"என்னங்க....நம்ம தீபுவுக்கு 2 1/2 வயசு ஆகுது....Pre-KG சேர்க்கணும்...எதாச்சும் ஸ்கூல் பார்த்தீங்களா ? இல்லையா ? நம்ம வீட்ல இருந்து ஒரு கிமீ தூரத்துக்குள்ள இருக்கணும். குழந்தையை நல்லா பார்த்துக்கணும். எத்தனை தடவை சொல்லிட்டே இருக்குறது...பொறுப்பே இல்லாம இருக்கீங்களே...மத்தவங்க எல்லோரும் அவங்க அவங்க பிள்ளைங்களுக்கு எப்படி எல்லாம் தேடுறாங்க...நீங்க மட்டும் ஏங்க இப்படி இருக்கீங்க...." என்று தங்கமணி மறுபடியும் ஒரு அலர்ட் விட்டாங்க.
சரிம்மா. இன்னைக்கே போய் ஒரு நாலு ப்ளே ஸ்கூல் பார்ப்போம். எது நல்லா இருக்குன்னு நீயே முடிவு பண்ணிக்கோ..அதுல சேர்த்துடலாம்.. என்று சொல்லி பையனை கூட்டிட்டு கிளம்பினோம்.
ஏங்க...வெங்கட்நாராயணா ரோட்டுல நான் ஒரு ப்ளே ஸ்கூல் பார்த்தேங்க....நல்லா இருக்க மாதிரி தெரியுது....அதுக்கே முதல்ல போவோம் என்று தங்கமணி ஆணை பிறப்பிக்க, நேராக அந்தப் ப்ளே ஸ்கூல்க்கு போனோம். மாடியில் ஒரு வாடகை வீடு. அது தான் ப்ளே ஸ்கூல். கொஞ்சம் நேரம் கழிச்சு ஒரு பெண்மணி வந்தாங்க. Admission Enquiryக்காக வந்திருக்கீங்களா...இருங்க மேடம் வருவாங்க என்றார்.
சரி. அவங்க வர்றதுக்குள்ள, லைட்டா ஸ்கூல் உள்ள எட்டிப் பார்த்தேன். ஏறக்குறைய 30 பசங்க இருந்தாங்க. 1 சறுக்காமரம்(Slider),1 சீ சா, வீடு முழுக்க ஸ்டிக்கர், ஒரு ஆயா, ஒரு மேடம். ஓஹோ...இது தான் ப்ளே ஸ்கூலா....அட பெரிய முதலீடே இல்லாம, இப்படி ஒரு அருமையான தொழிலா ? என்று நினைச்சிட்டே இருந்தேன். மேடம் வந்துட்டாங்க.
ஒரு சில விசாரிப்புக்களுக்குப் பிறகு, 1 1/2 வயசுக்கு Day Care, 2 வயசு ஆச்சுன்னா ப்ளே ஸ்கூல், 2 1/2 வயசுக்கு Pre-KG, உங்க பிள்ளையை எதுல சேர்க்க வந்திருக்கீங்க என்றார். 2 1/2 வயசு ஆயிடுச்சு...தீபு வை Pre-KGல சேர்க்கணும். என்றோம். என் மகனிடம், பெயர், அப்பா பெயர்,ஊர் பெயர் என அவர்கள் கேட்ட விஷயங்களுக்கு பதில் சொன்னான்.
உங்க பையன் ABCD சொல்லுவானா ? என்று கேட்டாங்க மேடம். உடனே...அபியும் நானும் படம் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு...உங்க பொண்ணுக்கு நீச்சல் தெரியுமா? என்று பிரின்சிபல் கேட்பார். இல்லைங்க மேடம்...இப்போ தான் நடக்கவே ஆரம்பிச்சிருக்கா...என்பார் பிரகாஷ்ராஜ். இல்லைங்க மேடம்...இப்போ தான் ABCD சொல்லி கொடுத்துட்டு இருக்கோம். சரி. இங்கிலீஷ் ரைம்ஸ் ஏதாச்சும் சொல்லு தீபு என்றார் என் மகனிடம். நார்மலா ஒண்ணு ரெண்டு வரி ரைம்ஸ் சொல்றவன், அவங்க கேட்டப்ப, வாயே திறக்கல. சரி தீபு, அதோ அது என்ன என்று கையை நீட்டி கேட்டார். அது என்னடான்னு நான் திரும்பி பார்த்தேன். கண்ணன் வெண்ணை சாப்பிடுற மாதிரி ஒரு படம் இருந்துச்சு. தீபு, கண்ணா ஜேஜி சொல்றா என்றேன். "டேடி, வெளியில ஆட்டோ டுர்ர்ர்ன்னு போகுது...டேடி" என்றான் வெளியில் எட்டிப் பார்த்தபடி. அந்த மேடம் குறுக்கிட்டு, அது கேலண்டர் என்றார். அடங்கொய்யால, கண்ணன் படத்தைத் தான் கேட்டாங்கன்னு நினைச்சா...அதுக்கும் கீழ ஒரு கேலண்டர் தொங்கிட்டு இருக்கு. அது, நமக்கே தெரியல.
மேஜையில் ஒரு flower vase வச்சிருந்தாங்க. தீபு, அந்த Flower என்ன கலர் சொல்லு பார்க்கலாம் என்றார் மேடம். Sun Flower என்று சொல்லிவிட்டு, என்னை திரும்பிப் பார்த்தான். டேய் ராசா...எனக்கு அது என்ன பூன்னு தெரியாதுடா...ஆளை விட்டுறுடா என்ற பாணியில் பார்த்தேன். உடனே மேடம் குறுக்கிட்டு...நோ நோ....அது Daisy என்றார். நல்ல வேலை, நம்மல கேட்கல என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். சரி தீபு, மேடம்க்கு ஒரு திருக்குறள் சொல்லுடா என்றதும், தங்கமணி சொல்லிக் கொடுத்த 3 திருக்குறளை அப்படியே சொன்னான். ஹோ...தமிழ் தான் சொல்லிக் கொடுத்திருக்கீங்களா என்றார் மேடம்.
சரிங்க ஃபீஸ் 22000 ரூ. ரிஜிஸ்ட்ரேஷன் 100 ரூ, இன்னைக்கே பண்ணிக்கோங்க. மூன்று நாட்களுக்குள் மொத்த ஃபீஸ் பே பண்ணிடனும் என்று மெயின் மேட்டருக்கு வந்தார். அடேங்கப்பா....22000 ரூபாயா ? Govt பொறியியல் கல்லூரியில், என்னுடைய 4 வருட படிப்பின் மொத்த கட்டணமே 11500 ரூபாய் தானே. Pre-KGக்கே நம்ம ட்ரவுசர் கிழியுதே, அடுத்து ஸ்கூல் காலேஜ்னா....அடேங்கப்பா...சுமாரா வருமானம் வருகிற பொட்டி தட்டுற வேலையில இருக்க நமக்கே இப்படின்னா....குறைவா வருமானம் இருக்கவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க... என்று நினைத்துக் கொண்டேன்.
தங்கமணி, ஸ்கூல் டைமிங்க்ஸ் பற்றி விசாரிச்சாங்க. இந்த வருஷம் 9 AM -12 AM, ஆனா, இப்போ syllabus அதிகப் படுத்துறாங்க....நிறைய montessori materials கொடுக்குறாங்க...அதனால 9 AM -1:30 AM வரைக்கும் ஸ்கூல் இருக்கும் என்றார். தங்கமணிக்கு ஒரே ஷாக்...ஐயோ...குழந்தையை 4 1/2 மணி நேரம் தனியா விடணுமா...என்று யோசனையில் மூழ்கினார். சரிங்க மேடம், நாளைக்கு வந்து சொல்றோம் என்று கிளம்பினோம். மேடம் குறுக்கிட்டார். எவ்வளவோ சமாளித்துப் பார்த்தாலும், ரிஜிஸ்ட்ரேஷன் இன்னைக்கே பண்ணிக்கோங்க...என்று ஒற்றைக் காலில் நின்றார். மேடம், அவ்ளோ காசு என்னால உடனே புரட்ட முடியாது என சொல்லி எஸ்கேப் ஆனோம்.
அது என்னவோ, தங்கமணிக்கு அந்த ஸ்கூல் பிடிக்கல.அதன் பிறகு, இன்னும் இரண்டு ப்ளே ஸ்கூல் போய் பார்த்தோம். அதே வாடகை வீடு, அதே சருக்காமரம், அதே மாதிரி மேடம், அதே மாதிரி கட்டணம். வீட்டில் இருப்பதற்கும், பள்ளிக்கு அனுப்புவதற்கும் பெரிதாக வேறுபாடு இருக்க மாதிரி தெரியல. ஏன்மா...பேசாம, டைரக்டா அடுத்த வருஷமே LKG சேர்த்துடலாமே... .இல்லைன்னா...2 or 3 months மட்டும் நம்ம பக்கத்து வீட்ல சின்னதா ஒரு ப்ளே ஸ்கூல் இருக்கே...அதுல சேர்த்துடலாமா? சும்மா போய் விளையாடிட்டு வரட்டும்... நம்ம குழந்தைப் பருவ காலங்களில் எல்லாம், நல்லா விளையாடுவோம். அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளிடம் திருடன் போலீஸ், கண்ணாமூச்சி என நமக்கெல்லாம் நல்லா விளையாடும் வாய்ப்புக்கள் இருந்துச்சு. ஆனா, இப்போ, குழந்தைகளை வெளியில் விளையாட விடுறோமா ? அக்கம் பக்கத்துல யாரு இருக்காங்கன்னே நமக்கு தெரியாது. குழந்தையும் நம்ம மூஞ்சியையே 24 மணி நேரமும் பார்த்துட்டு இருக்கு. டேய்...அதைப் பண்ணக் கூடாது, அந்தத் தண்ணியை குடிக்கக் கூடாது, அதைத் தொடக் கூடாது, அதுல ஜெர்ம்ஸ் இருக்கு...இதுல பேக்டீரியா இருக்கு...இதைத் தொட்டா ஜூரம் வரும். இப்படி, இதையெல்லாம் கேட்டு கேட்டு குழந்தைங்க மனசுக்குள்ள நம்மல பச்சை பச்சையா திட்டுற மாதிரியே எனக்கு ஒரு பீலிங்க் : ) ..இதற்கு ஒரு வ்டிகாலாகத் தான், பிள்ளைகளை ப்ளே ஸ்கூல் அனுப்பணும்குறது என்னுடைய கருத்து. என்னம்மா சொல்ற...என்றேன்.
நீங்க வேற, உங்களுக்கு ஒண்ணுமே தெரிய மட்டேங்குது... LKG சேர்க்கும் போது, Pre-KG அனுப்பினீங்களா இல்லையான்னு கேட்பாங்க......இதெல்லாம் LKG admissionக்கு ரொம்ப முக்கியம். உங்களுக்கு இதெல்லாம் எங்க தெரியும். தமிழ்மணத்துல,தமிழிஷ்ல இன்னைக்கு யார் அதிக ஓட்டு வாங்கி இருக்காங்க...யார் இந்த வார நட்சத்திரம்.....எந்த ப்ளாக்ல சண்டை ஓடுது....நீங்க அடிச்ச கமெண்ட்டுக்கு யார் உங்களை திட்டி இருக்காங்க....அதையேப் போய் பாருங்க.... என்றார் ஒரு கொதிப்புடன்.
தேடல் தொடரும் : ) !
13 comments:
//அடேங்கப்பா....22000 ரூபாயா ? //
அடிங்கொய்யாலா. என்னா இவ்வளோ கம்மியா சொல்றாங்க? பாத்து இதவிட நல்ல ஸ்கூலா பாத்து சேத்துவிடுங்க புள்ளைய.
//என்னுடைய 4 வருட படிப்பின் மொத்த கட்டணமே 11500 ரூபாய் தானே. //
எனக்கு மொத்தமே ரூ.11500 எங்கப்பா செலவு செஞ்சிருந்தா அதிகம் (பெரும்பாலும் கவர்மென்ட்டு ஸ்கூலுதான் நான்)
22000மா????? ஒரு வீட்டை வாடகைக்குப் பிடிச்சு ப்ளே ஸ்கூல் ஆரம்பிச்சிடலாம் போல.
"வரதராஜலு .பூ said...
//அடேங்கப்பா....22000 ரூபாயா ? //
அடிங்கொய்யாலா. என்னா இவ்வளோ கம்மியா சொல்றாங்க? பாத்து இதவிட நல்ல ஸ்கூலா பாத்து சேத்துவிடுங்க புள்ளைய."
வாங்க வரதராஜூலு !
அதை விட நல்ல ஸ்கூலு, 4 மடங்கு ஜாஸ்தியா கேட்பாங்களே...
ஏதோ ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை மாதிரி, நம்மால முடிஞ்ச பள்ளி சேர்க்க வேண்டியது தாங்க : )
"KVR said...
22000மா????? ஒரு வீட்டை வாடகைக்குப் பிடிச்சு ப்ளே ஸ்கூல் ஆரம்பிச்சிடலாம் போல. "
நிஜமாகவே அருமையான தொழில் தாங்க...
45-50 பசங்க....வருஷத்துக்கு 10 லட்சம். வாடகை, சம்பளம், புத்தகம் எல்லாம் வருஷத்துக்கு ஒரு 4 லட்சம் போச்சுன்னா கூட 6 லட்சம் லாபம் : )
நண்பா.. கட்டுரை மிக அருமை.
"Shiva said...
நண்பா.. கட்டுரை மிக அருமை."
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சிவா!
Very nice post.
With all that questions answered, whatz left for the child to learn in the Pre-KG?
Is it 2,200 or 22,000? I find paying even 2,200 as very expensive. Dont the other parents ever think what "education" they can get for the kid at that age? I totally agree that the social skills of the child will develop but not at the cost of 22K.For the same amount, they can get lots and lots of good play materials!!
Is it true that for joining in LKG, we need a Pre-KG?
பகல் கொள்ளை அடிக்கிறாங்க
"Maddy said...
Is it true that for joining in LKG, we need a Pre-KG?"
பெரிய ஸ்கூல்களில் LKG சேர்க்கும் போது, குழந்தை Pre-KG படிச்சிருக்கான்னு கேக்குறாங்க...அது உண்மை தான் !
நன்றிங்க Maddy!
"Shyam said...
பகல் கொள்ளை அடிக்கிறாங்க "
பகல் கொள்ளை தான் ஷியாம்....ஆனால், நமக்கு வேற வழியில்லையே !
Natu natappai romba arumaiyaga solli irukkeenga. Panam kaikira maram vachiruntha easiya koduthiralam ella makkalum
"Ganesan said...
Natu natappai romba arumaiyaga solli irukkeenga. Panam kaikira maram vachiruntha easiya koduthiralam ella makkalum
"
பணம் காய்க்கிற மரம் இருந்தா...அந்தக் கொள்ளைக்கார கும்பல் ஸ்கூல் நடத்திட்டு இருக்க மாட்டாங்க........மரம் வளர்த்துட்டு இருப்பாங்க : )
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க கணேசன் !
Hi Kabi Anna,
Your posts are amazing..in particular...post about the school joining is great..its down to earth real..we are paying 23800 per year for pre kg for surya. 21/2 age kids fees is something extraordinary...only Government should come in and do some strict regulations.....keep continuing your blogging..dont miss your passion..thanks
Padma Manivannan
Post a Comment