Wednesday, April 29, 2009

சுகமான திருமண வாழ்க்கைக்கு சில யோசனைகள்! (ஆண்களுக்கு)

இன்றைய காலகட்டத்தில்,பெரும்பாலானவர்களுக்கு எதிர்பார்த்தது ஒன்று, நடப்பது வேறொன்றாக திருமண வாழ்க்கை அமைவது இயல்பானதே. இதற்கு பொருத்தம் இல்லாமை காரணம் அல்ல, சரி வர புரிந்து கொள்ளாமை தான் காரணம். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவரவர் நிஜமான குண நலன்கள் திருமணத்திற்கு பிறகே தெரிய வரும். காதல் திருமணம் புரிந்தவர்கள் கூட இதில் விதி விலக்கல்ல. Though these are simple issues before understanding each other, some extra steps can definitely make you a real winner in marriage life.
கதை இப்படி போக, ஆண்கள் இதனை சமாளித்து, சந்தோஷமா இருக்க...நமக்குத் தெரிந்த ஒரு சில tips...


7.எவ்வளவு தான் busya இருந்தாலும், வாரம் ஒரு முறை, மனைவியை வெளியே அழைத்துச் செல்வது, ஒரு உற்சாகத்தை அளிக்கும்.

குறிப்பு: முடிந்தால் ஹோடேலில் உணவு அருந்துவது நல்லது. வீடு திரும்பியதும், அதை செய், இதை செய் என்று , சொல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இல்லை என்றால், இந்த Torturekku வெளில போகமலே இருந்து இருக்கலாம்னு சொல்லிடுவாங்க மனைவி.


6. கருத்து வேறுபாடு வரும் பொழுது, மனைவியை முழுமையாக பேச அனுமதிக்க வேண்டும். எடுத்த உடனே, மறுப்பு தெரிவிப்பது, எதிர்ப்பு தெரிவிப்பது நிலைமையை மோசமாக்கும். பொறுமையாக உணர்ச்சி வசப் படாமல் எடுத்து சொல்வது ஆரோக்கியமானதாக இருக்கும்.





குறிப்பு: பெரும்பாலான வாக்கு வாதங்களுக்கு காரணம் என்று பார்த்தால், நிச்சயம் பெண்களாகத் தான் இருப்பர். அது அவர்களுக்கு கொஞ்சம் lateaa தான் புரியும். May be, இதனால் உங்கள் மனைவி "எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான் டா...இவன் ரொம்ப நல்லவன் ....." அப்படின்னு சொல்லலாம்... : )


5. அவ்வப்பொழுது, சின்ன சின்ன Compliments. இன்னைக்கு வச்ச beans சாம்பார் ரொம்ப super. இந்த dress உனக்கு நல்லா இருக்கு....இப்படி....This will definitely work great!
குறிப்பு: Ofcourse, சில சமயம் ரொம்ப கொடுமையா இருக்கலாம் சமையல்...அதை பளிச்சுன்னு சொல்லாம...மெதுவா சொல்றது நல்லது.





4. சின்ன சின்ன surprises will make your partner happy. முக்கியமாக, மனைவியின் பிறந்த நாள், நம் கல்யாண நாள், இதில் special attention and planning for suprises will make her feel you care !
குறிப்பு : Correctaa, அன்று தான் office partyல போய் கலந்து கொண்டு lateaa வருவது, Work irukku ன்னு சொல்றத avoid பண்றது நல்லது! Miss ஆச்சுன்னா, தெரு தான்... "தெய்வம் தந்த வீடு.....வீதி இருக்கு......"


3. Next, ரொம்ப ரொம்ப முக்கியம், தெரியாம கூட , மாமனார்,மாமியார் அல்லது மனைவி side relativesa திட்டுவதையோ, கிண்டல் செய்வதையோ avoid பண்ணுங்க.


குறிப்பு : Ofcourse, some guys do this in some bitter arguments. But its better to avoid. Definitely it will be a great relationship spoiler.





2. In these busy days with lot of external pressure, atleast, thrice a week Sex, will definitely make the relationship sustain. This is just not for physical intimacy, but it will have a greater impact on emotional binding and ofcourse a great stress reliever too.


குறிப்பு: அதுக்காக, உடம்பு சரி இல்லாத நேரத்துல, TimeTable போட்டு வச்சுட்டு, Torture செய்வதை தவிர்ப்பது நல்லது : )






1. Express Yourself ! இது தான் ரொம்ப ரொம்ப important. அன்பை, மனைவியிடம் வெளிப்படியாக பரிமாறிக் கொள்வது. Most of us keep it inside and will not express. May be "I Love you" or a Simple Hug or Kiss can do magics and work like a charm in the marriage life !


ALL THE BEST FOLKS!


Your comments / suggestions /new points are always welcome!

Tuesday, April 28, 2009

ரயில்- இதுல ஒரு சந்தோஷம்

சனிக்கிழமை வந்தா போதும் உடனே பெட்டி தூக்கிட்டு சென்னையில் இருந்து வேலூர்க்கு கிளம்புவோம். அதுவும் , நமக்கு வசதியான நேரத்துல இருக்க ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ்ல தான் போவோம். மாலை 5.50 மணிக்கு புறப்படும்.
ஒரு நாள் நான் கொஞ்சம் சீக்கிரமாகவே சென்ட்ரல்க்கு வந்துட்டேன். அப்படி இருந்தும் உட்கார இடம் இல்ல. சரி , வழக்கம் போல நாம படிகட்டுல உட்கார்ந்துக்கலாமேன்னு ,அங்க இருந்த கம்பிய பிடிச்சுட்டு நின்னேன் . அந்த படிக்கட்டு இடத்தை ரிசர்வ் பண்ற மாதிரி. தண்ணி கூட வாங்க போகல...எங்க இந்த இடம் போய்டுமோன்னு.. ரயில் கிளம்புற நேரம் வந்துருச்சு. திடீர்னு ஒரு கூட்டம் நிறைய பெட்டிகளோட, குடும்பத்தோட ரயில் ஏற வந்தாங்க. சரி வழி விடுவோமேன்னு நகர்ந்து நின்னேன். அந்த cycle gapல ஒரு ஆசாமி டக்குனு அவருடைய சீட்டை , படிகட்டுல park பண்ணிட்டாரு. எனக்கு செம tension, இவ்ளோ நேரம் நம்ம wait பண்ணோம், இப்படி திடீர்னு ஒருத்தர் வந்து உட்கார்ந்துட்டாரேன்னு. கேட்டு பார்த்தேன், ஆசாமி அடம் பிடிச்சு அங்கேயே உட்கார்ந்தார். ரயில் கிளம்பிடுச்சு, வேற வழி இல்லாம, நான் நின்னுட்டு இருந்தேன். ரயில் திருவள்ளூரை தாண்டி வேகமாக போய்க் கொண்டிருந்தது. திடீர்னு, பயங்கரமான மழை. பட பட படன்னு...படிகட்டுல உட்கார்ந்த ஆசாமி வேக வேகமா எழுந்துக்க try பண்ணார். But, அதுக்குள்ளே முழுசா நனஞ்சிட்டார். எனக்கு உள்ளுக்குள்ள ஒரே சந்தோஷம். சிரிப்பு வந்துருச்சு. அந்த ஆசாமிக்கு என்ன பண்றதுன்னு தெரியாம...தலையை துவட்டிக்கொண்டே உள்ளே போய் நின்னுட்டார்.

இப்படி ரயில் பயணங்களில் கிடைக்கும் சுவாரஸ்யமான அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை.


Monday, April 27, 2009

தமிழக அரசியல்வாதிகள்


இந்தியாவிற்கு மகாத்மா காந்தி , சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் ..
பாலஸ்தீனத்திற்கு யாசர் அராபத் ..
அபிரிகாவிற்கு நெல்சன் மண்டேலா ..
கியுபா விற்கு பிடெல் காஸ்ட்ரோ, சேகுவேரா...
ஈழத்திற்கு பிரபாகரன்....
உயிர் தியாகத்திற்கு ஈழ மக்கள்...

ஓட்டுக்காகவும் பதவிக்க்காகவும் மட்டும் நாங்கள்....
உங்கள் பெயரை சொல்லி...

Saturday, April 25, 2009

My First Disco Theque!

2002, Rome, Italy

ஒரே சந்தோஷம்....ஆர்வக் கோளாறு ......ரோம் நகரில் கிடைத்த ஒரு நண்பரின் மூலம் Disco Theque போக போறோம்னு......நானும் , என் நண்பர் சிவ சிதம்பரமும் பரபரப்பாக தயார் படுத்திக் கொண்டு இருந்தோம்....நல்லா shave பண்ணிட்டு....cream எல்லாம் போட்டுட்டு...Jean, Tshirt , Shoes, perfumes னு பயங்கரமான மேக்கப் ......எதேச்சையா ரெண்டு பெரும் ஒரே கலர்ல Jeans(Dark blue) and same colourla Tshirt (light blue)......OK. கார் ல கிளம்பினோம்.... நாங்க இருந்த இடம் Cristoforo Colombo, அங்க இருந்து ஒரு 30 நிமிடம் ஆச்சு போய்சேர.

பெரிய வரிசை டிக்கெட் வாங்க....நல்லா கலர் கலர் பொண்ணுங்க... FTV ல வர பொண்ணுங்க மாதிரி உடை..... ஜொள்ளு விட்டு ரசித்த படி ஆ ன்னு வேடிக்கை பாத்தோம்....எங்க நண்பர் மூலமா டிக்கெட் கெடைச்சது....உள்ள போனோம் ....ஜோடி ஜோடியா வந்து இருந்தாங்க....ஒரு வித்தியாசம்....நானும், சிவாவும் ஒரே மாதிரி உடை போட்டு இருந்த மாதிரி....நிறைய பேரு வந்து இருந்தாங்க....அதாவது 2 gents ஒரே மாதிரி dress. போன உடனே...துண்டு பிரசுரம்....கண்ணு கூசுற மாதிரின்னு சொல்லலாம் இல்லை கண்ணு ரசிக்கற மாதிரின்னு சொல்லலாம்....பயங்கரமான படத்தோட துண்டு பிரசுரம்....அப்புறம் நல்ல Cock Tail வேற ......அப்படியே ரசித்து கொண்டே உள்ள போனோம்.... DJ Music காதை துளைத்து எடுத்துச்சு......உள்ள வந்ததும் எதோ மாதிரியா இருந்துச்சு.....பொண்ணுங்க தனிய டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க.. இரண்டு இரண்டு பசங்க ஒன்ன சேர்ந்து ஆடிட்டு இருந்தாங்க....அதுவும் ஆட்டம் கொஞ்சம் ஒரு மாதிரியா....எங்க ரெண்டு போரையும் ஒரு மாதிரியா பாக்குறாங்க...அதுவும் பொண்ணுங்க பார்த்தால் பரவாயில்லை ....பசங்களே குறு குருன்னு பார்த்தாங்க...சரி ஒரே dressla இருக்கமே. அதனால தான்னு நினைச்சோம்....எனக்கும் , சிவாவுக்கும் ஒரே குழப்பம்....சரி கேப்போமேன்னு கேட்டோம்.......அங்க வந்த பதில்....."Its thursday, Gay Disco Special"
அடக் கடவுளே....அதான் என்னையும், சிவாவையும் ஒரு மாதிரியா look விட்டாங்கனு தெரிஞ்சுச்சு.....அது சரி "Gay Disco " தானே , பொண்ணுங்க எதுக்கு வந்தாங்கன்னு கேட்டோம்...... "In normal Disco, guys will be disturbing the girls, whereas here they wont disturb as they are enjoying with their male partner" நல்ல விளக்கம் ....
Cock Tail மப்பு தெளிஞ்சு போச்சு.......இப்போ வடிவேல் சொல்ற மாதிரி.. "டேய் ...அவனா நீ ! " னு சொல்லிட்டு.... எல்லோருக்கும் ஒரு கும்பிடு போட்டுட்டு... ஓடி வந்துட்டோம்......

Friday, April 24, 2009

வளையல் தொலைந்த கதை...


ஒரு நாள், நான், என் மனைவி(வினோ ) அப்புறம் என் பையன் தீபு(ஒன்றரை வயசு) மூணு பேரும் போத்திஸ் துணி கடைக்கு போனோம்....நல்ல கூட்டம்....பொங்கல் பண்டிகை நேரம் ....அங்க Designer Wear Churidhar Section 3rd floor நெனைக்கிறேன்....ரொம்ப நேரம் அந்த துணி இந்த துணி...அந்த மாடல், இந்த மாடல் அப்படின்னு வினோ தேடி பார்த்துட்டு இருந்தாங்க....நான் தீபு தூக்கி வச்சிட்டு அங்க, இங்க சுத்தி வேடிக்கை காட்டிட்டு இருந்தேன்....திடீர்னு வினோ வந்து...."ஏங்க...குழந்தை கைல போட்டு இருந்த ஒரு வளையல் எங்கே காணோம்" அப்படின்னா....10 grams gold அந்த வளையல்....ஒரே பரபரப்பு...அங்க இங்க கீழ எல்லாம் தேடி பாத்துட்டோம் காணோம்....சரி spy cam recording ல கண்டுபிடிக்க முடியுதான்னு பாத்தோம் ....ஒன்னும் முடில....சரி....என்ன பையன் கிட்ட கேக்கலாமே... எதாச்சம் clue கிடைக்குமேன்னு கேட்டேன்....."தீபு, handsla இருந்த வளையல் எங்க கண்ணா ?"



அதுக்கு என்ன பையன் சொன்ன பதில்....."காக்கா தூக்கினு போச்சு.... "



குழந்தைங்க கிட்ட இருந்து ஒரு பொருளை மறைக்க நாம் சொல்வதை ....என்ன timingla சொன்னான் பாருங்க! வேற வழியில்ல சிரிச்சிட்டே வந்துட்டோம்....!

LinkWithin

Blog Widget by LinkWithin