Monday, June 8, 2009

கிராமத்தானும், நகரத்தானும்(குப்பனும், பீட்டரும்)


கிராமத்தில் வாழ்கிற குப்பனும், சிட்டியில் வாழ்கிற பீட்டரும் சந்திச்சு அவரவர் வாழ்க்கை முறை பற்றி பேசுற மாதிரி ஒரு small கற்பனை.

பீட்டர்: Hey Kupps! Wassup dude ?!
குப்பன்: புரியலிங்க சாமி! தமிழ்ல சொல்லுங்க...!


பீட்டர்: வாழ்க்கை எப்படி போகுது...வருமானமெல்லாம் எப்படி?னு கேட்டேன்.
குப்பன்: நல்ல போகுதுங்க...மாசம் 3000 ரூபாய் கிடைக்குதுங்க..

பீட்டர்: என்னய்யா...3000 ரூபாய் வருமானத்துல நல்லா இருக்கேன்னு சொல்றியே...என்னை பாரு 40,000 ரூபாய் வாங்குறேன்..இதுவும் பத்தல....
குப்பன்: அடேங்கப்பா மாசத்துக்கு 40000 ரூபாயா...அதுவும் பத்தலையா?.என்னய்யா பண்ணுவீங்க அம்புட்டு பணத்தை...?

பீட்டர்: என்ன குப்பா...இப்படி கேட்டுட்ட......வாழ்க்கையை enjoy பண்ணனும் எங்கள மாதிரி..
குப்பன்: அது என்னமோங்க....சரி...அப்படி என்னங்க அனுபவிக்குறீங்க..?


பீட்டர்: வாரத்துல ரெண்டு நாள் நல்லா ஊர் சுத்துவோம், சினிமா போவோம், clubs, நீச்சல் இப்படி.....
குப்பன்: நாங்களும் வாரத்துல ஒரு நாள், ஊர் கோடில இருக்க அம்மன் கோவிலுக்கு போவோம்....தினமும் வயல்ல இருக்க கிணத்துல தான் நீச்சல் அடிக்கிறோம்...இதுக்கெல்லாம் எதுக்குங்க காசு...


பீட்டர்:நாங்க எல்லாம் குளு குளுன்னு A/C ல தான் இருப்போம்...அதெல்லாம் எப்படி வரும் காசு இல்லாம...
குப்பன்: ஹ்ம் கொடுத்து வச்சவங்க நீங்க....நம்ம வீட்ல ஒரே ஒரு fan தாங்க இருக்கு......ஆனா, என் குடிசை பக்கத்துலேயே ரெண்டு வேப்பமரம், ஜன்னல திறந்து விட்டா மின்விசிறி கூட தேவை இல்லை...சும்மா ஜம்முன்னு காற்று வரும்....


பீட்டர்: மாசத்துல ஒரு நாள் மனைவியை கூட்டிட்டு ரிசார்ட் போவேன்...நீங்கள் எல்லாம் எங்க போக போறீங்க...
குப்பன்:என் மனைவியை கூப்பிட்டுட்டு தனியா போகனும்னா....ஆற்றங்கரைக்கும்,சவுக்குத் தோப்பிற்கும், சோளக் காட்டுக்கும் போவேன்....நல்லா தாங்க ஐயா இருக்கும் .....இதுக்கெல்லாம் காசே வேணாம்யா...


பீட்டர் : யோவ் நாங்க எல்லாம் அப்ப அப்ப டின்னர்க்கு பெரிய Star ஹோட்டல் Buffetக்கு போவோம்...நீங்க...
குப்பன்: அவ்ளோ பெரிய ஓட்டல எல்லாம் நான் பார்த்ததே இல்லைங்க.....கோச்சிக்காதீங்க ஐயா... தட்டை தூக்கிட்டு சாப்பாட்டுப் பானையை தேடி தேடிப் போய் சாப்பிடுவாங்களே...அதுதானே Buffet? எங்களுக்கெல்லாம் என் அம்மா,என் மனைவி தட்டை தூக்கிட்டு வந்து ஊட்டுவாங்க ஐயா....அதுல இருக்க சந்தோஷம் Buffetல இருக்குங்களா?



பீட்டர்: வெளிநாடு போய் இருக்கீங்களா....உலகத்துல இருக்க பெரிய முதலாளிங்களோட எல்லாம் விருந்து சாப்பிட்டு இருக்கேன்...
குப்பன்: இங்க இருக்க மெட்ராஸ்க்கே போனது கிடையாதுங்கய்யா...மாசத்துல ஒரு நாள் குடும்பத்தோட, பக்கத்து ஊர்ல இருக்க என் தங்கச்சி வீட்டுக்கு போவோம்...நாட்டுக் கோழி, மீன் வறுவல்,தடபுடலா இருக்கும்...என் தங்கச்சி பொண்ணு 6 வயசு தான்...அப்படி கவனிக்கும் ஐயா எங்கள...!



பீட்டர் : ஊர்ல இருக்கிற அப்பா அம்மாக்கு வீடு, கார் வாங்கி தருவோம்...அவங்கள சந்தோஷப்படுத்துவோம்..நீங்க...
குப்பன்: வீடு வாங்கிக் கொடுக்க எல்லாம் வசதி இல்லீங்க....அப்படியே புது வீடு வாங்கினாலும், எங்க ஆத்தா அப்பன என் கூட தான் வச்சிப்பேன்ங்க...என் கூட இருக்குறதுல தாங்க அவங்களுக்கு சந்தோஷ்ம்...வேற ஒரு வீட்ல விட மாட்டேங்க ஐயா... ஒரு நாளைக்கு ஒரு 20 நிமிஷம் ஆச்சும் ஆத்தா அப்பன் கிட்ட மனசாரப் பேசி சிரிச்சா தான்யா எங்களுக்கு எல்லாம் தூக்கம் வரும்...


பீட்டர் : அப்புறம்...எங்களுக்கு ஊர்ல பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் தெரியும்...எங்க போனாலும் மதிப்பு மரியாதை..
குப்பன்: பெரிய ஆளுங்க எல்லாம் தெரியாதுங்க ஐயா....எங்க ஊர் ஜனங்க தான் எங்களுக்கு பெரிய ஆளுங்க...நீங்க ரோட்ல அடிப்பட்டு விழுந்தா, உங்க ஊர்ல எத்தனை பேரு உதவிக்கு வருவாங்க.....இங்கே எங்க கிராமத்துல, யாருக்காவது ஒரு சின்ன காயம் பட்டா கூட ஊரே வரும் உதவி செய்ய.....



இப்படி போகுது இவங்களோட வாக்கு வாதம்....
ஆக மொத்தம் கூட்டி கழிச்சு பார்த்தா....இதோங்க...ரெண்டு பேரோட மாதாந்திர செலவு கணக்கு...



.................................பீட்டர்(40,000) குப்பன்(3000)
வாடகை ...............8000.......................இல்ல
கரண்ட் ...............1500 .......................150
க்ரெடிட் கார்ட்...........10500.......................இல்ல
a/c,fridgeEMI ................5500....................... இல்ல
Inusrance/saving............6000.......................இல்ல
கேளிக்கை ...................1500.......................100
வீட்டு செலவு.............8000.......................2350
................மொத்தம் .....41000.................... 2600
.........................(துண்டு 1000 ரூ) ( மிச்சம் 400 ரூ)

  • இதுல யார் Better?

  • யார் நல்லா வாழ்க்கையை அனுபவிக்கிறாங்க குப்பனா பீட்டரா?

  • யாருடைய வாழ்க்கை முறை நமக்கு பிடிக்குது?

  • நிஜமான சந்தோஷம் எது?

  • கண்ணுக்குத் தெரியாத அல்லது இல்லாத சந்தோஷத்தைத் தேடி, இருக்கிற சந்தோஷத்தை தொலைச்சிடுறோமா?

  • ஒரு வேளை அக்கறைக்கு இக்கறை பச்சைன்னு சொல்றது இது தானா?

    இப்படி கேள்வி மேல கேள்வி கேட்க மட்டுமே நமக்கு தெரியும்...பதில் நம்ம கைல இல்லீங்கோ.....!


சாமியாரு போதும்டா.......வாயை மூடுன்னு நீங்க சொல்றது கேக்குது : ) !



15 comments:

வழிப்போக்கன் said...

குப்ஸ் கலக்கீட்டப்பா!!!
வாழ்த்துகள் அண்ணா...

குப்பன்.யாஹூ said...

yep village life is better, even USA now realised that.

Recession has taught us all

கபிலன் said...

"வழிப்போக்கன் said...
குப்ஸ் கலக்கீட்டப்பா!!!
வாழ்த்துகள் அண்ணா..."


நன்றிங்க...வழிப்போக்கன்...
தங்கள் வருகைக்கு நன்றி!

கபிலன் said...

"குப்பன்_யாஹூ said...
yep village life is better, even USA now realised that.

Recession has taught us all"

நிஜம் தாங்க குப்பன்!
தங்கள் வருகைக்கு நன்றி!

chennailocal said...

everything is perfect, But sceince to be improved in the village repect Health care. Suppose if any big disease comes, they dont have treatement . they are also dont have money to spend respect to the treatment.


However Kuppan life is good, Since there is no stress / NO BP /No worries repect to Bill payment of credit card - CAR EMI - Insurance policy ...............

But Science to be developed in the rural areas.

chennailocal said...

ALWAYS IKKARIKKU AKKARI PACHITHAN .........

Anonymous said...

நான் தமிழன்.
நிஜங்களின் நிதர்சனம் நம்மில் பலருக்குப் புரிவதில்லை. நாமெல்லாம் நிஜத்தைத் தொலைத்தவர்கள். எதார்த்தத்தைத் தரும் நம் உள்ளூர்த் தமிழனுக்கு வாழ்த்துக்கள்.

கபிலன் said...

"chennailocal said...
everything is perfect, But sceince to be improved in the village repect Health care....."

வாங்கோ சென்னை லோக்கல்....
தங்கள் கருத்திற்கு நன்றி!

கபிலன் said...

"Anonymous said...
நான் தமிழன்.
நிஜங்களின் நிதர்சனம் நம்மில் பலருக்குப் புரிவதில்லை. நாமெல்லாம் நிஜத்தைத் தொலைத்தவர்கள். எதார்த்தத்தைத் தரும் நம் உள்ளூர்த் தமிழனுக்கு வாழ்த்துக்கள்."

ஊக்கப்படுத்தியமைக்கு நன்றிங்க!

SUFFIX said...

என்னமோ சொல்றீங்க....படிக்க நல்லாத்தேன் இருக்கு

manjoorraja said...

அசத்தலான உண்மை நிலவரம்.

கலக்கலா வேறு எழுதியிருக்கீங்க.

முத்தமிழ், தமிழமுதம், பண்புடன் கூகிள் குழுமங்களிலும் இதை மீள்பதிகிறேன்.

நன்றி.

கபிலன் said...

"மஞ்சூர் ராசா said...
அசத்தலான உண்மை நிலவரம்.

கலக்கலா வேறு எழுதியிருக்கீங்க.

முத்தமிழ், தமிழமுதம், பண்புடன் கூகிள் குழுமங்களிலும் இதை மீள்பதிகிறேன்.

நன்றி."

நன்றிங்க மஞ்சூர் ராசா!

கபிலன் said...

"Shafi Blogs Here said...
என்னமோ சொல்றீங்க....படிக்க நல்லாத்தேன் இருக்கு"
நன்றிங்க ஷஃபி!

ச.பிரேம்குமார் said...

அப்புறம் ஏங்க கிராமத்து மக்கள் கூட தங்கள் பிள்ளைகளை படிக்க வச்சு நகரத்துக்கு அனுப்பனும்னு நினைக்கிறாங்க?

Anonymous said...

Yadharthamana uNmai. aadambaraththil vaazhkkkaiyai tholaiththavarkal naangal.

LinkWithin

Blog Widget by LinkWithin