ரொம்ப நாளாவே ECONOMICS பற்றி ஒரு சின்ன பதிவு போடணும்னு நினைச்சிட்டே இருந்தேன். ரொம்ப விரிவா எழுத உள்ள சரக்கு இல்லாத காரணத்தால், பொதுவாக உபயோகப்படுத்தும் ECONOMICS வார்த்தைகளை கொண்டு ஒரு பதிவு இது. அதுவும் கொஞ்சம் லோக்கலா...
பதிவுலகத்துல பல எகனாமிக்ஸ் ஜாம்பவாங்கள் எல்லாம் இருப்பாங்க. எனக்குத் தெரிஞ்ச எகனாமிக்ஸ் சொல்லி இருக்கேன். தவறான புரிதல் இருக்கலாம், ஏன் தப்பாக் கூட சொல்லி இருக்கலாம். குற்றம் குறை இருந்தால் சொல்லுங்க...தெரிஞ்சிக்குறேன்,திருத்திக்குறேன் !
INFLATION :
படிக்குற சமயத்தில் பாக்கெட் மணி 20 ரூ தான். அதுலயே...5 சிகரெட், 3 டீ, 2 வெண்ணை பிஸ்கட், போக வர ப்ஸ் டிக்கெட் என எல்லா செலவுக்கும் போதும். ஆனால், இப்போ அதே 20 ரூபாய்ல 4 சிகரெட் மட்டும் தான் வாங்க முடியும். அதாவது, போன வருஷம் ஒரு ரூபாய்ல இரண்டு கடலை மிட்டாய் வாங்க முடிஞ்சுது, அதே ஒரு ரூபாய்க்கு இந்த வருஷம் ஒரு கடலை மிட்டாய் தான் வாங்க முடியுது. அப்போ கடலை மிட்டாய் INFLATION 50% அதிகரித்தது என்று பொருள். இது தான் INFLATION. ஆனால், இதை எந்தெந்த பொருட்களை வைத்து கணக்கிடுகிறார்கள்...முக்கியமான பொருட்கள் அனைத்து இரண்டு மூன்று மடங்கு விலை உயர Inflation 10% தான் இருக்குதாமே...! அதுமட்டுமல்ல, கடந்த வருடம் INFLATION 0% க்கும் குறைவாக இருந்த போது கூட எல்லாவற்றின் விலையும் உச்சத்திலேயே இருந்துச்சே...அது எப்படி ?
அதனால, என்னைப் பொருத்த வரை, எகனாமிக்ஸ்லியே கிட்ட தட்ட ஒரு டுபாக்கூர் டேட்டா எதுன்னு பார்த்தோம்னா அது INFLATION தான்.
DIVESTMENT
கல்லூரிக் காலங்களில், கையில, கழுத்துல போட்டு இருக்க நகையை அடகு வச்சு,விற்று சரக்கு அடிப்போமே...அதே மாதிரி அரசிடம் உள்ள கம்பெனியின் பங்குகளை விற்று, தற்காலிகமாக துண்டு விழும் தொகையை சமாளிப்பது தான் DIVESTMENT. இந்த துட்டை வச்சிகிட்டு தான் ரோடு, பிரிட்ஜ் கட்டுவாங்களாம் ! நாம கொடுக்குற வரிப்பணம் என்ன ஆச்சுன்னு கேட்கக் கூடாது. உனக்கு economics தெரியாதுன்னு சொல்லிடுவாங்க பொம்மை சிங்கும், ப்ளேனிங்க் கமிஷனும் : ) !
Gross Domestic Product (GDP)
GDP- இதை வச்சி தான் நாட்டோட பொருளாதாரம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிப்பாங்களாம். ஏழை நாடா...வளரும் நாடா, வளர்ந்த நாடா என கண்டுபிடிப்பாங்களாம்.
நாட்டினுடைய Consumption, முதலீடு, ஏற்றூமதி, இறக்குமதி, அரசின் செலவுகள் இதெல்லாம் வச்சி, கூட்டி கழிச்சு இந்த GDP யை கணக்கு செய்றாங்க. GDP நல்லா இருந்தால், அந்த நாட்டு மக்கள் சூப்பரா இருப்பாங்க, கம்மியா இருந்தா கர்ம கொடூரமா இருப்பாங்கன்னு சொல்றது தான் இந்த GDP. நல்ல GDP உள்ள நம்ம நாட்டுல தான், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களே கிட்ட தட்ட 30 சதவிகிதம் மக்கள் என்றால் பார்த்துக்கோங்களேன். (அதாவது ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 25 ரூபாய்க்கும் கம்மியா வருமானம் இருக்கவங்க தான் வறுமைக் கோட்டிற்கு கீழ இருக்கவங்க.)
இது தான் India Growth Story : )
LIBERALISATION / GLOBALISATION
உங்க ஊர்ல நான் கடை போடுவேன்...எங்க ஊர்ல நீ கடை போட்டுக்கோ....இது தான் LIBERALISATION / GLOBALISATION.ஆனால், நம்ம இந்திய அரசு போடுகிற டீல்ஸ் எல்லாம் ரொம்ப வித்யாசமானது. நாமலே....தேடிப் போய் ஆப்பு மேல உட்கார்ந்துக்குற மாதிரியான டீல்கள் தான் பெரும்பாலும். நியூக்ளியர் டீல் இதற்கு உதாரணம். அதாவது, இந்தியாவிற்கு அணுஆயுத தொழில்நுட்பம், மின்சாரம் போன்றவற்றிற்கு நாங்க உதவுகிறோம். ஆனா, சின்ன கண்டிஷன். அணு ஆயுத சோதனை நடத்தக் கூடாது. எங்க ஊர் கம்பெனிங்க தான் இந்தியாவில் கடை விரிக்கும். அதில் வரும் லாபம் மொத்தம் எங்களுக்கு. ஆனால், அணுஆயுத விபத்து ஏற்பட்டால், நாங்க நஷ்ட ஈடு தரமாட்டோம். அதை இந்தியாவே கொடுக்கணும்...இப்படி ஒரு அதிபுத்திசாலி டீல். இதே மாதிரி தான் பிடி கத்திரிக்காய் கதையும்.
ஆஹா...இந்தியா ஒரு லிபரலைஸ்டு எகானமி : ) !
SUBSIDY
ஹ்ம்....இதை எப்படி சொல்றது..சரி...
உதாரணமா, அரசு, 2500 ரூபாய்க்கு ஷிவாஸ் ரீகல் விஸ்கியை வாங்கி, நம்ம சந்தோஷத்துக்காக 1500 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அதற்கு அரசு வழங்கும் மானியம்1000 ரூபாய். இது தான் SUBSIDY. பெட்ரோலியப் பொருட்களை சர்வதேச விலைக்கு வாங்கி, நம்ம ஊர் மக்கள் வாங்குற அளவுக்கு விலையைக் குறைத்து, அதன் இழப்பை அரசு மானியமாகத் தருகிறது.
இவ்ளோ கஷ்டப்பட்டு அரசு மானியம் கொடுக்குறது சரி...அப்புறம் எதுக்கு, அதே பொருட்களுக்கு மத்திய அரசு தனியா வரி, மாநில அரசு தனியா வரி விதிக்கணும்...அமெரிக்கா போன்ற உலக நாடுகளை விட இந்தியாவில் தான் பெட்ரோலியப் பொருட்கள் விலை அதிகமா இருக்குன்னு நீங்க கேள்வி கேட்டால்.....அதை அப்படியே நம்ம பெட்ரோலியத் துறை அமைச்சருக்கும், நிதி அமைச்சருக்கும் தான் forward பண்ணனும் : )
RATE HIKE:
கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி எகனாமிக் டைம்ஸ் பேப்பர் படிக்குறதுக்கே பயமா இருக்கும். பல வார்த்தைகள் கேள்விப்படாதவைகளாக,தெரியாதவைகளாக இருக்கும். அதுல ஒண்ணு இந்த வட்டி விகித உயர்வு. ஏன் உயர்த்துறாங்க...ஏன் குறைக்குறாங்கன்னு புரியாமலே இருந்துச்சு...
ஆனால், இப்போ சின்னக் குழந்தைங்க கூட கரெக்டா சொல்றாங்க....GDP குறையப் போகுதா.....வட்டியை குறை...நிறையபேரு கடன் வாங்குவான், பணப்புழக்கம் ஏற்படும், எகனாமி வலுவு பெரும்......Inflation ரொம்ப ஜாஸ்தியா போகுதா வட்டியை ஏற்று..எவனும் கடன் வாங்கமாட்டான், பணப்புழக்கம் குறையும்...Inflation உம் குறையும்....இது இரண்டுத்தையும் கரெக்டா பேலன்ஸ் பண்ற வேலையைத் தான் நிதி அமைச்சகம், ப்ளானிங்க் கமிஷன் மற்றும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா செய்றாங்களாம் !
ஹ்ம்ம்...அதென்னவோ போங்க.....இந்தியாவின் GDP வளரும் போது மட்டும், எங்கள் அரசின் பொருளாதாரத் திட்டத்தில் தான் இத்தனை சதவிகிதம் வளர்ச்சின்னு மார் தட்டுற சிங்கங்கள், விலை ஏற்றம் ஏன் ? என்று கேட்டால் உலகப் பொருளாதார வீழ்ச்சின்னு சொல்ல எப்படித் தான் மனசு வருதோ...தெரியல..
பொள்ளாச்சியில் விளைகிற தக்காளி விலை ஏற்றத்துக்கும், பஞ்சாப்பில் விளைகிற நெல், பருப்பு போன்ற பொருட்களின் விலை ஏற்றத்துக்கும் கூட உலகப் பொருளாதார வீழ்ச்சி தான் காரணம்னு சாமர்த்தியமா எதையாச்சம் சொல்லி, ஜனங்கள நம்பற வைக்கிற, எகனாமிக்ஸ்ட்களின் திறமை நம்ம கிட்ட இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும் !
18 comments:
ஓகே....ரைட்டு...!
//*அதாவது ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 25 ரூபாய்க்கும் கம்மியா வருமானம் இருக்கவங்க தான் வறுமைக் கோட்டிற்கு கீழ இருக்கவங்க*//
என்னங்க இது...! உண்மையாவா? அப்போ நாம 2020 ல என்னவோ ஆகறது எப்படிங்க....?
"என் நடை பாதையில்(ராம்) said...
//*அதாவது ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 25 ரூபாய்க்கும் கம்மியா வருமானம் இருக்கவங்க தான் வறுமைக் கோட்டிற்கு கீழ இருக்கவங்க*//
என்னங்க இது...! உண்மையாவா? அப்போ நாம 2020 ல என்னவோ ஆகறது எப்படிங்க....? "
நிச்சயமா 2020 இல் சூப்பர் பவர் தான். ஆனால், அந்த வறுமை கோடு மேட்டர் தீருமான்னு பாக்கணும்!
hello you can post your comment on
www.thalaivan.com also
thanks
இதே ஸ்டைலில் எனக்கு என் வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தால் நான் எங்கேயோ போயிருப்பேன்
இதே ஸ்டைலில் எனக்கு என் வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தால் நான் எங்கேயோ போயிருப்பேன்
//GDP குறையப் போகுதா.....வட்டியை குறை...நிறையபேரு கடன் வாங்குவான், பணப்புழக்கம் ஏற்படும், எகனாமி வலுவு பெரும்......Inflation ரொம்ப ஜாஸ்தியா போகுதா வட்டியை ஏற்று..எவனும் கடன் வாங்கமாட்டான், பணப்புழக்கம் குறையும்...Inflation உம் குறையும்...//
இந்த மாதிரி எனக்கு வாத்தியார் பாடம் சொல்லிக்கொடுத்திருந்தா, நான் இப்போ பி.எம். பக்கத்துல இருந்திருப்பேன்...
நல்லா புரிய வச்சிட்டீங்க, ஆனா உதாரணம்தான் ஒன்னும் விளங்கல..!
(உதாரணம்:அரசு, 2500 ரூபாய்க்கு ஷிவாஸ் ரீகல் விஸ்கியை வாங்கி, நம்ம சந்தோஷத்துக்காக 1500 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அதற்கு அரசு வழங்கும் மானியம்1000 ரூபாய். இது தான் SUBSIDY.) வீட்ல தப்பிக்கத்தான்...!
தப்பா எடுத்துக்காதீங்க பாஸ்.
இதே ஸ்டைலில் எனக்கு என் வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தால் நான் எங்கேயோ போயிருப்பேன்-princehaja//
பிரின்ஸ்ஹாஜா சார், நான் எழுத நினைத்ததும் இதேதான், கொஞ்சம் மாற்றினேன். ஒரேநேரத்தில் உங்களை மாதிரி நானும் எழுதியிருக்கிறேன். உலகத்தில் ஒரே சிந்தனை பலருக்கு வரலாம் என்பதற்கு இது உதாரனமாகிவிட்டது.
inflation --
அரசு அத்தியாவசிய ? எனக் குறிப்பிடும் பொருட்களின் எண்ணிக்கை மிக குறைவு. அதன் விகிதம் inflation கணக்கீட்டில் மிக குறைந்த மதிப்பு.
அதே சமயத்தில் ஒரு வருட இடைவெளி என்பது தான் --முக்கிய காரணி. சென்ற வருடம் 20 சதம் இருந்து இந்த வருடம் 10 சதம் இருந்தால் இரு வருடம் முன்பு
100 ரூபாய்க்கு விற்ற பொருள் இப்போது குறைந்தது 130 ருபாய்?
அதே நேரம் நமது வருமானம் மாற்றம் பெறுவது இல்லை இதே அளவில்.
"princehaja said...
இதே ஸ்டைலில் எனக்கு என் வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தால் நான் எங்கேயோ போயிருப்பேன் "
நன்றிங்க பிரின்ஷாஜா : )
"அமைதி அப்பா said...
இதே ஸ்டைலில் எனக்கு என் வாத்தியார் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தால் நான் எங்கேயோ போயிருப்பேன்-princehaja//
பிரின்ஸ்ஹாஜா சார், நான் எழுத நினைத்ததும் இதேதான், கொஞ்சம் மாற்றினேன். ஒரேநேரத்தில் உங்களை மாதிரி நானும் எழுதியிருக்கிறேன்.
"
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க அமைதி அப்பா !
உங்களுக்கும் பிரின்ஸ் ஹாஜாவுக்கும் நல்லா சிங்க் ஆகுதுன்னு நினைக்கிறேன்!
"நாளும் நலமே விளையட்டும் said...
inflation --
அரசு அத்தியாவசிய ? எனக் குறிப்பிடும் பொருட்களின் எண்ணிக்கை மிக குறைவு. அதன் விகிதம் inflation கணக்கீட்டில் மிக குறைந்த மதிப்பு.
அதே சமயத்தில் ஒரு வருட இடைவெளி என்பது தான் --முக்கிய காரணி. சென்ற வருடம் 20 சதம் இருந்து இந்த வருடம் 10 சதம் இருந்தால் இரு வருடம் முன்பு
100 ரூபாய்க்கு விற்ற பொருள் இப்போது குறைந்தது 130 ருபாய்?
அதே நேரம் நமது வருமானம் மாற்றம் பெறுவது இல்லை இதே அளவில். "
ரொம்ப நிஜம். அத்தியாவசியப் பொருட்கள் ஐந்தும், ரொம்ப rareஆ உபயோகப் படுத்துற பொருட்கள் ஐம்பதும் சேர்ந்து கணக்குப் போட்டால், உண்மை நிலவரம் எப்படி தெரியும்!
தங்கள் கருத்திற்கும் நன்றிங்க் "நாளும் நலமே விளையட்டும்!
" எம்.எம்.அப்துல்லா said...
:) "
ஏதாச்சும் தப்பு கண்டுபிடிச்சிட்டு சிரிக்கலையே...
சும்மா தானே சிரிக்கிறீங்க : )
அது சிரிப்பில்லைண்ணே.புன்னகை.
வந்தேன்,படித்தேன்,சென்றேன் - அப்படிங்குற அடையாளம். தட்ஸ் ஆல் :)
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
http://sunmarkam.blogspot.com/2010/04/blog-post_13.html#comments தளத்தில் உங்கள் வாதங்கள் அருமை.
//இந்துக்களைப் பற்றி தவறாக சித்தரிக்கும் Pseudo-Secular பதிவுகளில் என்னுடைய கமெண்ட்ஸ் இருக்கும்//
இந்த உணர்வு தான் பல இந்துக்களிடம் மிஸ்ஸிங்ன்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராம்
www.hayyram.blogspot.com
//கடந்த வருடம் INFLATION 0% க்கும் குறைவாக இருந்த போது கூட எல்லாவற்றின் விலையும் உச்சத்திலேயே இருந்துச்சே...அது எப்படி ?
என்னைப் பொருத்த வரை, எகனாமிக்ஸ்லியே கிட்ட தட்ட ஒரு டுபாக்கூர் டேட்டா எதுன்னு பார்த்தோம்னா அது INFLATION தான்.//
தமிழ்மணம் வாக்களிப்பின் போது உங்கள் இந்தப் பதிவு பார்த்தேன். மிகத் தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்க வேண்டும்.
பணவீக்கம் 0%க்கும் கு்றைவாக இருந்தும் விலைவாசி உயர்கிறதே என்பது சற்றே புரியாத புதிர் தான். அரசு எந்திரம் குத்தும் குத்து இங்கே தான் இருக்கிறது.
பணவீக்கத்தை அரசு கணக்கிடுவது தவறான முறையில். அரசு சொல்லும் பணவீக்கக் கணக்கு மொத்த வியாபார விலைக் குறியீடு சார்ந்தது. சில்லரை வியாபார விலைக் குறியீடு சார்ந்து கணக்கெடுத்தால் பொதுமக்களின் அவதி சற்றொப்ப சரியாகவே தெரியும்.
பல வளர்ந்த நாடுகளில் Consumer Price Index முறை தான் இருக்கிறது. நம்மூர் பொருளாதார மேதைச் சிங்கர்கள் வீணாவதைக்கூட வயிறு பசித்தவனுக்குத் தரமாட்டார்கள், கடையனுக்குப் பயன்படும் வகையில் கணக்கு எங்கே போடுவார்கள்?
"பல வளர்ந்த நாடுகளில் Consumer Price Index முறை தான் இருக்கிறது. நம்மூர் பொருளாதார மேதைச் சிங்கர்கள் வீணாவதைக்கூட வயிறு பசித்தவனுக்குத் தரமாட்டார்கள், கடையனுக்குப் பயன்படும் வகையில் கணக்கு எங்கே போடுவார்கள்?"
சரியான வாதம் !
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க அருண் அம்பி !
Post a Comment