போன வாரம், நான், என் மனைவி,என் பையன் தீபு(2 வயசு ஆகப் போகுது) மூணு பேரும் தி நகர்க்கு ஷாப்பிங்க் கிளம்பினோம். பல்சர எடுத்தேன். டேடி, Frontla, டேடி, Frontlaனு சொல்லி முன்னாடி வந்து உட்கார்ந்துகுட்டு...டுர்ர்...டுர்ர்...ந்னு acceleratora ஒரு சுழட்டு சுழட்டிட்டு கொடுத்தான்.இங்க பாரு மா, கையில பைசா இல்ல, அதனால ஏ டி எம் போயிட்டு, போகலாம்னு வண்டியை நிறுத்தினேன். நான், பணத்தை எடுத்துட்டு வந்துட்டேன். என் மனைவி, பக்க்துல இருக்க மெடிக்கல் ஷாப்ல, என் பையனுக்கு செர்லாக் வாங்க போய்ட்டா. சரின்னு, வண்டியில உட்கார்ந்தபடி வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
திடீர்னு ஒருத்தர் வந்தார். சின்ன பையன் தாங்க..ஒரு 16 வயசு இருக்கும். நெற்றியில விபூதி குங்குமம், தோளில் ஒரு ஜோல்னா பை மாட்டிட்டு இருந்தார்.
சார், நாங்க முருகன் கோவிலுக்கு நடைபயணம் போயிட்டு இருக்கோம், உங்க கையை காட்டுங்க, ஜோசியம் பார்த்து சொல்றேன்னு சொன்னார்.
இல்லை, ராஜா, நான் ஏற்கனவே ஜோசியம் பார்த்து இருக்கேன். வேணாம்பான்னு சொன்னேன். என்னாங்க சார், இத்தனை பேரு இருக்காங்க...அவங்க எல்லாரையும் விட்டுட்டு, உங்க கிட்ட மட்டும் வந்து கேக்குறேன்னா எப்படி...ஆண்டவன் என் மூலமா ஏதோ சொல்லி விட்டுறுக்காருங்க சார்...கொஞ்சம் கேட்டுப் பாருங்க..
அடடா...கடைக்குப் போன மனைவி இன்னும் வரலியே...எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தா..முடியாது போல இருக்கேன்னு நினைச்சேன்.
இல்லை ராஜா, வேணாம்பான்னு சொன்னேன். சரிங்க சார், இதை மட்டும் ட்ரை பண்ணுங்க சார்...மனசுல ஏதாச்சும் தலையில் சூடுகிற போடுகிற ஒரு பூவை நினைச்சிக்கோங்க.
சரிப்பா நினைச்சுக்கிட்டேன். (இங்க தான் கொஞ்சம் ஸ்லிப் ஆயிட்டேன்..)
நீங்க நினைச்ச, பூவை நான் சரியா சொல்லிட்டேன்னா....உங்களுக்கு நான் ஜோசியம் பாக்குறேன்னு சொன்னார் அந்த ஜோல்னா ஜோசியர்.
விட மாட்டாங்க போல இருக்கே....சரிப்பா...சொல்லு...
மல்லிப் பூ....சரியாங்க சார்..
அடங்கொக்கா மக்கா.....கரெக்டா சொல்லிட்டானே.....முருகா...இனிமே இந்தக் கைப்புள்ளையை நீ தான்யா காப்பாத்தணும்......ஆமாம் பா சரியா சொல்லிட்டே..
சரிங்க சார்...வண்டியை விட்டுட்டு கொஞ்சம் இப்படி வாங்க சார்னு கூப்பிட்டு, வழக்கமா சொல்ற கதைகள் ஓரிரு வரிகள் சொல்லிட்டு,உங்க பிடிச்ச தெய்வம் யாருங்க சார் நு கேட்டார்.
சிவபெருமான் பிடிக்கும் பா ந்னு சொன்னேன்.
பாக்கெட்ல இருந்து சிவன்-பார்வதி படத்தை எடுத்து அவர் கையில வச்சார். ஒரு நூறு ரூபாயை இந்தப் படத்துல வையுங்க...திருப்பி கொடுத்துடுறேன்னு சொன்னார். நூறு ரூபாய் இல்லை...ஐநூறு ரூபாயாத் தான் இருக்குன்னு வச்சேன். அந்த ரூபாய் நோட்டை எடுத்து ஏதோ எழுதிட்டு, கையில வச்சு இருந்த சாமி படத்துக்கு கீழ வச்சுட்டார்...
எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு...என்னப்பா ந்னு கேட்டேன்...
இருங்க சார்...வீட்ல வளர்க்கிற ,கோயிலில் இருக்கிற பறவை எதாவது ஒண்ணை நினைச்சுக்கோங்கன்னு சொன்னார். நினைச்சிக்கிட்டேன். என்ன நினைச்சீங்க..சொல்லுங்க...
காக்கா ந்னு சொன்னேன். சார், காக்காவையா வீட்டில வளர்ப்பாங்க...சரி மைனான்னு சொன்னேன். சார், மைனாவா கோயிலில் இருக்கும். சரி, புறா ந்னு சொன்னேன்.
சரிங்க சார். இப்போ நீங்க நினைச்ச புறாவையே இந்த ரூபாய் நோட்டுல நான் எழுதி இருந்தா...இந்த பணம் கோயில் அன்னதானத்துக்கு போயிடும்னு சொல்லிட்டு...அந்த ரூபாய் நோட்டை எடுத்து காட்டினார்...கரெக்டா புறான்னு எழுதி இருந்தது..
நமக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு...ஐநூறு ரூபாயா.....ராஜா...ஒரு நூறு ரூபாய் எடுத்துக்கோ...மிச்சம் கொடுத்துடு.....
தெய்வ குற்றம்,அது இதுன்னு சொல்லி இருநூறு ரூபாய் உருவிட்டார்...
சார், உங்க குடும்பத்துல ஒரு தீராத கஷ்டம் இருக்கு...அதை போக்கணுமா வேணாமா , சொல்லுங்க சார்.
கடைக்குப் போன என் மனைவி வந்துட்டாங்க. என் பையன் ஓடி வந்தான்....டேடி உச்சா....உச்சா வருது....
அப்பாடி இதோட தப்பிச்சடணும்டா சாமி....வேலை இருக்குப்பா..போதும்...கிளம்புறேன்...
சார்...கடைசியா ஒரு கேள்வி சார்....ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து வைங்களேன்...சார்...
ஐயா...போதும்யா....இருநூறு ரூபாயே ரொம்ப ரொம்ப ஓவர்......அப்படின்னு என் பையன் சொன்ன மேட்டரை கவனிக்க போய்ட்டேன்....
ஆனா, ஒண்ணுங்க....என் பையனுக்கு மட்டும் சரியான நேரத்துல உச்சா வரலைன்னா....ஆயிரம் ரூபாயை விட்டு இருப்பேங்க.....
"ஒரு சின்னப் பையன், 10 நிமிஷம் பேசி, இருநூறு ரூபாய் வாங்கிட்டான் பாருங்க...உங்கள எல்லாம்....." என்று மனைவியின் புலம்பல்களோடு, ஷாப்பிங்க் போயிட்டு வந்தோம்...
எப்படி எல்லாம் டெக்னிகல ஏமாத்துறாங்க பாருங்க.....
14 comments:
சார், உங்க குடும்பத்துல ஒரு தீராத கஷ்டம் இருக்கு...அதை போக்கணுமா வேணாமா , சொல்லுங்க சார்.
கடைக்குப் போன என் மனைவி வந்துட்டாங்க.
- :):):):):)
"Sachanaa said...
சார், உங்க குடும்பத்துல ஒரு தீராத கஷ்டம் இருக்கு...அதை போக்கணுமா வேணாமா , சொல்லுங்க சார்.
கடைக்குப் போன என் மனைவி வந்துட்டாங்க.
- :):):):):) "
ஆகா...குடும்பத்துல குழப்பத்த உண்டாக்கிடுவீங்க போல இருக்கே... : )
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க சச்சனா...!
semma comedy kabila, unakae oruthan bit pottu irkana avan unmailiyae murugan avadharam dhan avan kitta etho oru sakthi iruku.
"Satish said...
semma comedy kabila, unakae oruthan bit pottu irkana avan unmailiyae murugan avadharam dhan avan kitta etho oru sakthi iruku. "
ஹா ஹா...
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுறீங்களே சதீஷ்...: ) !
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க!
ஹ ஹ ஹ
"sakthi said...
ஹ ஹ ஹ "
என்னாங்க சக்தி இது...சின்னப்புள்ளத்தனமா இருக்கு... : )
மனுஷன் ஃபீலிங்க்ஸ்ல எழுதினா..சிரிச்சிட்டு போறீங்களே!
தங்கள் வருகைக்கும் சிரிப்பிற்கும் நன்றிங்க!
Ethu kadavul seyal than kabila..
"ஒரு நூறு ரூபாயை இந்தப் படத்துல வையுங்க...திருப்பி கொடுத்துடுறேன்னு
சொன்னார்."
He is a honest person, jus wanted 100rs. You fueled the greed in him by placing 500Rs
"நூறு ரூபாய் இல்லை...ஐநூறு ரூபாயாத் தான் இருக்குன்னு வச்சேன். அந்த ரூபாய் நோட்டை எடுத்து ஏதோ எழுதிட்டு, கையில வச்சு இருந்த சாமி படத்துக்கு கீழ வச்சுட்டார்..."
Also it seems he got you in front of ATM.
Hillarious. u r writing improves day by day.
Ram
"Anonymous said...
Ethu kadavul seyal than kabila..
"ஒரு நூறு ரூபாயை இந்தப் படத்துல வையுங்க...திருப்பி கொடுத்துடுறேன்னு
சொன்னார்."
He is a honest person, jus wanted 100rs. You fueled the greed in him by placing 500Rs
"நூறு ரூபாய் இல்லை...ஐநூறு ரூபாயாத் தான் இருக்குன்னு வச்சேன். அந்த ரூபாய் நோட்டை எடுத்து ஏதோ எழுதிட்டு, கையில வச்சு இருந்த சாமி படத்துக்கு கீழ வச்சுட்டார்..."
Also it seems he got you in front of ATM.
Hillarious. u r writing improves day by day.
Ram "
ஆமா..ஏடிஎம் முன்னாடி தான் நான் மாட்டினேன். இனிமே கொஞ்சம் உஷாரா இருக்கணும். ஒரு கும்பலாத் தாண்டா அலையுறாங்க.. : )
தங்கள் வருகைகும் கருத்திற்கும் நன்றிங்க ராம்!
Damn man. After we had a big conversation today. This thought got into my mind.
That fellow would have surely known that the particular atm spits only 500Rs notes.
Many before you would have said the same thing I do not have 100Rs nd only 500Rs as they come to ATM for money.
He truly ripped you off man. It was a total play from the beginning. Buddy did this flashed in your mind?
Ram
You could have brought it to the attention of police so that innocent public can be warned.
Anonymous said...
Damn man. After we had a big conversation today. This thought got into my mind.
That fellow would have surely known that the particular atm spits only 500Rs notes.
Many before you would have said the same thing I do not have 100Rs nd only 500Rs as they come to ATM for money.
He truly ripped you off man. It was a total play from the beginning. Buddy did this flashed in your mind?
Ram
May be there are chances, that he might be aware of that ATM. That doesn't come to my mind at that time Ram.
"சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said...
You could have brought it to the attention of police so that innocent public can be warned."
நிஜம் தான். இனிமே இன்னும் கொஞ்சம் பொருப்பா நடந்துக்குறேங்க. இப்போதைக்கு நம்மால முடிஞ்சது இதை இந்த பதிவின் மூலமா பலருக்கு சொல்லி இருக்குறது தான்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
அஃகஃகா..... எதுக்கும் உங்க பையனோட கூட்டணிய வலுவாக்கிகுங்க... முன்னபின்ன இருந்தா காப்பாத்துவான் பாருங்க....
"பழமைபேசி said...
அஃகஃகா..... எதுக்கும் உங்க பையனோட கூட்டணிய வலுவாக்கிகுங்க... முன்னபின்ன இருந்தா காப்பாத்துவான் பாருங்க...."
என்னா வில்லத்தனம்...இருந்தாலும் உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு!
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க!
Post a Comment