Thursday, November 19, 2009

Curly Hair,Very Fair -RHYMES நமக்காகவா?


"ஏங்க, என்ன பண்ணிட்டு இருக்கீங்க அங்க....எப்ப பார்த்தாலும் டிவி முன்னாடி உட்கார்ந்துட்டு நியூஸ் பாக்குறதே வேலையா போச்சு......இங்க வாங்க, நம்ம பையன் ரைம்ஸ் சொல்றான், இங்க வந்து கேளுங்க...." என தங்கமணி சவுண்ட் விட, நானும் போனேன்.
"தீபு, டேடிக்கு RHYMES சொல்லி காமி டா..." என்றாள்.

Chubby Cheeks,Dimple Chin

Rosy Lips,Teeth within

Curly Hair,Very Fair

Eyes are blue,Lovely Too

Mummy's pet, is that you? Yes...Yes...Yes...

Very Good..Super da கண்ணா...என பாராட்டிவிட்டு, டிவி பார்க்க திரும்பினேன். அப்போ தான் யாரோ டார்ட்டாய்ஸ் கொசு வத்தியை முகத்துக்கு முன்னாடி சுத்துற மாதிரி ஒரு ஃபீலிங்க். ஆமாங்க ஃப்ளாஷ் பாக் தான். ஆஹா...நம்மளும் இப்படி தானே பாடியிருப்போம். என் பையன் பரவாயில்லை கொஞ்சம் கலர். நானெல்லாம், கிட்ட தட்ட தார் கலர் ஆச்சே. நம்ம கூட இந்த பாட்டை சிரிக்காம பாடியிருக்கோமேன்னு தோணுச்சு. குழந்தைங்க என்ன செஞ்சாலும், எது பாடினாலும் ரசிக்கும் படியாகத் தான் இருக்கும் என்பது வேறு விஷயம். இருந்தாலும் அந்த பாடலின் அர்த்தத்தை நினைத்துப் பார்க்கும் போது, இந்தப் பாடல், நம்ம நாட்டு குழந்தைகளுக்கு ஏற்புடையதான்னு யோசிக்கத் தோணுச்சு.

ஆரம்பப் பள்ளிக் காலங்களில், காலம் காலமாக நாம் பயின்று வரும் ஆங்கில RHYMES என்கிற பாடல்கள் நமக்கு ஏற்ற மாதிரி இருக்கான்னு ஒரு சின்ன அலசல். முதலில் இந்தப் பாடலையே எடுத்துப்போம்.

"chubby cheeks"
ஒரு வேளை உணவிற்கே வழியில்லாமல், குழந்தைகளை வேலைக்கு அனுப்பினாங்க பெத்தவங்க..."சாப்பிட சோறே இல்லாத போது எந்தக் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவாங்க பெத்தவங்க...இலவசமா பள்ளிக் கூடத்துல சாப்பாடு போடுங்க....கல்வியும் கொடுங்க..." என சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து கல்விப் புரட்சியைத் தொடக்கியவர் காமராஜர். இப்படி கன்னம் ஒட்டி போய், மெலிந்து வரும் குழந்தைகள் பாடும் பாட்டைப் பாருங்க... Chubby Cheeks

"Rosy Lips, Teeth within...Curly Hair,Very Fair"
இது அதைவிட மோசம். நம்ம ஊர்ல முக்கால்வாசி பேரு கருப்பு தான். இந்த பாடலை நானும் குழந்தைப் பருவத்தில ஆர்வமா கை கால் ஆட்டி பாடி காட்டியிருப்பேன். எங்க வீட்லயும், ரசிச்சு பார்த்திருப்பாங்க. கொஞ்சம் அர்த்தம் தெரிஞ்ச பிறகு, கன்னங்கரேல் நு இருந்துட்டு, சுத்தமா சம்பந்தமே இல்லாம, இப்படி ஒரு பாட்டு பாடி இருக்கனேன்னு சிரிப்பு தாங்க வருது.

இந்த மேட்டர்களுக்கு நம்ம அரசியல் கும்பல்கள் என்ன மாதிரி கருத்து தெரிவிப்பாங்கன்னு ஒரு கற்பனை.
London Bridge is Falling down,...falling down...falling down......on my Fair Lady.

திராவிடர் கழக பிட்டு : "Fair Lady". இந்தப் பாடல் வெள்ளை ஆரியனை உயர்த்தி, கருப்புத் திராவிடனை தாழ்த்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட ஒரு பார்ப்பனீயச் சிந்தனை. இத்தகைய மூடப் பாடல்களைத் சமுதாயத்தில் இருந்து அகற்றுவதே திராவிடர் கழகத்தின் முதல் வேலை. அதற்கு பதிலாக
Rain Rain Go away styleல..
"God God where are you?
Come to me, if you are true..."

கலைஞர் பிட்டு: லண்டன் பிரிட்ஜ் என்பது நம்மில் பெரும்பாலானோர் பார்க்காத ஒரு பாலம். அது விழுவதாக பாடல் வரிகளில் வருவதில் நம் ஊரில் எந்த அரசியலும் இல்லை. ஆனால், இதையே கத்திப்பாறா பிரிட்ஜ் என்றோ வேறு ஒரு மேம்பாலம் என்றோ குறிப்பிட்டால், நான் கட்டிய பாலம் எப்படி உடைந்து விழும் என அம்மையார் சண்டைக்கு வருவார். ஆகையால், யாரும் பார்க்காத ஒரு பாலம் விழுவதாகவே பாடலில் இருத்தல் நலம். வேண்டுமென்றால், இல்லாத பாலமான ராமர் பாலம் விழுவதாக வேண்டுமானால் மாற்றுங்கள், சேதுவிற்காவது வழி பிறக்கட்டும்.

அடுத்தது இந்தப்பாடல்,
"Hot Cross Buns, Hot Cross Buns
One a Penny, two a Penny
Hot Cross Buns..."
பிஜெபி பிட்டு : Bun என்பது சரி. அது என்ன அந்த ரொட்டி மீது ஒரு கிராஸ். ஆங்கிலேயன் கிறித்துவத்தை பரப்புவதற்காக ரொட்டி மீது கிராஸ் போட்டு நம்மிடம் திணித்த பாடல் இது. இது நம் இறையாண்மைக்கு எதிரான பாடல்.

கம்யூனிச பிட்டு : Bun என்கின்ற உணவு ஆங்கிலேயன், அவனுடைய பொருட்களை சந்தை செய்ய இந்தியாவிற்கு இறக்குமதி செய்த ஒன்று. ஆரம்பக்கல்வியிலேயே அவனுடைய ஏகாதிபத்யத்தை செலுத்தியதால், இன்று Bun வளர்ந்து Pizza வாக உருவெடுத்து பிசாசாக நிற்கிறது உலகமயமாக்கல். இதற்கு முடிவு கட்டும் முதல் முயற்சியாக இப்பாடலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.

சரி, என்ன தான் வெள்ளைக்காரன் நம்முடைய கல்வி வாய்ப்பை திறந்து விட்டாலும், அதுக்காக எத்தனை வருஷமா நமக்கு சுத்தமா சம்பந்தமே இல்லாத பாடல்களை, தேவை இல்லாத பாடல்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கோம்னு தோணுதுங்க.. தமிழ் ரைம்ஸ் பாடல்கள் கலக்கலா இருக்குங்க...புதுசா புதுசா அருமையான பாடல்கள் வந்த வண்ணம் இருக்கு...அதுல சந்தேகமே இல்லை. ஆனா ஆங்கில பாடல்கள் இன்னும் அதே தேய்ஞ்ச ரிக்கார்டு மாதிரியே பாடிட்டு இருக்கோம். நம்ம நாட்டுக்கு, ஊருக்கு ஏத்த மாதிரி சொந்தமா ஆங்கில ரைம்ஸ் பாடல்களை நம்முடைய குழந்தைகள் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோன்னு தோணுதுங்க..

என்ன தான் இந்த மேட்டரை, நம்ம கிண்டலா சொன்னாலும், இட்லி-சாம்பார் பத்தியோ, பொங்கல் வடை பத்தியோ, போண்டா- பஜ்ஜி ,முறுக்கு போன்ற நம்ம ஊர் ஐட்டங்களைப் பற்றி, நம்ம குழந்தைகளுக்கு பழகிய ஒன்றைப் பற்றி ஆங்கில ரைம்சுகள் ஒன்றில் கூட வராதது கொஞ்சம் வருத்தம் தான். (அட நன்னாரிப் பயலே...கடைசியிலே உன் புத்திய காட்டிட்டியே டா... : ) ) இங்கு விற்கப்படும் ABCD புத்தகங்களில் கூட பெரும்பாலும், நமக்கு கிடைக்காத பழவகைகள், பார்த்திராத மிருகங்கள், கேள்விப் படாத பறவைகள் போன்றவைகள் தான் இருக்குங்க. என் பையன் அதை எல்லாம் பார்த்துட்டு, டால்பின் பாக்கணும் டேடி...போலார் பியர் பாக்கணும் டேடி...சீல் பாக்கணும் டேடி, SpoonBill பாக்கணும் டேடி, Iquana பாக்கணும் டேடி ந்னு சொல்றான்....இதுக்கெல்லாம் நான் எங்க போறது....டேய் நானே இதெல்லாம் பார்த்தது கிடையாதுடா....ஏதோ, என்னால முடிஞ்ச காக்கா குருவி,குதிரை வேணும்னா காட்டுறேன்..வாடா...ஒரு கதை சொல்றேன்...ஒரு பாட்டி வடை சுட்டுன்னு இருந்தாங்களாம்......@#$%^&*() : )

டேய் இந்த ரைம்ஸ் மேட்டருக்கு, இவ்வளவு பெரிய ஒப்பாரியா டா ந்னு நீங்க கேக்குறது புரியுது...என்னமோ போங்க... : )

14 comments:

சோழன் said...

எப்படி கபிலன் இப்படி? சும்மா சின்ன துண்ட(பிட்) வச்சிக்கிட்டு புகுந்து விளையாடி இருக்கீங்க? இப்படியே தொடர்ந்து எழுதினா நம்ம தமிழ் ஈனத்தலைவலி கருணாநிதிய விட நல்ல எழுத்தாளரா வந்துடுவீங்க னு தோணுது! ஒரு கேவலமான பிறவி கூட உங்கள கம்பர் பண்ணதுக்காக மன்னிக்கவும்! அவங்க எல்லாம் பத்திரிக்கையாளன், எழுத்தாளன் னு பீலா விட்டுகிட்டு சுத்திகிட்டு தமிழனுக்கே துரோகம் பண்ணுறாங்களே னு ஒரு சின்ன கோவத்த வெளிப்படுத்திட்டேன்!
அருமையான கற்பனை வளம்! வாழ்த்துக்கள்!

கபிலன் said...

நன்றிங்க சோழன்!
எல்லோருக்கும் இருக்கும் கோபம் தான் என்றாலும், நீங்க ரொம்ப உணர்ச்சிவசப்படுறீங்க சோழன்.!

Anonymous said...

Good One!

-Rajesh

Sabarinathan Arthanari said...

கலக்கிட்டீங்க

கபிலன் said...

Good One!

-Rajesh

நன்றி ராஜேஷ்!

கபிலன் said...

"Sabarinathan Arthanari said...
கலக்கிட்டீங்க"

நன்றிங்க சபரி : )

GK said...

இது தான் கபிலன் style
சிரிச்சட்டே இருக்கலாம் :)

Sathya said...

Too good. But I also think most parents feel more proud when their kid sings "My fair lady" rather than "Kai veesama kai veesu". Dont you think?

கபிலன் said...

"GK said...
இது தான் கபிலன் style
சிரிச்சட்டே இருக்கலாம் :)"

: )
நன்றி GK!

கபிலன் said...

Sathya said...
Too good. But I also think most parents feel more proud when their kid sings "My fair lady" rather than "Kai veesama kai veesu". Dont you think?

இது நிஜம் தான். ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கும் மனப்பான்மை, இன்றும் இருந்து கொண்டு தான் இருக்குங்க. படிக்காத பெற்றோர்கள், தனக்கு தெரியாததை தன் குழந்தை பேசுதேன்னு ஒரு சந்தோஷம், பெருமை அவங்களுக்கு. படித்த பெற்றோர்களிடத்திலும் இது இருக்கு, ஆனா ரொம்ப குறைவா இருக்குங்க. தமிழ், தெலுங்கு, ஹிந்தி போல ஆங்கிலமும் ஒரு மொழி, அவ்வளவு தான் என்ற மனப்பான்மை வரத் தொடங்கிவிட்டது.

"அம்மா" என்று அழைப்பதைவிட "மம்மி" என்று அழைப்பது பெருமையாக இருந்தது ஒரு காலத்தில். அதெல்லாம் இப்போ மாறிப்போச்சுங்க. பீட்டர் விடுறவங்களுக்கு மார்க்கெட் இல்லை இப்போ : )

என்ன தான் சொன்னாலும், "கை வீசம்மா கை வீசு பாடும் போதோ"," தோசையம்மா தோசை அம்மா சுட்ட தோசை",பாடும் போதோ குழந்தைங்க முகத்துல இருக்க சந்தோஷம்,ஆங்கில ரைம்ஸ் பாடும் போது வரலைங்க.: )

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சத்யா :)

Niruban.N said...

மிகவும் அருமையான(சிரிப்பால் கண்களில் நீர் வரும் அளவுக்கு)கட்டுரை....நாம் புரியாமல்
ஏற்றுக்கொண்ட விஷயங்களில் ஆங்கில RHYMES களும் ஒன்று...தன் குழந்தை ஆங்கில RHYMES
பாடி காட்டினால் அல்லது பாடினால் பெருமை என்று எண்ணும்....பெற்றோருக்கு இது ஒரு சரியான
அறைகூவல்.நாய் விரட்டி நம்மல கடிக்கும் போது ”மம்மி”னு யாரும் கத்துரல்ல “அய்யோ அம்மா” தான் கத்துரோம்.சிந்திக்க வேண்டியது...


என்றும் அன்புடன்,
ந.நிருபன்

கபிலன் said...

Niruban.N said...
மிகவும் அருமையான(சிரிப்பால் கண்களில் நீர் வரும் அளவுக்கு)கட்டுரை....நாம் புரியாமல்
ஏற்றுக்கொண்ட விஷயங்களில் ஆங்கில RHYMES களும் ஒன்று...தன் குழந்தை ஆங்கில RHYMES
பாடி காட்டினால் அல்லது பாடினால் பெருமை என்று எண்ணும்....பெற்றோருக்கு இது ஒரு சரியான
அறைகூவல்.நாய் விரட்டி நம்மல கடிக்கும் போது ”மம்மி”னு யாரும் கத்துரல்ல “அய்யோ அம்மா” தான் கத்துரோம்.சிந்திக்க வேண்டியது...


என்றும் அன்புடன்,
ந.நிருபன்"

: )
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க நிரூபன்!

nalankilli said...

எப்படி கபிலன் இப்படி? சும்மா சின்ன துண்ட வச்சிக்கிட்டு புகுந்து விளையாடி இருக்கீங்க?

nalankilli said...

எப்படி கபிலன் இப்படி? சும்மா சின்ன துண்ட வச்சிக்கிட்டு புகுந்து விளையாடி இருக்கீங்க?

LinkWithin

Blog Widget by LinkWithin