Tuesday, August 18, 2009

ஆம்பளைங்க ஒண்ணா தங்குறது தப்புங்களா?


சமோவான்னு ஒரு நாடு, ஆஸ்திரேலியாவில் இருந்து விமானத்துல ஆறு மணி நேரம் பயணம். குட்டி குட்டி தீவுகள் எல்லாம் சேர்ந்தது தான் சமோவா. அதுல முக்கியமான தீவுகள் உபோலு மற்றும் சவாய். மக்கள் கொஞ்சம் அதிகமாக வாழும் தீவு உபோலு அதன் தலைநகரம் ஆபியா. அங்க தான் நம்மல ஒரு ப்ராஜெக்ட் விஷயமா அனுப்பி இருந்தாங்க. நண்பர் சரவணகுமாரும் என்னுடன் வந்திருந்தார்.

அருமையான ஊரு, எங்க பார்த்தாலும் பச்ச பசேல்னு இருக்கு. ரொம்ப மரியாதையான,அன்பான ஜனங்க, நம்ம ஊர் மாதிரியே. பழ வகைகள் எல்லாம் அங்கேயே விளைந்தாலும், உணவுப் பொருட்கள் எல்லாம் பெரும்பாலும் நியூசிலாந்தில் இருந்து தான் இறக்குமதி பண்றாங்க. நல்ல சுற்றூலாத் தளம் சமோவா. ஆனா, மலேசியா, சிங்கப்பூர் மாதிரி ஒரு Lively,ஆரவாரமான ஊர் இல்லை. கொஞ்சம் அமைதியான இடம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருக்கும் பெரியவர்கள் தான் சுற்றுலாவிற்கு பெரும்பாலும் வர்றாங்க. சூரியன் கடைசியாக பார்க்கிற நாடு சமோவா தான்னு சொல்றாங்க. கிட்ட தட்ட ஒரு நாள் time difference இருக்குங்க, இந்தியாவோட ஒப்பிடும் போது.



Weekendல ஊரை சுற்றி காட்டினாங்க. இதோ இது தான் அந்த ஊர்ல இருக்க லால் மானோ பீச். Clear Water Beach ஐ பார்க்குறது நமக்கு இதுவே முதல் முறை, நல்லா ஒரு குளியலை போட்டுட்டு கிளம்பினோம். கிட்ட தட்ட ஒரு 6 மணி நேரத்துல, அந்த தீவை முழுவதுமாக சுற்றி வந்து விட்டோம். வழி நெடுக்க அடர்ந்த மரங்கள், தொடப்படாத இயற்கை என அப்படி ஒரு விருந்து நம் கண்களுக்கு.


அதே மாதிரி அடுத்த வார இறுதியில், மற்றொரு தீவான சவாய்க்கு போக பயண ஏற்பாடு செஞ்சாங்க. ஃபெர்ரி மூலமாகத் அந்த தீவுக்கு போக கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் பிடித்தது. நம்ம ஊர்ல கன்னியாகுமர்ல படகு சவாரி செஞ்சி இருந்தாலும், இவ்வளவு நேரம் கடலில் பயணித்தது கிடையாது. நல்ல அனுபவம்.

இரவு ஏழு மணி இருக்கும் ஒரு ரிசார்ட்க்கு வந்தோம். எனக்கும் சரவணனுக்கும் தனித் தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான சாவியைக் கொடுத்தார்கள். சரின்னு, ரூம்க்கு வந்து பார்த்தோம். ரெண்டு மாடி கொண்ட ரூம். கீழ்த்தளத்தில் ஒரு ஹால், அதோடு இணைந்த சமையலரை, அதன் அருகில் குளியலரை. மேல்மாடியில் ஒரு டபுள் பெட், மற்றும், தனியாக ஒரு சிங்கிள் பெட் என பெரிதாக இருந்தது அந்த அறை. நம்ம தான் திருவெல்லிக்கேணி மேன்ஷன்ல எட்டுக்கு எட்டு ரூம்ல 4 பேரு தங்கினவங்க ஆச்சே...அதனால பெரிய லார்ட் லபக்தாஸ் மாதிரி, நம்ம ரெண்டு பேரும் இதே ரூம்லியே இருந்துக்கலாம் சரவணா, எதுக்கு வீணா Client காசை(170$) வீணாக்கனும், இன்னொரு ரூம் சாவியை கொடுத்துடலாம்னு போனோம். ஒரு ரூம் போதுங்க...நாங்க ஒண்ணாவே தங்கிக்கிறோம்னு சொன்னோம். அவ்ளோ தான், எல்லோராட பார்வையும் எங்க பக்கம் திரும்புச்சு...ரிசப்ஷனிஸ்ட் ஒரு மாதிரியா சிரிச்சாங்க..எங்க கூட வந்தவங்களும் ஒரு மாதிரியான நக்கலா பார்த்தாங்க.."உங்க ரெண்டு பேருல யாரு கம்பெனி இல்லாம படுக்க மாட்டீங்கன்னு" கேட்டாங்க. நாங்களும் அசடு வழிய...அப்படி எல்லாம் இல்லைங்க...ரூம் பெருசா இருக்கு..பேச்சுத் துணைக்கு ஆள் வேணும்..ஒரு இரவு தானே ஒண்ணாவே தங்கிக்கிறோம்னு சொன்னேன். ஒரு வழியா ரூம்க்கு வந்துட்டோம்.


ரூம் எதிரிலேயே கடற்கரை, அருமையான் காற்று என அம்சமா இருந்துச்சு. நல்லா தூங்கி எழுந்து அடுத்த நாள் காலை உணவுக்கு போனோம். வழக்கம் போல, தட்டை தூக்கிட்டு பிரட், கார்ன் ப்லேக்ஸ்,முட்டை, மஞ்சள் கலர்ல ஒரு ஜூஸ் எல்லாம் எடுத்துட்டு போய் சாப்பிட்டோம். அங்க ஒரு அம்மணி வந்து காபி வேணுமான்னு கேட்டுச்சு. வேணாங்கன்னு சொன்னோம்..ஒரு நிமிஷம் எங்களை ஒரு மாதிரியா பார்த்துட்டு..

"நீங்க ரெண்டு பேரு தான் ஒண்ணா இருந்தீங்களா? இரவு எப்படி இருந்துச்சுன்னு " கேட்டுட்டு நக்கலா சிரிச்சிட்டு போகுது. அட நன்னாரிப் பயலுகளா....ஒண்ணுமே இல்லாத விஷயத்தை, இப்படி கிரி படத்துல வர்ற அக்கா & கணபதி ஐயர் மேட்டர் ரேஜ்சுக்கு, ஊரே நம்மல கிண்டல் பண்ணுதேன்னு நினைச்சிக்கிட்டேன். ரெண்டு பேரும் சாதாரணமா ஒண்ணா தங்கினது அவ்வளவு பெரிய தப்புங்களா..அந்த அளவுக்கு இருக்குங்க....அங்க.... ஆஹா...நம்ம ஊர்லயும் இப்ப சுப்ரீம் கோர்ட் ஓரினச்சேர்க்கைக்கு ஓகே சொல்லிட்டாங்களே...இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம ஊர்லயும் இப்படி தான் பார்ப்பாங்க போல இருக்குன்னு நினைச்சுக்கிட்டேன்.

மேலும் படங்கள்

அந்த ஊர்ல பஸ்

எரிமலையினால் ஏற்பட்ட அழிவுகளைக் கண்டோம் (நானும், சரவணனும்)

நாங்க தங்கின ரிசார்ட்(ஒரு சின்ன விளம்பரம் கூட இல்லாம எப்படி : ) )

ஒரு வழியா, சுற்றி பார்த்துட்டு, ஆபியாவில் உள்ள எங்க ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். இரவு 9 மணி, நல்ல கலைப்பு, Buffet க்கு போனோம். அங்க வச்சு இருந்த உணவைப் பாருங்க....பதிவை படிச்ச கலைப்புல இருப்பீங்க...இதையும் கொஞ்சம் சாப்பிட்டுட்டு போங்க... : )

24 comments:

கோவி.கண்ணன் said...

படமும் பதிவும் அட்டகாசம் !

பன்றிக்காய்ச்சலுக்கு நீங்க படம் போட்டு அசத்துறிங்க !
:)

யாசவி said...

nice

outside india normally they think like this

:-)

கபிலன் said...

"கோவி.கண்ணன் said...
படமும் பதிவும் அட்டகாசம் !

பன்றிக்காய்ச்சலுக்கு நீங்க படம் போட்டு அசத்துறிங்க !
:)"

முதல் முறையா வலைப் பக்கதிற்கு வந்திருக்கீங்க...வாங்க கோவியாரே!
ஆஹா...வந்த உடனே..பன்றிக் காய்ச்சல்னு பீதியை கிளப்புறீங்களே : )
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க!

கபிலன் said...

"யாசவி said...
nice

outside india normally they think like this

:-) "

அலர்ட் ஆறுமகம் மாதிரி இனிமே இதுல கொஞ்சம் அலர்ட்டா தான் இருக்கணும் போல... :)
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க யாசவி!

Satish said...

innum koncham naal pona thaniya thangratha kuda oru mathiri dhan papanga pola. kali kalam.

கபிலன் said...

"Satish said...
innum koncham naal pona thaniya thangratha kuda oru mathiri dhan papanga pola. kali kalam."

ஹி ஹி... : )
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க சதிஷ்!

அப்பாவி முரு said...

//"நீங்க ரெண்டு பேரு தான் ஒண்ணா இருந்தீங்களா? இரவு எப்படி இருந்துச்சுன்னு //


இதே கொடுமைதான் சிங்கையிலும்.,

நம்மாளுங்க ரெண்டு பேர் சேர்ந்து நடந்து போறப்ப கைகளைக் கோர்த்தோ, இல்லை தோளில் கைபோட்டு போறதைப் பார்த்தாப் போதும், உடனே நம்மட்ட “they are Gays"-ன்னு கேட்டிருவாங்க.

அடக்கொடுமைடா சாமி, அப்பிடியெல்லாம் இல்லைடான்னு சொன்னாலும். ஏன். கை கோர்க்காம நடக்க முடியாதா? -ன்னு கேட்டு தொலைச்சிடுவானுங்க.

ஒன்னும் சொல்ல முடியலை...

லோகம் கெட்டுடுத்தோன்னோ...

கபிலன் said...

"அப்பாவி முரு said...
//"நீங்க ரெண்டு பேரு தான் ஒண்ணா இருந்தீங்களா? இரவு எப்படி இருந்துச்சுன்னு //


இதே கொடுமைதான் சிங்கையிலும்.,

நம்மாளுங்க ரெண்டு பேர் சேர்ந்து நடந்து போறப்ப கைகளைக் கோர்த்தோ, இல்லை தோளில் கைபோட்டு போறதைப் பார்த்தாப் போதும், உடனே நம்மட்ட “they are Gays"-ன்னு கேட்டிருவாங்க.

அடக்கொடுமைடா சாமி, அப்பிடியெல்லாம் இல்லைடான்னு சொன்னாலும். ஏன். கை கோர்க்காம நடக்க முடியாதா? -ன்னு கேட்டு தொலைச்சிடுவானுங்க.

ஒன்னும் சொல்ல முடியலை...

லோகம் கெட்டுடுத்தோன்னோ..."

அப்பாடா...நம்ம மட்டும் தனியா இப்படி அவமானப் பட்டு இருக்கோமேன்னு கவலையா இருந்தேன்...நல்ல வேளை துணைக்கு நீங்க இருக்கீங்க!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க அப்பாவி முரு!

ஷாகுல் said...

//"நீங்க ரெண்டு பேரு தான் ஒண்ணா இருந்தீங்களா? இரவு எப்படி இருந்துச்சுன்னு //

ஆமா அந்த இரவு எப்படினு கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல

கபிலன் said...

"ஷாகுல் said...
//"நீங்க ரெண்டு பேரு தான் ஒண்ணா இருந்தீங்களா? இரவு எப்படி இருந்துச்சுன்னு //

ஆமா அந்த இரவு எப்படினு கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல "

பயணக் களைப்பில் நல்ல உறக்கம் மட்டும் ஷாகுல்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

sakthi said...

நல்ல பகிர்வு கபிலன்

ஆனால் நாங்கள் பீதியுடன் இருக்கும் போது இப்படி ஒரு போட்டா தேவை தானா??

கபிலன் said...

"sakthi said...
நல்ல பகிர்வு கபிலன்

ஆனால் நாங்கள் பீதியுடன் இருக்கும் போது இப்படி ஒரு போட்டா தேவை தானா?? "

வாரத்துல ரெண்டு நாள் இதைத் தாங்க நாங்க பார்த்தோம் அங்க. சும்மா ஒரு தடவை பாக்குறதுக்கே பீதியடைஞ்சா எப்படிங்க சக்தி!

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க சக்தி!

Anonymous said...

வெளிநாட்டுல எல்லாம் ஒரு வயசுக்கு மேல ஒரே படுக்கையை பகிர்ந்துக்கமாட்டாங்க. தம்பதியர்கள், காதலர்களா இருந்தா மட்டுமே ஒரே படுக்கை. இந்தியால அப்படி இல்லை. அந்த பன்னியைப்பாத்தா பயமா இருக்கு.

Anonymous said...

நியூஸில இருந்தப்பவே போகணும் நினைத்த இடம். நியூஸி மாதிரியே அழகு என்று போனவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

கபிலன் said...

"சின்ன அம்மிணி said...
வெளிநாட்டுல எல்லாம் ஒரு வயசுக்கு மேல ஒரே படுக்கையை பகிர்ந்துக்கமாட்டாங்க. தம்பதியர்கள், காதலர்களா இருந்தா மட்டுமே ஒரே படுக்கை. இந்தியால அப்படி இல்லை. அந்த பன்னியைப்பாத்தா பயமா இருக்கு.

நியூஸில இருந்தப்பவே போகணும் நினைத்த இடம். நியூஸி மாதிரியே அழகு என்று போனவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்."

ஹ்ம்ம்...நல்லா புரிஞ்சிக்கிட்டேங்க.... : )
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க சின்ன அம்மிணி!

NO said...

அன்பான நண்பர் திரு கபிலன் அவர்களுக்கு,

இந்த பதிவும் நன்று. இதற்க்கு முன்பதிவும் மிக நன்று!
Western Samoa போன்ற நாடுகளைப்பற்றிஎல்லாம் எனக்கு தெரிந்து யாரும் அதிகமாக தமிழ் வலையுலகில் எழுதியதில்லை! பாராட்டுக்கள் - என்ன, இன்னும் கொஞ்சம் அதிக பக்கம் எழுதலாம். Please try to read some more about Polynesian and Malynesian cultures and history and then try to fit it into your observations. I assure you it will be interesting as they had a more open and free culture with regards to sexual outlook and freedom of expression till the US based missionaries arrived and straighjacketed their thought process. Inspite of this, they are still open on many things. The once free people have become bigots! Hope you would write some more on these marginal peoples and their cultures. For more briefing read Paul Theroux's book on travels in the Pacific.

Expecting you to write more.

Comming to your previous posting. One word - நெத்தியடி . You are correct, Khan is not கடவுள் as far as NON Indians a re concerned!

கமலஹாசன், அப்துல் கலாம், ஜார்ஜ் பர்ணண்டேஸ் இவர்கள் எல்லாம் இந்த மாதிரி சத்தம் போட்ட்டதாக தெரியவில்லை!

நல்ல வேளை, அவரை கைதி செய்து ஒரு நாள் காவலில் வைக்கவில்லை, அப்படி ஆகியிருந்தால், நமது பிரதமர் விமான தளத்திற்கு அல்லவா சென்று அவரை வரவேற்றிருப்பார்!!!!! அப்புறம் அவர் கண்களில் கண்ணீர் வந்து, துடித்து..................!!!!

திரு ஷாருக்கான் ஒரு பொறுப்புள்ள இந்தியா குடிமகனாகத்தான் இதுவரை இருந்தார்! நான் பார்த்த வரையில் அதில் எந்த சந்தேகமும் இல்லை! என்ன, இந்த VVVIP culture அவரை மிக பாதித்துவிட்டது போலும்!

ஒன்று இவர்களெல்லாம் புரிந்து கொள்ளவேண்டும். அனேக முன்னேறிய நாடுகளில், இந்த வெத்துவேட்டு VVIP அலப்பலெல்லாம் வேகாது! யாராக இருந்தாலும் சட்டம் மற்றும் process ஒன்றே!

நன்றி
நோ
NO

கபிலன் said...

"No said...

...Please try to read some more about Polynesian and Malynesian cultures and history and then try to fit it into your observations....."


நிஜம் தான் நண்பரே! Polynesian and Malynesian culture பற்றி அங்கே சென்ற போது தான் தெரிய வந்தது. அருமையான வெள்ளை மனம் கொண்ட மக்கள் அவர்கள். வரலாற்றை இன்னும் கொஞ்சம் படித்துவிட்டு எழுதுகிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

manjoorraja said...

உங்கள் சமோவா பயணத்தை மிகவும் ரசித்து படித்தேன்.

வேறு எதையோ பார்க்கவந்து வித்தியாசமான பயணத்தை பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்தது. சமோவா இப்பத்தான் கேள்விப்படறேன். அதான்.

manjoorraja said...

எல்லா புகைப்படங்களும் கொஞ்சம் இருட்டடிச்சிருக்கே ஏன்?

Mahesh said...

Visiting your blog for the first time.... nice flow.... and varied interests...

Liked your writing style... keep it up !!

வேந்தன் said...

நல்ல பதிவு. சமோவா தீவைப்பற்றி இப்போதான் கேள்விப் படுகின்றேன்.
அண்மையில் சுனாமி தாக்கியது இந்த தீவைத்தானே??

கபிலன் said...

"மஞ்சூர் ராசா said...
உங்கள் சமோவா பயணத்தை மிகவும் ரசித்து படித்தேன்.

வேறு எதையோ பார்க்கவந்து வித்தியாசமான பயணத்தை பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்தது. சமோவா இப்பத்தான் கேள்விப்படறேன். அதான்."

நன்றிங்க மஞ்சூர் ராசா. ஃப்ளாஷ் சரியா வேலை செய்யாததால் இருட்டாக இருக்கிறது என நினைக்கிறேன்.!

கபிலன் said...

"Mahesh said...
Visiting your blog for the first time.... nice flow.... and varied interests...

Liked your writing style... keep it up !! "

நன்றி மகேஷ். அடிக்கடி வாங்க : )

கபிலன் said...

"வேந்தன் said...
நல்ல பதிவு. சமோவா தீவைப்பற்றி இப்போதான் கேள்விப் படுகின்றேன்.
அண்மையில் சுனாமி தாக்கியது இந்த தீவைத்தானே?? "

ஆமாங்க சமீபத்தில் சுனாமி வந்தது அங்கே தான்!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க வேந்தன்!

LinkWithin

Blog Widget by LinkWithin