Wednesday, November 4, 2009

வந்தே மாதரம் பாடலுக்கு ஃபத்வா !

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் வங்காள தேசத்தில், துணை ஆட்சியாளராக திகழ்ந்தவர் பக்கிம் சந்திர சேட்டர்ஜி. அவர் ஒரு நாள், ராமகிருஷ்ணரை பார்க்கச் சென்றிருந்தார்.

அப்போது ராமகிருஷ்ண்ர் "உன் பெயர் என்ன?" என்று வினவினார். பக்கிம் சந்திர சேட்டர்ஜி என்றார் அவர்.

அதற்கு ராமகிறுஷ்ண்ர் "பக்கிம் என்றால் வலைந்த என்று பொருள். சந்திர என்பது சந்திரன். ஆக, வலைந்த சந்திரன் என்பது உமக்கு பொருத்தமான பெயர் தான். ஆங்கிலேயனுக்கு வேலை செய்து, பூட்ஸ் காலில் அடிப்பட்டு வலைந்து போகிறாய். உமக்கு இந்தப் பெயர் பொருத்தமான பெயர் தான்" என்று வேடிக்கையாகச் சொன்னாராம்.

ஆங்கிலேயனுக்கு வேலை செய்வது அடிமைத்தனம். இந்த அடிமைத்தனத்தை இவ்வளவு நாள் செய்துவிட்டோமே என்று எண்ணி, தன் வேலையை ராஜினாமா செய்து, சுதந்திர போராட்டத்தில் இறங்கினார் பக்கிம் சந்திர சேட்டர்ஜி.

தேசப்பற்றை வளர்க்கும் பல நூல்களை எழுதினார். அதில் "ஆனந்தமடம்" என்ற நூலும் ஒன்று. அதிலிருந்து எடுக்கப்பட்டது தான் "வந்தே மாதரம்". இந்திய மக்களை, ஆங்கிலேயனுக்கு எதிராக ஒன்று கூட்டி போராடச் செய்த பாடல் அது. எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்கள், அடித்து கொல்லப்பட்ட போது, தூக்கிலிட்ட போது மரணப்பிடியில் இருந்தும் கூட உணர்ச்சிபொங்க, வீரம் ததும்ப சொன்ன வார்த்தைகள் இது "வந்தே மாதரம்".

அப்படியாப்பட்ட ஒரு பாடலை முஸ்லிம்கள் பாடக்கூடாது என ஃபத்வா போட்டிருக்கிறது, ஜமாத் இ உலீமா ஹிந்த் என்கின்ற ஒரு அமைப்பு. என்னய்யா...என்ன பிரச்சினை உங்களுக்கு அதுல...அப்படின்னு கேட்டா. அல்லாவைத் தவிர யாரையும் முஸ்லிம்கள் வணங்கக் கூடாது. வந்தே மாதரம் பாடலில் தாய் மண்ணை வணங்குவதாக சொல்கிறதாம். என்ன கொடுமைங்க இது. அந்தப் பாடல் தமிழில் தாய் மண்ணே வணக்கம் என்று தாங்க வருது. ஒரு தாயை, தாய் மண்ணுக்கு வணக்கம் கூறுவதில் என்ன கெட்டுப் போச்சு ?

சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மௌலான அபுல் கலாம் ஆசாத் ஒரு மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞர். அவரே வந்தே மாதரம் பாடலை வழிமொழிந்திருக்கிறார்.

2006 ஆம் ஆண்டு, அனைத்திந்திய சுன்னி உலீமா பேரவை, வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பாகங்களை முஸ்லிம்கள் பாடலாம் என ஃபத்வா போட்டது. தாயின் காலில் தலை தாழ்த்துவது என்பது வழிபாடு அல்ல அது ஒரு மரியாதையாக கருத வேண்டும் என அந்தப் பேரவையின் தலைவர் மௌலானா முஃப்தி சையது ஷா பத்ருதீன் குவாத்ரி அஜீலானி கூறி இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, இந்தப் பாடலைப் பாட வேண்டும் என்று யாரும், யாரையும் வற்புறுத்தவில்லை. இப்படி இருக்க எதுக்காக இப்போ இந்த கும்பல், இதை ஆரம்பிக்குறாங்க....ஒண்ணுமே புரியல....

தேசப்பற்று மிக்க இந்தப் பாடலுக்கு மதச்சார்பான அர்த்தம் கற்பிப்பது, நம் நாட்டி ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயலாகவே கருதப்படும். இதை ஒரு காரணமாக வைத்து, அண்ணன் தம்பியா இருக்க மக்களை சண்டை போட வைக்கணும் அல்லது பல இஸ்லாமிய இயக்கங்களுக்கு மத்தியில் ஜமாத் இ உலீமா ஹிந்த் தான் உண்மையான இயக்கம் என்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தி ஆள் சேர்க்க வேண்டும் என்பது தான் இது போன்ற இயக்கங்களுடைய நோக்கமாகத் தெரிகிறது. எது எப்படியோ,

வீட்டில் இந்துவாய் இரு
வீட்டில் கிறித்துவனாய் இரு
வீட்டில் இஸ்லாமியனாய் இரு
நாட்டில் இந்தியனாய் இரு.

அப்படின்னு குன்றக்குடி அடிகளார் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது.

வந்தே மாதரம் !

13 comments:

கலையரசன் said...

வந்தே மாதரம் !

நல்லா நச்சுன்னு புரியுற மாதிரி சொன்னாலும் திருந்த மாட்டானுங்க..

கபிலன் said...

நன்றிங்க கலையரசன்!

Anonymous said...

கபிலன் கிட்ட இருந்து இந்த மாதிரி பதிவா...!!!. :)

http://onlinetamilan.blogspot.com said...

நாம தான் நம் நாடு இந்தியா என்றெல்லாம் சொல்லி வெட்டியா நேரத்த வீணடித்துக்கொண்டு இருக்கிறோம். அவன் அவன் இந்தியா, அதில் உள்ள மக்கள் என்று மொத்தத்தையும் வித்து காசாக்கிட்டன். ஆட்சி நிலைக்க எத்தன பொது மக்கள் செத்தாலும் கவலை இல்லை என்ற ரீதியில் பூக்கொண்டு இருக்கிறது, நீங்க "வந்தே மாதரம்" னு .... அது "வந்து ஏமாத்துறோம்" னு மாறி ரொம்ப நாள் ஆச்சு Mr. கபிலன். இனிமேலாவது இந்த மாதிரி வெட்டி பதிவை தவிர்க்கவும்.

சோழன் said...

நாம தான் நம் நாடு இந்தியா என்றெல்லாம் சொல்லி வெட்டியா நேரத்த வீணடித்துக்கொண்டு இருக்கிறோம். அவன் அவன் இந்தியா, அதில் உள்ள மக்கள் என்று மொத்தத்தையும் வித்து காசாக்கிட்டன். ஆட்சி நிலைக்க எத்தன பொது மக்கள் செத்தாலும் கவலை இல்லை என்ற ரீதியில் பூக்கொண்டு இருக்கிறது, நீங்க "வந்தே மாதரம்" னு .... அது "வந்து ஏமாத்துறோம்" னு மாறி ரொம்ப நாள் ஆச்சு Mr. கபிலன். இனிமேலாவது இந்த மாதிரி வெட்டி பதிவை தவிர்க்கவும்.

கபிலன் said...

"சோழன் said...
நாம தான் நம் நாடு இந்தியா என்றெல்லாம் சொல்லி வெட்டியா நேரத்த வீணடித்துக்கொண்டு இருக்கிறோம். அவன் அவன் இந்தியா, அதில் உள்ள மக்கள் என்று மொத்தத்தையும் வித்து காசாக்கிட்டன். ஆட்சி நிலைக்க எத்தன பொது மக்கள் செத்தாலும் கவலை இல்லை என்ற ரீதியில் பூக்கொண்டு இருக்கிறது, நீங்க "வந்தே மாதரம்" னு .... அது "வந்து ஏமாத்துறோம்" னு மாறி ரொம்ப நாள் ஆச்சு Mr. கபிலன். இனிமேலாவது இந்த மாதிரி வெட்டி பதிவை தவிர்க்கவும்."

நீங்க சொல்றதெல்லாம் சரி தாங்க சோழன்.

ஆனா, நம்ம எழுதின சாப்ட்வேர்ல பக் வந்துச்சுன்னா, பக்கை சரி செய்வோமா? அல்லது நம்ம சாப்ட்வேரை நாமே தூக்கி எறிவோமா ?

கபிலன் said...

"Anonymous said...
கபிலன் கிட்ட இருந்து இந்த மாதிரி பதிவா...!!!. :) "

பாசிட்டிவா சொல்லி இருக்கீங்களா...நெகடிவ்வா சொல்லி இருக்கீங்களான்னே தெரியல அனானி : )

Sabarinathan Arthanari said...

நன்றி கபிலன்

Anonymous said...

தங்கள் அமைப்பு இருக்குனு பப்ளிசிட்டி பண்ண எதுதான் சரியான வழினு என “ஜமாத் இ உலீமா ஹிந்த்”
அமைப்பு சரியா யோசிச்சு "வந்தே மாதரம்" க்கு ஃபத்வா போட்டிருக்கு...இதுல என்னா கமெடிணா(வருந்தவேண்டிய)...விஷயம் என்னான ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் முன்னாடி அந்த நாட்டோட வரலாற்றுக்கு மதசாயம் பூசியதா ”லுசு தனமா ” வேடிக்கை பார்த்தார் நம்ம மொக்க தமிழன்.
“இது மாதிரியான நிகழ்ச்சியில் கலந்துகிறது...மதநல்லிணக்கம்...ஆனா இந்து மத நிகழ்ச்சியில் கலந்துகிறது...மத சார்புடையது...”இது தான் நம்ம அரசியல் தத்துவம்.
இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்...
தமிழன் என்பதில் தனிதன்மை கொள்வோம்...

சோழன் அவர்களுக்கு நீங்கள் தந்த பதிலை நான் ஆதரிக்கிறேன்...

என்றும் உங்களுடன்,
ந.நிருபன்.

Anonymous said...

இந்த ஃபத்வா மிகவும் ஆபத்தானது.
தமிழ்த்தாய் வாழ்த்தும் அதே அடிப்படையில் பாடக்கூடாது என்று நமது தமிழ்நாட்டு முல்லாக்கள் தடை விதிக்கக்கூடும்.
கருணாநிதி அவர்களும் குல்லாப்போட்டுக்கொண்டு ரமலான் கஞ்சிகுடிக்கும் “செக்யூலரிஸ்டு”களும் என்ன சொல்லப்போகிறார்கள்?

கபிலன் said...

நன்றிங்க சபரி : )

பெரும்பாலும் பப்ளிசிட்டி ஸ்டண்ட்க்காகத் தான் இப்படி எல்லாம்.நன்றிங்க நிரூபன் :)

நன்றி அனானி :)

shan said...

இவர்களை பாகிஸ்தான் பிரிவினையின்

போதே துரத்தியிருக்க வேண்டும்

தனிநாடும் வாங்கி கொண்டு அங்கே

போய் தொலையாமல் உயிரை

வாங்குகிரானுக அரைகிறுக்கனுக

thiruchchikkaaran said...

கபிலன் மற்றும் அனைத்தும் சகோதரர்களுக்கும், இதே பொருள் பற்றிய நமது ஆய்வினை படித்து உங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கோருகிறேன்.

http://thiruchchikkaaran.wordpress.com/2009/12/06/my-experiments-with-vanthe-maatharam/

LinkWithin

Blog Widget by LinkWithin