சுவாரஸ்யமான சம்பவங்கள்,எண்ணங்கள்,வினாக்கள், தேடல்கள்,விவாதங்கள்,மொக்கைகள் மற்றும் லொட்டு லொசுக்கு சமாச்சாரங்கள் என என்னுடைய கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்கு!
Friday, September 18, 2009
பிரபலங்களின் வேண்டுதல்கள் !
பொதுவாகவே கோவிலுக்கு போயிட்டு வரும்போது மனசு ரொம்ப நிம்மதியாகவும் சாந்தமாகவும் இருக்கும். இதுக்கு ஒரு முக்கிய காரணம், நம்ம மனசுல இருக்குறது அப்படியே இன்னொருத்தர் கிட்ட சொன்ன திருப்தி கிடைக்குறது தான் இந்த நிம்மதிக்கு முக்கிய காரணமாக தெரியுது.
சரி. இந்த மாதிரி நம்முடைய பிரபலங்கள் இப்ப இருக்க நிலைமையில தங்கள் மனசுல இருக்குறத கடவுள் கிட்ட சொல்ற மாதிரி இருந்தா...என்ன சொல்லுவாங்க...என்ன கேப்பாங்கன்னு ஒரு கற்பனை தான், சீரியசா எடுத்துக்காதீங்க : )
சோனியா காந்தி : கடவுள்ஜி, எப்படியாவது என் மகன் ராகுலை பிரதமர் ஆக்கிடுங்கஜி. இப்போ, லுதியானாவிலிருந்து டில்லிக்கு ரயிலில் அனுப்பி வச்சது போல, தில்லியிலிருந்து திருப்பதிக்கு நடை பயணம் அனுப்பி, மொட்டை அடிச்சு காது குத்துறேன் பெருமாள் ஜி...!
கருணாநிதி : என் சொத்தினும் மேலாக நான் மதிப்பு கொடுக்கும் தெருப்பிள்ளையாரே, என் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. 2011 ஆம் ஆண்டு தேர்தலிலும், கழகம் வெல்வதற்கு தேவையான பணத்தை மத்திய அமைச்சர்கள் எப்படியாவது பெற்றுத் தர வழி வகை செய் ! அடுத்த முறையும் தமிழக மக்கள் காசு வாங்கிக் கொண்டு எங்களுக்கே ஓட்டளிக்க ஆவன செய் பிள்ளையாரே ! பணம் மூன்றேழுத்து, சொத்து மூன்றெழுத்து, பதவி மூன்றெழுத்து, கொள்ளை மூன்றெழுத்து, அதனால் நாங்கள் அனுபவிக்கும் சுகம் மூன்றெழுத்து, உனக்கு அளிக்கப் போகும் நன்றி யும் முன்றெழுத்து!
(கடவுள் : ஈழம் மூன்றெழுத்து,வன்னி மூன்றெழுத்து,முகாம் மூன்றெழுத்து, நினைவிருக்கிறதா கலைஞரே!)
ஜெயலலிதா : என்னுடைய பிரதமர் ஆசையை கூட விட்டுடுறேன்....ஆனா, எப்படியாவது இந்த மைனாரிட்டி திமுக அரசின் ஆட்சியை டிஸ்மிஸ் செஞ்சுடு.
(கடவுள்: என்னம்மா....என்னிடமும் மைனாரிட்டி திமுக அரசு அடைமொழி தேவையாம்மா?)
விஜய் : என்னங்க ஆண்டவரே நீங்க.... சும்மா ஹீரோயின்களோட ஜாலியா ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன்... என்னை ஏன் இப்படி அரசியல் அது இதுன்னு கொடுமை பண்றீங்க.......இனிமேலாவது எங்கப்பாவுக்கு ஒரு ஐடியாவும் வராம நீங்க தான் பாத்துக்கணும் ! இதை மட்டும் நீங்க கரெக்டா செஞ்சிங்கன்னா...அடுத்த படத்துல Intro songla உங்க படத்துக்கு முன்னாடி குத்தாட்டம் போடுற மாதிரி சீன் வைக்கச் சொல்றேன்...!
கி.வீரமணி : முருகா நான் திருந்திட்டேன் முருகா...கடவுள் இல்லைன்னு கூட்டத்துல பேசுறத பார்த்து தப்பா நினைச்சுக்காத முருகா....அதெல்லாம் சும்ம லுலுலாயிக்கு....திராவிட கழகத்தின் சொத்துக்கள் அதிகரிக்கின்றன, ஆனால் இயக்கத்தில் இருக்கும் தொண்டர்கள் குறைந்து கொண்டே போகிறார்களே.....கல்வியறிவு படைத்தவரிடம் நம் கொள்கையை விற்று காசாக்க முடியவில்லையே....ஆகையால், சாமானிய மக்களுக்கு கல்வி அறிவை கொஞ்சம் பொறுமையாகவே கொடு, பதவியையும் பணத்தையும் மட்டும் எங்களுக்கு உடனே அள்ளிக் கொடு !
(கடவுள்: உங்களுக்கு எல்லாம் இதே வேலையா போச்சு. ரத்தம் சூடா இருக்க வரைக்கும் ஆட வேண்டியது, அதுக்கு அப்புறம் ஆன்மீகம் பக்கம் ஓடி வர வேண்டியது. சரி வாங்க...வந்து பஞ்சாமிர்தம் சாப்பிடுங்க..! )
விஜய டி.ஆர் : வேலாயுதா, லட்சிய திமுக ஆரம்பிச்சு கிட்ட தட்ட 5 வருஷம் ஆகப் போகுது, ஆனா, போன தேர்தல்ல என் பையன் கூட என் கட்சிக்கு ஓட்டு போடல. என் குடும்பத்துல இருக்கவங்க மட்டுமாவது எனக்கு ஓட்டு போட வச்சுடு. டண்டனக்கா...டனக்கனக்கா....
அழகிரி : எப்படியோ தேர்தலில் தோற்ற பி.சிதம்பரத்தை, அவங்கள மிரட்டி, இவங்கள மிரட்டி ரிசல்டையே மாத்திட்டேன். இதுக்கெல்லாம் உன்னோட தயவு தான் காரணம். இனிமேல் எந்த கேஸ்லியும் சிபிஐ என் பக்கம் வராம பண்ணதுக்கு ரொம்ப நன்றிப்பா ஆண்டவா...கடைசியா ஒண்ணே ஒண்ணு, எப்படியாச்சும் மதுரையை அமெரிக்க தலைநகரமா மாத்திடு பா...வெள்ளை மாளிகையை மாட்டுத் தாவணி பஸ்டாண்ட் பக்கத்துல கொண்டு வந்துடு ஆண்டவா...
மன்மோகன் சிங் : My God, People of India, Love you . Ho, GOD, Inflation, GDP, Consumer Price Index, Fiscal deficit, 123 Agreement..........
( கடவுள்: ஹலோ மன்மோகன், ஜனங்களுக்கு புரியுற மாதிரி பேசலைன்னா கூட பரவாயில்லை....எனக்கு புரியுற மாதிரியாவது பேசுறீங்களா?)
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
//விஜய் : என்னங்க ஆண்டவரே நீங்க.... சும்மா ஹீரோயின்களோட ஜாலியா ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன்... என்னை ஏன் இப்படி அரசியல் அது இதுன்னு கொடுமை பண்றீங்க.......இனிமேலாவது எங்கப்பாவுக்கு ஒரு ஐடியாவும் வராம நீங்க தான் பாத்துக்கணும் ! இதை மட்டும் நீங்க கரெக்டா செஞ்சிங்கன்னா...அடுத்த படத்துல Intro songla உங்க படத்துக்கு முன்னாடி குத்தாட்டம் போடுற மாதிரி சீன் வைக்கச் சொல்றேன்...!
########################################
கடவுள்:உன் படத்தில் என் படத்தை வைக்காமல் இருப்பதே எனக்கு நீ செய்யும் பேருதவி.
//அழகிரி : எப்படியோ தேர்தலில் தோற்ற பி.சிதம்பரத்தை, அவங்கள மிரட்டி, இவங்கள மிரட்டி ரிசல்டையே மாத்திட்டேன். இதுக்கெல்லாம் உன்னோட தயவு தான் காரணம். இனிமேல் எந்த கேஸ்லியும் சிபிஐ என் பக்கம் வராம பண்ணதுக்கு ரொம்ப நன்றிப்பா ஆண்டவா...கடைசியா ஒண்ணே ஒண்ணு, எப்படியாச்சும் மதுரையை அமெரிக்க தலைநகரமா மாத்திடு பா...வெள்ளை மாளிகையை மாட்டுத் தாவணி பஸ்டாண்ட் பக்கத்துல கொண்டு வந்துடு ஆண்டவா...//
########################################
கடவுள்:இப்பவே கண்னு கட்டுதே....(கடவுள் வடிவேல் மாதிரி சொல்வார்)
super ma ........
நன்றி சுரேஷ் குமார்!
நன்றிங்க வசந்த்!
வீரமணி வேண்டுதல் சூப்பர்
ஒவ்வொன்றும் அற்புதம்.
தொ(த)ங்கபாலுவையும், கேப்டனையும் வுட்டுடீங்களேண்ணே....
வாழ்த்துக்கள்
ஆரூரன்
//விஜய் : என்னங்க ஆண்டவரே நீங்க.... சும்மா ஹீரோயின்களோட ஜாலியா ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தேன்... என்னை ஏன் இப்படி அரசியல் அது இதுன்னு கொடுமை பண்றீங்க.......இனிமேலாவது எங்கப்பாவுக்கு ஒரு ஐடியாவும் வராம நீங்க தான் பாத்துக்கணும்//
//கருணாநிதி : என் சொத்தினும் மேலாக நான் மதிப்பு கொடுக்கும் தெருப்பிள்ளையாரே, என் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. 2011 ஆம் ஆண்டு தேர்தலிலும், கழகம் வெல்வதற்கு தேவையான பணத்தை மத்திய அமைச்சர்கள் எப்படியாவது பெற்றுத் தர வழி வகை செய் ! அடுத்த முறையும் தமிழக மக்கள் காசு வாங்கிக் கொண்டு எங்களுக்கே ஓட்டளிக்க ஆவன செய் பிள்ளையாரே ! பணம் மூன்றேழுத்து, சொத்து மூன்றெழுத்து, பதவி மூன்றெழுத்து, கொள்ளை மூன்றெழுத்து, அதனால் நாங்கள் அனுபவிக்கும் சுகம் மூன்றெழுத்து, உனக்கு அளிக்கப் போகும் நன்றி யும் முன்றெழுத்து!
(கடவுள் : ஈழம் மூன்றெழுத்து,வன்னி மூன்றெழுத்து,முகாம் மூன்றெழுத்து, நினைவிருக்கிறதா கலைஞரே!)//
"sankar said...
வீரமணி வேண்டுதல் சூப்பர்"
கொள்கை விஷயத்தில் ரொம்ப நெருங்கியவராச்சே...ஹிஹி..அதான் : )
நன்றி சங்கர்!
"ஆரூரன் விசுவநாதன் said...
ஒவ்வொன்றும் அற்புதம்.
தொ(த)ங்கபாலுவையும், கேப்டனையும் வுட்டுடீங்களேண்ணே....
வாழ்த்துக்கள்
ஆரூரன்"
தங்கபாலுவை பிரபலமா கணக்கெடுத்தக்கலாமான்னு நீங்க தான் சொல்லணும் : )
ஆமாங்க..கேப்டனை தாங்க விட்டுட்டேன்..
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க ஆரூரன்
இவைகள் அனைத்தும் உண்மைகள்தான் என்றே சொல்லலாம்.
"" உழவன் " " Uzhavan " said...
இவைகள் அனைத்தும் உண்மைகள்தான் என்றே சொல்லலாம்."
ஹாஹா...
அதுவும் சரிதாங்க..
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க உழவன்!
""
கருணாநிதி : என் சொத்தினும் மேலாக நான் மதிப்பு கொடுக்கும் தெருப்பிள்ளையாரே, என் குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. 2011 ஆம் ஆண்டு தேர்தலிலும், கழகம் வெல்வதற்கு தேவையான பணத்தை மத்திய அமைச்சர்கள் எப்படியாவது பெற்றுத் தர வழி வகை செய் ! அடுத்த முறையும் தமிழக மக்கள் காசு வாங்கிக் கொண்டு எங்களுக்கே ஓட்டளிக்க ஆவன செய் பிள்ளையாரே ! பணம் மூன்றேழுத்து, சொத்து மூன்றெழுத்து, பதவி மூன்றெழுத்து, கொள்ளை மூன்றெழுத்து, அதனால் நாங்கள் அனுபவிக்கும் சுகம் மூன்றெழுத்து, உனக்கு அளிக்கப் போகும் நன்றி யும் முன்றெழுத்து!
(கடவுள் : ஈழம் மூன்றெழுத்து,வன்னி மூன்றெழுத்து,முகாம் மூன்றெழுத்து, நினைவிருக்கிறதா கலைஞரே!)
""
Some persons are media friendly in negative sense...They can be criticized and torn apart sarcastically which gives maximum pleasure to readers...Till few years back JJ, Rajni Ramadoss were occupying top spots in that. Now MuKa has taken over the no 1 spot. These days’ people (Writer and Readers) get maximum pleasure when MuKa is criticized and he 100% deserves it.
Ram
Hi kabilan,
Chekc this link.
Quake, tsunami hit Samoa; 34 dead
http://news.rediff.com/report/2009/sep/30/quake-tsunami-hit-samoa-three-dead.htm
"Some persons are media friendly in negative sense...They can be criticized and torn apart sarcastically which gives maximum pleasure to readers...Till few years back JJ, Rajni Ramadoss were occupying top spots in that. Now MuKa has taken over the no 1 spot. These days’ people (Writer and Readers) get maximum pleasure when MuKa is criticized and he 100% deserves it.
Ram "
ஆமா...எங்க பார்த்தாலும் பாரபட்சம் பாக்காம கேலி பண்றாங்க..ஆனா ஓட்டு தான் எப்படி விழுதுன்னு தெரியல...
நன்றிங்க ராம்!
"Suresh Babu said...
Hi kabilan,
Chekc this link.
Quake, tsunami hit Samoa; 34 dead
http://news.rediff.com/report/2009/sep/30/quake-tsunami-hit-samoa-three-dead.htm "
ஆமாம்...சமோவாவில் தான் சுனாமியாம். க்ளையண்டை போன் செய்து விசாரித்தேன். இப்பொழுது நிலைமை பரவாயில்லைன்னு சொன்னாங்க.
தகவலுக்கு நன்றி சுரேஷ் பாபு!
Post a Comment