Monday, August 17, 2009

ஷாரூக் :என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட!


ஆகஸ்ட் 15, நம்மோட சுதந்திர தினம். சரி, நாட்டின் கொண்டாட்டங்களை பார்க்கலாமேன்னு ஆங்கில நியூஸ் சேனல்கள் பக்கம் திருப்பினா...BREAKING NEWS: Shah Rukh Khan detained and questioned for 2 hours. எந்த ஆங்கில, இந்தி சேனல்கள் திருப்பினாலும் இதே செய்தி தான். அடப் பாவிகளா, செய்தி போட வேண்டியது தான், அதுக்காக, சுதந்திர தினத்தைப் பற்றி வந்த செய்திகளை விட, முந்தியடித்துக்கொண்ட வெளியில் தெரிந்த செய்தி இது தான்.

சரி, இப்போ மேட்டர். "My Name is Khan" என்கிற அவரது படம் சமீபத்தில் தான் சான் பிரான்சிஸ்கோவில் படமாக்கப்பட்டது. அதன் இயக்குனர் கரன் ஜோகர். இந்த முறை இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களை துவக்கி வைக்க, ஷாரூக் கான் அமெரிக்கா சென்றார். அப்போது அவருடைய பேக்கேஜ் காணவில்லை என்று கூறப்படுகிறது. அதனால முதலில் ஷாரூக் கானின் டாகுமெண்ட்சை சரி பார்த்துள்ளனர் அமெரிக்க குடியேற்றத் துறையினர். பிறகு அவரைத் தனி அறைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு முன்னாடி, பலருக்கு விசாரணை செய்ய வேண்டி இருந்ததால்,அங்கு, அவர் வரிசையில் காக்க வைக்கப் பட்டார். பிறகு, அவர் முறை வந்ததும், அவரை விசாரித்திருக்கின்றனர். எங்க, எதுக்கு வந்தீங்க...என்ன பண்றீங்க...இது தானே அவங்க நார்மலா கேக்குற கேள்வி..அதை கேட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். விசாரணை முடிஞ்சதும் அனுப்பிட்டாங்க. இது தான் நடந்தது.

நம்ம ஊர் ராசா தாங்க ஷாரூக் நீங்க...பெரிய நடிகர்....எல்லாம் சரி தாங்க..இன்னொரு நாட்டுக்குப் போறீங்க...அவங்க நாட்டோட பாதுகாப்புக்காக, நாட்டு உள்ள வர்றவங்களை சோதனை செய்ய எல்லா உரிமையும் உண்டு. இது ரொம்ப நியாயமா தானே இருக்கு. இதுக்கு இப்படி ஒரு மீடியா கவரேஜ் தேவையா? அதுவும், சுதந்திர தினச் செய்தியை விட கூடுதல் கவனம் இதுக்கு தேவையா? இதுக்கு போய் ஒரு அரசாங்கம் தலையிடனுமா? என்ன கொடுமை சார் இது..?

அது அமெரிக்கா...நம்ம ஊர் மாதிரி இல்லை...எல்லா குடிமகனையும் ஒரே மாதிரி தான் அங்க பாப்பாங்க...யாராக இருந்தாலும், விதிமுறை ஒன்று தான்...ஏழைக்கு ஒன்னு, பணக்காரனுக்கு ஒன்னு, நடிகனுக்கு ஒன்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அளவுகோல் கிடையாது. இதுல இன்னும் ஒரு காமெடி என்னான்னா...மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, "நாமும் அமெரிக்கர்களிடம் அதே போல நடந்து கொள்ள வேண்டும்(Tit for Tat)" என்பது போல பேசி இருக்காங்க. இது சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு....(கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா...அங்க ஒரு கொடுமை......)

நிஜமா சொல்லணும்னா, நம்ம அரசாங்கம் இதை ஒரு பாடமா எடுத்துக்கணும். எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தணும். நம்ம ஊர் எம்பி க்களுக்கு இந்த மாதிரி சலுகை கொடுத்து, அவங்க பொண்ணுங்களை யாருக்கும் தெரியாம கனடாவுக்கு அனுப்புன கதை எல்லாம் இருக்கு.

இதே மாதிரி நம்ம நாட்டோட முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.அப்துல் கலாமுக்கு நடந்தது. அவரும் அதை பெருசு படுத்தல.

இதுல என்ன தெரியுதுன்னா....சுதந்திர தினத்தன்று, பொதுவா சூடான செய்திகள் இருக்காது, ஏனென்றால், எல்லோரும் கொடியேற்றம், விழான்னு பிசியா இருப்பாங்க. அன்னிக்கு மட்டும் அமைதியா பேசுவாங்க. அதனால, இந்த நியூஸ் மீடியாக்கள் இதை ஒரு மேட்டரா எடுத்து, சின்ன விஷயத்தை ஊதி பெருசாக்குறாங்கன்னு தான் தோணுது !

இப்படிப்பட்ட விஷயங்களில் நாம் விசாரிக்கப்படும் போது, நமக்கும் இதே போல கோவமும், வெறுப்பும் ஏற்படுவது இயல்பு தான் என்றாலும், அதுக்காக, இனிமேல் நான் அமெரிக்க மண்ணில் கால் வைக்க மாட்டேன், அப்படி இப்படின்னு சொல்றது கொஞ்சம் ஓவராத் தான் தோணுது. நாங்க எல்லாம், சட்டத்துக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று மமதையில் கூறுவது போல இருக்குங்க.

உங்களைப் போலவே ஷாரூக் கானை எனக்கும் பிடிக்கும், அதுக்காக கரகாட்டக்காரன் கவுண்டமணி மாதிரி தான் "என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட .." என்கிற ரேஞ்சுக்கு குரல் கொடுப்பது, ரொம்ப குழந்தைத் தனமா இருக்குங்க..!

15 comments:

Anonymous said...

the question is, he was tortured coz he is muslim. very shame.

Barari said...

BJP ARASIL RANUVA MANDIRIYAAKA IRUNTHA FERNANDASAI JATTI VARAI AVIZTHTHU SOTHANAI SEITHAARKAL.MANAM KETTA FERNANDAS APPOTHU VAAI THIRAKKAMAL ORU VARUDAM SENDRU VAI THIRANTHAAR.AMERICANUKKU ASIYAVAI SERTHAVARKAL ENDRAAL ILAKKAARAM.AMBIKA SONI SOLVATHIL ENTHA THAPPUM ILLAI.AMERICA ETHAI SEITHAALUM NIYAYAPPADUTHTI JALDRA PODUM NEENGAL THIRUNTHA VENDUM.

கபிலன் said...

"Anonymous said...
the question is, he was tortured coz he is muslim. very shame."
இதெல்லாம் சும்மா ஒரு விதண்டாவாதத்துக்கு வேண்டுமென்றால் சொல்லலாம் அனானி...

கபிலன் said...

"Barari said...
BJP ARASIL RANUVA MANDIRIYAAKA IRUNTHA FERNANDASAI JATTI VARAI AVIZTHTHU SOTHANAI SEITHAARKAL.MANAM KETTA FERNANDAS APPOTHU VAAI THIRAKKAMAL ORU VARUDAM SENDRU VAI THIRANTHAAR.AMERICANUKKU ASIYAVAI SERTHAVARKAL ENDRAAL ILAKKAARAM.AMBIKA SONI SOLVATHIL ENTHA THAPPUM ILLAI.AMERICA ETHAI SEITHAALUM NIYAYAPPADUTHTI JALDRA PODUM NEENGAL THIRUNTHA VENDUM."

அமெரிக்கா சொல்ற எல்லாவற்றிற்கும் ஜால்ரா போடுவது தவறு தான். ஆனால், இந்த சோதனைகளை எல்லாம் தவறுன்னு சொல்ல முடியுமா? அவங்க நாடு, உள்ள வர்றவங்கள அவங்க சோதனை செய்றது நியாயம் தானே!

யூர்கன் க்ருகியர் said...

ஆங்கில/hindi செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று உங்களுக்கு தெரியுமா...???
பின்ன நாம மட்டும் ஏன் இப்படி ?

ஷாருக் ஒரு கேவலமான ஆள்.. ரோபோ விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட விதமே இப்படி சொல்ல தோன்றுகிறது.

டவுசரை கலட்டி விசாரணை செய்திருந்தால் இன்னும் தமாசா இருந்திருக்கும்.

திரைப்படங்களில் மட்டும் தான் ஹீரோ ... வெளியுலும் தன்னை அவ்வாறு பாவிப்பது அவரை காமெடியனாகவே ஆக்குகிறது

கபிலன் said...

"யூர்கன் க்ருகியர் said...
ஆங்கில/hindi செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று உங்களுக்கு தெரியுமா...???
பின்ன நாம மட்டும் ஏன் இப்படி ?

நம்ம ஊடகங்களில் வரும் செய்திகள் உண்மையானதாக இருக்குமா என்ற ஐயத்தினால், பொதுவாக ஆங்கில சேனல்கள் தான் செய்திகளுக்கு. சன்/கலைஞர் ஜெயா செய்திகளை உள்ளூர் செய்திகளுக்காக பார்ப்பதுண்டு. இப்பொழுது ஜீ தொலைக்காட்சி செய்திகள் நடுநிலையாக தருவது போல் தெரிகிறது.

வெளிநாடு செல்லும் போது நம்மில் பலருக்கும் ஏற்படும் அனுபவம் தான் இது. இதுக்குப் போய் இவ்வளவு பெருசா சொல்றாங்களேன்னு ஒரு வருத்தம் தான் !


"திரைப்படங்களில் மட்டும் தான் ஹீரோ ... வெளியுலும் தன்னை அவ்வாறு பாவிப்பது அவரை காமெடியனாகவே ஆக்குகிறது"

நிதர்சனமான உண்மை !

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி யூர்கன் க்ருகியர்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஷாருக் மாதிரி தினமும் பலருக்கு நடந்து தான் வருகிறது. அது அந்த நாட்டு நடைமுறை. அவ்வளவே.

கபிலன் said...

"ச.செந்தில்வேலன் said...
ஷாருக் மாதிரி தினமும் பலருக்கு நடந்து தான் வருகிறது. அது அந்த நாட்டு நடைமுறை. அவ்வளவே."

ஆமாங்க...எனக்கு கூட பல சமயங்களில் அந்த மாதிரி அனுபவம் நடந்து இருக்கு. அவங்க விதிமுறைகள் அப்படின்னு நினைச்சுக்க வேண்டியது தான்.

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க செந்தில்வேலன்!

Thamizh Inaiyap Payilarangak Kuzhu said...

// என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட //

உங்களையும் பார்த்து கேட்டுறப் போறார்..

கபிலன் said...

"Thamizh Inaiyap Payilarangak Kuzhu said...
// என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட //

உங்களையும் பார்த்து கேட்டுறப் போறார்.."

உடனே எஸ்கேப் தான்!

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

mvalarpirai said...

நல்லா சொன்னீங்க ! நடிகர் என்ன பெரிய ம...?
எல்லாருக்கும் சட்டம் ஒண்ணுதான்

கபிலன் said...

"mvalarpirai said...
நல்லா சொன்னீங்க ! நடிகர் என்ன பெரிய ம...?
எல்லாருக்கும் சட்டம் ஒண்ணுதான்"

நன்றிங்க வளர்பிறை!

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும்
வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

sakthi said...

ஒன்றும் செய்ய இயலாது கபிலன் அவர்கள் மனதிற்குள் தாங்கள் பெரிய இவர்கள் என நினைப்பு

கபிலன் said...

"sakthi said...
ஒன்றும் செய்ய இயலாது கபிலன் அவர்கள் மனதிற்குள் தாங்கள் பெரிய இவர்கள் என நினைப்பு"

இதுல மீடியாக்கள் பண்ற அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்லீங்க...
நன்றிங்க சக்தி!

LinkWithin

Blog Widget by LinkWithin