென்றிருக்கலாமே !
"யூர்கன் க்ருகியர் said...
கபிலா... நீ எழுதுனதிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்
உன் நண்பன் "
ஹேய்...மக்கி....நீ தானா யூர்கன் க்ருகியர்...போட்டோ பார்த்த பிறகு தான் தெரியுது.....
நன்றி நண்பா !
நல்ல பதிவு
நன்றி
"Sabarinathan Arthanari said...
நல்ல பதிவு
நன்றி"
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க சபரி : ) !
நன்றாக இருந்தது கபிலன்
'''அழகாகத் தெரியும் அனைத்தும் அழகும் அல்ல
அசிங்கமாகத் தெரியும் அனைத்தும் அசிங்கமும் அல்ல''''
நல்ல பதிவு....
நாகரிக உலகில் நடிப்பதே தொழிலாய் போச்சே....முற்றிலும் உண்மை....
"LK said...
நன்றாக இருந்தது கபிலன்"
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க கார்த்திக் : ) !
"malar said...
'''அழகாகத் தெரியும் அனைத்தும் அழகும் அல்ல
அசிங்கமாகத் தெரியும் அனைத்தும் அசிங்கமும் அல்ல''''
நல்ல பதிவு....
நாகரிக உலகில் நடிப்பதே தொழிலாய் போச்சே....முற்றிலும் உண்மை.... "
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க மலர் : ) !
எப்படி கபிலன் உங்களால இப்படி திடீர் திடீர்னு யோசிக்க முடியுது? உன்மயாவே நல்லா இருக்குது! நல்ல பதிவு! நன்றி!
எப்படி கபிலன் உங்களால இப்படி திடீர் திடீர்னு யோசிக்க முடியுது? உன்மயாவே நல்லா இருக்குது! நல்ல பதிவு! நன்றி!
"சோழன் said...
எப்படி கபிலன் உங்களால இப்படி திடீர் திடீர்னு யோசிக்க முடியுது? உன்மயாவே நல்லா இருக்குது! நல்ல பதிவு! நன்றி! "
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க சோழன் !
. .என்னங்க கபிலன் இப்படியெல்லாம் பதிவு போடுறிங்க....ரொம்ப நாள் கழித்து பார்கிறேன்.....serious பதிவு ......ஆனா நிஜத்தை எழுதி இருக்கீங்க.....நாம எல்லாம் முகமூடிய தானே போட்டுட்டு அலையிறோம் அந்த முகமூடி பெயர் தானே நாகரிகம் அழகு எல்லாம்....இதனால தான் இதெல்லாம் எதுவுமே இல்லாத கைக்குழந்தைகள் கடவுளா தெரியறாங்க போல.......
ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க கபிலன்.மனசுக்குள்ள ரொம்ப நாளா குடைந்து கொண்டிருத்த விஷயங்கள் ..எப்படி வெளிபடுத்துவது அல்லது வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டிரலாமா அல்லது நாம சொல்லி என்ன ஆக போகுது அல்லது நம்மை நாமே மாற்றி கொள்ளலாமா இப்படி பலவிதமான குழப்பங்கள். உங்கள் எழுத்துக்கள் மூலம் எல்லாவற்றையும் கொட்டி தீர்த்து விட்டீர்கள்...இதில் உடைதான் நம்முடைய வெளிப்புற தோற்றம் அக அழகை யாரும் ரசிப்பதில்லை. மெய்பொருள் காண்பது அறிவு என்பதை அருமையாக சொல்லிருக்கீங்க...பாராட்டுக்கள் !!!
"GK said...
....நாம எல்லாம் முகமூடிய தானே போட்டுட்டு அலையிறோம் அந்த முகமூடி பெயர் தானே நாகரிகம் அழகு எல்லாம்....இதனால தான் இதெல்லாம் எதுவுமே இல்லாத கைக்குழந்தைகள் கடவுளா தெரியறாங்க போல....... "
நிஜம் தாங்க.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க GK : ) !
//ப்ரின்ஸ் said...
...மனசுக்குள்ள ரொம்ப நாளா குடைந்து கொண்டிருத்த விஷயங்கள் ..எப்படி வெளிபடுத்துவது அல்லது வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டிரலாமா அல்லது நாம சொல்லி என்ன ஆக போகுது அல்லது நம்மை நாமே மாற்றி கொள்ளலாமா இப்படி பலவிதமான குழப்பங்கள். உங்கள் எழுத்துக்கள் மூலம் எல்லாவற்றையும் கொட்டி தீர்த்து விட்டீர்கள்...//
கரெக்டா சொல்லி இருக்கீங்க....பலவிதமான குழப்பங்கள் தான்..!
//இதில் உடைதான் நம்முடைய வெளிப்புற தோற்றம் அக அழகை யாரும் ரசிப்பதில்லை. மெய்பொருள் காண்பது அறிவு என்பதை அருமையாக சொல்லிருக்கீங்க...பாராட்டுக்கள் !!!"//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க ப்ரின்ஸ் : ) !
அழகான பதிவு
""உழவன்" "Uzhavan" said...
அழகான பதிவு"
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க உழவன் : ) !
மீ தி 34 !
Follower count- ஐ சொன்னேன் ! :)
//ஹேய்...மக்கி....//
மறந்ந்ந்ந்ந்...திருப்பியோன்னு நெனச்சேன்.. மறக்கல... திருந்தறது கொஞ்சம் கஷ்டம்தான் ! :)
சே .... எப்புடிங்க இப்புடி எல்லாம் எழுதுறீங்க... உங்க கைய்ய கொஞ்சம் காட்டுங்க...
சரிதாங்க
"Dinesh said...
சே .... எப்புடிங்க இப்புடி எல்லாம் எழுதுறீங்க... உங்க கைய்ய கொஞ்சம் காட்டுங்க..."
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க தினேஷ்!
"VELU.G said...
சரிதாங்க"
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க VELU.G!
viththiyasamaana paarvai.arumaiyaana pathivu
கபிலன்
கலக்கிட்டீங்க, அசிங்கமா இருக்கிற ஜால்ரா உலகத்தை நிர்வாணமா காட்டின மாதிரி உண்ர்வு,
இங்க உண்மையான் சந்தோஷத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு எல்லாம் மேம்போக்கா சிரிக்கிற சிரிப்பு தான் அர்த்தம் சிரிக்கிறவர்க்கே தெரியாது
நல்லா ரசிச்சேன்
நன்றி ஜேகே
நல்லக இருக்குது கபிலன்
ஒரு வகையான நக்கல் தன்மையோடு
எஸ்போ கதைகள் போல .....
"mkr said...
viththiyasamaana paarvai.arumaiyaana pathivu"
நன்றிங்க MKR !
"இன்றைய கவிதை said...
கபிலன்
கலக்கிட்டீங்க, அசிங்கமா இருக்கிற ஜால்ரா உலகத்தை நிர்வாணமா காட்டின மாதிரி உண்ர்வு,
இங்க உண்மையான் சந்தோஷத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு எல்லாம் மேம்போக்கா சிரிக்கிற சிரிப்பு தான் அர்த்தம் சிரிக்கிறவர்க்கே தெரியாது
நல்லா ரசிச்சேன்
நன்றி ஜேகே "
சரியா சொன்னீங்க ஜேகே !
"அரவியன் said...
நல்லக இருக்குது கபிலன்
ஒரு வகையான நக்கல் தன்மையோடு
எஸ்போ கதைகள் போல ....."
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க அரவியன்!
அருமையான கட்டுரை சகோ."அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்று சொல்லுவார்கள்.உணர்ந்தவர்களுக்கு தான் இதனுடைய அர்த்தம் நன்கு புரியும்.எனக்கு நடந்த ஒரு சின்ன நிகழ்ச்சியை தங்களுடன் பரிமாறிக்கொள்கிறேன் எங்களுடைய கிராமத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் கிரிகெட்(tournament) விளையாட நானும் எனது நண்பர்களும் சென்றோம்.மேட்ச் முடிந்ததும் பேருந்து வசிதியிருந்தும் காசில்லாமல் நடந்தே எங்களுடைய ஊருக்கு செல்வதாக முடிவெடுத்தோம்.இரண்டு குக்கிராமங்களை கடந்ததும் எங்களுக்கு தாகம் எடுக்கவே ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டோம்.புண்ணியவதி தண்ணீரையும் கொடுத்து எங்களை எங்கிருந்து வருகின்றீர்கள் என்று விசாரித்தார்.நாங்கள் அவருடைய கேள்விக்கு பதில் கொடுத்ததும்.சட்டென்று தாமதிக்காமல் சாப்பிட்டீங்களானு கேட்டார்கள்.நாஙக்ள் இல்லையென்று பதிலளித்தோம்.கூழுடன் மோரையும் கரைத்து எங்களுக்கு கொடுத்து எங்களின் பசியை போக்கினார் அவரிடம் காசு இல்லையென்று நினைக்கிறேன்(அவர்களுடைய தோற்றம் அவர் ஏழை என்பதை காட்டிகொடுத்தது)காசு இருந்திருந்தால் அதையும் கொடுத்து பஸ்ஸில் ஏற்றி வழி அனுப்பி வைத்திருப்பார் அந்த ஏழைத் தாய் எங்களின் அழகு தேவதையாய் காட்சியளித்தார் அன்றும் இன்று நினைக்கும் பொழுதும்.அந்த புண்ணியவதியின் உள்ளம் மிகவும் உயர்ந்த உள்ளம்.
தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க அப்துல்!
வணக்கம் கபிலன்.. உங்கள் அழகு குறித்த விளக்கங்கள் அழகாக இருக்கு வாழ்த்துக்கள்...
This is India:
Upper-caste men have cut off lower-caste people's tongues (in Year 2010)
http://www.youtube.com/watch?v=e-dtjN_dvjk
Angry Mob beating the Tea Labour in Assam(India)
http://www.youtube.com/watch?v=SilFqTvtzHc
Lower caste Hindu Dalits rolling over eaten food plates of Brahmans (In Hindi/Urdu)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9HCg5TSis0M
"Mar jao Katuo" (die you muslim): Sign of brutality of communal fascism in Meerut of India
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=8J_sGemFDTE
Professionalism of Indian Police when dealing with Girls in India: Five year old kid
http://www.youtube.com/watch?v=YhXUbdQOP5o&feature=player_embedded
Indian Army Raped Two More Kashmiri Women
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=kAQDhFQxVtk
I am a Minor Sex Trade Me With Love From India - Minor Sex Trade in Mumbai India. Child Prostitution in India. Police getting Money for providing business protection. I am a Minor Sex Trade Me - From India "World's Biggest SHAM Democracy"
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=YkC1zpNohJo
Uttar Pradesh (India) police officer slaps woman
http://www.youtube.com/watch?NR=1&feature=fvwp&v=ZSshw_CGQIg
Pakistan Girl Brutally Assaulted and Beaten Up in Mumbai
http://www.youtube.com/watch?v=EQ_-cxBW994&feature=related
Devadasi: A Life Without Education
http://www.youtube.com/watch?v=xNFCfDKP-2U
Prostitution Enforced By Tradition
http://www.youtube.com/watch?v=WEbi8b6v59U&feature=relmfu
Devdasi or Temple Slaves
http://www.youtube.com/watch?v=jI6PnKgg5q0&feature=relmfu
how women are treated in pakistan
http://www.youtube.com/watch?NR=1&feature=endscreen&v=JoBgUB8e4vg
அழகு அழகின்மைக்கு
தங்கள் புதுமையான விளக்கம் அருமை
தொடர்ந்து பதிவுகள் தர வேண்டுகிறேன்
அழகு அழகின்மைக்கு
தங்கள் புதுமையான விளக்கம் அருமை
தொடர்ந்து பதிவுகள் தர வேண்டுகிறேன்
Post a Comment