Monday, October 12, 2009

அருள்வாக்கு ஜெக்கம்மா - ஒரு கற்பனை!


அருள்வாக்கு கேட்க, ஜெக்கம்மாவிடம் வரும் சிலருக்கு, அவர்எப்படி அருள் வாக்கு கூறுவார் என்று சின்ன கற்பனை.இதை கொஞ்சம் அருள்வாக்கு கொடுக்குறவங்க ஸ்டைல்ல படிக்கவும்...

சிஷ்யர் : ஜெக்கம்மா....நம்ம கம்பூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லக் கண்ணு வந்திருக்காரும்மா அருள் வாக்கு கேக்க...என்ன சொல்லப் போற..

ஜெக்கம்மா : டேய்....ஏகாதிபத்யம்..ஏகாதிபத்யம் னு சொல்றீங்களே...அது என்ன பத்தியம் டா........என் கிட்ட இல்லாத பத்தியமா....டா....ஜெய்ய்ய்ய் ஜெக்கமாஆஆ..........4 1/2 வருஷம் கூடவே இருந்து ஆதரவு கொடுத்து குப்பை கொட்டிட்டு, வெளியே வந்து விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம்னு ஓட்டுக் கேட்ட இல்லை....குத்தனாங்க பாருங்க ஜனங்க...ஓட்டு இல்லை...உங்களுக்கு ஆப்பு.......இனிமேலாவது நல்ல புள்ளையா இரு...போ......ஜெய்ய் ஜெக்கம்மா...

சிஷ்யர்: ஜெக்கம்மா தாயே...நம்ம வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஷஷி தரூர் வந்திருக்காரு மா...

ஜெக்கம்மா : வாய்யா...ஷஷி தரூர்....ஒரு மனுஷனுக்கு ஜாதகத்துல ஒரு கட்டத்துல தான் சனி இருப்பார்....ஆனா உனக்கு எல்லா கட்டத்துலயும் சனி சப்பலங்கால் போட்டு உட்காந்துட்டு இருக்காருடா.........இனிமேல், ட்விட்டர்ல திட்டும் போது...ச்சே...ட்விட்டும் போது, அருள்வாக்கு ஜெக்கம்மா துணைன்னு போட்டுட்டு, அப்புறம் ட்விட்டு பண்ணு....எல்லாப் பிரச்சினையும் போயிடும் டா...ஜெய்ய் ஜெக்கம்மாஆஆ....

சிஷ்யர்: அருள்வாக்குத் தாயே....அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வந்திருக்கார் மா...அருள்வாக்கு கேட்க...

ஜெக்கம்மா : வாய்யா.....ஒபாமா...உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு டா...என் பேரு ஜெக்-கம்-மா....உன் பேரு ஒ-பா-மா. ஒரு நல்ல காரியத்துக்கு குடும்பத்தோட போகும் போது, ஜெக்கம்மாவுக்கு கடா வெட்டி, பொங்கல் வைக்கணும்னு கூட தெரியாதாடா ? நீயெல்லாம் எப்படி அமெரிக்க ஜனாதிபதி ஆன? அப்படி மதிக்காமப் போனீயே, ஒலிம்பிக்ல சிகாகோ பிட்....என்னாச்சு...? நோபல் பரிசு கிடைச்சும், அது உனக்கு தகுதியான்னு உலகமே பேசுறத கவனிச்சியா...? இனிமேலாவது ஜாக்கிரதையா நடந்துக்கோ....ஹெல்த் கேர் பில் பாஸ் ஆகணும்னா...உன் கோட் பாக்கெட்ல ஒரு எலுமிச்சம் பழத்தை எப்பவும் வச்சிக்கோ.....ஜெக்கம்மா சொல்றா...ஒபாமா செய்றான்....ஜெய்ய்ய் ஜெக்கம்மாஆஆ....

சிஷ்யர்: எல்லோருக்கும் அருள்வாக்கும் சொல்லும் அருள்வாக்கு அம்மா, உங்களைப் பார்க்க பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி வந்திருக்காரும்மா...அவரே ஏதோ கேக்கணுமாம் தாயே...

ஜெக்கம்மா : ஜெய்ய்ய்ய் ஜெக்கம்மா......டேய்...ஆசிப் அலி சர்தாரி...பாகிஸ்தான்ல நீயே ஒரு டம்மி பீசு.....நீ எதுக்குடா வந்தே.....நீ போயிட்டு ராணுவத் தளபதி பர்வேஸ் கியானியை வரச் சொல்லுடா....அவன் தாண்டா எல்லாமே.......சரி இவ்ளோ தூரம் வந்துட்ட பரவாயில்ல கேளு.
ஆசிப் அலி சர்தாரி :
ஜெக்கம்மா தாயே...பாகிஸ்தான்ல தீவிரவாதம் எப்பம்மா போகும்.....

ஜெக்கம்மா : ஹ்ம்ம்ம்ம்...... உலக அமைதிக்கு வாக்கு சொல்லட்டா அல்லது உங்க நாட்டுக்கு மட்டும் நல்லது உலகுக்கே கெட்டது.... அந்த வாக்குச் சொல்லட்டா...

ஆசிப் அலி சர்தாரி: எங்க நாட்டு நல்லதுக்கு மட்டும் சொல்லு தாயி...உலகம் கெட்டாலும் பரவயில்லை...

ஜெக்கம்மா : அதான பார்த்தேன்...எங்க இருந்து புத்தி வந்துருச்சோன்னு நினைச்சேன்.. ஜெய்ய்ய் ஜெக்கம்மா.......உங்க நாட்டோட GDP யே தீவிரவாதத்தை நம்பித் தாண்டா இருக்கு....அது மட்டும் இல்லைன்னா...ஒரு நாய் கூட உங்க ஊரை சீண்டாது...தீவிரவாதி இல்லைன்னா...அமெரிக்க காரன் பைசா கொடுக்க மாட்டான்...இந்தியாவை எதிர்க்கிற தீவிரவாதி இல்லைன்னா...சீனாக் காரன் ஆயுதம் கொடுக்க மாட்டானே டா..........தீவிரவாதம் இல்லைன்னா பாகிஸ்தான் ராணுவம் என்னடா பண்ணும்...அவனுங்க வேலையே அது தானே...? தீவிரவாதம் இல்லைன்னா உங்க நாட்டு மக்களுக்கு என்ன வேலை வாய்ப்புடா கொடுக்க முடியும்...? ஹ்ம்..... கம்முனு போய் அமெரிக்கனுக்கு கால் அமுக்குற வேலையையே கண்டின்யூ பண்ணுடா...அதான் உங்க நாட்டுக்கு சரி...ஜெய்ய்ய் ஜெக்கம்மா....ஹ்ம்ம்ம்....

சிஷ்யர் : இது வரைக்கும் பார்த்த எல்லாரையும் விட ரொம்ப டேஞ்சரான ஆள் ஒருத்தர் வராரு மா....ஜெக்கம்மா...

ஜெக்கம்மா : ஹ்ம்ம்....டேய்....யாருடா அவன்.....நமக்கே டேஞ்சரான ஆளு யாருடா அவன்....

சிஷ்யர் : வலையுலகத்துல பதிவராம். ப்ளாக்ஸ் எல்லாம் எழுதுவாராம்...ஏதோ கேக்கணும்னு வந்திருக்காரு...

ஜெக்கம்மா : ஐயோ ஜெக்கம்மா.....வலைப்பதிவரா.....எதுக்கெடுத்தாலும் கேள்வி கேப்பானே டா அவன்....சும்மா நின்னுட்டு இருக்கும் போதே....ஏன்மா நிக்குற அங்க தான் நாற்காலி இருக்கே..ஏன் உட்காரல?ந்னு கேப்பான். சரின்னு உட்கார்ந்த உடனே....என்னா ஜெக்கம்மா நாற்காலி கிடைச்ச உடனே உட்கார்ந்துடுவியான்னு இன்னொருத்தன் கேப்பான்.....அவனை அப்படியே கிளம்பச் சொல்லு.....நம்மால முடியாதுடா.....ஜெய்ய்ய் ஜெக்கம்மா....

சிஷ்யர் : அருள்வாக்குத் தாயே..உங்கள பாத்துட்டுத் தான் போகணும்னு அடம்பிடிக்கிறாருங்க அந்தப் பதிவர்..

ஜெக்கம்மா : சரி வரச் சொல்லு....ஹ்ம்ம்ம்ம்ம்

பதிவர் : ஜெக்கம்மா தாயே...ஒரே ஒரு கேள்வி தான்மா உங்கிட்ட...எப்படிம்மா ஹிட்ஸ் வாங்குறது...

ஜெக்கம்மா : ஜெய்ய் ஜெக்கம்மாஆஆஆ......இது ரொம்ப சிம்பிள்டா.....நாலு பேரு வலைத்தளத்துக்கு போயி, பதிவைக் கூட படிக்காமல், திட்டிட்டு வரணும். அதற்கு பதிலாக, அந்த நாலு பேரு, நாற்பது பேரை கூட்டிட்டு வந்து உங்க வலைத்தளத்துல திட்டுவாங்க...இப்படியே கண்டின்யூ பண்ணீங்கன்னா....ரேங்கிங்க்ல உன் சைட் கூடிய சீக்கிரம் வந்துடும் டா.......ஜெய்ய்ய் ஜெக்கம்மாஆஆஆ...

பதிவர் : நன்றிம்மா...கடைசியா ஒரே ஒரு குட்டிக் கேள்வி...பதிவுலகத்துல இருக்க சண்டை எப்பம்மா முடியும்...?

ஜெக்கம்மா : ஹ்ம்ம்ம்...டேய் சிஷ்யா....கேட்டான் பாருடா கேள்வியை....வலைஉலகமா...கொக்கான்னானாம்....இந்தக் கேள்விக்கு பதில் சொல்ற சக்தி என் கிட்ட இல்லைடா........ஜெக்கம்மாஆஆ மலை ஏர்றா டா...ஜெக்கம்மாஆஆ மலை ஏர்றா...ஜெக்கம்மாஆஆ மலை ஏர்றா.....

கைதுறப்பு : சிரிப்புக்காக மட்டும் : )

5 comments:

அமுதா கிருஷ்ணா said...

கபிலன் ஊறுகாயை நான் எடுத்துட்டு,,உங்களுக்கு கள்ளை கொண்டு வந்துடறேன்...தாங்க்ஸ்பா...

கபிலன் said...

நன்றிங்க அமுதா கிருஷ்ணா.

இவர் எழுதிய கேரளா சுற்றிப்பார்க்க..ஐடியா ப்ளீஸ்.... என்பதற்காக நான் எழுதிய பின்னூட்டத்தின் பதிலை இப்படி சொல்லி இருக்கிறார்.

"கபிலன் said...
ஆலப்புழா போட் ஹவுஸ் நல்லா இருக்கும். ஆனா, நல்ல படகில் போங்க...கொஞ்சம் வாடகை ஜாஸ்தியா இருந்தாலும் பரவாயில்லை. இல்லைன்ன...பல்லி, எலி எல்லாம் படகுல உங்க கூட இருக்கும்.... : )

மூனார் போகலாம்...க்ளப் மஹிந்த்ரா ரிசார்ட் நல்லா இருக்கும்...

ஆயூர்வேதிக் ஸ்பா ரிசார்ட்டுகள் நிறைய இருக்கு.....நல்ல ரிசார்ட்டா தேர்ந்தெடுத்து போகலாம்..

அப்புறம்...மறக்காம கிராமப்புறம் வழியாக செல்லும் போது, வயல் வெளி நடுவில் உள்ள குடிசைக் கடைகளில், பானையில் கள்ளும் ஊறுகாயும் தருவாங்க....சூப்பரா இருக்கும் : ) "

"அமுதா கிருஷ்ணா said...
கபிலன் ஊறுகாயை நான் எடுத்துட்டு,,உங்களுக்கு கள்ளை கொண்டு வந்துடறேன்...தாங்க்ஸ்பா..."

bala said...

தாயே ஜக்கம்மா,

அருள் வாக்கு ஒன்று சொல்லம்மா.

எங்க ஊர், நக்சல் தீவிரவாத அமைப்பான, ம க இ க வின், பொலிட் பீரோ மெம்பர், தோழர் மதிமாறன் அய்யா, "எல்லா பொந்துகளில் வசிக்கும் ஜாதி வெறியர்களை" அமபலப்ப்டுத்தப் போவதாக சூளுரைத்திருக்கிறார் அம்மா.

இவரோட எடுபிடிகளான தோழர் ஏகலைவன்,தோழர் பனியன் தியாகு,தோழர் அசுரன்,தோழர் ஓ என் ஜி ஸி பெரியார்,தோழர் கேள்விக்குறி
அய்யாமார்களும் அவருக்கு துணையாக,இந்த மிஷனில் எட்டு திக்கும் தரணி அதிர புறப்பட்டுட்டாங்கம்மா.

தோழர்கள் சபதம் போட்டப்டி சிங்கப்பூர் பொந்தில் வழும் ஜாதி வெறியர் கோவி.மு.கண்ணன்,பழனி பொந்தில் வாழும் ஜாதி வெறியன் தமிழ் ஓவியா,அமெரிக்க பொந்தில் பதுங்கி இருக்கும் சுமபை.இளங்கோவன் அய்யாமார்களை அம்பலப்படுத்திவார்களா என்று அருள்வாக்கு சொல்லிவிடம்மா.சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை தாயே.

பாலா

Anonymous said...

"ஜெக்கம்மா : வாய்யா.....ஒபாமா...உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு டா...என் பேரு ஜெக்-கம்-மா....உன் பேரு ஒ-பா-மா. "

ஹா ஹ என்ன ஓற்றுமை...
இதற்கு மேல ஒபாமா பார்கும் போது ஜெக்கம்மா நியாபகம் தான் வரும்..

- மதி

உங்கள் தோழி கிருத்திகா said...

kapilan...sooppaar karpanai...kalakkuringa

LinkWithin

Blog Widget by LinkWithin