Monday, October 1, 2012

ஆய் கழுவ மட்டும் ஆயா வேணுமா ?இன்று முதியோர் தினம்!


இன்று உலக முதியோர் தினம் !

நம்மை எல்லாம் பள்ளிக் கூடத்திற்கு கை பிடித்து ஆசையாய் அழைத்துச் சென்ற தாய் தந்தையரை, முதியோர் இல்லம் தேடிச் சென்று சேர்த்து விடும் படித்த மேதாவிகள் நாம்.  இதைப் பற்றி கொஞ்சம் நேரமாச்சும் நம்ம யோசிச்சு பார்க்கணும்.

நம்ம சின்ன வயசுல, நம்ம தாத்தா பாட்டி கிட்ட, ஆயா வடை சுட்ட கதையில் தொடங்கி ராமாயணம், மகாபாரதம் வரை ஆர்வமாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்போம். நம் தாய் தந்தையரிடமிருந்து அன்றைய காலகட்ட சிந்தனைகளையும், தாத்தா பாடியிடம் இருந்து நம் முன்னோருடைய வாழ்க்கை முறையும் சேர்த்து கற்றுக் கொண்டோம். ஆக மொத்தம் நம் வாழ்கைக்கு தேவையான நல்ல விஷயங்களை, நல்ல பண்புகளை கற்றுக் கொண்டோம்.


பொதுவாக நம்ம ஊர்ல பெண்கள் புருஷன் வீட்டுக்குப் போயிட்டு, அந்த குடும்பத்தைப் பார்க்க வேண்டிய பொறுப்பை ஏற்கிறார்கள். ஆண்கள், தன் தாய் தந்தையரை கவனித்துக் கொள்ள வேண்டும்.  எனக்குத் தெரிந்த வரை ஒரு பேச்சலர் கூட் தன் தாய் தந்தையரை முதியோர் இல்லம் கொண்டு போய் சேர்த்ததாக தெரியவில்லை. ஆக, இந்த இரு நிலைகளிலும், ஆணுக்குத் திருமணம் ஆகும் வரை தாய் தந்தையரை நல்லா தான் பார்த்துக்குறாங்க. அதுக்கு அப்புறம் தான் மேட்டரே.  என்ன வித்தியாசம்னு பார்த்தீங்கன்னா...புதுசா ஒரு பொண்ணு எண்ட்ரீ : ) ஆக, இந்த நிலைமைக்கு பெரும்பான்மயான காரணம் பெண்கள் தான்.

மீடியாக்கள் இந்த விஷயத்தை மேலோட்டமாக எழுதுறாங்க. கொஞ்சம் டீடெய்லா எழுதினா பெண் அமைப்புகள் சண்டைக்கு வந்துடுவாங்க...வியூவர்ஷிப் போயிடும்னு ஒரு பயம் கூட காரணமா இருக்கலாம். அதனால, இது தொடர்பாக எனக்குத் தோன்றிய சில விஷயத்தை இங்க சொல்றேன்.

1.பெரும்பாலும் ஒரு ஜெனரேஷன் கேப். படித்த மருமகள் படிக்காத மாமியார். அவங்களுக்கு ஒண்ணும் தெரியாது, அதனால அவங்க சொல்றத நான் என்ன கேக்குறது என்ற மெண்டாலிட்டி.

2.ஒரு ஆணைப் பொறுத்த வரை, ஒரு பெண் கொடூரமான சித்தியாக இருக்கலாம், மோசமான அத்தையாக இருக்கலாம், ஏன் சுயநல அக்கா தங்கையா கூட இருக்கலாம். ஆனால், அம்மா என்பவள் தான் உலகமே. என்ன தான் மனைவி கதை கதையா சொன்னாலும், பெரும்பாலும் அம்மா சைடு தான் இருப்பாங்க (வெளியில் மனைவிக்கு சப்போர்ட் பண்ற மாதிரி தெரியும் :) ). இந்த மாதிரி விஷயங்களில் மருமகளுக்கு ஒரு வித பயம், பாதுகாப்பின்மை எல்லாம் வருது இயல்பு. அதுக்கு டைம் பார்த்து கௌண்ட்டர் அட்டாக் கொடுக்க வெயிட் பண்றாங்க. இது ஒரு continuous process. இது விரிசலில் தான் முடியுது.

3. என் புள்ளைக்கு ஆய் கழுவ மட்டும் ஆயா வேணும் என சுயநலமாக தன் வேலைச் சுமைகளை இறக்கி வைப்பதற்காகவே முதியவர்களை பயன்படுத்துவது. இது தப்பில்ல, ஆனால் அவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்யணும்னு நினைக்கணும்.

4. மூன்று வேளை சாப்பாடு போட்டு, அவர்கள் தங்க வீட்டில் ஒரு ஓரமாக இடம் கொடுக்க கூட முடியாத ஒரு மகன், எவ்வளவு தான் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருந்தாலும், அவன் ஒரு ..............................(நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்).

5. வயசு ஆக ஆக, முதியவர்களின் செயல்பாடுகளும் சற்று மாறுவது இயல்பு தான். இதனை அறிந்து விட்டு கொடுக்க மறுப்பது என்பது நம்முடைய அறியாமையை காட்டுகிறது.  நேருக்கு நேர் நின்று நீயா நானா என்று சண்டையிட்டு யார் வெற்றி பெற்றாலும், தோல்வியடையவது என்னவோ குடும்பம் தான்.

6. இவ்வளவு கஷ்டப்ப்ட்டு வளர்த்த தாய் தந்தையரை......இந்த பாயிண்ட் நிறைய பேர் சொன்னதால இதோட நிறுத்திக்குறேன்.

7. அன்பு, பாசம், வாழ்க்கை மட்டுமல்ல அவர்கள் வாழ்நாளில் சேர்த்து வைத்த சொத்தையும் பிடுங்கிக் கொண்டு முதியோர் இல்லத்தில் சேர்ப்பவனுக்கும், கொள்ளைக்காரனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.


இதை எல்லாம் ஏதோ சமூக நலத்தோடு மட்டும் சொல்லல. ஒரு சுயநலத்தோட கூடிய பயத்தில் தான் சொல்றேன். நமக்கும் ஒரு நாள் நரம்புகள் தளரும், ரத்தம் சுண்டும், மாத்திரைகளே உலகமாகும், Adult Diaperகளே உடையாகும்.  நமக்கும் முதியோர் இல்லங்கள் தானா ? என்ற ஒரு பயம் தான்.

யாரையும் புன்படுத்தனும்னு நினைச்சு இதை எழுதல. முதியோர் இல்லங்கள் பெருகுவதற்கான காரணங்களாக எனக்கு தோன்றியவையைத் தான் எழுதி இருக்கேன். உங்களுடைய கருத்துக்களைச் சொல்லுங்கள்.


நம்முடைய குழந்தைகளை நாம் எப்படி கவனிச்சுக்குறோமோ...அதே மாதிரி நம்மைப் பெத்தவங்களையும் கவனிச்சுப்போமே!
அன்பான வார்த்தையும், மரியாதையான வாழ்க்கையும் முதியோர்களுக்கு அளிப்போம் என உறுதி எடுப்போம்!


LinkWithin

Blog Widget by LinkWithin