குடிப்பதே தவறு : ) அதிலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது என்பது மகா மோசமான தவறு என்பதை சமீபத்தில் தான் புரிந்து கொண்டேன். இது உண்மையாக நடந்த சம்பவம்.
இரவு சுமார் 9:00 மணிக்கு, கைப்பேசி அலறியது. எடுத்து பேசினேன். மறுமுனையில் ஒரு பெண்ணின் அழுகுரல், "ஏன் பா, ரமேஷ்க்கு Accident ஆயிடுச்சு பா....அவன் போன காரை ஒரு லாரி மோதிடுச்சாம் பா...தலையில அடியாம், ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டு போயிட்டு இருக்காங்களாம்.....போலீஸ் கேஸ் அது இதுன்னு சொல்றாங்கப்பா...எங்களுக்கு ஒண்ணுமே புரியல கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வர்றீயா பா..". இதோ உடனே வர்றேங்க...நீங்க பயப்படாதீங்க..தைரியமா இருங்கன்னு சொல்லிட்டு கிளம்பினேன். விபத்து நடந்த இடம் சென்னையில் இருந்து 3 மணிநேரப் பயணம். நானும் எனது நண்பரும் காரில் புறப்பட்டோம்.
அதிகாலை சுமார் 1:30 மணிக்கு விபத்து நடந்த பகுதிக்கு வந்தடைந்தோம். புத்தம் புது கார். மூன்று நாட்களுக்கு முன்பு தான் ரமேஷ்,அந்த காரை எடுத்தார். நம்பர் இடப்பட்டிருந்தது, ஆனால் RC புத்தகம் வரவில்லை. காரின் வலது புறம் முற்றிலும் நொறுங்கி இருந்தது. லாரி இடித்த வேகத்தில், கார் கிட்டத் தட்ட 160 டிகிரி சுழன்று சாலையில் இருந்தது. அங்கு நடந்த சம்பங்களைப் பார்த்த போது, தவறு நம்ம ரமேஷ் மீது தான் என்பது தெளிவாக தெரிந்தது.
பிறகு, ரமேஷின் உடல்நிலை விசாரித்தோம். "தலையில் லேசாக அடி மற்றபடி ஒன்றுமில்லை. ஆனால்,Drink and Drive கேஸ் புக் பண்ணி, FIR போட்டாச்சாம். லாரி ஸ்டேஷன்ல இருக்காம். காரையும் tow பண்ணி ஸ்டேஷனுக்கு தான் கொண்டு போகணும்னு சொல்லி இருக்காங்க. நீங்க போய் கொஞ்சம் ஸ்டேஷன்ல பார்த்து பேசுறீங்களா...அவரை கைது பண்ணி ஜெயில்ல வச்சுடப் போறாங்க..கொஞ்சம் பார்த்துக்கோங்க..." என்றார் ரமேஷின் மனைவி.
ஓகே. சரியான ஆளு கிட்ட தான் கேட்டு இருக்கீங்க. நம்ம்லே இது வரைக்கும் போலீஸ் ஸ்டேஷன் ஏறினது கிடையாது. சட்டமும் தெரியாது. கிழிஞ்சது கிருஷணகிரின்னு நினைச்சுகிட்டேன். சரி, முதல்ல காரை ஸ்டஷ்னுக்கு எடுத்துட்டு போகணும். Tow செய்கிற வண்டியை வரவழைத்தோம். சுமார் ஒரு கிமீ தூரத்துல இருக்க ஸ்டேஷன்ல விட 3500 ரூ. அந்த நேரத்துல விலை பேச முடியல. ஆளும் கிடைக்கல. மெதுவா ஸ்டேஷன் வந்து சேர்ந்தோம். அங்க ஆம்புலன்சுக்கு 1500 ரூபாய்.
வேற ஏதோ பிரச்சினைகளில் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. பலரும் கை கால்களில் பேண்டேஜ்களுடன் போலீசாருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர். மெதுவா உள்ளே போனோம்.
"என்னப்பா..என்னா" என்றார் அங்கிருந்த ஏட்டு.
"சார்...இந்த கார் Accident சம்பந்தமா..." என்று இழுத்தேன்.
"ஓஹோ...அந்த Drink and Drive கேசா? நீங்க யார்..என்ன பண்றீங்க.." என்றார்.
"அவரோட சொந்தக்காரர் சார்...சென்னையில கம்புயூட்டர்ல வேலை செய்றேன்.." என்றேன்.
"ஏன்யா...குடிங்க வேணாம்னு சொல்லல....குடிச்சுட்டு எதுக்குய்யா வண்டியை ஓட்டுறீங்க...லாரிக்காரன் பிரேக் பிடிச்சி இருக்கார்....அவன் தான்யா மப்புல வந்து இடிச்சு இருக்கான்...சொல்லுங்க...என்ன பண்ணனும்.." என்றார்.
"சார்..எப்படியாச்சும் கேஸ் போடாம விட்டுற்ங்க சார்...லாரிக்காரரோட சமாதானம் பேசிக்கலாம்" என்றேன்.
"ஆமாம்யா...இப்போ சொல்லுங்க இதை....அப்பவே சொல்லி இருந்தா பேசி முடிச்சு இருக்கலாம்..யாருமே சொல்லலியே...சரக்குல இருந்த பார்ட்டி கூட சொல்லலியே...இப்போ FIR எல்லாம் ரிஜிஸ்டர் பண்ணி ஆச்சு...அது முடியாது...கேஸ் போட்டா தான்யா வண்டிக்கு இன்சுயூரன்ஸ் கொடுப்பான்...உங்களுக்கு நல்லது அது தான்" என்றார்.
(எம்டன் மகன்ல வடிவேலு சொல்ற மாதிரி...முன்ன பின்ன செத்தாத் தான் சுடுகாடு தெரியும்னு சொல்லுவாங்க...சரியாப் போச்சே...அப்பா...நீ எங்க இருக்க அப்பா...)
"சார்...Drink & Driveனு கேஸ் போடாம விபத்துன்னு மாத்திடுங்களேன்" என்றேன்."எல்லாமே ரொம்ப லேட்டாவே சொல்றீங்களே...படிச்ச பசங்க மாதிரி இருக்கீங்க...இதை முதல்லேயே சொல்லி இருந்தீங்கன்னா...அவரை GHக்கு கொண்டு போகாம தனியார் ம்ருத்துவமனைக்கு கொண்டு போய் இருப்போம். இப்போ டாக்டர் ரிபோர்ட்ல , ரமேஷ் குடிச்சுட்டு தான் வண்டி ஓட்டினார்னு எழுதிட்டாரே..இனிமே Hit & Runனு மாற்றம் செய்ய முடியாது " என்றார்.
"சரிங்க சார்...இப்போ என்ன தான் வழி...நாங்க என்ன பண்ணனும்... அவ்வளவா...இதை பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாது சார்...நீங்களே சொல்லுங்களேன்..." என்றேன்.
"நாளைக்கு ரமேஷை எல்லா ஒரிஜினல் டாகுமெண்டையும் எடுத்துட்டு வரச் சொல்லுங்கள்,கைது செஞ்சி, ஸ்டேஷன் பெயிலில் உடனே விட்டுறுவோம். எப்பொழுது ஆஜராகச் சொல்றோமோ...அப்போ வந்து கோர்ட்ல 750 ரூ ஃபைன் கட்டிருங்க..அவ்ளோதான்...காரைப் பொறுத்த வரை, ஆர் டி ஒ க்ளியரன்ஸ் கொடுக்கணும். ஆர் டி ஓ பொதுவா இங்க வரமாட்டாங்க....கொஞ்சம் கவனிச்சீங்கன்னா...இங்க வருவாங்க...அவங்க க்ளியரன்ஸ் கொடுத்த உடனே, எங்க கிட்ட FIR காபி வாங்கிட்டு இன்சுயூரன்ஸ் க்ளைம் க்கு போங்க....அதுக்கு முன்னாடி, இன்சுயூரன்ஸ் கம்பெனிக்காரங்கள வந்து வண்டியை ஒரு போட்டோ எடுத்துக்க சொல்லுங்க...அவ்ளோதான்..." என்றார்.
(ஆஹா....இப்பவே கண்ண கட்டுதே....டேய் ரமேஷ்....கம்முன்னு குவார்ட்டரை அடிச்சுட்டு குப்புற படுத்திருந்தா...இவ்ளோ கஷ்டம் வந்திருக்காதே.....)
"அவ்ளோ தானா சார்...ரொம்ப தேங்க்ஸ் சார்..." என எழுந்தேன்.
"அப்புறம், அதோ இருக்கார் பாருங்க கான்ஸ்டபிள், அவர் கிட்ட போங்க...Formalities எல்லாம் சொல்லுவார்...முடிச்சிட்டு போங்க..." என்றார்.
(ஹ்ம்ம்....லஞ்சத்துக்குப் பேரு Formalities ங்களா ஐயா?...ஓகே... )
2500 ரூபாய் கொடுத்தேன்.
"சரிப்பா....எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம்...நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க..." என சொல்லி அனுப்பி வைத்தார். மணி காலை 5:30. மறுநாள் ஆர்.டி.ஓ 2000 ரூபாய், காரை சர்வீஸ் செண்டர்க்கு விட 2500 ரூபாய் என காந்தி பறந்துகொண்டிருந்தார். மொத்தம் கிட்ட தட்ட 12000 ரூபாய் செலவு. பண விரயத்தை விடுங்க, ரமேஷ்க்கு ஒண்ணும் அடி படாம இருக்கே...அதுவே ரொம்ப நல்லதுன்னு நினைச்சுட்டு வந்துட்டேன்.
இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னா...
1. இவ்வளவு கஷ்டங்களுக்கும், பண விரயத்துக்கும், அலைச்சலுக்கும் வொர்த்தா குடிபோதையில் வண்டி ஓட்டுவது.
(12000 ரூபாய், புது கார் நொறுங்கி கிடக்குது,லேசா அடி வேற பட்டு இருக்கு, போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்..ஃபைன்...அப்பப்பா...நிச்சயமா...அவ்ளோ வொர்த் கிடையாது....)
2. நமக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா...நம்மை விட, நம் டாகுமெண்ட்ஸ் தான் பேசும். அதை பத்திரப் படுத்தி பாதுகாக்க வேண்டியது ரொம்ப அவசியம். ஒரிஜினல் டாகுமெண்ட் இல்லைன்னா....பல செக்ஷன்ல கேஸ் போட்றுவாங்க. பெரிய வெயிட் கையா இருந்தா சமாளிக்கலாம்...நம்மல மாதிரி சாதாரண ஆளுங்களுக்கு ரொம்ப கஷ்டம் தான்.
(தங்கமணி, என் டிகிரி சர்டிபிகேட் எந்த பரணை மேல இருக்கு...கொஞ்சம் தேடிக் கொடுக்குறீயா...)
3. சரக்கு அடிச்சீங்கன்னா...வண்டி எடுக்காதீங்கோ.....ஏன்னா, நம்மாளுடைய Split Personality, மது உள்ள போன பிறகு தான் தெரியவரும்.
(வடிவேலு பாணியில், ஆமா....அது வேற வாயி....இது நார்ற வாயி...)
4. அதெல்லாம் இருக்கட்டும், ரமேஷ் வீட்டில் குடிக்க முடியாததால் தானே வெளியில் போய் குடித்துவிட்டு, வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. வீட்டிலேயே அந்த வசதியை ஏற்படுத்தித் தந்தால், இவை போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாமல்லவா...?
(அட நன்னாரிப் பயலே இதெல்லாம் ஒரு வாதமா? )
இவ்வளவும் நடந்த பிறகு என்னுடன் வந்த நண்பன்..."டேய் ரமேஷ், இவ்ளோ பிரச்சினையை இவன் நல்லா சமாளிச்சிட்டான் டா...ஊருக்கு வந்த உடனே, தி.நகர் அருணா பார்ல ஒரு பார்ட்டி வச்சிரு மச்சான்..."
14 comments:
//அதெல்லாம் இருக்கட்டும், ரமேஷ் வீட்டில் குடிக்க முடியாததால் தானே வெளியில் போய் குடித்துவிட்டு, வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. வீட்டிலேயே அந்த வசதியை ஏற்படுத்தித் தந்தால், இவை போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாமல்லவா...?//
இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
இவ்வளவும் நடந்த பிறகு என்னுடன் வந்த நண்பன்..."டேய் ரமேஷ், இவ்ளோ பிரச்சினையை இவன் நல்லா சமாளிச்சிட்டான் டா...ஊருக்கு வந்த உடனே, தி.நகர் அருணா பார்ல ஒரு பார்ட்டி வச்சிரு மச்சான்...
ரீப்பீட்டேய்
"ஜெட்லி said...
//அதெல்லாம் இருக்கட்டும், ரமேஷ் வீட்டில் குடிக்க முடியாததால் தானே வெளியில் போய் குடித்துவிட்டு, வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. வீட்டிலேயே அந்த வசதியை ஏற்படுத்தித் தந்தால், இவை போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாமல்லவா...?//
இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு "
: ) நன்றிங்க ஜெட்லி.
"ஷாகுல் said...
இவ்வளவும் நடந்த பிறகு என்னுடன் வந்த நண்பன்..."டேய் ரமேஷ், இவ்ளோ பிரச்சினையை இவன் நல்லா சமாளிச்சிட்டான் டா...ஊருக்கு வந்த உடனே, தி.நகர் அருணா பார்ல ஒரு பார்ட்டி வச்சிரு மச்சான்...
ரீப்பீட்டேய் "
இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் : )
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க ஷாகுல்!
”குடி போதையில் வண்டி ஒட்டுவது மிகப்பெரிய தவறு இதற்கு சட்டபடி நடவடிக்கை வேண்டும்” இது உண்மை. ஆனா ஃபுல் மப்புல வண்டி ஒட்டுவது தான் ரெம்ப ஒவர் அது அவருக்கும் ரோட்டில் செல்பவருக்கும் ஆபத்தானது ...தன்னி அடித்து மோதி அடிபட்டால் ஒரு நயமான குடி மகனுக்கு அது வீரம் தான்...ஆனா சும்மா போனவன் மேல நமமால் இடிச்சா என்னாபன்றது (வடிவேலு மாதிரி)”நீ விழுகிறது இல்லாம என்னை ஏண்டா கொல்ல பர்க்கிற...” லைட்டா ஒரு பீர் சாப்பிட்டால் வண்டியையும் நம்மலையும் சரியா maintain பண்ணலாம்...
எது எப்படியோ நண்பர் குணமான உடன் உங்களுக்கு treat இருக்கு....
என்றும் உங்கள்,
ந.நிருபன்.
சரியாச் சொன்னீங்க கபிலன்......வீட்டுல இந்த வசதி இருந்தா, நண்பர் இப்படி செஞ்சிருப்பாரா?
//அதெல்லாம் இருக்கட்டும், ரமேஷ் வீட்டில் குடிக்க முடியாததால் தானே வெளியில் போய் குடித்துவிட்டு, வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. வீட்டிலேயே அந்த வசதியை ஏற்படுத்தித் தந்தால், இவை போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாமல்லவா...?//
நீங்க நம்மூர்ர்காரருல, அதான் இப்படி...!!!
"லைட்டா ஒரு பீர் சாப்பிட்டால் வண்டியையும் நம்மலையும் சரியா maintain பண்ணலாம்..."
ஹாஹா...Split Personality ஐ தடுப்பது ரொம்ப கஷ்டம்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும், நன்றிங்க நிரூபன்
"ஆரூரன் விசுவநாதன் said...
சரியாச் சொன்னீங்க கபிலன்......வீட்டுல இந்த வசதி இருந்தா, நண்பர் இப்படி செஞ்சிருப்பாரா? "
அடடா....இந்த கருத்துக்கு எவ்வளவு சப்போர்ட் : )
நன்றிங்க ஆரூரன்!
"சிவன். said...
//அதெல்லாம் இருக்கட்டும், ரமேஷ் வீட்டில் குடிக்க முடியாததால் தானே வெளியில் போய் குடித்துவிட்டு, வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. வீட்டிலேயே அந்த வசதியை ஏற்படுத்தித் தந்தால், இவை போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாமல்லவா...?//
நீங்க நம்மூர்ர்காரருல, அதான் இப்படி...!!! "
: ) ஆமாங்க
நன்றிங்க சிவன் !
கபிலன், இப்ப நீங்க சமோவால இருந்து வந்துட்டீங்களா! இந்தியாவுல தான் இருக்கீங்களா
"சின்ன அம்மிணி said...
கபிலன், இப்ப நீங்க சமோவால இருந்து வந்துட்டீங்களா! இந்தியாவுல தான் இருக்கீங்களா"
நான் இந்தியா வந்துட்டேங்க. நன்றிங்க விசாரிப்புக்கு : )
"அதெல்லாம் இருக்கட்டும், ரமேஷ் வீட்டில் குடிக்க முடியாததால் தானே வெளியில் போய் குடித்துவிட்டு, வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. வீட்டிலேயே அந்த வசதியை ஏற்படுத்தித் தந்தால், இவை போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாமல்லவா...?"
Cycle gap la un velaiyai katitte pathiya...
Endha selavu kammi if suppose he hits someone travelling in bike or cycle and that fellow is serious or not serious. Everyone(policekaran, doctor, adipattavan ella adiye padama adi patta madhiri nadikkaravan) will suck money from him in that case 12k is less buddy..Two wheeler DDnna(Engalukkum anubavam erukku) 1500rs athu endha accident pannamma. Two wheeler la barkku poi sarakkadikarathu gud habit and return route should be somewhat buzy with traffic will make you ride slower and also no maams will be there in a traffic congested route or atleast little buzy route. Endha idea ellam evanukku varuthu..vivek solramadhiri..
Enakku sathyam theatre bodyguard gai galatta panninadhu(avan kai mattum etha thandi), comfort la sugu paiyanai thallinadhu ellam gnabagam varuthu. Namma nalla time thapichittom magane..
Ram
ஏன் ராமா, ராயப்பேட்டா Oasis ஐ விட்டுட்டியே...அரசியல்ல இதெல்ல சாதாரணமப்பா : )
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராம்!
Post a Comment