குடியுரிமை திருத்த சட்டம் CAA வை எதிர்த்து நாடெங்கும் இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர். தொலைக்காட்சிகளில் தங்களின் கட்சி நிலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு கதை திரைக்கதை எடிட்டிங்க் செய்து செய்தி வெளியிடுகின்றனர்.
திடீர்னு நம்ம வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராடுகிறார்கள். CAA வுக்கும் வண்ணாரப்பேட்டைக்கும் சம்மந்தம் இருக்கா என்றால்... சுத்தமாக இல்லை... ரொம்ப மொக்கை போடாம நேரா சொல்றேன்..
அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் தான் CAA. இந்தியக் குடிமகனின் குடியுரிமையை பறிப்பதல்ல..! சரி மேட்டர்க்கு வருவோம்...
1. பங்க்ளாதேஷ் அகதிகளால் தங்கள் வாழ்வாதாரம், கலாச்சாரம் பாதிக்கப்படுவதாக அசாம் மாணவர் சங்கம் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக 1985 இல் அன்றைய பிரதமர் அசாம் ஒப்பந்தத்தில் கைழுத்திடுகிறார். அதாவது பங்களாதேஷ் அகதிகளைக் கண்டறிந்து அசாமில் இருந்து இடம் பெயரச் சொல்கிறோம் என்பது ஒப்பந்தம்.
படம் :கொடுமைகளுக்கு பயந்து இந்தியா நோக்கி வரும் அகதிகள்..1971 இல்
2. 1971 இல் நடந்த பங்களாதேஷ் - பாக் பிரிவினை கலவரத்தில் இந்துக்கள் என்ற காரணத்தால் மதரீதியாக இந்து மக்கள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனர்... உயிருக்கு பயந்து பலரும் அசாம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களுக்கு ஓடி வந்தாங்க... இந்துக்களோடு சேர்த்து இஸ்லாமிய அகதிகளும் வந்தாங்க... (இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியருக்கு மத ரீதியாக துன்புறுத்தல் இருக்க வாய்ப்பில்லை.. பின் எதுக்கு வந்தாங்கன்னு தெரியல..)
3. ஏன் இவ்வளவு நாள் கணக்கெடுக்கல...ஒழுங்கா NRC அமல்படுத்துங்க...என 2013 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் மத்திய அரசை கொட்டியதோடு மட்டுமல்லாமல்... என் மேல்பார்வையில் நடக்கட்டும்னு சொன்னது கோர்ட்.
5. ஆக, அசாம் மாநிலத்துக்காக பிரத்யேகமாக NRC வழிமுறைகள் செய்து அகதிகளைக் கண்டறிந்தார்கள். இன்னும் மற்ற மாநிலங்களுக்கு இதற்கான வழிமுறைகள் வரவே இல்லை...! வராத சட்டத்துக்கு வண்ணாரப்பேட்டையில் எதுக்கு போராடுறாங்கன்னு தெரியல..
6. இஸ்லாமிய நாட்டிலிருந்து தப்பி உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் ஓடி வந்தவர்கள் இந்துக்கள். ரெக்கார்டு படி...சுமார் 31000 பேர் என்கிறார்கள். ரொம்ப வருஷமா இங்கு எவ்வித சலுகைகளும் இல்லாமல் அகதியாக இருந்துட்டு இருக்கவங்களுக்கு குடியுரிமை வழங்குவதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கம்.
இங்கிருக்கும் இஸ்லாமியரை வெளியில் அனுப்பிடுவாங்கன்னு மக்கள் மனதில் தவறான கருத்துக்களை விதைத்து... மத உணர்வோடு கலந்து கொடுத்து அரசியல் வியாபாரம் செய்கிறார்கள் சில கட்சித் தலைவர்களும் இஸ்லாமிய இயக்கங்களும்...!
சந்தேகம்,பிரச்சினை என்றால் நேராக அமித் ஷா கிட்ட போய் கேளுங்க... அவர் தான் 3 நாட்களுக்குள் அப்பாய்ண்ட்மென்ட் தருகிறேன் என சொல்கிறாரே..!
அம்புடுதேன்..!