Saturday, October 3, 2009

பெண்களின் சுகமான திருமண வாழ்க்கைக்கு சில யோசனைகள் !

திருமண வாழ்க்கை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, ஒவ்வொரு எதிர்ப்பார்ப்பு இருப்பது சகஜம். ஆனால், திருமணம் முடிஞ்ச ஒன்றிரண்டு மாதங்களிலேயே, "அவர் நம்ம நினைச்ச மாதிரி இல்லயே..." என்று நினைக்கத் தோன்றுவது மிக இயல்பு. இது ரொம்ப பொதுவான மேட்டர். இதுல காதல் திருமணங்களும் விதி விலக்கல்ல. காதலில், காதலர்கள் நல்ல குணங்களை மட்டுமே வெளிப்படுத்துவர், மற்றவரை கவருவதற்காக. ஆனால் கல்யாணத்திற்கு பிறகு உண்மைக் குணம் வெளியில் வரும். அந்த உண்மைக் குணம், பத்து வருஷ உண்மைக் காதலிலும் வெளிவந்திருக்காது. என்னைப் பொருத்தவரை ஒருவரை ஒருவர் மனதார புரிந்து கொண்டு தான் காதலிக்கிறோம் என்பதே ஒரு பொய்.

கொஞ்சம் விட்டுக் கொடுத்து, கொஞ்சம் புரிந்து கொண்டு நடந்தால், இவை எல்லாவற்றையும் தகர்த்து, நல்ல அமைதியான, சுகமான திருமண வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இந்த காலத்து இந்தியப் பெண்களுக்கு, ஏதோ நமக்கு தெரிஞ்ச யோசனைகள் இங்கே !

1. கல்யாணம் முடிந்து புகுந்த வீடு போகும் போது, புது இடம், எல்லாமே புது உறவுகள். கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கும். சாதாரணமா அன்பா பேசுறாங்களா, திட்றாங்களா, கிண்டல் பண்றாங்களான்னு புரியவே கொஞ்ச நாள் ஆகும். நிலைமை இப்படி இருக்க, நீங்க அவங்கள நல்லா புரிஞ்சுக்குற வரைக்கும், அனைவரிடமும் சிரித்த முகத்துடன்,கலகலன்னு,அன்பா பேசுவது தான் முதல் படி. இதை பார்த்ததும், உங்க ஆளு உச்சி குளிர்ந்து, அன்பு மழையைப் பொழிவார்.

புகுந்த வீடு செல்வதும், முதல் நாள் கல்லூரிக்கும் செல்வதும் கிட்ட தட்ட ஒரே மாதிரி தான். சீனியர்சின் ரேக்கிங்க் இருக்கும், கிண்டல் இருக்கும், நான் தான் பெரிய ஆள் ந்னு நிறைய பேரு காமிச்சிக்க முயற்சி செய்வாங்க. எல்லார் கிட்டயும் சரிங்க சார், செய்றேன் சார்ன்னு சொல்றதில்லை? அதே மாதிரி. ஆனா போகப் போக, அப்படி ரேக்கிங்க் செய்தவர்களே நமக்கு உதவும் சிறந்த நண்பர்களாக மாறுவர். அதே போலத் தான் புகுந்த வீடும்.

இல்லை. அதெல்லாம் முடியாதுன்னு சொல்லி, புகுந்த வீட்டில் கால் எடுத்து வச்ச உடனே, ஒரு கை பாத்துடுவோம்னு களத்தில் இறங்குவது என்பது...

கிரிக்கெட்டில், Opening Batsman, அவர் முதல் முறையாக விளையாடும் கிரவுண்டில், பிட்ச் ரிப்போர்ட் கூட பாக்காம, Helmet,Guard என எந்த கவசமும் அணியாமல், ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே, Brett Leeயின் முதல் பந்தை சிக்சர் அடிக்க முய்ற்சி செய்ற மாதிரி, ரொம்ப ஆபத்தா தான் முடியும்..

2. கணவர் செய்கிற, ஒண்ணுத்துக்கும் உதவாத வேலையா இருந்தாலும், அப்ப, அப்ப சின்ன சின்ன பாராட்டுதல்கள் (appreciation) சொல்றது நிறைய சமயங்களில் நல்லா வொர்க் அவுட் ஆகும். இதுல ஒண்ணும் இமேஜ் டேமேஜ் ஆகப் போறதில்லையே : )

பொதுவாகவே, பெண்களுக்கு எப்படி அழகையும் வயதையும் புகழ்வது பிடிக்குமோ, அதே போல ஆண்களுக்கு அவர் செய்யும் வேலைகளை பாராட்டுவதைப் பெரிதும் ரசிப்பர்.

உதாரணத்துக்கு, என்னங்க, நேத்து நீங்க வாங்கிட்டு வந்த தக்காளி அவ்ளோ சுப்பரா இருந்துச்சுங்க...எங்க வாங்கிட்டு வந்தீங்க..... அப்படின்னு சொல்லலாம்.

இதுக்கு பெங்களூர் தக்காளி எப்படி இருக்கும், நாட்டுத் தக்காளி எப்படி இருக்கும்னே தெரியாது...அதுமட்டுமல்ல, இதை எப்படியும் அவர் பொறுக்கி போட்டு வாங்கி வந்திருக்கமாட்டார், கடைக்காரரே எடுத்துக் கொடுத்திருப்பார் என்று நன்றாக தெரிந்தாலும், இப்படி சொல்றதால, அடுத்த முறை கடைக்கு போகச் சொன்னா சந்தோஷமா ஓடி ஓடி போவார் பாருங்க : )

3. இரு வீட்டாரிடமும் ஒரே மாதிரியான மரியாதையும்,அன்பையும் வெளிப்படுத்துறது ரொம்ப முக்கியம். இதை செஞ்சாலே பல பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம்.

மனைவி :ஏங்க, இன்னைக்கு மதியம், எங்க பெரியப்பா பையன் வந்திருந்தாருங்க... ஆஸ்திரேலியாவில் இருந்து ஹாரி பாட்டர் டிவிடி வாங்கிட்டு வந்தாருங்க...
கணவன் :அப்படியா...சரி வேற யாரு வந்தாங்க...
மனைவி : ஹ்ம்ம்...வேற யாரு...உங்க அக்கா தான்...சரவணா ஸ்டோர்ஸ்ல இருந்து ஒரு ஓட்டை சோனி டிவிடி ப்ளேயர் வாங்கிட்டு வந்தாங்க...

இந்த மாதிரி விஷயங்கள் நம்ம ஆளை ரொம்ப கடுப்பேத்துற மேட்டர். நம்ம ஆளு,அப்ப, அமைதியா தலையை ஆட்டிப்பார். ஆனா, இன்னொரு சான்ஸ் வரும் பாருங்க...

மனைவி : ஏங்க இந்த சுரிதார் எனக்கு எப்படி இருக்குங்க...?
கணவன் : உனக்கு ரொம்ப நல்லா இருக்கு மா...
மனைவி : எங்க அம்மா எடுத்து கொடுத்ததுங்க...
கணவன் : நெனச்சேன்...ரெங்கநாதன் தெரு பிளாட்பார்ம்ல விற்கிற சுரிதார் பிட்டை, அந்த தெரு சந்துல இருக்க டைலர் கிட்ட கொடுத்து ஒரு மணி நேரத்துல தச்சு வாங்கிட்டு வந்த மாதிரியே இருந்தப்பவே நினைச்சேன்...

இப்படித் தான் நம்மாளு கிட்ட இருந்து பதில் வரும். இதை எல்லாம், இருவீட்டாரிடமும ஒரே மாதிரி நடந்துகிட்டா வராது. உள்ளுக்குள்ள யாரு வீட்டுக்கு வேணும்னா சப்போர்ட் பண்ணிக்கோங்க...வெளியில எஃஸ்போஸ் பண்ணாதீங்க...

4. நம்மாளு அலுவலகத்திலிருந்து எப்படி வர்றார்னு, அவருடைய Moodஐ புரிஞ்சுக்கோங்க. முகம் லைட்டா நம்ம மூஞ்சூர் மாதிரி இருந்துச்சுன்னா...அல்ர்ட் ஆயிடுங்க. மாமா வொர்க் டென்ஷன்ல இருக்கார். மெதுவா விசாரிச்சுப் பாருங்க. பெரிய ரெஸ்பான்ஸ் இல்லைன்னா அவரை அப்படியே விட்டுறுங்க. அரை மணி நேரத்துல தானா நார்மல் நிலைமைக்கு திரும்பி வந்துருவார். நம்மல கண்டுக்கவே இல்லைன்னு, ஒரு மூளைல மூஞ்சைச் தூக்கிக் கொண்டு உட்கார்ந்து, இன்னொரு மூஞ்சூராக மாறுவதை தவிர்க்கவும் : ) .

பொதுவாகவே பிரச்சினைன்னு வந்தா, பெண்களுக்கு அதைப் பற்றி பேசுவதில் தான் திருப்தி இருக்கும். ஆனால், ஆண்களுக்கு அந்தப் பிரச்சினைகளை யாரிடமும் சொல்லாமல் தானே சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பிரச்சினையில் இருந்து வெளிவர தன்னை ஒரு குகையில் தனியாக விட்டுவிடுவதையே ஆண்கள் விரும்புவர்.(Men are from Mars, Women are From Venus - John Gray என்கிற புத்தகத்திலிருந்து சுட்ட கருத்து.

5. திருமண வாழ்க்கையில சின்ன சின்ன சண்டை வருவது ரொம்ப சாதாரணம். அந்தச் சண்டையை யார் ஆரம்பித்தாலும், அதில் உணர்ச்சிவசப்பட்டு, வாதத்தை வளர்த்து பெரும் சண்டையாக மாற்றி விடுவது பெரும்பாலும் பெண்கள் தான். அதனால, காதலன் சங்கர் ஸ்டையில்ல, கோபமோ சோகமோ துக்கமோ ஒரு 10 நிமிஷம் தள்ளி போடுங்க மேடம். அப்புறம் 15 ஆவது நிமிடத்துல சண்டை ஆட்டோமேட்டிக்கா போயிடும். இன்னும் கொஞ்சம் டெக்னிக்கலா ஹேண்டில் பண்ணா, ஊடலாகவே மாறிடும் வாய்ப்புகள் அதிகம்.
மனைவி : உன்னைப் போல் ஒருவன் ரொம்ப நல்ல படம்.
கணவன் : யார் சொன்னது அது ஒரு மொக்கை படம்.
மனைவி : கமல், எனக்குப் பிடிக்கும்னு தெரிஞ்சு வேணும்னே சொல்றீங்களா?
கணவன் : கமல், அதுல ஒரு பாசிச கருத்தை சொல்லி இருக்கார்...அது மோசமான படம்...
மனைவி: இதையே தான் கொஞ்சம் வேற விதமா இந்தியன்ல சொல்லி இருக்காங்க, அப்புறம் அன்னியன்ல சொல்லி இருக்காங்க...அப்போ எல்லாம் , பூச்சி போறது கூட தெரியாம,ஆ ன்னு வாயை திறந்துட்டுப் பார்த்தீங்க...ஹீரோயின் இடுப்பை காட்டிட்டு ஆட்டம் போடலைன்னா உங்களுக்கெல்லாம் எந்தப் படமும் பிடிக்காதே....

ஸ்டாப்.....10 நிமிஷம் பிரேக் கொடுங்க...(Have a Kit kat..)

மனைவி : சரி, அதை விடுங்க....வாங்க நம்ம கோலங்கள் சீரியல் பார்க்கலாம். அதுல தோழரை, தில்லா அடித்துக் கொண்டிருக்கிறார்..
கணவன் : அடடே...ஆமா..மா...இந்த சமயத்துல அந்த தொல்காப்பியன் எங்க போய் தொலைஞ்சான்...
: )

6. SEX.
சாதாரணமாவே, நம்மாளு ஒரு கல்லுளி மங்கன் மாதிரி. அன்பு, பாசம், காதல் எல்லாம் டின் டின்னா டப்பால இருந்தும்,அதை வெளிப்படுத்தவே மாட்டார். ஆனா, இந்த சமயத்துல, காதல் வசனங்களை அள்ளி வீசுவார். உடல்கள் இணைவது மட்டுமல்ல, அந்த சமயத்தில் மனங்களும் இணையும் அதுவே தாம்பத்யம். கணவன் மனைவியரிடம் தோன்றும் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் பாம்பன் பாலமாக இருப்பது இந்த மேட்டர் தான்.
(டேய்...டேய்...போதும்டா...நிறுத்து...)

7. அன்பு. இந்த விஷயத்தில் பெண்களை அடிச்சிக்க ஆள் இல்லை. அதனால இதுல எந்த யோசனையும் கிடையாது. நம்மாளு அன்பை வெளிப்படுத்தாமல் இருந்தாலும், அன்பை வெளிப்படியாக பெருவதில் பெரு மகிழ்ச்சி அடைவார். அதைக் கூட வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார் : )

8. மருமகள், மாமியார் - சிறு சிறு சண்டைகள் வருவது இயல்பு. இதைப் பெரிதுபடுத்தி, நம்ம ஜெண்டில்மேன் கிட்ட போய் சொன்னீங்கன்னா, ஒரு ரெஸ்பான்சும் பண்ண மாட்டார். எவ்வளவோ ப்ரூவ் பண்ண நினைச்சாலும், அதை ஒப்புக் கொள்ளவே மாட்டார். அட நம்ம அம்மாவை வில்லியாக சித்தரிக்க முயற்சி செய்றாளே, என உங்களைத் தான் வில்லியாக நினைப்பார். ஏன்னா, எப்பேற்பட்ட, தில்லாலங்கடியா இருந்தாலும், இந்த விஷயத்துல பெரும்பாலான ஆண்கள் ஒரே மாதிரி தான். அப்படி ஒரு நினைப்பை வளர விட்டால், உங்கள் மேல் செலுத்தும் அன்பு அரை குறையான அன்பாகவே கருதப்படும். அதுமட்டுமல்ல, பெண் வீட்டாரிடம் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பதும் இதில் இருக்கிறது.


இதுல மட்டும் சீரியசா இல்லைன்னா, நம்ம ஜெண்டில்மேன் WWF ல நடக்கும் குத்துச் சண்டை வீரர்களுக்கு மத்தியில் மாட்டிக் கொள்ளும் Referee வேலையையே, வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டி வரும். அன்பிற்கு நேரம் இருக்காது : )

இதெல்லாம் கொஞ்சம் adjust பண்ணி, ஒரு இரண்டு வருடம் பின்பற்றினால், அப்புறம் என்ன எல்லாமே சூப்பர் தான். ஜெண்டில்மேன் மட்டும் இல்ல, அந்த மொத்த குடும்பமே உங்களை மகாராணியா தூக்கி வைத்து கொண்டாடும். பிறகென்ன, கணவனும்,மனைவியும், டிவி விளம்பரத்தில் வரும் சன்ரைஸ் ஜோடி மாதிரி ஒருவொருவருக்கொருவர் அன்பாகவும்,சந்தோஷமாகவும் காபி குடிச்சே காலத்தை ஓட்டலாம் : )

கைதுறப்பு: நகைச்சுவைக்காக எழுதியவையே, யாரையும் புன்படுத்தும் நோக்கம் அல்ல.

14 comments:

Suresh Babu said...

Dr. Kabilan Vaazhga..!!

கபிலன் said...

"Suresh Babu said...
Dr. Kabilan Vaazhga..!!"


வாங்க சுரேஷ் பாபு...
ஐயோ நம்ம பொட்டி தட்டிட்டிருக்கோம்ங்க....டாக்டர் இல்லீங்க... : )

Anonymous said...

கபிலன் இந்த மாதிரி topic எல்லாம் எப்படி உங்களுக்கு தொணுது...”பெண்கள் இன்னமுமா...நம்ம சொல்றத..ஒத்துக்குவங்கனு நம்புறிங்க.... ”


“பொதுவாகவே, பெண்களுக்கு எப்படி அழகையும் வயதையும் புகழ்வது பிடிக்குமோ, அதே போல ஆண்களுக்கு அவர் செய்யும் வேலைகளை பாராட்டுவதைப் பெரிதும் ரசிப்பர்.”
---உங்கள மாதிரி நானும் நிறையா தக்காளீ வாங்கிருக்கென்....


உண்மையிலேயே... ”ச” என்ற எழுத்த(matter-ன் மொத்த அளவு) ”சண்டை யா...மாத்துறது பெண்கள் தான்....”

விட்டு கொடுப்பது என்பது தோல்வி அல்ல...ஒரு வகையான வெற்றி தான்...(...இத simple la.. சரி விடுமானு...நம்ம சொல்லுவது மதிரி...)

உடல்கள் ஒன்றாவது இல்லறமல்ல,இரு மனமும் ஒன்றாவது தான் இல்லறம்...உங்களது கட்டுரை பெண்களுக்கு மட்டும்மல்ல ஆண்களுக்கும் தான்...

என்றும் உங்களுடன்,
ந.நிருபன்.

கபிலன் said...

"கபிலன் இந்த மாதிரி topic எல்லாம் எப்படி உங்களுக்கு தொணுது...”பெண்கள் இன்னமுமா...நம்ம சொல்றத..ஒத்துக்குவங்கனு நம்புறிங்க.... ”"

நம்பிக்கை தாங்க வாழ்க்கை : )

"---உங்கள மாதிரி நானும் நிறையா தக்காளீ வாங்கிருக்கென்...."

பெரும்பாலான வீடுகளில் நடக்குற பொதுவான விஷயன் தாங்க இது : )

"விட்டு கொடுப்பது என்பது தோல்வி அல்ல...ஒரு வகையான வெற்றி தான்...(...இத simple la.. சரி விடுமானு...நம்ம சொல்லுவது மதிரி...)"

முக்கியமான பாயிண்ட் !

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க நிரூபன்!

ரவி said...

ரொம்ப பட்டு தெளிஞ்சமாதிரியிருக்கு !!!

கலக்கல் !!!!!!!!

எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் நகைச்சுவை பூந்து வெளாடுது...

கபிலன் said...

"செந்தழல் ரவி said...
ரொம்ப பட்டு தெளிஞ்சமாதிரியிருக்கு !!!

கலக்கல் !!!!!!!!

எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் நகைச்சுவை பூந்து வெளாடுது... "


: )
இந்தப் பதிவை கொஞ்சம் சீரியசா போட்டா, நாம சொல்ல நினைக்குற மேட்டர் நிராகரிக்கப்படுமேன்னு ஒரு பயம் தாங்க : )

நன்றிங்க செந்தழல் ரவி!

தேவன் மாயம் said...

உங்களுக்கு விருது ஒன்று உள்ளது. வந்து பெற்றுக்கொள்ளவும்!

ப்ரியமுடன் வசந்த் said...

நடத்த்டி மச்சி

கல்யாணம் ஆயிடுச்சா?

ரோஸ்விக் said...

பல பெண்களின் (குடும்பங்களின்) சந்தோசத்திற்கு உதவும் பதிவு. எழுதியது எல்லாம் உண்மை. வாழ்த்துக்கள் நண்பா!!

கபிலன் said...

"தேவன் மாயம் said...
உங்களுக்கு விருது ஒன்று உள்ளது. வந்து பெற்றுக்கொள்ளவும்! "

டாக்டர்...இதோ வர்றேங்க...
விருதிற்கு ரொம்ப நன்றிங்க தேவன் மாயம்!

கபிலன் said...

"பிரியமுடன்...வசந்த் said...
நடத்த்டி மச்சி

கல்யாணம் ஆயிடுச்சா"

: )
அந்த சம்பவம் நடந்து 2 1/2 வருஷம் ஆகுது : )

கபிலன் said...

"ரோஸ்விக் said...
பல பெண்களின் (குடும்பங்களின்) சந்தோசத்திற்கு உதவும் பதிவு. எழுதியது எல்லாம் உண்மை. வாழ்த்துக்கள் நண்பா!! "

நன்றிங்க ரோஸ்விக்.
ஆனா, பெண்களிடம் இருந்து ஒரு ரெஸ்பான்சும் வராதது, அவங்க இதை ஒப்புக் கொள்ளவில்லையோன்னு தோணுது!

Anonymous said...

super!

கபிலன் said...

Anonymous said...
super!

நன்றி அனானி!

LinkWithin

Blog Widget by LinkWithin