Tuesday, April 28, 2009

ரயில்- இதுல ஒரு சந்தோஷம்

சனிக்கிழமை வந்தா போதும் உடனே பெட்டி தூக்கிட்டு சென்னையில் இருந்து வேலூர்க்கு கிளம்புவோம். அதுவும் , நமக்கு வசதியான நேரத்துல இருக்க ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ்ல தான் போவோம். மாலை 5.50 மணிக்கு புறப்படும்.
ஒரு நாள் நான் கொஞ்சம் சீக்கிரமாகவே சென்ட்ரல்க்கு வந்துட்டேன். அப்படி இருந்தும் உட்கார இடம் இல்ல. சரி , வழக்கம் போல நாம படிகட்டுல உட்கார்ந்துக்கலாமேன்னு ,அங்க இருந்த கம்பிய பிடிச்சுட்டு நின்னேன் . அந்த படிக்கட்டு இடத்தை ரிசர்வ் பண்ற மாதிரி. தண்ணி கூட வாங்க போகல...எங்க இந்த இடம் போய்டுமோன்னு.. ரயில் கிளம்புற நேரம் வந்துருச்சு. திடீர்னு ஒரு கூட்டம் நிறைய பெட்டிகளோட, குடும்பத்தோட ரயில் ஏற வந்தாங்க. சரி வழி விடுவோமேன்னு நகர்ந்து நின்னேன். அந்த cycle gapல ஒரு ஆசாமி டக்குனு அவருடைய சீட்டை , படிகட்டுல park பண்ணிட்டாரு. எனக்கு செம tension, இவ்ளோ நேரம் நம்ம wait பண்ணோம், இப்படி திடீர்னு ஒருத்தர் வந்து உட்கார்ந்துட்டாரேன்னு. கேட்டு பார்த்தேன், ஆசாமி அடம் பிடிச்சு அங்கேயே உட்கார்ந்தார். ரயில் கிளம்பிடுச்சு, வேற வழி இல்லாம, நான் நின்னுட்டு இருந்தேன். ரயில் திருவள்ளூரை தாண்டி வேகமாக போய்க் கொண்டிருந்தது. திடீர்னு, பயங்கரமான மழை. பட பட படன்னு...படிகட்டுல உட்கார்ந்த ஆசாமி வேக வேகமா எழுந்துக்க try பண்ணார். But, அதுக்குள்ளே முழுசா நனஞ்சிட்டார். எனக்கு உள்ளுக்குள்ள ஒரே சந்தோஷம். சிரிப்பு வந்துருச்சு. அந்த ஆசாமிக்கு என்ன பண்றதுன்னு தெரியாம...தலையை துவட்டிக்கொண்டே உள்ளே போய் நின்னுட்டார்.

இப்படி ரயில் பயணங்களில் கிடைக்கும் சுவாரஸ்யமான அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை.


No comments:

LinkWithin

Blog Widget by LinkWithin