Wednesday, October 7, 2009

உங்களுக்கெல்லாம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கிடையாதுங்க..!

"என்னங்க...உங்களைத்தான்...இன்னைக்கு கிருத்திகை, கடைக்கு போய் இலை, வெற்றிலை, பாக்கு, பூ, பழம் எல்லாம் வாங்கிட்டு வாங்க....அப்படியே இந்தப் பையனையும்(என் மகன் தீபு) கூடவே கூட்டிட்டி போய்ட்டு வாங்க" என தங்கமணி ஆர்டர் போட்டாங்க. ஆபீஸ்க்கு வேற ரொம்ப நேரமாச்சு..ஹ்ம்ம்..சரி என சொல்லி, எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்துட்டு, அவசர அவசரமா ஆபீஸ் கிளம்பினேன்.

தெரு முனையில், பயங்கர மக்கள் கூட்டம். ஒவ்வொருவர் கையிலும், ரேஷன் அட்டை, மற்றும் ஒரு விண்ணப்பத் தாள் இருந்தது. அதோடு, கருப்பு சிவப்பு கரை வேட்டித் தொண்டர்களும், திமுகவின் கட்சிக் கொடிகளும் ஒரு புறம் என ஏரியாவே கலை கட்டியிருந்தது. அடடா....இந்த மாதிரி, நாம கடைசியா பார்த்தது வெள்ள நிவாரண நிதி கொடுத்த போதும், தேர்தலுக்கு முந்தைய நாள் பைசா கொடுத்த போது தானே. இப்போ என்னவா இருக்கும்னு நினைச்சிட்டே இருந்தேன்.


சரி, திமுக நிர்வாகியிடம் கேப்போம். என்ன எல்லாரும் ரேஷன் கார்டுடன் நிக்குறாங்கன்னு கேட்டேன்.


"கலைஞரின் காப்பீட்டுத் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவு செஞ்சிட்டு இருக்காங்க...அதாங்க" என்றார் திமுக கட்சி நிர்வாகி.


"என்ன திட்டம், அதுக்கு நான் என்ன செய்யணும்" நு கேட்டேன்.

"அதாவது, இதயம், கர்பப்பை, சிறுநீரகம் கோளாறுன்னால நடக்குற ஆபரேஷன் செலவு, கேன்ஸ்ர் போன்ற நோய் வந்துச்சுன்னா அதுக்கான ம்ருத்துவசிகிச்சைக்காக, எங்கள் தலைவர் கலைஞர் தலைமையிலான அரசு, ரூ 1 லட்சம் ரூபாய் வரைக்கும் காப்பீடு தர்றாங்க...இது தான் உயிர் காக்கும், உயர்சிகிச்சைக்காக கலைஞரின் காப்பீட்டுத் திட்டம். நீங்க போய் உங்க ரேஷன் கார்டு எடுத்துட்டு வாங்க...அதுல இருக்க நபர்களை கூட்டிட்டு வாங்க....இங்க பதிவு செய்த பிறகு, அதோ அந்த பள்ளிக்கூடத்துல போய் ஒரு போட்டோ எடுத்துக்கோங்க...அவ்ளோ தான்....சீக்கிரம் போய் கூட்டிட்டு வாங்க சார்....", என்றார் அவர்.


தங்கமணிக்கு உடனே ஒரு போன். ஏன்மா, உடனே நீயும், பையனும் ரெடி ஆவுங்க....இன்சூரன்ஸ் திட்டத்துக்காக போட்டோ எடுக்கறாங்களாம். கொஞ்சம் போயிட்டு வந்துறுவோம் என்றேன். அவசர அவசரமா கிளம்பி வந்தோம். விண்ணப்பம் வாங்குற இடத்துலயும் சரி, போட்டோ எடுக்குற வரிசையிலும் சரி, மிக நீண்ட வரிசை. நம்ம தான் பயங்கரமா ப்ளான் போடுவோமே... "தங்கமணி, நீ அந்த ஸ்கூல்ல போய் போட்டோ எடுக்குற வரிசையில போய் நில்லு....நான் விண்ணப்பம் பதிவு பண்ணுற வரிசையில போய் நிக்குறேன்...கரெக்டா இருக்கும்" என்றேன்.


வெகுநேரக் காத்திருத்தலுக்கு பிறகு, நான் பதிவு செய்யும் முறை வந்தது. ரேஷன் கார்டை கொடுத்தேன். வெள்ளை கார்டு. அப்படியே ஒரு லுக் விட்டுட்டு, "என்ன வேலை செய்றீங்க", என்றார் அங்கிருந்து ஒரு பெண் அலுவலர்.

"சாப்ட்வேர்ல இருக்கேங்க", என்றேன்

"எவ்ளோ சம்பளம் வாங்குவீங்க...." என்றார் அலுவலர்.

என்ன சொல்றதுன்னு யோசிச்சிட்டே நின்னுட்டு இருந்தேன்..

"இங்க பாருங்க சார்...தங்களுடைய உடம்பை சரியா பாத்துக்கக் கூட வசதியில்லாத, ரொம்ப ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்றவங்க போன்றவர்களுக்கு அரசாங்கம் கொடுக்குற காப்பீட்டுத் திட்டம் தான் இது. உங்களுக்கு எல்லாம் நீங்க வேலை பாக்குற கம்பெனியிலேயே கொடுத்திருப்பாங்க....ஆனா இவங்களுக்கு அதெல்லாம் கிடையாதுங்களே.... வருட வருமானம் ரூ 72,000 த்துக்கும் கம்மியா இருக்கவங்களுக்குத் தான் இந்த திட்டம். உங்களுக்கு எல்லாம் இந்த திட்டம் இல்லைங்க..." என சொல்லி முடித்தார் அந்த அலுவலர்.


அட எல்லா விவரத்தையும் சொன்ன அந்த கரைவேட்டிக்காரர், இந்த மேட்டர சொல்லாம விட்டுட்டாரேன்னு நினைச்சேன்.


கைப்பேசி அலறியது, மறுமுனையில் தங்கமணி "ஏங்க....சீக்கிரம் வாங்க....அடுத்து நம்ம தான் போட்டோ எடுக்கணும்" என்றார். "இல்லைம்மா...நமக்கெல்லாம் கிடையாதாம்மா.." என்றேன். "இது முதலிலேயே தெரியாதா? உங்களை எல்லாம் என்னா தான் சொல்றதுன்னே தெரியல" என்று புலம்பல்களை கேட்டுக் கொண்டே கிளம்பினேன்.


இதுல என்ன மேட்டர்னா. ஒபாமாவின் ஹெல்த் கேர் பில் க்கு இன்னும் முழு ஒப்புதலே கிடைக்காத நிலையில், நம்ம தமிழ்நாட்டில் இப்படி ஒரு அருமையான திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்பது சந்தோஷத்தைத் தருகிறது.


என்ன தான் கும்பல் கூடி பதிவுகளில் கலைஞரை விமர்சித்தாலும், மக்களின் வாழ்வில், எதிர்பாராத விதமான,தவிர்க்க முடியாத செலவான மருத்துவச் செலவிற்கு காப்பீடு வழங்கும் கலைஞர் அரசுக்கு நிச்சயம் ஒரு Very Good சொல்லியே ஆக வேண்டும்.

16 comments:

கலையரசன் said...

very good!
சொல்லிட்டேன் தலைவா...
பிரியாணி எப்ப வரும்?

கபிலன் said...

"கலையரசன் said...
very good!
சொல்லிட்டேன் தலைவா...
பிரியாணி எப்ப வரும்?"


வாங்க கலக்கல் கலை,

பிரியாணி மட்டும் போதுமா ?
: )

ப்ரியமுடன் வசந்த் said...

// "ஏங்க....சீக்கிரம் வாங்க....அடுத்து நம்ம தான் போட்டோ எடுக்கணும்"//

சிரிப்புதான் வருது....

கபிலன் said...

"பிரியமுடன்...வசந்த் said...
// "ஏங்க....சீக்கிரம் வாங்க....அடுத்து நம்ம தான் போட்டோ எடுக்கணும்"//

சிரிப்புதான் வருது.... "

என்ன பண்றது ஒரு ஆர்வக் கோளாறுல, பொறுப்பான குடும்பத் தலைவர் மாதிரி நடந்துக்க ட்ரை பண்ணதோட விளைவு : )
நன்றிங்க வசந்த்!

Anonymous said...

கலைஞர் காப்பீடு திட்டம் உண்மையான நன்மை தரும் திட்டம் அதை வரவேற்போம்...

கலைஞர்(:- அன்பு உடன்பிறப்பே கபிலா...உன் பதிப்பை கண்டு கண்கள் பனித்தன,இதயம் துடித்தன...இந்த அரசு எப்போதும் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யும்...உயிர் முன்றெழுத்து... காப்பு முன்றெழுத்து... நன்றி முன்றெழுத்து...பதவி முன்றெழுத்து...சோனியா முன்றெழுத்து...ராகுல் முன்றெழுத்து... ஆட்சி முன்றெழுத்து...

என்றும் உங்களுடன்,
ந.நிருபன்.
(:-)

Anonymous said...

Very Good Scheme.
Regards
Raja

கபிலன் said...

நன்றி(மூன்றெழுத்து) நிரூபன் : )

நன்றி ராஜா : )

Satish said...

"இது முதலிலேயே தெரியாதா? உங்களை எல்லாம் என்னா தான் சொல்றதுன்னே தெரியல"

en kabila nee mattum ippadi vithyasama panra.

Anonymous said...

super appu!!!!!!!!!!

கபிலன் said...

"Satish said...
"இது முதலிலேயே தெரியாதா? உங்களை எல்லாம் என்னா தான் சொல்றதுன்னே தெரியல"

en kabila nee mattum ippadi vithyasama panra."


நமக்கு எல்லாமே அப்படி தாங்க நடக்குது...என்ன பண்றது? : )

கபிலன் said...

"Anonymous said...
super appu!!!!!!!!!!"

நன்றி அனானி!

ஜோ/Joe said...

பொதுவாக இப்படி நடந்திருந்தால் பொதுவில் யாரும் வந்து சொல்ல மாட்டார்கள் ..உங்கள் வெளிப்படை தன்மைக்கும் ..தனக்கில்லாவிட்டாலும் மற்றவர்க்கு பயன்படுகிறதே என பாராட்டும் குணத்துக்கும் வந்தனங்கள்.

கபிலன் said...

"ஜோ/Joe said...
பொதுவாக இப்படி நடந்திருந்தால் பொதுவில் யாரும் வந்து சொல்ல மாட்டார்கள் ..உங்கள் வெளிப்படை தன்மைக்கும் ..தனக்கில்லாவிட்டாலும் மற்றவர்க்கு பயன்படுகிறதே என பாராட்டும் குணத்துக்கும் வந்தனங்கள்."

வாங்க ஜோ...பல பின்னூட்டங்களில் நீங்கள் புகுந்து விளையாடி வருவதை பார்த்திருக்கேன்.
தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க!

chennailocal said...

கபிலன் அவர்களே,

உனக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி IDEA வருது.

OC le PENAYIL கொடுத்தா வாங்கி குடிக்கர கும்பல்தாணே நியெல்லாம்

chennailocal said...

கபிலன் அவர்களே,

உனக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி IDEA வருது.

OC le PENAYIL கொடுத்தா வாங்கி குடிக்கர கும்பல்தாணே நியெல்லாம்

கபிலன் said...

"chennailocal said...
கபிலன் அவர்களே,

உனக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி IDEA வருது.

OC le PENAYIL கொடுத்தா வாங்கி குடிக்கர கும்பல்தாணே நியெல்லாம் "

பெனாயிலே....ஒரு பாட்டில் 35 ரூ விக்குற காலம் இது...நீங்க வேற்.. : )
நன்றி சிவசங்கர்!

LinkWithin

Blog Widget by LinkWithin